BREAKING NEWS
Showing posts with label media. Show all posts
Showing posts with label media. Show all posts

ஸ்ரீலங்கா மீடியா பௌன்டேசன் மாதாந்த கூட்டம் 17.12-2015

மாதாந்த கூட்டம் 17.12-2015
ஸ்ரீலங்கா மீடியா பௌன்டேசன் மாதாந்த கூட்டம் 17.12-2015 மாலை 4.30க்கு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தை ஆரம்பித்து வைத்த செயலாளர் முபாறக் அப்துல் மஜீத் அண்மையில் மரணமடைந்த பௌன்டேசன் தலைவரின் மரணம் பற்றிய தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதுடன் புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்யும்படி சபையோரை வேண்டிக்கொண்டார்.  அதன் படி புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நவ்சாத் முஹிடீன் அவர்களை டொக்டர் நாஸிம் பிரேரிக்க அதனை காமிலா யூசுப் ஆமோதித்தார்.
அதனை தொடர்ந்து புதிய தலைமையை ஏற்றுக்கொண்ட நவ்சாத் முஹிடீன் தனது கண்ணி தலைமையுரையில் முன்னாள் தலைவர் சட்டத்தரணி கவ்சுல் அமீனின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். அவரின் இழப்பு அவரது குடும்பத்துக்கு பாரிய இழப்பாக இருக்கலாம். அதை விட எமது மீடியா பவுன்டேசனுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் மிகவும் வேலைப்பழுவுள்ள ஒருவராக இருந்தும் எமது இந்த அமைப்பை தலைமை தாங்கி நடத்த முன்வந்தமை மிகப்பெரிய விடயமாகும். அதுவும் எமது அமைப்பின் ஆரம்பத்திலேயே அவர் எமக்கு கைகொடுத்ததை இலகுவாக கருத முடியாது. அவரது திடீர் இழப்பு எமது அமைப்புக்கு சோதனையாக இருந்த போதும் அதனை வெல்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
அவரது தலைமைப்பதவிக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாத போதும் என்னாலான பணியை செய்ய முயற்சிப்பேன் என கூறினார்.
அதை தொடர்ந்து மறைந்த தலைவருக்காக பிரார்த்தனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து மீடியா பௌன்டேசனின் ஊடகவியலாளர்களுக்கான செமினார் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதனை அடுத்த வருடம் ஜனவரிக்குப்பின் நடத்துவது என்றும் இது சம்பந்தமாக இதற்கு ஜெர்மன் தூதுவராலயத்தினால் அணுசரனை வழங்கவுள்ளதாக முன்னாள் தலைவருக்கு அறிவித்துள்ளதால் அது பற்றிய விபரங்களை அவரது குடும்பத்திடம் கேட்டு தெரிந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் புதிய தபால் தலைப்பை உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு அதற்குரிய பொறுப்பு செயலாளரிடம் வழங்கப்பட்டது. அமைப்பின் பதிய முகவரியாக 21, சீமென்ஸ் வீதி, கொழும்பு 10 என்பதை பாவிப்பதற்கு சபை ஏகமனதாக அனுமதி வழங்கியது.
அமைப்புக்கான வங்கிக்கணக்கு திறப்பது பற்றி பேசப்பட்டதுடன் இதற்குரிய பொறுப்பு றிஸ்வியிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிரேஷ்ட அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீல், ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் மாலை 5.30 அளவில் சலவாத்துடன் நிறைவு பெற்றது.

…………………………
செயலாளர்

ஊடகவியலாளர்களுக்கு புதிய வீடு, மோட்டார் சைக்கிள் விரைவில்

11145020_1622727164647021_2278555611824631384_n

ஊடகவியலாளர்களுக்கு புதிய வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் வழங்கும் வேலைத் திட்டம் துரிதப்படுத்தப்படுமென பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணா திலக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சுக் கடமைகளை நேற்று பொறுப் பேற்றுக்கொண்ட அமைச்சர் அந் நிகழ்விற்கு வருகை தந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
ஹோமாகம தியகம பிரதேசத்தில் 102 ஏக்கரில் ஊடவியலாளர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதென்றும் அவர் கூறினார்.
வரி இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக நாம் ஆரம்பித்த திட்டத்திற்கு இதுவரை மூவாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் அங்கு குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களுக்கென பல கனவுகள் உள்ளன. அவற்றை படிப்படியாக நனவாக்குவதே எமது குறிக்கோள் என்றும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின்  ஒன்று கூடல்  அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற போது  காத்தான்குடி மீடியா  போரம்  தலைவர்

கிழக்கு முஸ்லிம் ஊடகவியலாளர்களின் மௌனம் கலைந்துள்ளது- காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி முஸ்தபா


கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் கடந்த 7.10.2014 செவ்வாயக்கிழi இரவு காததான்குடியில் நடைபெற்ற போது ஒன்று கூடல் ஆரம்ப வைபவத்தில் கர்த்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா ஆற்றிய உரை

கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களான நாங்கள் இன்று காத்தான்குடியில் முதன் முதலாக மகிழ்ச்சிகரமான ஒன்று கூடலில் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய ஒரு நன்னாளாகும். அதுமட்டு மல்ல வாழ்வின் முக்கியத்துவமான ஒரு நாளுமாகும்.

கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்

KMFமுழு நிலவில் கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்; காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு!


புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள, கிழக்கு மாகாண முஸ்லீம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு, எதிர்வரும் 07ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மறுநாள் 08ஆம் திகதி அதிகாலை 5.15 வரைக்கும் காத்தான்குடி கடற்கரையோரத்திலுள்ள ஜூமைறா பெலஸில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் மெல்'pயா கழுத்து வெட்டப்பட்டு கொலை * நான்கு வளர்ப்பு நாய்களும் மெளனமாக இருந்தது மர்மம்


ஊடகவியலாளர் மெல்ஷியா குணசேகர கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு எஸ்.எச்.எம். இத்ரீஸ் கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டபோது

இவ்வருட அரச விருது விழாவில் இணுவில் சோமஸ்கந்த சர்மா நடேசசர்மா, கொழும்பு எஸ்.எச்.எம். இத்ரீஸ், கல்முனை பொன்னையா ஏகாம்பரம் ஆகியோர் கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டபோது எடுத்த படங்கள். 

நெத் எப் எம்

நெத் எப் எம் சிங்கள வானொலியின் எட்டாவது வருட விழா இன்று காலையில் கொள்ளுபிட்டியில் உள்ள அதன் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது விசேட விருந்தினராக கலந்து கொண்ட மௌலவி முபாறக் அப்துல் மஜீத், மற்றும் பட்பலப்பிட்டி கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரி உட்பட நெத் எப் எம் வானொலியின் நிர்வாகிகளை படத்தில் காணலாம்.

மலர் எப் எம் இணைய வானொலி ஏற்பாட்டில் கிண்ணியா மத்திய கல்லூhரியில் நடைபெற்ற ஊடகவியல் செயலமர்வில் கலந்து கொண்ட மாணர்களுக்கான நற்சான்றிதழை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் வழங்குவதையும் அருகில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar