BREAKING NEWS

ஒரு தனி மனிதனுக்காக கட்சியை பாழ்படுத்த முடியாது – அமீர் அலி


Ameer Ali
கடந்த காலங்களில் நமது சமூகத்துக்காக அமைக்கப்பட்ட கட்சிகள் முஸ்லிம் சமூகத்தின் குரலை வெளிபடுத்த தவரியதினாலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று குருநாகலில் இடம்பெற்றது இதன் போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்தக் கட்சியை எவரும் எம்மிடம் வளர்த்துவிட்டு, அதனைக் கையில் தந்துவிட்டு செல்லவில்லை. ஒரு தனி மனிதன் தான் சார்ந்த சமூகத்துடன் இணைந்து தான்பட்ட வேதனைகளுக்கு விடிவேற்பட வேண்டுமென்ற ஆதங்கத்தினால், இரவு பகலாக சிந்தித்து இஹ்லாசின் அடிப்படையில் உருவாக்கிய கட்சியே மக்கள் காங்கிரஸ்.
துடிப்புள்ள இளைஞனான றிசாத் பதியுதீன் ஈமானியத்தின் அடிப்படையில் இந்தக் கட்சியை உருவாக்கியதனாலேயே, இன்று இந்த மாநாட்டு மண்டபம் நிரம்பி வழிகின்றது.
ஒரு தனி மனிதனின் போராட்டத்துக்குக் கிடைத்த விளைவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உருவாக்கம். இந்தக் கட்சி உருவாகியதன் பின்னர், முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட அத்தனைக் கஷ்டங்களையும் தீர்க்க துணிவுடன் போராடி இருக்கின்றது.
தம்புள்ளை பள்ளி விவகாரத்திலிருந்து, தர்காநகர் பிரச்சினை வரை நடந்த அத்தனை அநியாயங்களையும் தட்டிக்கேட்க, கட்சித் தலைவர் றிசாத் பதியுதீன் மிகத் தீரமாக செயற்பட்டுள்ளார்.
ஆனந்த தேரருடன் நடாத்திய விவாதத்தில் அவர் மிகவும் நிதானமாகவும், துணிவுடனும் கருத்து வெளியிட்டு, சமூகத்துக்கு இழைக்கப்படும் அநியாயங்களிலிருந்து எமது சமூகத்தைக் காப்பாற்ற பாடுபட்டார்.
தேசியப் பட்டியலில் எழுந்த சர்ச்சையே, இன்று கட்சி செயலாளர் கட்சியுடன் முரண்படக் காரணம். ஒரு தனி மனிதனுக்காக கட்சியை பாழ்படுத்த முடியாது. கட்சியை செவ்வனே சிறப்பாக நடத்துவதற்கு கட்சியின் யாப்பிலே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை காலமும் 07 பேர் கொண்ட மசூரா சபையாக இருந்த இந்தக் கட்சி, இப்போது 25 பேர் கொண்ட உயர்பீட சபையாக மாற்றம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவிக்கின்றேன்.
Share this news :

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar