BREAKING NEWS
Showing posts with label வெளிநாடு. Show all posts
Showing posts with label வெளிநாடு. Show all posts

நாம் நடத்திய 15 ஏவுகணை தாக்குதல்களில் 80 அமெரிக்க ''தீவிரவாதிகள்'' கொல்லப்பட்டுள்ளனர் - ஈரான்


ஈரான் இன்று ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்குவைத்து மேற்கொண்ட 15
ஏவுகணை தாக்குதல்களில் 80 அமெரிக்க தீவிரவாதிகள்  கொல்லப்பட்டுள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

https://www.deccanherald.com/liveblog/us-iran-tensions-live-80-american-terrorists-killed-in-missiles-strike-says-iranian-state-tv-791345.html

ஈரானின் புரட்சிகர காவல்படையணியை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ள ஈரானின் அரச தொலைக்காட்சி  15 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும் அதில் ஒன்று கூட இடைமறித்து சுட்டுவீழ்த்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.


இந்த தாக்குதலில் அமெரிக்க ஹெலிக்கொப்டர்கள் இராணுவசாதனங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மேலும் 100 இலக்குகளை இனம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஈரான்  அமெரிக்கா பதில் தாக்குதலை மேற்கொண்டால் அந்த இலக்குகள் தாக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

இதேவேளை ஏவுகணைகள் செலுத்தப்படும் வீடியோக்களை ஈரான் வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க விமானத்தளங்கள் மீது தாக்குதல் - டிரம்ப், ஈரான் தரப்பு கூறுவது என்ன?

ஈராக்கில் அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''எல்லாம் நன்றாக உள்ளது. ஈராக்கில் இரண்டு இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இதுவரை உள்ள மிக வலிமையான மற்றும் மிகவும் நவீனமான இராணுவம் நம்மிடம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளை ஓர் அறிக்கை வெளியிடுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''பிரச்சினையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ ஈரான் கோரவில்லை. ஆனால் எங்களின் மீதான வலிய தாக்குதலை எதிர்த்து நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.

''எங்கள் நாட்டு மக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது கோழைத்தனமான ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட தளத்தின் மீது ஐ.நா. அமைப்பின் சாசன விதிகளின் 51ஆம் பிரிவின்படி, எங்களின் சுய பாதுகாப்புக்காக சரியான அளவில் நடவடிக்கைகளை எடுத்து அதனை நிறைவேற்றினோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிக வாய்ப்புள்ள ஜோ பிடன் இந்த தாக்குதல்கள் குறித்து வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''இந்த தாக்குதல்கள் குறித்து மேலும் நாம் அறிந்து கொள்வதற்கு முன்புவரை இது குறித்து நான் கருத்து தெரிவிக்கப்போவதில்லை. அமெரிக்க துருப்புகள் மற்றும் அங்கு இருக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு குறித்து எங்கள் பிரார்த்தனைகள் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான பிரச்சனையை மேலும் நீட்டிக்கும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ட்வீட் செய்தி அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஈராக்கில் உள்ள அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு முன்னதாக குறிப்பிட்டுள்ளது.

'ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் ஜனாதிபதி டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் ஜனாதிபதி, நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழ்

10000 ஒட்டங்கங்களை சுட்டுக்கொல்ல அவுஸ்திரேலிய அரசு முடிவு - காரணம் இதுதான்

வறட்சி காலங்களில் அதிக அளவு தண்ணீரை குடிப்பதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

உலகின் 7 கண்டங்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் 18 சதவீதம் பாலைவனங்கள் உள்ளன. அதேபோல் அந்நாட்டின் 35 சதவீத பகுதிகள் குறைந்த அளவிலேயே மழை பெறுகின்றன. உலக வெப்பமயமாதலாலும், அதிகப்படியான வறட்சி காரணமாகவும் அந்நாட்டில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை கோடிக்கணக்கான வனவிலங்குகள், பறவைகள் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கங்காருகளும், கோலா கரடிகளும் பாதுகாப்புக்காக மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை கட்டித்தழுவிய புகைப்படங்கள் மனதை உலுக்கின.
இந்நிலையில், வறட்சி காலங்களில் அதிக அளவு தண்ணீரை குடிப்பதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

‘தெற்கு அவுஸ்திரேலியாவில் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அதிக அளவிலான நீரை குடித்து விடுகின்றன. இதனால் மனிதர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒட்டகங்களின் கழிவுகளில் இருந்து ஒரு டன் கார்பன்-டை- ஒக்சைடுக்கு நிகரான மீத்தேன் வாயு உருவாவதாகவும், இது உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 

ஆகையால் 5,000 முதல் 10,000 ஒட்டகங்களை ஹெலிகொப்டரில் பறந்தபடி சுட்டுக்கொல்ல அரசு முடிவெடுத்துள்ளது’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் : ஈரான் இராணுவ படைப்பிரிவின் தளபதி உள்ளிட்ட 7 பேர் கொலை

ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது அமெரிக்கா நடத்திய ராக்கெட் தாக்குதலில், ஈரான் நாட்டின் முக்கிய படைப்பிரிவின் தளபதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக்கில் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராடிய அவர்கள், தூதரகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான்தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன.

இந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். 

ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar