BREAKING NEWS
Showing posts with label moulavi teach. Show all posts
Showing posts with label moulavi teach. Show all posts

இஸ்லாம் பாட ஆசிரியர் வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்


இஸ்லாம் பாட ஆசிரியர் வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்
- மத்திய கொழும்பு அமைப்பாளர் ஏ.எல்.எம். உவைஸ் அரசிடம் கோரிக்கை

( மினுவாங்கொடை நிருபர் )

    இஸ்லாம் சமயப் பாட வெற்றிடம் காணப்படும் அனைத்து பாடசாலை வெற்றிடங்களையும் மெளலவி ஆசிரியர் நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை,  அரசாங்கம் உடனடியாக  எடுக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் சம்மேளன அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எல்.எம். உவைஸ் தெரிவித்தார்.
    ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌  பெர‌முன‌வின்  ம‌ருதானை ம‌த்திய‌ நிலைய‌த்தில் ந‌டைபெற்ற‌ மௌல‌வி ம‌ற்றும் மௌல‌வியாக்க‌ளுட‌னான‌ க‌ல‌ந்துரையாட‌லின் போதே உவைஸ் ஹாஜி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
   அவர் மேலும் இக்கலந்துரையாடலில் கருத்துத்  தெரிவிக்கும்போது,
   நாட்டில் இன்று மௌலவிப் பட்டம் பெற்று  அல் - ஆலிம் பரீட்சையிலும்  சித்தியடைந்த மெளலவிமார்கள் மற்றும்  மெளலவியாக்கள் நிறையப் பேர் உள்ளனர். அத்துடன், கடந்த முறை நியமனத்துக்காகப் போட்டிப் பரீட்சை எழுதி இவர்கள்  சித்தியடைந்த போதும், நியமனம் பெற முடியாது போன மௌலவிமார்களும் மௌலவியாக்களும் இன்று கடும் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 
   பல்லாயிரம் மௌலவிமார்கள் தமது கற்கையினைத் திறம்பட முடித்து, உரிய பரீட்சைகளை எழுதி, ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதி பெற்றிருந்தாலும், இது வரையிலும் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்குவதில் காட்டப்படும் அக்கறையின்மை பலரை நிராசை கொள்ளச் செய்துள்ளது. கடந்த காலங்களில் போதியளவுக்கு மௌலவி ஆசிரியர் நியமனங்கள்  வழங்கப்படாமையும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
   இதேநேரம், மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டமையும், இந்நியமன முன்னனெடுப்பில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது.
   ஆயிரத்துக்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர்களின் தேவையும் வெற்றிடமும் இருந்தும்கூட, முஸ்லிம் அரசியல்வாதிகளின் முறையான திட்டமிடல் மற்றும் தகவல் திரட்டு இன்மையால், அந்த வாய்ப்பு நழுவிப் போகும் ஒன்றாகவே மாறி உள்ளதைக் காண்கின்றோம்.
    மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 2008 ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு நேர்முகப் பரீட்சையும் இடம்பெற்றிருந்த நிலையில், இதில் 148 பேருக்கு மாத்திரமே மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இன்னும் மிகுதியாக 276 மெளலவி ஆசிரியர்களது வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 2008 ஆம் மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம், இன்னும் 424 மெளலவி ஆசிரியர் வெற்றிடங்கள், இஸ்லாம் சமயப் பாட வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் நிலவுவதாக அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
    குறைந்த பட்சம் 500  மௌலவிகளையாவது ஆசியர்களாக நியமிக்கச் செய்யும் திட்ட அறிக்கை ஒன்றையும் நாம்  விரைவில் தயார் செய்யவுள்ளோம் என்றார்.
   உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதும் இங்கு கருத்துரை வழங்கினார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌த்தை விரைவில் எதிர் பார்க்க‌ முடியாது


மௌல‌விமார் உல‌மா க‌ட்சியுட‌ன் இணைந்து அத‌னை அர‌சிய‌ல் ரீதியாக‌ ப‌ல‌ப்ப‌டுத்தாத‌ வ‌ரை மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌த்தை விரைவில் எதிர் பார்க்க‌ முடியாது என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்தார்.
க‌ட்சித்த‌லைமைய‌க‌த்தில் ந‌டை பெற்ற‌ மௌல‌விமார்க‌ளுட‌னான‌ ச‌ந்திப்பில் அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து,

1992ம் ஆண்டுக்குப்பின் மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டாம‌ல் இருந்த‌ போது அந்நிய‌ம‌ன‌த்தை வ‌ழ‌ங்கும் ப‌டி ப‌ல‌ அர‌சிய‌ல் சார்ப‌ற்ற‌ அமைப்புக்க‌ள் கோரிக்கை விடுத்தும் நிய‌ம‌னம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை. 94ம் ஆண்டு முத‌ல் 2000ம் வ‌ரை முஸ்லிம் காங்கிர‌ஸ் ஆட்சியில் இருந்த‌ போதும் இந்நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை. இந்த‌ நிலையில் 2005ம் ஆண்டு உருவான‌ உல‌மா க‌ட்சி அதே ஆண்டில் ந‌டை பெற்ற‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லை ப‌ய‌ன்ப‌டுத்தி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌‌வுக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌தாயின் மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தை உறுதிப்ப‌டுத்த‌ வேண்டும் என்ற‌ நிப‌ந்த‌னையை முன் வைத்த‌து. இதுதான் இல‌ங்கை வ‌ர‌லாற்றில் ஒரு முஸ்லிம் க‌ட்சி மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் ப‌ற்றி ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ருட‌ன் செய்த‌ முத‌லாவ‌து ஒப்ப‌ந்த‌மாகும். ஆனாலும் அத‌ன் பின்ன‌ரும் மௌல‌விமார் பாரிய‌ அள‌வில் உல‌மா க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்தாத்தால் நிய‌ம‌ன‌ம் தாம‌த‌மான‌து.

இத‌ன் கார‌ண‌மாக‌ 2007ம் ஆண்டு உல‌மா க‌ட்சியினால் மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ ஒப்ப‌ந்த‌த்தை வ‌லியுறுத்தி க‌ல்முனையில் நூற்றுக்க‌ண‌க்கான‌ மௌல‌விமாரின் ப‌ங்கு ப‌ற்றுத‌லுட‌ன் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து. இதுதான் இல‌ங்கை வ‌ர‌லாற்றில் மௌல‌விமார் மேற்கொண்ட‌ முத‌லாவ‌து ஆர்ப்பாட்ட‌மாகும்.

அத‌ன் பின் 2008 கிழ‌க்கு மாகாண‌ தேர்த‌லை வைத்து மீண்டும் உல‌மா க‌ட்சி அர‌சுட‌ன் பேசிய‌தால் அர‌சு இத‌ற்கான‌ வ‌ர்த்த‌மாணியை பிர‌சுரித்த‌து. இத‌ற்காக‌ அ.இ. முஸ்லிம் க‌ல்வி மாநாடு, முஸ்லிம் மீடியா போர‌ம் என்ப‌ன‌வ‌ற்றுட‌னும் உல‌மா க‌ட்சி இணைந்து போராடிய‌து.

அத‌ன் ப‌டி 2010ம் ஆண்டு 150 மௌல‌விமாருக்கு ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. ஆயினும் மௌல‌விமார்க‌ள் ந‌ன்றி கெட்ட‌வ‌ர்க‌ளாக‌ ந‌ட‌ந்து கொண்டார்க‌ள். நிய‌ம‌ன‌ம் பெற்ற‌ மௌல‌விமாரில் ஒருவ‌ரை த‌விர‌ வேறு எவ‌ரும் உல‌மா க‌ட்சிக்கு ந‌ன்றிக்க‌டித‌ம் அனுப்ப‌வில்லை.  அத்துட‌ன் இது அர‌சாங்க‌ம் தானாக‌ த‌ந்த‌ நிய‌ம‌ன‌ம் என‌ ப‌ல‌ரும் கூறின‌ர்.

இத‌னால் விர‌க்தியுற்ற‌ உல‌மா க‌ட்சி முடிந்தால் நாம் இன்றி நீங்க‌ள் பெற்றுக்காட்டுங்க‌ள் என‌க்கூறி நாம் அமைதியானோம். அத‌ன் பின் இந்நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வுமில்லை அத‌ற்காக‌ எம்மோடு இணைந்து போராட‌ மௌல‌விமார் வ‌ர‌வுமில்லை. இத‌னால் இந்த‌ ஏழு வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ப்படாம‌ல் மௌல‌விமார் அர‌சிய‌ல்வாதிகளாலும் அர‌சியல் சார்ப‌ற்ற‌ அமைப்புக்க‌ளாலும் ப‌ந்தாட‌ப்படுகிறார்க‌ள்.

ஆக‌வே அர‌சாங்க‌ம் அர‌சிய‌ல் ரீதியிலான‌ போராட்ட‌ங்க‌ளுக்கே அடிப‌ணியும் என்ற‌ உண்மையை மௌல‌விமார் புரிந்து கொள்ள‌ வேண்டும். அர‌சிய‌ல் க‌ட்சியொன்றின் பின் புல‌ம் இல்லாத‌ ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் பெரும்பாலும் வெற்றிய‌டைவ‌தில்லை.  என‌வே மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் பெற்ற‌ மௌல‌விமாரும் அத‌னை எதிர் பார்க்கும் மௌல‌வி ம‌ற்றும் மௌல‌வியாக்க‌ளும் உல‌மா க‌ட்சியில் இணைந்து அத‌னை ப‌ல‌ப்ப‌டுத்துவ‌த‌ன் மூல‌ம் இத‌னை அர‌சிய‌ல் ம‌ய‌ப்ப‌டுத்தி விரைவில் வெல்ல‌ முடியும் என்ற‌ ய‌தார்த்த‌தை புரிய‌ வேண்டும்.

அதே போல் ப‌ள்ளிவாச‌ல்க‌ளுக்கும் இதில் பொறுப்புள்ளதால் எம‌து இந்த‌க்கூற்றை ப‌ள்ளிவாச‌ல்க‌ளில் வாசித்து மௌல‌விமாருக்கு தெளிவூட்ட‌ வேண்டும். இல்லாவிட்டால் அற‌பு, இஸ்லாம் க‌ற்பிக்கும் ஆசிரிய‌ர்க‌ள் இல்லாமை கார‌ண‌மாக‌ அர‌ச‌ பாட‌சாலை முஸ்லிம் மாண‌வ‌ர்க‌ள் மாற்று ம‌த‌ பாட‌ங்க‌ளை எடுப்ப‌தை த‌டுக்க‌ முடியாது போய் விடும். இத‌ற்கான‌ பொறுப்பை நாளை ம‌றுமையில் உல‌மா ச‌பைக‌ளும் ப‌ள்ளிவாய‌ல்க‌ளும் இறைவ‌ன் முன்னிலையில் ஏற்க‌ வேண்டி வ‌ரும் என்ப‌தை எச்ச‌ரிக்கிறோம்.

அனைத்து மத்­ர­ஸாக்­க­ளிலும் ஒரு பொதுவான பரீட்சை

ARA.Fareel-

நாட்­டி­லுள்ள அனைத்து அரபு மத்­ர­ஸாக்­க­ளி­னதும் கல்வி  நட­வ­டிக்­கை­களை  வேறு­பா­டு­க­ளின்றி  ஒரே பாடத்­திட்­டத்தில் முன்னெடுக்கும் வகையில்  புதிய பாட­நூல்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அஞ்சல், அஞ்சல் சேவைகள்  மற்றும் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

நேற்­றுக்­ காலை அஞ்சல், அஞ்சல்  சேவைகள் மற்றும்  முஸ்லிம்  சம­ய­வி­வ­கா­ரங்கள் அமைச்சின் கேட்போர்   கூடத்தில் இடம்­பெற்ற குர்ஆன்  மற்றும் கிரா அத் மனனப் போட்­டி­களில் வெற்­றி­யீட்­டிய  மாணவ மாண­வி­க­ளுக்­கான  விருது வழங்கும்  நிகழ்வில்  கலந்து  கொண்டு உரை­யாற்­று­கையிலே அவர் இவ்­வாறு  கூறினார்.  

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில்; 'நாட்­டி­லுள்ள  அரபு மத்­ர­ஸாக்­களில் வெவ்­வே­றான  பாட­வி­தா­னங்­களே போதிக்­கப்­ப­டு­கின்­றன. இதனால்  அரபுக் கல்­லூ­ரி­களின் பாட விதா­னங்­களை ஒரு முகப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அதனால் அனைத்து அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்கும் பொது­வா­ன­தொரு  பாடத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. 

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை, நளீ­மியா கலா­பீடம் மற்றும் இஸ்­லா­மிய  கல்வி நிறு­வ­னங்­களின் ஆலோ­ச­னை­க­ளுடன், புதிய பாட நூல்கள்  தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அவை விரைவில்  மத்­ர­ஸாக்­க­ளுக்கு  அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இதன் பின்பு நாட்­டி­லுள்ள அனைத்து மத்­ர­ஸாக்­க­ளிலும்  தனித்­த­னி­யான பரீட்­சை­க­ளின்றி ஒரு பொதுவான  பரீட்சையே  நடாத்தப்படும். அரபு  மத்ரஸாக்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்து வதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது' என்றார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களையும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இனங்கண்டு அவை தொடரா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. என்றாலும் எதிர்காலத்தில் முஸ்லிம் எதிர்நடவடிக்கைகள் நடைபெறமாட்டாது என்று கூற முடியாது.

எனவே சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். சிறுபான்மை சமூகமான நாம் கடந்தகாலங்களில் பல சவால்களை எதிர்கொண்டோம். பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோம். பிரச்சினைகளின் போது வீரவசனம் பேசுவதால் அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது. 

நாம் இந்நாட்டில் பெரும்பான்மை சமூகத்துடன் கலந்து வாழ்கிறோம். நாட்டின் பல பாகங்களில் சிதறி வாழ்கிறோம். எனவே ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இஸ்லாம் அன்பு, கருணை பற்றி அழகாகக் கூறியுள்ளது. ஏனைய மதங்களை கௌரவிக்கும் மதமாக இஸ்லாம் திகழ்கிறது. ஏனைய மதங்களுடன் நல்லுறவினைப் பேணுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளமுடியும். 

குர்ஆனை ஓதுவதுடனும் மனனம் செய்வதுடனும் நாம் நன்மைகளை அடைந்து விடுவதில்லை. குர்ஆனை விளங்கிக் கொள்ள வேண்டும். குர்ஆன் போதித்துள்ள வாழ்க்கை முறை எமது வாழ்க்கையாக அமைய வேண்டும். இஸ்லாமியரின் மொழி அரபு மொழியாகும். இந்நாட்டில் நாம் தமிழ் மொழியே பேசுகிறோம் என்றாலும் அரபு மொழியைக் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். சூறாக்களை ஓதுவதுடன் நின்று விடாது அவற்றின் பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும். 

ஏனைய மதத்தினருக்கு இடையூறு இல்லாவண்ணம் எமது வாழ்க்கை முறை அமைய வேண்டும். பல்லின சமூகத்தைக் கொண்டுள்ள எமது நாட்டில் அனைத்து மக்களுடனும் கைகோர்ப்பதன்மூலம் ஓர் சமாதான வாழ்க்கை கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றார்.நிகழ்வில் குர்ஆன், கிராஅத் மனனப் போட்டிகளில்  தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

அனைத்து ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாக ஆலோசனை

2017 ஆம் ஆண்டு நிறைவுக்குள் இலங்கையின் அனைத்து ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் விசேட ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி 2018 ஆம் ஆண்டுக்கு முன்னராக சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்பட்டு கல்வித்துறையில் பாரிய பயன் தரும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதளவில் 1,093 பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் 1,177 பட்டதாரி பயிலுனர்களை ஆரம்பக்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றவர்களை வெற்றிடங்கள் அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மொழி மூலமான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 3,482 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை சேவையில் சேர்த்துக் கொள்ளவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் ஆலோசகர்களுக்காக புதிய சேவையொன்று ஸ்தாபிக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண பாடசாலைகளில் க .பொ.த. உயர்தரம், டிப்ளோமா சித்தியடைந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க மாகாணங்களில் உள்ள வெற்றிடங்கள் ஆராயும் பணியும் முன்னெடுக்கப்படவுள்ளது

கல்வி அமைச்சரின் விசேட ஆலோசனையின் படியான மேற்படி திட்டங்களால் எதிர் வரும் காலங்களில் இலங்கையின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மௌலவி ஆசிரிய நியமனம். உலமா கட்சியின் வழிகாட்டலை ஏற்காத சமூகத்தின் அவல நிலை

மறுக்கப்படும் சமுதாய உரிமையும், மௌனித்த முஸ்லிம் அரசியலும்..!


-அபு ரீஹத்-

சமய கல்விப்போதனையில் உரிமை மறுக்கப்பட்ட ஒரு சமுதாயமாக இலங்கை இஸ்லாமிய சமுதாயம் தொடர்ந்தும் புறக்கனிக்கப்பட்டு வருகிறது . இதன் எதிர்வினை  இஸ்லாமிய சமுகத்தை  சக்திவாய்ந்த சமூதாயபோராளிகளை இழந்த ஒரு இனமாக அடையாளப்படுத்தும்  என்பதில் சந்தேகம் இல்லை. 

இலங்கை  சமய பாடதிட்ட அட்டவணையின்  பிரகாரம்  இஸ்லாமிய பாடமும்  உள்வாங்கப்பட்டிரிக்கும் வேலையில் அதை  கற்பிற்பதற்கான இஸ்லாமிய ஆசியரியர் நியமனத்தை வழங்க மறுப்பது ஒரு சமுதாயதிற்கெதிரான மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

 1992ம் ஆண்டு முதல்  பகிரங்கமாக புறக்கணிக்கபட்டு வரும் இந்நியமனத்தை பெற்று கொடுக்க திராணியற்ற தலைவர்களை இந்த சமுதாயம் பெற்றிகிறதா என்ற தவிர்க்க முடியாத கேள்வி தொடர்ந்து கொண்டேதான் இருகிறது .

 இனத்துவ சிறுபான்மையிலும் சிறுபான்மையான ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் ,பண்பாட்டியல் வளர்சிக்கும் , முக்கிய காரணியாக  இருக்கும் சமய கல்வியை, அதன் முன்னேறத்தை திட்டமிட்ட முறையில் தடுக்க எடுக்கபப்டும் முயற்சியாகவே இந்நியமனமறுப்பை  கருதவேண்டியுள்ளது.

 ஜனநாயக முதிர்சி பெற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின்  வகிபாகம் மிகமுக்கியமானது என்று பரப்புரை செய்யப்படும் இவ்வேளையில் இந்நியமன மருப்பின் நீட்சி இப்பரப்புரையை மீள்பார்வைக்கே உற்படுத்துகிறது .


கல்வி அமைச்சு இறுதியாக வெளியிட்ட கணிப்பீட்டின் படி மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை  10118 இதில் 856 முஸ்லிம் பாடசாலைகளாக இனங்கானப்படுள்ளது.  

அதிக முஸ்லிம் அரச பாடசாலைகளை கொண்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் 148  பாடசாலைகளும் ஆக குறைந்த பாடசாலைகள் உள்ள மாவட்டமாக தலா  01 பாடசாலை கொண்ட மாவட்டங்களாக  யாழ்பாணம் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இப்பாடசாலைகளில் (856 பாடசாலைகளில் ) கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்ளின் எண்ணிக்கை   352.633  இந்த முஸ்லிம் பாடசாலைகளில் போதனா ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 13.050 மட்டுமே என்பது மிக கவலையோடு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். 

அதாவது 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதம் என்பது மிகமோசமான போதனை முறை என்பதில் சந்தேகம் இல்லை  இதே வேலை சிங்கள பாடசாலைகளில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டிரிகிறது .  

இலங்கை போன்ற ஜனநாயக வளர்சி பெற்ற,97  வீத கல்வி அறிவு கொண்ட ஒரு நாட்டை பொறுத்த மட்டில் இது  அசிங்கமான வரலாற்று பதிவாகும். 

ஒரு சமுகம் சார்ந்த பாடசாலை என்பதற்காகவே இந்த பாரபற்ச நியமனமுரை என்றால் அந்த சமுகத்தின் முக்கிய பங்காக கருத்தப்படும் சமய பாடத்தின் மீதான காழ்புணர்வும் நியமன மறுப்புவீச்சின் வேகமும் எப்படி இருக்கும் என்பதை மிக இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது .


 2000 திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆசிரியர் நியமனத்தின் வெற்றிடம் இருக்கும் வேளையில் பல முயற்சிகளுக்கு பின்னர் 618 பேருக்கு நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அன்றைய அரச தரப்பால் வழங்கப்பட்டது .

 அதில் முதற்கட்டமாக 2010 ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக பிரித்து மொத்தமாக 151 நியமனங்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் இன்றுவரைக்கும் எஞ்சிய 467 இஸ்லாமிய ஆசிரியர் நியமனம் என்பது வெறும் கோரிக்கைகளாக மட்டுமே அறியப்பட்டு வருகிறது. 

நமது சகோதர சமுகமான தமிழ் சமுகம்  மொத்த சனத்தொகையில் நம்மை விட வெறும் 3 விழுக்காடு மட்டுமே அதிகமாக இருந்தும் 2223  பாடசாலைகளை பெற்றிரிகிறார்கள்  என்பது ஆச்சரியதிற்குரிய எண்ணிக்கையாகும். இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அறிவியல் அதிர்வுகள் இன்னும் ஆட்கொள்ளவில்லை என்பதையே இந்த பின்னடைவுகள்  புலப்படுத்துகிறது அதன் வெளிப்பாடுதான்  இந்த புறக்கணிப்பும் அதை கண்டுகொள்ளாத முஸ்லிம் அரசியல்வாதிகளின்  அமைதியும் .
  
குறிப்பிட்ட சமூக  ஆர்வலர்களும், நிறுவனக்களும் அவ்வப்போது இது பற்றி பேசினாலும் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான நியாயமான எதிர்வினை இன்றளவும் பூச்சியமாகவே காணப்படுகிறது .

இஸ்லாமிய ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில் ஆட்சி கதிரையில் மாறி மாறி இருந்த அத்துனை ஆளும் அரச தரப்பாலும் ஏற்றுகொள்ளப்பட்டு அதற்கான அனுமதிகள் அவ்வப்போது வழங்கப்பட்ட பின்பும் இந்நியமன மறுப்பு  நீடிப்பதானது அநாகரிகமான புறக்கனிப்பாகும் இதை மிக அமைதியாக வேடிக்கை  பார்க்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது அமைதிக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் .

இந்த இஸ்லாமிய ஆசிரியர் நியமனம் என்பது வெறுமனே  குறிப்பிட்ட  துறை சார்ந்தவர்களின் பதவி போராட்டமாக பார்க்காமல் எமது இளம் சமுதாயத்தின் வாழ்வியல் பிரச்சினையாக நோக்கப்படுதல் வேண்டும் .

 அவ்வாறு கருதப்பட்டால் மட்டுமே இதற்கான நியமன அங்கிகாரத்தை இந்த அரசியல் சக்திகளால் பெற்றுதர குறைந்தபற்ச முயற்சிகலாவது மேற்கொள்ளபடும்.
 அது மட்டுமல்லாமல் இது  அவர்களில் தார்மீக கடமை என்பதையும் இந்த சமுதாயம் புரியவைக்க  முன்வர வேண்டும். 

இல்லையென்றால் இஸ்லாத்தின் அடிபடைகளும் அரபு மொழி பரிற்சியம் இல்லாத( ஒரு சில தன்னார்வ மாற்று பாடத்திற்காக நியமிக்க பட்ட )ஆசிரியர்களால் இஸ்லாமிய பாடம் நடத்தப்படும் வேதனைகுரிய போதனை முறையும்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

  இச்செயற்பாடானது  இந்த சமுககத்தின்  சமயம் சார்ந்த அறிவியலை முறித்து விடுவதற்கு சமமாகும்.  

இஸ்லாமிய ஆசிரியர் நியமன விடயத்தில் அதிகாரம் உள்ளவர்களும், அரசியல் வாதிகளும், சமூக நிறுவனங்களும் விரைந்து செயற்பட்டு உரியவர்களின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று இந்நியமன புறக்கணிப்பால்   பாதிக்கபட்டவர்களுக்கும் ,மாணவர்களும் அவர்களின் நியாமான இந்த உரிமையை பெற்று கொடுக்க முன்வர வேண்டும் .

 இந்த விடயத்தில் சமூக உணர்வோடு முஸ்லிம் அரசியல் வாதிகளின் செயற்பட முன்வருவார்களாக இருந்தால்  
அதற்கான சிறந்த சந்தர்மாக கருதப்படும் புதிய அரசின் 100  நாள் வேளை திட்டத்தில் இஸ்லாமிய ஆசிரியர் நியமனத்தை வென்றெடுக்க முடியும்  இன்ஷா அல்லாஹ்.

இது அரசியலை தாண்டிய ஒரு சமூக கடமை என்பதை சம்மத்தப்பட்ட தரப்புகள் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம். இல்லையெனில்  இதற்கான பதிலை இறை சன்னிதானத்தில் சொல்ல முடியாத துற்பார்கிய நிலைக்கு முகம் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதை வேதனையோடு  சொல்லிவைக்க கடமைபட்டுள்ளோம் .
Jaffna Muslim 
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar