BREAKING NEWS

ஈஸ்டர் தாக்குதல். பிரதிவாதிகள் vaakkumuulam

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உட்பட, 23,000- க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு வழக்கில், பிரதிவாதிகள் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னால், தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் விசாரித்து வருகின்றனர். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகளான ஜைனுல் ஆப்தீன் முகமது ஜெசீம், முகமது முஸ்தபா முகமது ரிஸ்வான் மற்றும் மீரா ஜாஹிர் முகமது நஃப்லி ஆகியோர் குற்றவாளிக் கூண்டிலிருந்து தங்கள் வாக்குமூலங்களை வழங்கினர். அவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்க‌ப்ப‌ட்டு இவ்வழக்கில் மொத்தம் 24 பிரதிவாதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.. பிரதிவாதிகள் தங்கள் தரப்பு வாதங்களை தொடர்ந்து முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிவாசலை பாதுகாப்பதற்காக, ஒற்றைக் காலில் நின்று போராடிய, நபருக்கு உம்ரா

தாக்குதல் நடத்த வந்த கும்பலிடமிருந்து பள்ளிவாசலை பாதுகாப்பதற்காக, ஒற்றைக் காலில் நின்று போராடிய, நேபாளத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் நபர் குறித்த வீடியோவை Jaffna Muslim ஏற்கனவே வெளியிட்டிருந்தது. தனது அந்தத் துணிச்சலான செயல் இணையத்தில் பரவலாகப் பேசப்பட்ட பிறகு அவர் சவூதி அரேபியாவில் கௌரவிக்கப்பட்டார். சவூதி ஆர்வலர்கள் அவரைத் தொடர்புகொண்டு, ஆகஸ்ட் 5 அன்று அவரும் அவரது பெற்றோரும் உம்ரா மேற்கொள்வதற்காக அவரை மக்காவிற்கு அழைத்து வந்தனர். அவர் இழந்த காலுக்குப் பதிலாக செயற்கை கால் ஒன்றை அமைத்துத் தருவதற்கான ஏற்பாடுகளையும் ஒரு தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. அவரது இந்தப்பயணம், இணையத்தில் வைரலான ஒரு துணிச்சலான தருணத்தை, ஒற்றுமை மற்றும் நீடித்த ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு செயலாக மாற்றியுள்ளது.

க‌ல்முனை ஆதார‌ வைத்திய‌சாலைக்கு சிங்க‌ள‌வ‌ர் ஒருவ‌ரை நிய‌மிக்க‌வும்.

சிங்க‌ள‌ வைத்திய‌ அத்திய‌ட்ச‌க‌ர் ஒருவ‌ரை நிய‌மிப்ப‌த‌ன் மூல‌ம் க‌ல்முனை ஆதார‌ வைத்தியசாலையில் த‌மிழ‌ர் இன‌வாத்தை ஒழிக்க‌ முடியும் என‌ ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய‌துல் உல‌மா க‌வுன்சில் ஜ‌னாதிப‌திக்கு க‌டித‌ம். கல்முனை ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலமாகத் தொடரும் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் அண்மையில் பெண் சிற்றூழியர்களின் ஆடை தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக தமிழ்–முஸ்லிம் மக்களிடையே மீண்டும் இன முறுகல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளமை கவலைக்குரியது என ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா கவுன்சிலின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் சதீக் (முப்தி) தெரிவித்துள்ளார். ஒரு வைத்தியசாலை நிர்வாகப் பிரச்சினை இன மற்றும் மத முரண்பாடாக மாறுவதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது. உடனடியாக சுயாதீன விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து, எந்தத் தரப்பாக இருந்தாலும் தவறு இருந்தால் சட்டம் மற்றும் நிறுவன விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து சமூகங்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நிர்வாக அனுபவமும் நேர்மையும் கொண்ட, இன–மத பாகுபாடின்றி செயற்படக்கூடிய சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒரு வைத்திய அதிகாரியை கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிப்பது தொடர்பில் கௌரவ ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை எந்தவொரு தமிழ் அல்லது முஸ்லிம் வைத்திய அதிகாரியையும் குறைத்து மதிப்பிடுவதற்கானதல்ல என்றும், தற்போதைய நம்பிக்கையின்மையை நீக்கி அனைத்து சமூகங்களுக்கும் சமமான நிர்வாகத்தை உறுதி செய்வதே நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஐக்கியம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நம்பியே மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமது வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் முபாரக் அப்துல் மஜீத் முப்தி அவர்கள் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த கருத்து வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டிருந்ததை நினைவுகூருகிறோம் எனவும் அஷ்ஷேய்க் சதீக் (முப்தி) தெரிவித்துள்ளார். “நாம் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல; அநீதிக்கும் இனப் பாகுபாட்டிற்கும் மட்டுமே எதிரானவர்கள்” எனத் தெரிவித்த அவர், கல்முனை ஆதார வைத்தியசாலையை அனைத்து இன மக்களும் நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடிய நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி அவர்கள் உடனடியாக தலையிட்டு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். — அஷ்ஷேய்க் சதீக் (முப்தி) பொதுச் செயலாளர் ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நவுஃபர் மௌலவி தண்டனை பெறலாம்

நேற்று இரவோடு நிறைவடைந்தது ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை..! நவுஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு விரைவில் தீர்ப்பு.. 245 நாட்கள் நடந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது..!
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நவுஃபர் மௌலவி உள்ளிட்ட 24 எதிரிகளுக்கு எதிராக விசாரணை செய்யப்பட்டு வரும் பிரதான வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நேற்று இரவோடு முறைப்பாட்டாளர் தரப்பின் இறுதி சாட்சியங்களை முன்வைப்பது நிறைவடைந்ததுடன், சுமார் 5 ஆண்டு காலத்தில் 245 நாட்கள் விரிவாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பு வழக்கு விசாரணை நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்தது. மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையிலான சுஜீவ நிஸ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #EasterAttackCase #NaufarMaulavi #ColomboHighCourt #EasterSundayAttacks

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்க தடையா

இனவாதிகளின் அட்டகாசம் ....? கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இன்று (10) பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களை கடமையேற்க விடாது தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. புதிய நியமனம் பெற்ற 06 பெண் உத்தியோகத்தர்கள் பர்தா அணிந்த நிலையில் இவ் வைத்தியசாலைக்கு சென்ற போது, அவர்களை கடமைக்கு அறிக்கை செய்யவிடாமல் இனவாதிகளினால் தடுக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் அவர்களது கலாசார முறைப்படி உடை அணிய சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை "தமிழர்களது" வைத்தியசாலை எனக்கூறி இவர்களை தடுத்துள்ளதாக தெரிய வருகிறது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் அவர்களே... இது உங்கள் கவனத்திற்கு..!!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை –

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை – கொழும்பு நிரந்தர மூவரடங்கிய உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய உயர்நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. போதுமான உளவுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இரு பிரதிவாதிகளையும் குற்றமற்றவர்களாக விடுதலை செய்திருந்தது. அதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பின் சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்த‌த்தில் சில‌ எருமைக‌ள் சொல்வ‌து போல் ஸ‌ஹ்ரான் குழு த‌மிழ் குர்ஆனை ப‌டித்து விட்டு 72 சொர்க்க‌லோக‌ க‌ன்னிக‌ளுக்காக‌ குண்டு வைக்க‌வில்லை என்ப‌தும் இத‌ற்கு பின்னால் அன்றைய‌ ஆட்சி, எதிர்க்க‌ட்சி, முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌ வெளி நாட்டு ச‌க்திக‌ள் இருந்துள்ள‌ன‌ என்ப‌தும் தெளிவாகியுள்ள‌து.

ஹிஜாப் விவகாரமும் அடிப்படை உரிமைகளும்

ஹிஜாப் விவகாரமும் அடிப்படை உரிமைகளும்: திருகோணமலை சாஹிரா கல்லூரி விவகாரம் குறித்து சமூக கற்கைகள் மையத்தின் கலந்துரையாடல். கொழும்பு: திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் ஹிஜாப் தொடர்பான பரீட்சைப் பெறுபேறு தாமதிக்கப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு, மனித உரிமைகள், மதச்சுதந்திரம் மற்றும் கல்வியில் சம உரிமை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சமூக கற்கைகள் மையம் (Center for Social Studies – CSS) ஏற்பாட்டில் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது, குறித்த கல்லூரியைச் சேர்ந்த சுமார் 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சைப் பெறுபேறுகள் ஹிஜாப் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC/SUO-MOTU/02/2024) 2026 ஜூன் 26 அன்று வெளியிட்ட தீர்மானத்தின் சட்டப் பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய சட்ட நிபுணர்கள், இலங்கை அரசியலமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட சமத்துவ உரிமை, மதச்சுதந்திரம் மற்றும் பாகுபாடற்ற அணுகுமுறை ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தினர். அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையின் கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், 12(2) ஆம் உறுப்புரையின் கீழ் மதம் உள்ளிட்ட அடையாளங்களின் அடிப்படையிலான பாகுபாடு தடை செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், 14(1)(e) ஆம் உறுப்புரையின் கீழ் மதத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது எனவும் விளக்கப்பட்டது. மாணவர்களின் மத அடையாளம் அவர்களின் கல்வி உரிமைக்கு தடையாக அமையக் கூடாது என்றும், கல்வி நிறுவனங்கள் அனைவருக்கும் சமமான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், கல்வி அதிகாரிகள், பாடசாலை நிர்வாகங்கள் மற்றும் பரீட்சை அதிகாரிகள் மனித உரிமைகள், மதச்சுதந்திரம் மற்றும் சமத்துவம் தொடர்பான போதுமான அறிவையும் பயிற்சியையும் பெற்றிருக்க வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் வளவாளர்களாக Attorney-at-Law Mahabooba Rifaideen (LL.M) மற்றும் Attorney-at-Law Rudane Zahir ஆகியோர் கலந்து கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம், அதன் சட்ட முக்கியத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக விளக்கங்களை வழங்கினர். கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் சட்ட ரீதியான தெளிவான பதில்கள் வழங்கப்பட்டன. சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான அறிவுசார் கலந்துரையாடல்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக சமூக கற்கைகள் மையம் தெரிவித்துள்ளது. மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சமூகத்தை உருவாக்குவதில் இத்தகைய உரையாடல்கள் முக்கிய பங்காற்றும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலை ??

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு ரியாத், சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராஜா என்பவரை விடுதலை செய்யுமாறு கோரி, சவுதியில் பணிபுரியும் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து சவுதி அரேபிய நீதியமைச்சிடம் கருணை மனுக்கள் சமர்பித்துள்ளனர். மனுவின் விபரம்👇 அனோஜன் சிவராஜா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதால், அவரை விடுதலை செய்யுமாறு கோரும் மகஜர்களை இலங்கை முஸ்லிம் தொழிலாளர்கள் நேரடியாக சவுதி அரேபிய நீதி அமைச்சிடம் கையளித்துள்ளனர். சவுதியில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த கருணை மனுக்களின் அடிப்படையில் அனோஜன் சிவராஜா மிக விரைவில் தண்டனையிலிருந்து விடுதலையாகி வெளியே வருவார் என இலங்கை முஸ்லிம் சமூகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு விவகார பிரிவு

கத்தாரின் முன்னாள் அமீர், மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி - அனுதாபம்

கத்தாரின் முன்னாள் அமீர், மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்கள் காலமான செய்தியானது மிகுந்த கவலையினை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தவூஸ் என்னும் உயர் மிகு சுவனத்தை அல்லாஹுத்தஆலா வழங்குவதற்கு பிரார்த்தனை செய்வதுடன் ஆழ்ந்த துயரத்தில் இருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் இலங்கை மக்கள் சார்பில் என்னுடைய ஆழ்ந்த கவலை இணையும் வெளிப்படுத்துகின்றேன். ரிஷான் ஷேக் அமானி சமாதான தூதுவர் உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் அமைப்பின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் I was deeply saddened to learn of the passing of His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, the former Emir of Qatar. I pray that Almighty Allah grants him the highest place in Jannatul Firdaus. On behalf of the people of Sri Lanka, I extend my heartfelt condolences and deepest sympathies to his family and the people of Qatar during this time of grief. Rishan Sheikh Amani Peace Ambassador Mannar District Director, Human Rights and Other Rights Organization *النص باللغة العربية:* ببالغ الحزن والأسى تلقيت نبأ وفاة صاحب السمو الشيخ حمد بن خليفة آل ثاني، أمير دولة قطر السابق. وأسأل الله تعالى أن يتغمده بواسع رحمته وأن يسكنه فسيح جناته. كما أتقدم بخالص العزاء والمواساة لعائلته الكريمة ولشعب دولة قطر الشقيق، وأعرب عن تضامني العميق معهم نيابة عن شعب سريلانكا في هذا المصاب الجلل. ريشان شيخ أماني سفير السلام مدير منطقة منار لمنظمة الحقوق والحقوق الأخرى

முஸ்லிம் சமூகம் மீதான இனப் படுகொலை தமிழ் சமூகத்திற்கு வெட்கக்கேடு/

உண்மையை உரக்கச் சொன்ன தமிழ் பத்தி எழுத்தாளருக்கு நன்றி. முஸ்லிம் சமூகம் மீதான இனப் படுகொலை தமிழ் சமூகத்திற்கு வெட்கக்கேடு/ (பத்தி எழுத்தாளர் தோழர் முகியிந்நன்). ஒரு இனம் தனக்கான நீதியையும் உரிமையையும் சர்வதேச சமூகத்திடம் கோரும்போது, அந்த இனம் தனது வரலாற்றில் செய்த தவறுகளை நேர்மையுடன் ஒப்புக்கொள்வதும், சுயவிமர்சனம் செய்துகொள்வதும் மிக அவசியமான ஒன்றாகும். தார்மீக ரீதியாக உயர்ந்த இடத்திலிருந்து நீதி கேட்கும் ஒரு இனத்திற்கு, தன் வரலாற்றில் நடந்த கறைகளைத் துடைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஈழத்தமிழர் வரலாற்றில் நாம் நீதிக்காகப் போராடும் அதே வேளையில், நாம் இழைத்த அநீதிகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அல்லது அவற்றை மூடி மறைப்பது, நம்முடைய போராட்டத்தின் ஆன்மாவையே சிதைத்து விடுகிறது. உண்மையான நீதி தேடல் என்பது நம் மீதான தாக்குதல்களைச் சுட்டிக்காட்டுவதில் மட்டும் இல்லை; நம் கைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளை நேர்மையுடன் ஒப்புக்கொள்வதிலும் அடங்கியிருக்கிறது. 1990-ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயம். எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாத அந்தத் தாக்குதல், மனிதாபிமானமற்ற ஒரு செயலாகவே பார்க்கப்பட வேண்டும். இந்த கொடூரத்தாக்குதலை நியாயப்படுத்த முற்படும் எவரும் மன்னிக்க முடியாத கேவலமான பிறவிகள். ஒரு தமிழனாக, அந்தப் படுகொலையை மிகப்பெரிய தவறு என்று ஒப்புக்கொள்வது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்கான முதல் படியாக அமையும். வன்முறையை ஒரு கருவியாகக் கையாண்ட அந்த தருணம், தமிழர்களின் போராட்டத்தின் அறத்தின் மீது பெரியதொரு தழும்பை ஏற்படுத்தியது. 1990-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் சரணடைந்த நூற்றுக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்களை, அவர்களது இனம் மற்றும் மொழி அடிப்படையில் பிரித்து, சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிஸாரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற அந்த நிகழ்வு, ஈழத் தமிழ் போராட்ட வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயம். நிராயுதபாணியானவர்களைச் சரணடைய வைத்து, பின்னர் மிருகத்தனமாகக் கொலை செய்த அந்தச் செயல், மனித உரிமை மீறல்களின் உச்சமாகும். தங்களைச் சரணடைந்த எதிரியை மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டும் என்ற சர்வதேச அறநெறிகளை அந்த இடத்தில் நாம் முற்றிலும் புறக்கணித்தோம். 1990-இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெறும் சில மணி நேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்டது, அப்பட்டமான இனவெறி மற்றும் இனச்சுத்திகரிப்புச் செயலே என்பதில் மாற்றுக்கருத்திற்கே இடமில்லை. தசாப்தங்களாகத் தங்களோடு வாழ்ந்த உறவுகளை, அவர்களின் சொத்துகளிலிருந்து அகற்றி, வேரோடு பிடுங்கிய அந்த நிகழ்வு, இனங்களுக்கிடையிலான நம்பிக்கையைச் சிதைத்தது. இதை ஒரு அரசியல் தந்திரமாகவோ அல்லது தற்காப்பு நடவடிக்கையாகவோ பார்ப்பது வரலாற்றுத் துரோகம். இது தமிழர்களின் அகராதியில் "இனச்சுத்திகரிப்பு" என்ற பெயரில் இடம்பெற வேண்டிய ஒரு கசப்பான உண்மை. இந்த இனச்சுத்திகரிப்பு சம்பவம் "அரசியல் தேவை" அல்லது "தற்காப்பு நடவடிக்கை" என எவர் நியாயப்படுத்த முயன்றாலும், அது வரலாற்றின் முன் அப்பட்டமான அநீதியாகவே நிற்கும். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் காட்டும் அதே வேகத்தை, நாம் செய்த தவறுகளைப் புரிந்துகொள்வதிலும் காட்ட வேண்டும். நாம் செய்த தவறுகளை மூடி மறைப்பதன் மூலம், நாம் இழப்பது அறத்தின் பலத்தைத்தான். இனம் சார்ந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் செய்த தவறுகளைத் தாழ்மையுடன் ஒப்புக்கொள்ளும் போதுதான் தமிழர்கள் தமக்கிழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கேட்கும் தகுதியை பெறமுடியும். இன்று முள்ளிவாய்க்காலில் சரணடைந்த போராளிகள் கொல்லப்பட்டதற்காக அல்லது காணாமல் ஆக்கப்பட்டதற்காக நீதி கேட்கும் நாம், அதே காலப்பகுதியில் அல்லது அதற்கு முன்னதாக நாம் இழைத்த இத்தகைய கொடூரமான படுகொலைகளைப் பற்றி மௌனம் சாதிப்பதோ அல்லது அதை நியாயப்படுத்துவதோ பெரும் அறமுரண்பாடாகும் (Hypocrisy). இன்று முள்ளிவாய்க்காலில் சரணடைந்த போராளிகள் கொல்லப்பட்டதற்காக அல்லது காணாமல் ஆக்கப்பட்டதற்காக நாம் உலகத்திடம் நீதி கேட்கிறோம். ஆனால், மட்டக்களப்பில் நாம் சரணடைந்தவர்களைக் கொன்றதை மறந்துவிட்டு அல்லது மூடி மறைத்துவிட்டு நீதி கேட்பது, எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? "எங்களுக்கு நடந்த அநீதி மட்டுமே அநீதி, நாங்கள் மற்றவர்களுக்குச் செய்தது போர்த்தந்திரம்" என்று கருதுவது மிகவும் கேவலமான ஒரு மனநிலை. பாதிக்கப்பட்ட ஒரு இனமாக இருந்து கொண்டே, இன்னொரு தரப்புக்கு அதே போன்ற அல்லது அதைவிடக் கொடூரமான வலியை நாம் கொடுத்திருப்பதை மறைக்க நினைப்பது, நம்மிடம் உள்ள நீதிக்கான கோரிக்கையின் தார்மீக வலுவை முழுமையாகச் சிதைத்துவிடுகிறது. நாம் மற்றவர்கள் செய்த அநீதிகளைச் சுட்டிக்காட்டி சர்வதேசத்திடம் நீதி கேட்கும் போது, நம்மிடம் உள்ள கறைகளைத் துடைக்காமல் அந்த நீதியை எதிர்பார்ப்பது எக்காலத்திலும் பலனளிக்கப் போவதில்லை. ஒரு குற்றவாளியாக இருந்து கொண்டு, வேறொரு குற்றவாளியை விரல் நீட்டி விவாதிப்பதில் எந்தவிதமான தார்மீக நியாயமும் இல்லை. முள்ளிவாய்க்கால் நீதிக்கு நாம் சர்வதேச அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம் என்றால், மட்டக்களப்பில் மடிந்த அந்தப் பொலிஸாரின் குடும்பங்களுக்கும், காத்தான்குடி பள்ளிவாசலில் இறந்த குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் நாம் அதே குரலில் மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், நீதியைக் கோருவதிலும் நமக்குள்ள அதே உரிமை, தவறு செய்ததற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதிலும் உள்ளது. நாம் இழைத்த அநீதிகளுக்காகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவது என்பது நம்மைத் தாழ்த்திக்கொள்வதல்ல; மாறாக, நம்மைத் தார்மீக ரீதியாக உயர்த்திக்கொள்வதாகும். நம்முடைய தவறுகளை நாமே முன்வந்து ஒப்புக்கொள்ளும் போதுதான், சர்வதேச சமூகம் நமது வலியையும், நமது நீதி கோரிக்கையையும் ஒரு நியாயமான கோணத்தில் அணுகும். நாம் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொண்டு, அதற்காக வருந்துவதுதான் ஒரு இனத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இனவெறியையும், மதவாதத்தையும் தவிர்த்து, அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே நம் முன் இருக்கும் சவால். மற்றவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டும் தகுதி நமக்கு வேண்டும் என்றால், முதலாவதாக நாம் செய்த தவறுகளைப் பொறுப்புடன் எதிர்கொள்ள வேண்டும். வரலாற்றின் கசப்பான பக்கங்களை நேர்மையுடன் திருப்பிப் பார்ப்பதுதான், எதிர்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் மிகச்சிறந்த நீதியான பாடமாக இருக்கும். சர்வதேசத்திடம் நாம் நீதி கேட்கிறோம். ஆனால், நீதி என்பது பிறரிடமிருந்து மட்டும் எதிர்பார்க்கக்கூடியதல்ல; அது நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். நாம் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொண்டு, அதற்காக வருத்தம் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோரும் அந்தச் சூழல் உருவாகும் போதுதான், சர்வதேச சமூகம் நமது கோரிக்கைகளை நேர்மையுடன் அணுகும். தார்மீக ரீதியாக நாம் சுத்தமாக இல்லாதவரை, மற்றவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் தகுதி நமக்கும் இருக்காது என்பதே கசப்பான நிதர்சனம். கடந்த காலத் தவறுகளைப் பேசுவது, நம்மைத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளுவதற்காக அல்ல; மாறாக, வருங்காலத்தை அறத்தின் வழியில் கட்டமைப்பதற்காகவே. இனவெறியையும், மதவாதத்தையும் தவிர்த்து, அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஒரு தமிழனாக, இந்த மண்ணின் மைந்தர்களாக நாம் கொள்ள வேண்டிய உறுதிமொழி. சுயவிமர்சனம் என்பது பலவீனம் அல்ல; அதுதான் ஒரு இனத்தின் முதிர்ச்சியையும், உண்மையான வலிமையையும் வெளிப்படுத்தும் அடையாளம்.

இறுதி ஊர்வல ராஜதந்திரமும் ஈரானின் எழுச்சியும்.

இறுதி ஊர்வல ராஜதந்திரமும் ஈரானின் எழுச்சியும். Dr Arshath Ahamed வரலாற்றில் சில மரணங்கள் வெறும் துக்க நிகழ்வுகளாக முடிந்து விடுவதில்லை. அவை ஒரு நாட்டின் சித்தாந்தத்தை, அதன் மக்கள் சக்தியை, உலக வல்லரசுகளுக்கு எதிரான அதன் அரசியல் நிலைப்பாட்டை உரக்கச் சொல்லும் ஒரு பெரும் மேடையாக மாறிவிடுகின்றன. நவீன வரலாற்றில் ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் உச்சத் தலைவரான ஆயத்துல்லா கமேனியின் மரணமும், அவரது இறுதிச் சடங்குகளும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசு தனது சித்தாந்த பலத்தை உலகிற்குப் பிரகடனப்படுத்திய ஒரு வரலாற்றுப் புள்ளியாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. உலகம் எத்தனையோ ஜனத்திரள்களை கண்டிருக்கிறது. ஆனால் இப்படி ஒரு பெரும் சனத்திரளை ஒருவரின் இறப்புக்கும் இரங்கலுக்கும் கண்டது இது தான் முதல் தடவை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய வல்லரசுகள் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு அந்த அரசைத் தனிமைப்படுத்தவும், வீழ்த்தவும் பல்வேறு வியூகங்களை வகுத்தன. ஆயுத ரீதியாகவும், பொருளாதாரத் தடைகள் மூலமாகவும் ஈரானை முடக்க நினைத்த அமெரிக்காவிற்கு, கொமேனியின் இறுதி நாட்களும், அவரது ஜனாஸா நல்லடக்கத்தின் போது திரண்ட கோடிக்கணக்கான மக்கள் கூட்டமும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துக் கொண்டிருக்கின்றன. உலக அரங்கில் ஈரான் இந்த இக்கட்டான காலகட்டத்தை எவ்வாறு ராஜதந்திர ரீதியாகவும், மக்கள் சக்தி மூலமாகவும் எதிர்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியமானது. இஸ்லாமிய மரபில் ஒருவரது மறைவுக்குப் பின் உடலை மிக விரைவாக நல்லடக்கம் செய்வதுதான் பொதுவான வழமை. ஆனால், ஆயத்துல்லா கமேனியின் மறைவின் போது, அவரது உடல் உடனடியாக அடக்கம் செய்யப்படாமல், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பொதுமக்களின் அஞ்சலிக்காகவும், சர்வதேசத் தலைவர்களின் வருகைக்காகவும் குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழையில் மிக கவனமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. மரபுகளைத் தாண்டி, ஈரான் அரசு இந்த முடிவை எடுத்ததற்குப் பின்னால் ஒரு மிக ஆழமான அரசியல் மற்றும் தந்திரோபாயக் காரணம் இருந்தது. தாங்கள் எதிர்கொள்ளும் சர்வதேசப் போரிலும், பொருளாதார நெருக்கடிகளிலும் "நிச்சயமாக நாம் வெல்வோம்" என்ற ஈரானியத் தலைமையின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும், மக்கள் புரட்சிக்கு எதிராக மாறிவிட்டார்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் பரப்பிய பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஈரான் இந்தத் தறுவாயைப் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தங்கள் நாட்டு மக்கள் இப்போதும் தங்களோடுதான் இருக்கிறார்கள், தங்களின் இஸ்லாமியப் புரட்சிக் கொள்கைகளோடுதான் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும், குறிப்பாக அமெரிக்காவிற்கும் நிரூபித்துக் காட்டும் ஒரு பெரும் மக்கள் திரள் சாட்சியமாக இந்த அஞ்சலி நிகழ்வு மாற்றப்பட்டிருக்கிறது. ஆயத்துல்லா கொமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், ஈரானின் புதிய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பல்வேறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள், தூதுவர்கள் சாரை சாரையாக வந்தவண்ணம் இருந்தனர். இந்த இடத்தில் ஈரான் தனது ஆகச்சிறந்த ஆன்மீக ராஜதந்திரத்தை (Spiritual Diplomacy) வெளிப்படுத்தியது. ஒவ்வொரு அரபு மற்றும் முஸ்லிம் நாட்டுத் தலைவரும் கொமேனியின் உடலைத் தரிசிக்க வரும்போது, அந்தந்த நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், ஈரானுடன் அவர்களுக்கு இருக்கும் உறவு, மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையின் அவசியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, அவர்களுக்கு மிகவும் பொருத்தமான குர்ஆன் வசனங்கள் தேடித் பிடிக்கப்பட்டு, அஞ்சலி மண்டபத்தில் காதுகளில் ஒலிக்கும்படி ஈரான் அரசு ஒளிபரப்பியது. தூது வந்த தலைவர்களின் உள்ளங்களை ஆன்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெகிழச் செய்து, ஈரானின் பக்க நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதில் இந்த உத்தி மிக முக்கியப் பங்கு வகிக்கும் என சர்வதேச வல்லினங்கள் அபிப்பிராயப்படுகின்றனர். நாட்டின் தலைவர்கள் அமைச்சர்களையும் தாண்டி ஹிஸ்புல்லா ஹமாஸ் போன்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தது இன்னும் ஒரு விஷேட அம்சமாக பார்க்கப்படுகிறது. பிராந்தியத்தில் ஈரானுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக உள்ளது. ஈரானைத் தனிமைப்படுத்த நினைத்த அமெரிக்கா, கொமேனியின் மறைவுக்குப் பின்னால் அங்கு உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், அதற்கு நேர் மாறாக, உலக வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் (ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமானோர்) திரண்ட இறுதி ஊர்வலமாக இது பதிவாகிக் கொண்டிருக்கிறது. ஆயத்துல்லா கமேனிக்கு உலகெங்கிலும் ஈரானை தாண்டியும் உள்ள பல இலட்சம் மக்கள் அஞ்சலி செலுத்துவதையும், மக்கள் அவர்பால் காட்டிய அசைக்க முடியாத விசுவாசத்தையும் கண்டு, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்ற தலைவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அந்த நிகழ்வின் பிரம்மாண்டம் அமைந்திருந்தது. தங்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி, ஒரு தலைவனுக்காக இத்தனை கோடி மக்கள் தன்னிச்சையாகத் திரள்வது அமெரிக்காவின் உளவு நிறுவனங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் தங்களின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியை வெளி உலகத்திற்கு படம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை. ஆயுத ரீதியாக ஈரான் மீது தொடுக்கப்பட்ட மறைமுகப் போர்களை, தங்களின் உள்நாட்டுத் தயாரிப்பு ஏவுகணைகள் மற்றும் பிராந்தியக் கூட்டணிகள் (Axis of Resistance) மூலம் ஈரான் வெற்றிகரமாக முறியடித்தது. அதே வேளையில், ராஜதந்திர ரீதியாக, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் மீறி சீனா, ரஷ்யா மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை பலப்படுத்தி, அமெரிக்கா கட்டமைத்த 'ஒற்றைத் துருவ உலக' (Unipolar World) ஆதிக்கத்தை ஈரான் உடைத்தெறிந்தது. சுருக்கமாகச் சொன்னால், ஆயத்துல்லா கொமேனியின் ஜனாஸாவைத் தக்க முறையில் பாதுகாத்து, மக்கள் கடலுக்கு நடுவே நடத்திய அந்த நல்லடக்கம் என்பது வெறும் சடங்கு அல்ல; அது ஈரான் சித்தாந்த ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் வல்லரசுகளுக்கு எதிராகப் பெற்ற மாபெரும் வெற்றியின் பறைசாற்றலாகும். ஒரே இறுதிச் சடங்கில் இருவேறு செய்திகளை ஈரான் உலகத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கேதான் வரலாற்றின் மிக விசித்திரமான, அதே சமயம் உறைந்துபோகச் செய்யும் அந்த அரசியல் முரண் ஒளிந்திருக்கிறது. அமெரிக்கா உலக அரங்கில் வல்லரசாகத் தனது 250 வருட கொண்டாட்டங்களை மிக விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில் தான், ஈரானும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிச் சடங்கை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இறுதிச் சடங்கு வெறும் ஆயத்துல்லா கொமேனி என்ற தனிமனிதருக்கானது மட்டுமல்ல; அது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இத்தனை காலம் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப் போராடிய 'ஒற்றைத் துருவ' (Unipolar) ஆதிக்கத்திற்கும், அதன் திமிர்பிடித்த ஏகாதிபத்தியத்திற்குமான இறுதிச் சடங்குதான் இது என்பது தான் இங்கே ஒளிந்திருக்கும் நிஜமான செய்தி! அமெரிக்கா தனது 250 ஆண்டு காலப் பேரரசுப் பலத்தைக் காட்ட நினைத்த அதே நாட்களில், ஈரான் தனது சித்தாந்த பலத்தால் அமெரிக்காவின் அடக்குமுறைக்கு மரண சாசனம் எழுதியது என்றால் அது மிகை இல்லை. பிற் குறிப்பு- கட்டார், சவுதி,துருக்கி, ஹிஸ்புல்லா ஹமாஸ் போன்றோருக்கு ஒலிபரப்பு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களை பார்க்கும் போது ஈரானின் ராஜதந்திரம் எவ்வளவு வலிமையாகது என்பதை கண்டு கொள்ள முடியும். கீழே கமெண்டில் அந்த வசனங்கள்
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar