BREAKING NEWS
Showing posts with label Kalmunai. Show all posts
Showing posts with label Kalmunai. Show all posts

க‌ல்முனையின் சில‌ முஸ்லிம் பிரிவுக‌ளை ம‌ட்டும் முட‌க்கிய‌து ஏன்

 


கல்முனை பிராந்தியத்தில் இன்று வரை 800 ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்கள் என‌ க‌ல்முனை சுகாதார‌ மாவ‌ட்ட‌ ப‌ணிப்பாள‌ர் டொக்ட‌ர் ஜி சுகுண‌ன் தெரிவித்துள்ள‌த‌ன் மூல‌ம் முழு க‌ல்முனை மாவ‌ட்ட‌த்தையும் முட‌க்காம‌ல் க‌ல்முனை ப‌ஸார், ச‌ந்தை, க‌ல்முனையின் சில‌ முஸ்லிம் பிரிவுக‌ளை ம‌ட்டும் முட‌க்கிய‌து ஏன் என‌ உல‌மா க‌ட்சி கேள்வி எழுப்பியுள்ள‌து.


டொக்ட‌ர் ஜி சுகுண‌ன் அவ‌ர்க‌ளால் க‌ல்முனையில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஊட‌க‌விய‌லாள‌ர் மாநாட்டில் பேசும் போது அவ‌ர், அக்கரைப்பற்று பிரதேசத்தில் தொற்று நிலை அளவுக்கு அதிகமாக அதிகரித்ததை தொடர்ந்து அங்கு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த பிரதேசம் தற்போது தொற்று நிலைமையில் இருந்து நீங்கி வருகின்ற நிலையில் உள்ள‌தாக‌ சுகுண‌ன் தெரிவித்துள்ளார்.


 ஆனால் அக்க‌ரைப்ப‌ற்று ச‌ந்தையில் கொரோனா தொற்றாள‌ர் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌ போது முழு அக்க‌ரைப்ப‌ற்று உட்ப‌ட‌ பால‌முனை வ‌ரை லொக் ட‌வுன் செய்ய‌ப்ப‌ட்ட‌தே த‌விர‌ அக்க‌ரைப்ப‌ற்றின் சில‌ வீதிக‌ளை ம‌ட்டும் மூட‌வில்லை என்ப‌தை டொக்ட‌ர் சுகுண‌ன் சொல்ல‌ ம‌ற‌ந்து விட்டாரா?


எம்மை பொறுத்த‌வ‌ரை அக்க‌ரைப்ப‌ற்று லொக்ட‌வுன் செய்ய‌ப்ப‌ட்ட‌ போது அத‌ன் வ‌ட‌க்கில் உள்ள‌ முஸ்லிம் ஊர்க‌ளும் மூட‌ப்ப‌ட்ட‌து போல் தெற்கில் உள்ள‌ திருக்கோவிலும் லொக் செய்ய‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும். அவ்வாறு செய்யாத‌த‌ன் கார‌ண‌மாக‌ பின்ன‌ர் திருக்கோவிலிலும் தொற்றாள‌ர் காண‌ப்ப‌ட்ட‌ன‌ர்.


அதே போல் பேலிய‌கொட‌ மீன் ச‌ந்தையில் கொரோனா தொற்றாள‌ர் காண‌ப்ப‌ட்ட‌ போது அந்த‌ ச‌ந்தைதான் மூட‌ப்ப‌ட்ட‌தே த‌விர‌ ச‌ந்தைக்கு அருகில் உள்ள‌ க‌ள‌னி ச‌ந்தையை க‌ருத்திற்கொண்டு மூட‌ப்ப‌ட‌வில்லை.



டொக்ட‌ர் சுகுண‌ன் பேசும் போது, கல்முனை நகர பிரதேசத்தில் 150 ற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் என‌ கூறுகின்றார். அவ்வாறு க‌ல்முனை ந‌க‌ர‌ பிராந்திய‌ம் என்றால் அத‌ன் எல்லை எது என‌ கேட்கிறோம். செய்லான் வீதி தொட‌க்க‌ம் க‌ல்முனை வாடி வீடு வீதி வ‌ரை உள்ள‌ ப‌குதி க‌ல்முனை ந‌க‌ர‌ம் என்ப‌தை அவ‌ர் ஏற்றுக்கொண்டுள்ளாரா? அப்ப‌டியாயின் பாபுஜீசுக்கு அப்பால் உள்ள‌ ப‌குதி க‌ல்முனை ந‌க‌ர் இல்லையா?


 க‌ல்முனை கொரோனா த‌டுப்பு என்ப‌து இன‌வாத‌ ரீதியிலும், பிர‌தேச‌ வாத‌ரீதியிலும் பார்க்க‌ப்ப‌டுகிற‌தே த‌விர‌ ம‌னித‌ர்க‌ள் அனைவ‌ரையும் ஒரே க‌ண்கொண்டு பார்க்க‌வில்லை என்ற‌ எம‌து குற்ற‌ச்சாட்டை டொக்ட‌ர் சுகுண‌னின் ந‌ட‌வ‌டிக்கை காட்டுகிற‌தே த‌விர‌ அத‌னை ய‌தார்த்த‌பூர்வ‌மாக‌ அவ‌ரால் ம‌றுக்க‌ முடிய‌வில்லை. அத்துட‌ன் இவ்வாறு க‌ல்முனையை இன‌ரீதியாக‌ மூடுவ‌த‌ற்கு இன்ன‌மும் ஜ‌னாதிப‌தி செய‌ல‌ணி அனும‌தி கிடைப்ப‌த‌ற்கு முன்பாக‌வே அவை டொக்ட‌ர் சுகுண‌ன், க‌ல்முனை மேய‌ர் அவ‌ர்க‌ளினால் வேண்டுமென்றே அதுவும் ம‌க்க‌ளுக்கு சில‌ ம‌ணித்தியால‌ய‌ங்க‌ள் அவ‌காச‌ம் வ‌ழ‌ங்காம‌ல் மூடி அநியாய‌ம் செய்துள்ள‌ன‌ர் என்ப‌து தெரிகிற‌து.


டொக்ட‌ர் சுகுண‌ன் ந‌ட‌த்திய‌ ஊட‌க‌ மாநாட்டில் இத்த‌கைய‌ ம‌ய‌க்க‌ க‌ருத்துக்க‌ளை அவ‌ர் தெரிவித்த‌ போது அங்கு க‌ல‌ந்து கொண்டிருந்த‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர், க‌ல்முனை வ‌ர்த்த‌க‌ர்கள் இத்த‌கைய‌ கேள்விக‌ளை அவ‌ரிட‌ம் கேட்டு தெளிவு ப‌டுத்தாம‌ல் மௌன‌மாக‌ இருந்துள்ள‌மையான‌து க‌வ‌லையான‌ விட‌ய‌மாகும்.


ஆக‌வே க‌ல்முனை மாவ‌ட்ட‌த்தில் உண்மையான‌ கொரோனா இருந்தால் அத‌னை இன‌ரீதியாக‌, பிர‌தேச‌வாத‌ ரீதியாக‌ பார்க்காம‌ல் அனைத்து ம‌க்க‌ளையும் ஒரே க‌ண்ணோட்ட‌த்தில் பார்க்குமாறு உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்



ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு பேசும் போது,

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன்  பார்த்தார்கள். மட்டுமின்றி பிரதமரின் செயலாளருடன் என்னை அனுமதிக்கக் கூடாது என வாதிட்டனர்..

என்னை அந்த செயல் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.  இருந்தாலும் வரவேற்பறையில் காத்திருந்த போது அதை அறிந்த பிரதமர் தனது செயலாளர்களை அனுப்பி என்னை உள்ளே வரவழைத்தார். அங்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி, இராஜாங்க அமைச்சர்  விமலவிர  திஸாநாயக்க , கிழக்கு மாகாண ஆளுநர், முக்கிய அரச அதிகாரிகள், தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் புத்திஜீவிகள் எனப்பலரும் குழுமியிருந்தனர்.

தமிழ் மக்களின் சார்பில் இராஜாங்க அமைச்சர் விமலவிர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ யானி ஆகியோருடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் களின் குரல் அப்பிரதேச செயலக தரமுயர்வுக்கு ஆதரவாக  இருந்த போது நான் தைரியமாக அந்த பிரதேச செயலக உருவாக்கம், அமைவிடங்களை பற்றி தெளிவுபடுத்தினேன். அரசாங்க அதிபரும் அதுபற்றிய முழு விளக்கத்தை வழங்கினார்.

 கடந்த கால அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக உருவாக்கிய செயலகம் என்பதை உறுதியாக எடுத்துரைத்தோம். அதை செவியுற்ற பிரதமர் அவர்கள் அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை உண்டாக்குவதாகவும் தெரிவித்து 100 மீட்டர் தூரத்திற்குள் இரு செயலகங்கள் இருப்பதை கேட்டு ஆச்சரியப்பட்டார்.

1987 ஆம் ஆண்டு இருந்தது போன்று நான்கு சபைகளை உருவாக்கி  நான்கு செயலகமங்களை உருவாக்கும் யோசனையை  ஏற்றுக்கொள்வதாக எனது நிலைப்பாட்டை அறிவித்தேன். அப்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்பது வருடங்களாக அந்த செயலகம் இயங்குவதாகவும் அதை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

அக்கூட்டத்திற்க்கு அப்போது சமூகமளித்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் இனவாத அரசியலுக்கு எதிராக குரல்கொடுத்தார். இனவாதமாக அமைக்கப்பட்ட கல்விவலயங்கள், நிர்வாக அலகுகளுக்கு எதிராக கடுமையாக பேசினார். இந்த நாட்டில் சகல இனங்களும் நிம்மதியாக வாழவேண்டிய தேவையை உணர்த்தி பேசினார். அதன் பின்னர் நாங்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தோம். மாற்று அரசியல் கொள்கைவாதியாக இருந்தாலும் அவரின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன்.

பிரதமருடனான அந்த கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை தீர்த்து வைக்க ஒரு எல்லைநிர்ணய ஆணைக்குழுவை அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. தமிழ்,முஸ்லிம் மக்களின் சாட்சியங்கள் கேட்கப்பட்டு நியாயமான ஒரு தீர்வை பெற முடிவு எட்டப்பட்டது. அதன் பின்னர் சில அரசியல் சித்து விளையாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருவது மிகவும் கவலையான ஒன்றாக நான் பார்க்கிறேன்.

தேசிய காங்கிரஸ் அபிமானிகள் அந்த பிரச்சினை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் மட்டுமே முடிக்கப்பட்டதாகவும், என்னுடைய அபிமானிகள் என்னால் மட்டுமே முடிக்கப்பட்டதாகவும் பதிவிட்டு சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இது தேவையில்லாத ஒரு விடயம்.
முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதிகளான எங்களின் ஒற்றுமையான குரலுக்கு கிடைத்த வெற்றியே.

இந்த கட்சி சண்டை கலாச்சாரம்  மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள்.

எமது பிரதேச பள்ளிவாசல் சம்மேளனங்கள், பொதுநல அமைப்புக்கள், என்பன இதுசம்பந்தமாக தமது கரிசணையை செலுத்தி எமது அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்தி தமது சமூகத்தின் இருப்பை பலப்படுத்த முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.


மண்ணைக்காத்த மயிந்தர்கள் எனக்கூற நாகூசவில்லையா?


"அல்லாஹ்வின் திருநாமத்தால்"

அன்புடையீர்! "அஸ்ஸலாமு அலைக்கும்"

கல்முனைத் தொகுதி என்பது......
+++++++++++++++++++

ஒரு தொகுதியும், ஒரு மாநகரசபையும் ஒரே எல்லையை உள்ளடக்கியதுதான் கல்முனைத் தொகுதியாகும். கேற் முதலியார் காரியப்பர் முதல் கல்முனைத் தொகுதியின் பிரதிநிதித்துவமும், கௌரவமும் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது.

1. எம்.எஸ்.காரியப்பரது காலம். அது கல்முனை விழித்துக்கொண்ட, அபிவிருத்தி கண்ட காலம்.

2. எம்.சி. அஹமது அவர்களுடையகாலம். இது அரசியல் அதிகாரம் செலுத்திய காலம்.

3. ஏ.ஆர்.மன்சூர் அவர்களுடைய காலம். கல்முனை சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டகாலம்.

4. அஷ்ரப் அவர்களது காலம் சமுகத்துக்கு பேரும் புகழும் கிடைத்த காலம்.

5. தற்போதை 18 வருட காலம் இருண்ட காலம்.

6. 1989 முதல் இன்றுவரை பாராளுமன்றம், மாகாணசபை, மாநகரசபை சகலதிலும் அதிகாரம் செலுத்துவது SLMC தான்.

எம்.எஸ்.காரியப்பர் முதல் ஆழுமை உள்ளவர்களால் பாதுகாக்கப்பட்ட கல்முனையின் பிரதிநிதித்துவம் 2004ல் இளக்கப்பட்டது. அதற்கு காரணம் யார்? மக்களா? ஹரீசா?

பேரியல், அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து தேர்தல் கேட்டுவிட்டு ஜனுதீனின் கயிற்றை விழுங்கி மாவடிப்பள்ளி மில் வளவில் இத்தா இருந்துவிட்டு கல்முனையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த வரலாற்று துரோகத்தை செய்தது ஹரீஸ் இல்லாமல் வேறுயார். இதற்கு முகநூல் கூலிகளே உங்கள் பதில் என்ன?

அப்போது ஹகீம் திகாமடுல மாவட்டாத்தில் போட்டியிட்டு கெபினட் அமைச்சராகிறார்.

ஹரீஸ் 2004ல் எம்.பி.இல்லாமலானபோது கலமுனையை பிடித்த சாபம் முடிந்து விட்டதாக உணர்ந்தோம். மீண்டும் SLMCயில் இணைந்து முதல் மேயர் அஜ்மீரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு கல்முனை மாநகரின் மேயரானார் ஹரீஸ். அவரது காலத்தில்தான் சுனாமி வந்தது. கல்முனையை அபிவிருத்திசெய்ய அதைவிட வரப்பிரசாதமான காலம் ஏதுமுண்டா? அதையும் அவரது காலத்தில் பாளடித்து விட்டார்.

கல்முனையின் ஒரு அங்குல நிலத்தையும் இழக்க விடாமாட்டேன் என்று மேடைகளில் நின்று மார்தட்டும் அன்றைய மேயர் ஹரீசும், அன்றைய அம்பாரை மாவாட்ட எம்.பி.ஹகீமும் நமது கல்முனை மாநகர மண்ணை பாதுகாத்தார்களா? உங்கள் நெஞ்சங்களில் கைவைத்து சொல்லுங்கள்.

!987 முதல் 2001 வரை கல்முனை மாநகரின் தெற்கு எல்லையாக இருந்து வருவது -

மாளிகைகாடு சந்தியிலிருந்து தெற்கு நோக்கி காரைதீவு சந்தியை அடைந்து, மேற்காக மாளிகைகாடுவரை சென்று வெட்டை ஆற்றை அடைந்து வடக்கு நோக்கி கிட்டக்கியை போய் சேரும் வர்த்தக, வயல் பரப்பை கொண்ட பகுதியாகும். இப்பகுதியை நமது முன்னோர்கள் கட்டிக்காத்து தந்தார்கள்.

கல்முனை நகரசபை 1067/16 ம் இலக்க 1998.12.01ம் திகதிய கெசட் மூலமும், கல்முனை மாநகரம் 1188/16ம் இலக்க 2001.06.01ம் திகதிய கெசட் மூலமும் ஒரே எல்லைகளை கொண்டதாகவே கெசட் செய்யப்பட்டு நமது காணியின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டன.

கல்முனையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை 2004 ல் வரலாற்றில் இல்லாமல் செய்த ஹரீஸ்  கல்முனை மாநகர மேயராக 2005ல் இருந்தபோது, 2005.12.01ல் நிந்தவூர் பிரதேச சபையிலிருந்து மாளிகைகாடு, மாவடிப்பள்ளி ஆகிய 40% முஸ்லிம்களை உள்வாங்கி காரைதீவு பிரதேசசபை உருவானது.

ஒரு பிரதேச சபை புதிதாக உருவாகும்போது அதற்கும், அதன் பக்கத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கும் வெவ்வேறாக எல்லைகள் கெசட் செய்யப்பட வேண்டு.

அதற்கமைய காரைதீவு பிரதேச சபை உருவானபோது 2005.12.01ல் நிந்தவூர் பிரதேச சபை புதிதாக காரைதீவு நீங்கலாக கெசெட் செய்யப்பட்டது. அதேபோல மேற்கு, வடபுற எல்லையை காரைதீவை தவிர்த்து கல்முனை மாநகர சபைக்கும் புதிதாக கெசட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அது செய்யப்பட இல்லை.

காரைதீவு பிரதேச சபை உருவாகி கெசட் செய்யப்பட்டபோது, தெற்கிலுள்ள நிந்தவூர் பிரதேச சபைக்கு கெசட் செய்யப்பட்டது ஆனால் வடக்கிலுள்ள கல்முனை மாநகர சபைக்கு ஏன் கெசட் செய்யப்படவில்லை.

* 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் உருவாக்கம் பற்றிய சட்டத்தின் பாகம் 1 பந்தி 2(1) ன் பகுதியில் " ஒரு பிரதேச சபை புதிதாக உருவாகும்போது அது நகரசபை, மாநகரசபை ஆகியவற்றின் இடப்பரப்பு நீங்கலாக" அமைதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு 1987 ஏப்ரல் 16ல் கெசட் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற சட்டத்தின்படி கல்முனை மாநகருக்கு சொந்தமான தென்பகுதி காணிகளும், வர்த்தக நிலையங்களும்,பள்ளிவாசல் வளவும் காரை தீவு பிரதேச சபை உருவானபோது களவாடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு முள்ளது.

அதாவது மாளிகைகாடு சந்தியிலிருந்து மேற்கு நோக்கி பரடைஸ் ஹோட்டலை ஊடறுத்து வெட்டை ஆறுவரை சென்று கல்முனை மாநகரின் தென்புறமாக உள்ள பெரும் நிலப்பரப்பு காரை தீவால் காவுகொள்ளப்பட்டுள்ளது. காரை தீவால் காவுகொள்ளப்பட்ட படம் கீழே  பிரசுரமாக உள்ளது. இது நடந்தது 2005ல் ஹரீஸ் மேயராகவும், துரோகி ஹகீம் அம்பாரை மாவட்ட எம்.பி.யாகவும், கெபினட் அமைச்சராகவும் இருக்கும் போதுதான் நடந்தது. இவர்கள்தான் கல்முனை மாநகரின் பாதுகாவலர்கள். தூ... அவர்களுக்குத்தான் வெட்கமில்ல என்றால் முகநூலில் வரலாறு தெரியாது எழுதும் நுனிப்புல் மேயும் கூலிகளுக்கு வெட்கமில்லயா?

எங்களது பள்ளிவாசல்.எங்களது இருப்பு எல்லாம் காரைதீவு தமிழர்களால் திட்டமிட்டு சூறையாடப்பட்டு, அவர்களது பிரதேச செயலகட்டிடத்தை நமது கல்முனை மாநகர எல்லைக்குள் நமது அபு அப்துல்லாஹ் பள்ளி வளவுக்குள் சட்டாவிரோதமாக கட்ட பார்த்திருந்தது யார்? கையாலாகாத ஹரீசும், ஹகீமும் அவர்களது கூசாத்தூக்கிகளும்தான் துரோகிகள்.

இவர்களை பார்த்து சமுகபாதுகாவலர்கள், மண்ணைக்காத்த மயிந்தர்கள் எனக்கூற நாகூசவில்லையா? மண்ணாங்கட்டிகள்.

1989 முதல் இன்றுவரை கல்முனை தொகுதி பா.உ., மாகாணசபை உறுப்பினர், மாநகர சபை சகலதும் SLMC யிடம் தான் இருந்தது, இருக்கிறது என்னத்த கிளிச்சுள்ளார்கள்.

2004ல் சுணாமி வந்தது சாய்ந்தமருது பிரதேச செயலக பகுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாய்ந்தமருதின் வொலிவோரியன் வீட்டுத்திட்டம் நியாயமான தீர்வு.

மாளிகைகாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் காரைதீவு பிரதேச செயலக பகுதியில் வாழ்ந்வதார்கள். அவர்களுக்கான வீடுகளை சாய்ந்தமருது பள்ளி நிர்வாகம், SLMC பா.உ.கள், சாய்ந்தமருது DS ஆகியோர் வக்புசபையின் அனுமதியுடன் ஒரு கெபினட் பேபரை ஹகீம்மூலம் போட்டு அந்த அபு அப்துல்லா பள்ளி இருந்த நமது உறுதிப்பூமியில் சுனாமி வீடுகளை கட்டி கொடுத்திருக்கலாம்.

கல்முனையில் இருந்து பிரிந்து பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு இருந்த கோமணத்தை காரைதீவானிடம் பறிகொடுத்துவிட்டு ஊருக்கு எம்.பி.எண்டு தொகுதிக்கு எம்.பி.யை இல்லாமலாக்க சதி நடக்கின்றது.

"இன்ஸா அல்லாஹ்"  கல்முனை மாநகரின் எல்லைகளை மீட்க, காரைதீவின் சட்டவிரோத கெசட்டை வறிதாக்க பிரதேச வாதத்துக்கப்பால் நாம் சுஜூது செய்த அபு அப்துல்லா பள்ளியின் மண்ணை பாதுகாக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்காட தீர்மானித்துள்ளேன்.

இதற்கான உதவி ஒத்தாசைகளை பிரதேச வேறுபாடின்று நல்ல உள்ளம் களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

வெற்றி அல்லது வீரசுவார்க்கம்.

குறிப்பு: நடுநிலையாக நின்று சிந்திக்கும் சமுக உணர்வுள்ள புத்திசாலிகளுக்கே எனது பதிவு புரியும்.

ஹாஜி நஸீர்

Note. க‌ல்முனை த‌லைமையிலான‌ தேசிய‌ க‌ட்சியொன்றை ப‌ல‌ப்ப‌டுத்த‌ நாம் த‌வ‌றிய‌தும் ந‌ம‌து இழ‌ப்புக்க‌ளுக்கு பெரும் கார‌ண‌மாகும். ஹ‌க்கீம் போன்ற‌ வ‌ந்தான் வ‌ர‌த்தானையெல்லாம் ந‌ம்பி மோச‌ம் போனோம். முஸ்லிம் காங்கிர‌சை க‌ல்முனையில் இருந்து ஒழிக்காத‌வ‌ரை க‌ல்முனை முஸ்லிம்க‌ள் இழ‌ப்புக்க‌ளை ம‌ட்டுமே தொட‌ர்ந்தும் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும்.

க‌ல்முனை பிர‌தேச‌ செய்ல‌க‌ பிர‌ச்சினையை முஸ்லிம் த‌ர‌ப்புட‌னும் பேசிவிட்டே முடிவெடுக்க‌ வேண்டும்



க‌ல்முனை பிர‌தேச‌ செய்ல‌க‌ பிர‌ச்சினையை  முஸ்லிம் த‌ர‌ப்புட‌னும் பேசிவிட்டே முடிவெடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி அவ‌ர்க‌ள் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் நேர‌டியாக‌ தெரிவித்தார்.
முன்னாள் அமைச்ச‌ர் க‌ருணாவின் க‌ருத்துக்கு ப‌தில‌ளித்து பேசும்போதே இவ்வாறு அவ‌ர் தெரிவித்தார்.

ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் செய்த ச‌கோத‌ர‌ க‌ட்சிக‌ளுக்கும் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்குமிடையிலான‌ ச‌ந்திப்பு இன்று (30) அல‌ரி மாளிகையில் ந‌டை பெற்ற‌து. இத‌ன் போது 40 சிறு க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள், செய‌லாள‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். இந்நிக‌ழ்வில் பேசிய‌ க‌ருணா அம்மான் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை நோக்கி நாம் கேட்ப‌து ஒன்றே ஒன்றுதான் அத‌னை செய்து த‌ந்தால் போதும். அதுதான் க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை த‌ர‌முய‌ர்த்துத‌ல். அதை ம‌ட்டும் செய்து த‌ந்தால் போதும் என்றார். இத‌ன் போது உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌ன‌து க‌ருத்தை முன்வைக்கையில்
நாம் 2005ம் ஆண்டு முத‌ல் கௌர‌வ‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அவ‌ர்க‌ளுக்கே ஆத‌ர‌வாக‌ செய‌ற்ப‌டுகின்றோம். முழு முஸ்லிம் ச‌மூக‌மும் ஒரு ப‌க்க‌ம் நிற்கும் நாம் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ற்ப‌ட்ட‌மையால் எம்மை முஸ்லிம் ச‌மூக‌ துரோகியாக‌ கூட‌ பார்த்தார்க‌ள். என்ன‌ள‌வு முஸ்லிம் ச‌மூக‌த்தில் யாரும் ஏச்சு வாங்காத‌ அள‌வு நான் ஏச்சுக்க‌ள் வாங்கியுள்ளேன். ஆனாலும் இந்த‌ நாட்டின் சிற‌ந்த‌ த‌லைவ‌ராக‌ ம‌ஹிந்த‌ உள்ளார் என்ற‌ உண்மையை சொல்லி வ‌ருகிறோம்.
க‌ல்முனை பிர‌ச்சினை ப‌ற்றி முன்னாள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் க‌ருணா த‌ன‌து க‌ருத்தை இங்கு தெரிவித்திருந்தார். க‌ல்முனை விட‌ய‌த்தில் த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் பிர‌ச்சினை உள்ள‌து, முஸ்லிம் ம‌க்க‌ளுக்கும் பிர‌ச்சினை உள்ள‌து. இது விட‌ய‌த்தில் ஒரு த‌ர‌ப்பின் க‌ருத்தை ம‌ட்டும் வைத்து தீர்வுக்கு வ‌ர‌ முடியாது.

ஆக‌வே த‌மிழ் த‌ர‌ப்பு முஸ்லிம் த‌ர‌ப்பு என்ற‌ இரு த‌ர‌ப்பின் க‌ருத்துக்க‌ளையும் ஆராய்ந்த‌ பின் நீதியான‌ தீர்வை நீங்க‌ள் த‌ருவீர்க‌ள் என்ப‌தே எம‌து கோரிக்கை என‌ முபாற‌க் மௌல‌வி தெரிவித்தார்.

மேற்ப‌டி பிர‌த‌ம‌ருட‌னான‌ ச‌ந்திப்பில் முஸ்லிம் க‌ட்சிக‌ள் என்ற‌ வ‌கையில் உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் ம‌ற்றும் செய‌லாள‌ர் ஸாஹித் முபாற‌க்,    ச‌மாதான‌ கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் முன்னாள் அமைச்ச‌ர்க‌ளான‌  ஹ‌ச‌ன‌லி, ப‌சீர் சேகு தாவூத் ஆகியோரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

அக்காலை கரவாகு பிரதேசத்தை ஆண்ட மாக்கான் ரகுமானின் ஆட்சியி

#திமிலரகளை துரத்தியடித்து முக்குவர்களாலும் முஸ்லிம்களாலும் கிழக்கு ஆக்கிரமிக்கப்பட்டதா?

முஸ்லிம்களும், முற்குவர்களும்
மட்டக்களப்பில் இன்றுள்ள தமிழர்களில் பெருபான்மையாக இருப்பவர்கள் முற்குவர்களேயாகும். இவர்கள் கூட மட்டக்களப்பின் முற்குடிகள் அல்ல.
அதற்குமுன்பே இங்கே

வாழ்ந்திருக்கக் கூடிய திமிலர்கள் எனும் மீன்பிடியை தொழிலாக கொண்டவர்கள் துரத்தியடித்த பின்னே இவர்கள் இங்கு குடியேறியுள்ளனர். இலங்கையின் பூர்வீக குடிகளில் ஒன்றான இயக்கர்களும் மீன்பிடித்தலையே தொழிலாக கொண்டிருந்தனர் என்பதுவும் இங்கே நோக்கற்பாலது.

எனவே காலப்போக்கில் இந்த இயக்கர்களே திமிலர் என அடையாளப்பட்டிருந்தல் கூடும். திமிலதீவுஇ வலையிறவு போன்ற மட்டக்களப்பு வாவியின் கரையோர கிராமங்கள் இந்த திமிலர்களின் அடையாளங்கள் ஆகும். இவர்களுடன் அடிக்கடி புதிதாக குடியேறிய முற்குகர்கள் கொண்ட சண்டையானது இறுதியில் அவ்வேளை வியாபார நிமித்தம் ஆப்கானிஸ்தான், துருக்கி போன்றவற்றிருந்து இங்கு வந்து சென்ற பட்டாணிகள் உதவியுடனேயே முடிவுக்கு வந்துள்ளது.

திமிலர்களால் முற்குகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இவர்களே தடுத்து நிறுத்தியுள்ளனர்.மட்டக்களப்பின் வடக்கே அமைந்துள்ள ‘ஏறாவூர்்’ எனுமிடம் திமிலர்கள் ஊருக்குள் நுழையாமல் ஏற்படுத்தப்பட்ட தடை குடியிருப்பு ஆகும். அதாவது முக்குகர்கள் தமது சகோதரிகளை பட்டாணிகளுக்கு மணம் முடித்து கொடுத்து காவல் காப்பதற்காக ஏறாவூரில் இருத்தினராம். இதைதாண்டி திமிலர்கள் உள்நுழைய கூடாது என்பதற்காக ‘ஏறாவூர்’ என அழைக்கப்படலாயிற்று என விபரிக்கிறது மட்டக்களப்பு மான்மீக கல்வெட்டுபாடல்.

இங்கு முக்குகர்களின் குடியேற்றம் என்று ஆரம்பித்ததோ அன்றே மட்டக்களப்பு பட்டாணியர்களின் (இன்றைய முஸ்லிம்களின் மூதாதையர்) வரவும் ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் மட்டக்களப்பின் காவர்களாக தமது உதிரத்தை சிந்திய மண் இது. ழூதிமிலரை துரத்தி சென்று திரும்பிவரும்போது பலரும் சந்தித்த வெளி சந்திவெளி எனவும், எதிரியை கொன்ற இடம் சத்துருகொன்றான் எனவும், சண்டையின் பின் வந்தேறிய (ஆறிய) இடம் வந்தாறுமூலை எனவும் மட்டக்களப்பில் முற்குகர்களும் பட்டாணியர்களும் நிலைகொண்டு வாழ்வதற்காக நடத்தியபோரின் வரலாற்றுத் தடயங்கள் கிராமங்களின் பெயர்களாகி இன்றும் காணப்படுகிறது.

அதுமட்டுமன்றி இந்த பட்டாணியர்கள் மணமுடித்துகொண்ட முற்குல பெண்களினு}டு காவப்பட்டு வரும் குடிப்பெயர்கள் இன்று வரை மட்டக்களப்பு முஸ்லிம்களிடையேயும் காணப்படுவதும் மட்டக்களப்பு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே தாயின் பிள்ளைகள் என்பதை சொல்லி நிற்கிறது.

மட்டக்களப்பானது தமிழர்களுக்கு தன்னோடுள்ள பாத்தியதைக்கு என்ன எல்லையை கொண்டுள்ளதோ அந்த எல்லைவரை இன்றைய முஸ்லிம்களுக்கு மட்டக்களப்பு ீதுள்ள பாத்தியதையும் செல்லும் என்பதை இங்கே நாம் காண தவற கூடாது.இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான ப10கோள வரை படங்களுள் முக்கியமானதொன்று தொலமி வரைந்த படமாகும். இதில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளதோடு கி.மு.147 வரையப்பட்ட இப்படத்தில் கல்முனை உள்ள இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை துறைமுகத்தை அன்றைய கடலோடி வியாபாரிகள் தரிசித்துள்ளனர் என்பதற்கான மிகத் தொன்மையான ஆதாரமாகும். அப்போது வந்த பாரசீக வியாபாரிகளே இலங்கைக்கு இந்த முகவரியை தேடி தந்தவர்கள். இவர்களது வரவில் இருந்து கல்முனையின் வரலாறு தொடங்குகிறது.

இப்படி பலவகையிலும் கிறிஸ்துவிற்கு முன்பே தொடங்கிய கிழக்கின் அரசியல் வரலாறு உருகுணை ராச்சியத்துடன் ஒட்டியும் இணைந்தும் சுமார் 8ம் நு}ற்றாண்டுவரை அதாவது 1000 ஆண்டுகாலம் நீடித்திருக்கின்றது. உருகுணையின் அரசர்கள் சிங்கள மன்னர்களாக இருந்தபோதிலும் அதன் வடபுலமான கிழக்கிலங்கையில் பெரும்பாலும் தமிழ் மக்களே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். ஏழுவகை குறுநில இராசதானிகளாக உருகுணையின் கீழ் தமிழ் பிரதானிகளும் சிற்றரசர்களும் சுயராச்சிய பிரிப்புகளை ஆண்டு வந்திருக்கிறார்கள். இவற்றை காரைதீவுஇ தம்பிலுவில்இ வீரமுனை போன்ற கண்ணகியம்மன் ஆலயங்களிலும் திருக்கோயில்இ கொக்கட்டிசோலை எனுமிடங்களிலுள்ள கோயில்களிலும் காணப்படுகின்ற கல்வெட்டுக்கள்இ பட்டயங்கள் போன்றவற்றினு}டு அறியலாம்.

கிறிஸ்துவிற்கு பின் 8ம் நு}ற்றாண்டில் பலமடைந்த இராசரட்டை ஆட்சியாளர்கள் தீகவாவியை கைப்பற்றியதினு}டாக உருகுணை ராச்சியத்தின் வடபுலமான கிழக்கிலங்கை அனுராதபுர ஆட்சியின் கீழ் வந்தது. 10ம் நு}ற்றாண்டில் சோழரது படையெடுப்பு நிகழும்வரை சுமார் இரண்டு நு}ற்றாண்டுகள் இந்நிலை நீடித்தது.

1017 ல் இலங்கையில் ஏற்பட்ட சோழராட்சி இராஜராஜசோழனின் மகனாகிய இராஜேந்திர சோழனால் ஏற்படுத்தப்பட்டது. 1070 வரை கிழக்கிலங்கையும் இந்த சோழராட்சிக்குட்பட வேண்டியிருந்தது இயல்பே. இவ்வேளை கதிர்சுதன் என்பான் சோழப்பேரரசின் சிற்றரசனாக கொண்டு கிழக்கு ஆளப்பட்டிருக்கிறது. ஆனபோதும் அனுராதபுரத்தை கைப்பற்றிய இராஜேந்திர சோழன் (ஆதமுனை) திருக்கோயிலிருந்த சேகு அசனாபள்ளி எனும் வணக்கஸ்தலத்தை (கரவாகு) கல்முனையிலிருந்த முகைதீன் பள்ளிவாசல் என்பவற்றையெல்லாம் அழித்தொழித்துள்ளான். இக்கூற்று இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கின் கடலோர பட்டினங்களை முஸ்லிம்களின் வாழ்விடங்கள் தங்கள் வணக்கஸ்தலங்களுடன் சேர்ந்து மிகபலமானதொரு சமூக அமைப்பையும் கொண்டிருந்திருக்கிறது என்பதை புலப்படுத்துகிறது. இதுபற்றி கரவாகு பரணி கல்வெட்டு விபரமாக கூறுகிறது

தொடர்ந்து வந்த காலங்களில் மீண்டும் இராசரட்டையின் ஆட்புல எல்லைக்குள் கிழக்கிலங்கையை விஜயபாகு, பராக்கிரமபாகு என்பவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். தீகவாவிகூட பொலநறுவையியிலிருந்து ஆண்ட பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் வீழ்ந்திருக்கிறது. இவனது ஆட்சிக்காலம் இலங்கையில் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிய திட்டங்களுக்கு பெயர்போனது 11, 12 ம் நு}ற்றாண்டுகளில் கிராமிய பொருளாதாரத்தை முன்னோக்கி குளங்கள் கட்டப்பட்டு மழைநீரை சேகரித்து ஓர் தன்னிறைவு விவசாய முன்னெடுப்புகள் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளன.

13 ம் நு}ற்றாண்டு இலங்கை மீது படையெடுத்த மாகோன் என்பான் கிழக்கிலங்கை தனது கட்டுபாட்டிலிருத்தியிருக்கின்றான். பழுகாமம் இவனது உபராசதானியாக வீற்றிருந்து காலம் அது. இந்த காலிங்க மாகோனது பேரரசின் கீழ் திஸ்ஸ அலிபோடி என்பவர் கரவாகுபற்றுக்கு பிரதானியாயிருந்துள்ளார். இந்த திஸ்ஸ அலி போடியாரின் மகனது திருமணத்திற்கு மாகோன் எனப்படும் விஜயகாலிங்க சக்கரவர்த்தி தனது அரசிருக்கைகளில் ஒன்றான பழுகாமத்திலிருந்து சென்றிருக்கின்றான். இது குறித்து ‘கலியான செப்பு’ எனும் கரவாகு பகுதியில் இருக்கும் கல்வெட்டு பாடல் விளக்குகிறது.

இந்த மாகோன் இலங்கைக்கு வருகையில் சமணமும், பௌத்தமும், இஸ்லாமும் மக்களின் நம்பிக்கைக்குரிய மதவழிபாடுகளாக இருந்தது. மொழிரீதியாக தமிழ்பேசிய போதும் கிழக்கு வாழ்மக்கள் சமணத்தையும், பௌத்தத்தையும் அதிகமாக வழிபட்டனர். அவ்வேளைதினசிங்கன் எனும் முக்குக ராசன் மட்டக்களப்பை ஆண்டு கொண்டிருந்தான். 1225ல் கலிங்க தேசத்திலிருந்து வந்து இலங்கையை ஆக்கிரமித்த மாகோன் கிழக்கிலங்கையின் வரலாற்றில் பெரும் பாதிப்பனை ஏற்படுத்தினான். இந்த மாகோனது படையெடுப்பு என்னசெய்தது என்பதை யாழ்பாண சரித்திரம் இப்படி சொல்கிறது. (பக்-36) “யுனு1225 ல் மாகன் என்னுந் தமிழரசன் கலிங்க தேசத்திலிருந்து பெரும்படையோடு வந்து போர் செய்து இலங்கை முழுதையுந் தனதாக்கினான்.

ஈற்றில் யாழ்ப்பாணத்தையுங் கைக்கொண்டு இருபது வரஷம் அரசு செய்து இலங்கைக் குடிகளை வருத்தி அவர்களிடத்துள்ளதெல்லாங் கவர்ந்ததுமன்றிப் பௌத்தாலயங்களையும் விகாரங்களையுமழித்தும் கன்னியர்களை மானபங்கஞ் செய்தும் நிஷ்டுரனானான்” இதுகுறித்து கரவாகு வரலாறு எழுதிய எம்.எம்.காசிம் இப்படி கூறிகிறார்.

“மட்டக்களப்பில் தினசிங்கன் எனும் முக்குக ராசன் ஆண்டான். இவன் சமணசமயத்திற்கு பாதுகாவலனாயிருந்து அச்சமயத்தை வளர்த்தான்” “இலங்கை வந்த மாகோன் இந்த தினசிங்கனை கொன்று சைவத்தை நிலைநிறுத்தினான்” இதைவிட முன்னொரு காலத்தில் குறிப்பாக பராக்கிரமபாகு காலத்தில் கட்டப்பட்ட குளங்கள் அனுராதபுரம், பொலநறுவை போன்ற பகுதிகளை மிகசெழிப்பான ப10மியாக மாற்றியிருந்தது. ஆனால் கலிங்க மாகோனின் படையெடுப்பு இப்பொருளாதார வளங்களையும் அழித்தொழித்த காரணத்தால் இப்பிரதேசங்கள் வரண்ட பகுதியாக மாறியது. இதன் காரணமாக தொடர்ந்து வந்த காலங்களில் இங்கு பசியும் பட்டினியுமே ஏற்பட இலகுவாயிற்று.

இது போன்ற இன்னபிற வரலாற்று குறிப்புகள் மட்டக்களப்பில் மாகோனது வருகையின் போது சமணம் பரவியிருந்ததையும் மாகோனது சமணம் மீதான வெறியாட்டத்திலிருந்து தப்புவதற்காக பலர் இஸ்லாத்தைத் தழுவியிருக்கின்றனர். அக்காலை கரவாகு பிரதேசத்தை ஆண்ட மாக்கான் ரகுமானின் ஆட்சியின் கீழ் பலர் இப்படி இஸ்லாமாயினராம். அதேவேளை பாரசீகத்திலிருந்து வந்த ரகுமானுடன் மாகோன் செய்து கொண்ட வியாபார ஒப்பந்தம் மாகோனுக்கு கீழான இராசபிரதிநிதியாக கரவாகின் ஒரு பகுதியை இவனையும் ஆள அனுமதித்தது.

இவ்வேளை பல தமிழ் சமணர்கள் இஸ்லாமாகியதனால்தான் இன்றுவரை சமணச் சொற்களான நோன்புஇ பள்ளி, தொழுகை போன்ற அறபு அல்லாத சொற்கள் பல இன்றுவரை முஸ்லிம்களிடையே காணப்படுகின்றது.

கி.பி.1256 ஆம் ஆண்டு இந்த மாகோனது ஆட்சி ஒழிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு முன்பு போலவே மீண்டும் கண்டிக்கு கீழ் கிழக்கிலங்கை வந்துள்ளது. பின்பு சில காலங்களில்கோட்டை மன்னனின் அரசின் கீழான சிற்றரசுகளாகவும் மட்டக்களப்பின் பல பாகங்கள் ஆளப்பட்டிருக்கின்றன.

இறுதியாக போர்த்துக்கேயர் வரும்காலை மீண்டும் கிழக்கு கண்டி ராச்சியத்தின் கீழேயே ஆளப்பட்டு வந்தது. காலாகாலமாக கிழக்கு ஈராயிரம் ஆண்டுகால வரலாற்றின் பெரும்பகுதியை உறுகுணை ராச்சியத்தின் கீழும் இடையிடையே சோழ, பாண்டிய ராச்சியத்தின் கீழும் ஆளப்பட்டு வந்தது. இச்செய்திகள் கிழக்கிலங்கையில் ஒரு நிரந்தரமானதும் பலமானதுமான மன்னர் பரம்பரையொன்று இருந்திருக்காமையே எடுத்துக் காட்டுகிறது. சில வேளைகளில் இங்கு பலதரப்பட மதங்களுக்கும், இனங்களுக்கும் இடம்கொடுத்து வந்தாரை வரவேற்றமைதான் இன்றுவரை வாழும் கிழக்கு மக்கள் அனைவரும் சகோதரர்களாக இனப்பெருமையோ, மதப்பெருமையோ கொள்ளதாத சகிப்புத் தன்மை கொண்டவர்களாக வாழ்வதற்கும் காரணமாய் இருக்கலாம்.

இனத்தின் பெயராலோ மொழியின் பெயராலோ பலமானதொரு ஆட்சி அதிகாரம் இங்கு நிலை பெற்றிருந்திருந்தால் இந்த பன்மிய சூழ்நிலையை நாம் பெற்றுக்கொள்ளுதல் சாத்தியமற்றுப் போயிருக்கலாம். ஆனபோதும் இடையே வந்த தமிழீழத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டத்தின் வடுக்கள் ஏனைய இனங்களின் மீது ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ள கறைகளை துடைத்து நாம் ஒருமித்து முன்னேறுதல் கிழக்கின் எதிர்கால வரலாற்றை ஒளிமயமானதாக மாற்றும்.

பல்வேறுபட்ட மதங்களையுடைய கிழக்கு மக்களாகிய சிங்களவரும், இசைவர்களும், முஸ்லிம்களும் எவ்வித வேறுபாடுகளும் கொள்ளாது புட்டும் தேங்காயப் பூவுமாய் வாழ்ந்த வரலாற்றைக் கொண்டவர்கள். அத்தோடு காலனித்துவ மிசனறிமார் கொண்டுவந்த கிறிஸ்தவ மதப் பிரிவுகளையும் ஏற்றுக்கொண்டே இங்கு எவ்வித வேறுபாடுகளும் இன்றி வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்தகைய சகிப்புத் தன்மைக்கும் அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் அகன்ற சமூக மனதினைக் கொண்டிருப்பதற்கும் “சியாத்” எனும் அனேகாந்தத்தைப் பேசும் சமணத்தின் மூல தத்துவத்தினைக் கொண்ட பாரம்பரியம் கூட காரணமாயிருக்கலாம்.கிழக்கிலங்கை சுமார் 2000 ஆண்டுகால வரலாற்றுப் போக்கில் கிழக்கில் பெரும்பான்மையோர் தமிழையே பேசினாலும் இம்மாகாணம் ஒருபோதும் தமிழ் மாகாணம் எனும் அடையாளத்தைக் கொண்டிருக்கவில்லை. போர்த்துக்கேயராகிய அன்னியர் இலங்கைக்கு வரும் வேளையில் யாழ்ப்பாண ராச்சியம் எனும் தனித்தமிழ் இராச்சியம் இருந்துள்ளது. ஆனபோதும் தமிழ் அரசர்களால் ஆளப்பட்ட யாழ்ப்பாணத்துக்கும் கிழக்கிலங்கைக்குமிடையே ஒருபோதும் ஆட்சி அதிகாரத் தொடர்புகள் வரலாற்றில் எந்தச் சந்தப்பத்திலும் இருந்திருக்கவில்ல

எல்லாளான் மாகோன் என்கின்ற இந்திய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர கிழக்கானது எப்போதுமே கண்டிராச்சியத்துக்கு உட்பட்டதாகவே ஆளப்பட்டு வந்துள்ளது. அதேவேளை வன்னிமைகளாகவும், குறுநில பிரிவுகளாகவும், சிற்றரசுகளாக தமிழ்இ முஸ்லிம் ஆட்சியாளர்கள் மட்டக்களப்பின் தனித்துவத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்திருக்கின்றனர்கள் என்பதும் தெளிவானது.

         💦أمين زكي كلموناي. அமீன்ஸகீ கல்முன💦
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar