ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இன்று திங்கள்கிழமை இடம்பெறவுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள்ளிலிருந்து தெரிய வருகின்றது.
நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில்இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சர்ச்சை கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பதில் கல்முனை மேயராக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து சட்டத்தரணி நிஸாம் காரியப்பரினால் கல்முனை மாநகர சபைக்கான 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும் இந்த வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில மாநகர சபை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனால் கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நாளை 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையிலேயே தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது
. தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா சென்றிருந்த அமைச்சர் ஹக்கீம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து உடனடியாக கல்முனைக்கு செல்லவுள்ள அமைச்சர் ஹக்கீம், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களிடையே உள்ள இழுபறியினை நீக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.