BREAKING NEWS
Showing posts with label UCP. Show all posts
Showing posts with label UCP. Show all posts

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் இன்றைய சுதந்திரதின நிகழ்வுகள்

 







இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சியான ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் இன்றைய சுதந்திரதின நிகழ்வுகள்  கட்சியின் உபதலைவரும் கல்குடா அமைப்பாளருமாகிய எம்.ஐ. சல்மான் வஹாப் தலைமையில் 04.02.2022 இன்று இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக பொலிஸ் பொதுமக்கள் நலம்புரி இணைப்பாளர் B.நளீர், மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் இணைப்பாளர்கள் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

காத்தான்குடி கிளை காரியால‌ய‌த்தில் சுத‌ந்திர‌ தின‌ விழா

 


இல‌ங்கையின் 74வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் காத்தான்குடி கிளை காரியால‌ய‌த்தில் சுத‌ந்திர‌ தின‌ விழா கொண்டாட‌ப்ப‌ட்ட‌து.


க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் வ‌ழிகாட்ட‌லுக்கிண‌ங்க‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் காத்தான்குடி அமைப்பாள‌ர் ஐ எல் அன்வ‌ர் அவ‌ர்க‌ளின் த‌லைமையில் காத்தான்குடி செய‌ற்குழு உறுப்பின‌ர்க‌ளின் வ‌ருகையுட‌ன் இவ்வைப‌வ‌ம் ந‌டைபெற்ற‌து. 

கோழிக்கள்ளன் போல கிழக்குக்கு வருகிறார் ஹக்கீம்

 


கோழிக்கள்ளன் போல கிழக்குக்கு வருகிறார் ஹக்கீம் : ஐக்கிய காங்கிரஸ் தெரிவிப்பு. 


நூருல் ஹுதா உமர் 


பிரதான முஸ்லிம் கட்சிகள் எல்லாம் இரட்டை வேடம் கொண்டவை எனும் உண்மையை பலவருடங்களாக நாங்கள் கூறிவருகிறோம். நாங்கள் எப்போதும் உண்மைகளை மட்டுமே மக்கள் மத்தியில் கூறிவருகிறோம். மயிலாக இருந்தாலும் சரி மரமாக இருந்தாலும் சரி கடந்த காலங்களில் கடுமையாக மஹிந்த அரசை விமர்சனம் செய்தார்கள். இப்போது அவர்கள் எல்லோரும் ராஜபக்ஸ அரசுக்கு சார்பானவர்களாக இருப்பதை வரவேற்கிறோம். அவர்கள் அரசுக்கு சார்பானவர்களாக இருந்தால் தான் பாராளுமன்ற கதிரைக்கும், எமது சிறுபான்மை சமூகத்திற்கும் ஏதாவது நன்மை கிடைக்கும். சிறிய சமூகமாக வாழும் நாம் பெரும்பான்மை இன மலைகளுடன் மோத முடியாது. கடந்த காலங்களில் அஸ்ரப் அவர்களும் எதிரணி அரசியலிலும் ஜனாதிபதி பிரேமதாசாவை ஆதரித்து புதிய பரிணாமத்தை காட்டினார் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். 


ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி பொறுப்பாளரும், கட்சியின் பிரதித் தலைவருமான சல்மான் வஹாப் மற்றும் கட்சியின் கல்குடா தொகுதி ஆலோசகர் முஹம்மத் ஹக்கீம் ஆகியோர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வை தொடர்ந்து கட்சியின் தலைமையகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்களுக்கு அரசினால் அபிவிருத்தி திட்டங்கள், தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதுடன் முஸ்லிங்களின் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான சலுகைகளை பெற்ற ஹக்கீம், றிசாத் போன்றோர்கள் பின்னர் வந்த நாட்களில் கொப்புத் தாவினர். இந்த சம்பவங்கள் இனியும் தொடரக்கூடாது. 


மு.கா தலைவரின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்திற்கு பிழையானவை என்பதை உணர்ந்த மக்கள் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை பகிரங்கமாக துரோகியென விமர்சிக்கின்றனர். அவரது துரோகத் தனங்களை நாங்கள் எப்போதோ பட்டியலிட்டு விட்டோம். இப்போது தான் மக்களுக்கு அது விளங்கியுள்ளது. முஸ்லிம் கட்சியின் தலைவர் படை பட்டாளங்களுடன் வரவேண்டிய காலம் மலையேறி இப்போது கோழித்திருடன் போல கிழக்குக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹக்கீம் போன்றவர்கள் மக்கள் தங்களுக்கு வழங்கிய அமானிதத்திற்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதுடன் மக்களும் இவ்வாறான ஏமாற்று தலைமைகளை நிராகரித்து நிதானமான அரசியல் கலாச்சாரத்தை உண்டாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

15 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ அர‌சிய‌ல் க‌ளத்தில் உள்ள‌ எம‌து க‌ட்சி ஏன் உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளில் போட்டியிட‌வில்லை, ஏன் உறுப்பின‌ர் பெற‌வில்லை ?

 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ அர‌சிய‌ல் க‌ளத்தில் உள்ள‌ எம‌து க‌ட்சி ஏன் உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளில் போட்டியிட‌வில்லை, ஏன் உறுப்பின‌ர் பெற‌வில்லை


என்ப‌து ப‌ல‌ரின் கேள்வி.

நாம் க‌ட்சி ஆர‌ம்பித்த‌த‌ன் பிர‌தான‌ நோக்க‌ம் ம‌க்க‌ளுக்கு உண்மையான‌ அரசிய‌ல் விழிப்பூட்டுவ‌த‌ற்கும், நேர்மையான‌ அர‌சிய‌லை காட்டுவ‌த‌ற்குமேயாகும்.

அத‌ன் ப‌டி முஸ்லிம் க‌ட்சிக‌ளின் த‌வ‌றுக‌ளையும், முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளின் துரோக‌ங்க‌ளையும் ச‌மூக‌த்துக்கு ப‌கிர‌ங்க‌மாக‌ சுட்டிக்காட்டி அர‌சிய‌ல் விழிப்பூட்ட‌வே இக்க‌ட்சியைப‌ய‌ன்ப‌டுத்தினோம். அதில் க‌னிச‌மான‌ வெற்றியும் க‌ண்டோம்.


இன்று முஸ்லிம்க‌ளின் ஓட்டுப்பெற்ற‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் எம்மை 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ ஏமாற்றி விட்டார்க‌ள் என்று ம‌க்க‌ள் புல‌ம்புவ‌த‌ன் மூல‌ம் எம‌து க‌ருத்துக்க‌ள் புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.



2001ம் ஆண்டு 11 எம்பீக்க‌ளுட‌ன் இருந்த‌ ஹ‌க்கீமின் முஸ்லிம் காங்கிர‌ஸ் இன்று 5 பேருட‌ன் இருக்கிற‌து. இத‌ற்கு பிர‌தான‌ கார‌ண‌ம் அக்க‌ட்சியின் துரோக‌ங்க‌ளை சுட்டிக்காட்டி நாம் வெளியிட்ட‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ அறிக்கைக‌ளாகும்.


அதே போல் தேசிய‌ அர‌சிய‌லில் எவ்வாறு செய‌ற்ப‌ட‌ வேண்டும் என்ப‌தை ஒரு க‌ட்சியாக‌ நாம் வ‌ழி காட்டினோம்.

சிறுபான்மை க‌ட்சி எவ்வாறு தேசிய‌ அர‌சிய‌லில் தூர‌ நோக்கோடு செய‌ற்ப‌ட‌ வேண்டும், எவ்வாறு தேசிய‌ க‌ட்சிக‌ளுட‌ன் ச‌மூக‌த்துக்கான‌ ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ வேண்டும் என்ப‌தையும் நாம் ஒரு க‌ட்சியாக‌ இந்த‌ 15 வ‌ருட‌த்தில் செய‌ற்ப‌டுத்தி காட்டினோம்.

1. 2005 ஜ‌னாதிப‌தி தேர்த‌லே எம‌து க‌ட்சி முக‌ம் கொடுத்த‌ முத‌லாவ‌து தேர்த‌லாகும். 

அதில் நாம் இந்நாட்டின் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அதிக‌ம் நேசிக்கும் வேட்பாள‌ர் யார் என்று ஆராய்ந்தோம். யார் யுத்த‌த்தை முடித்து முஸ்லிம்க‌ளுக்கு சுத‌ந்திர‌த்தை த‌ருவார் என‌ ஆராய்ந்தோம்.

ஒரு ப‌க்க‌ம் ர‌ணில் ம‌று ப‌க்க‌ம் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌.

நாம் ம‌ஹிந்த‌விட‌ம் நெருங்கி எம‌து ஆத‌ர‌வை த‌ருவ‌த‌ற்காக‌ க‌ட்சிக்கான‌ எந்த‌ ப‌த‌வியையும் முன் வைக்காம‌ல் ச‌மூக‌த்துக்கான‌ 4 கோரிக்கைக‌ளை ம‌ட்டும் முன் வைத்தோம்.

1. யுத்த‌த்தை முடித்து ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

2. இஸ்லாம் ச‌ம‌ய‌ பாட‌த்துக்கென‌ மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.ப‌ள்ளிவாய‌லில் ப‌ணி புரியும் இமாம் முஅத்தின்க‌ளுக்கு அர‌ச‌ ச‌ம்ப‌ள‌ம், ஓய்வூதிய‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

4. ச‌மாதான‌ பேச்சுவார்த்தையில் உல‌மா க‌ட்சியும் க‌ல‌ந்து கொள்ள‌ வேண்டும்.

இந்த‌ ஒப்ப‌ந்த‌த்தை ம‌ஹிந்த‌ ஏற்றார். நாம் அவ‌ரை ஆத‌ரித்தோம்.

ஆனால் ம‌க்க‌ள் ஓட்டுப்பெற்ற‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் எவ்வ‌ள‌வு ப‌ண‌ம், அமைச்சுப்ப‌த‌விக‌ள், சேர்ம‌ன் ப‌த‌விக‌ள், கொந்த‌ராத்து என்ப‌வ‌ற்றை முன் வைத்த‌ அர‌சுக‌ளுக்கோ எதிர் க‌ட்சிக்கோ ஆத‌ர‌வ‌ளித்த‌ன‌ர்.

இந்த‌ துரோக‌த்தை மாற்றும் வ‌கையில் ச‌மூக‌த்துக்கான‌ நிப‌ந்த‌னைக‌ளை ம‌ட்டும் கொடுத்து ஒப்ப‌ந்த‌ம் செய்து ஆத‌ரித்த‌ ஒரே க‌ட்சி என்ற‌ வ‌ழி காட்ட‌லையும் நாம் செய்தோம்.

அத‌ற்கிண‌ங்க‌ ம‌ஹிந்த‌ ஜ‌னாதிப‌தியான‌ போது 2009ல் யுத்த‌ம் முடிவுக்கு வ‌ந்த‌து. 2010ல் 150 மௌல‌விமாருக்கு மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் கிடைத்த‌து.

ம‌றைந்த‌ அஷ்ர‌ப் 1994 முத‌ல் 2000 வ‌ரை அமைச்ச‌ராக‌ இருந்தும் ஒரு மௌல‌விக்கேனும் நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ ஏற்பாடு செய்ய‌வில்லை.

அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் 2004 முத‌ல் அதாவுல்லா காங்கிர‌ஸ் 2004 முத‌லும் அர‌சாங்க‌த்தில் இருந்தும் அமைச்ச‌ர்க‌ளாக‌ இருந்தும் இத‌ற்கு முய‌ற்சி எடுக்க‌வில்லை.

என‌வேதான் எம‌து க‌ட்சி ம‌க்க‌ளின் ஓட்டுக்க‌ளை எடுக்க‌ வேண்டும் என‌ ஓடாது ம‌க்க‌ள் பிர‌ச்சினைக‌ளை அர‌சிய‌ல் ம‌ய‌ப்ப‌டுத்துவ‌திலேயே க‌வ‌ன‌ம் செலுத்திய‌து.

ஓட்டுக்க‌ளை பெற்ற‌வ‌ர்கள் ப‌த‌விக‌ள் பெற்று ச‌மூக‌த்தின் மான‌த்தை க‌ப்ப‌லேற்றிக்கொண்டிருக்கும் போது நாம் ப‌ண‌த்துக்கும் ப‌த‌விக்கும் சோர‌ம் போகாம‌ல் ஓட்டுக்க‌ளை க‌ருத்தில் எடுக்காம‌ல் ம‌க்க‌ளுக்காக அர‌சிய‌ல் செய்தோம். ச‌மூக‌த்தின் அனைத்து பிர‌ச்சினைக‌ளையும் வெளிக்கொண‌ர்ந்தோம்.


இத்த‌கைய‌தொரு நேரிய‌ அர‌சிய‌ல் வ‌ழிகாட்ட‌லை எம‌து க‌ட்சி ம‌ட்டுமே செய்த‌து, இன்ன‌மும் செய்கிற‌து.


Mubarak Abdul Majeed 

United Congress Party 


24.8.2021

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

 


வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.


அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar