BREAKING NEWS
Showing posts with label SLPP. Show all posts
Showing posts with label SLPP. Show all posts

அரசியலை அதிரச் செய்வதற்கான சில அதிரடியான செயற்பாடுகள்

 


அரசியலை அதிரச் செய்வதற்கான

சில அதிரடியான செயற்பாடுகள்

அடுத்த வாரத்திற்குள்

.......................................................

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கும் அதன் பங்காளிக் கட்சிகள் சிலவற்றுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகள் நீண்டுகொண்டே செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பங்காளிகள் சில தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உடும்புப்பிடியாக இருப்பதால் மாற்று வழியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆலோசித்துள்ளனர் என அறியமுடிகின்றது.


அதன் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


சிறிய விடுமுறையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஸ நேற்று முன்தினம் (24) நாடு திரும்பினார். அவர் ஜூலை 6ஆம் திகதியன்று தேசியப் பட்டியல் எம்.பியாக பதவியேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பசிலை எம்.பியாக்குவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது.


அதன்பின்னர் ஜூலை மாதத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாகவும் அதில் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ஸ நியமிக்கப்படவுள்ளார் என்றும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உத்தியோகபூர்வமற்ற இந்த அறிவிப்புகள் வெளியானமையால் கொழும்பு அரசியலில் ஓர் அதிர்வு தென்படுகின்றது. அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச உதய கம்மன்பில ஆகிய இருவரும் பசில் ராஜபக்ஸ பங்கேற்றிருந்த முக்கிய சந்திப்புகளை கடந்த காலங்களில் புறக்கணித்திருந்தனர்.


கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு தலைவர் அல்லாத ஒருவர் அழைக்கப்பட்டுள்ளமையை அடுத்தே அவ்வாறான கூட்டங்களை புறக்கணித்ததாக பகிரங்கமாகவே அவ்விருவரும் தெரிவித்திருந்தனர்.


அவ்விருவரும் பகிஷ்கரித்த கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்த அவ்வாறான கூட்டங்களில் தலைமைதாங்கும் குழுவுடன் பசில் ராஜபக்ஸவும் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த பொஸ்பரேட் நிறுவனம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கீழுள்ள கமத்தொழில் அமைச்சின் கீழ் எவ்விதமான முன்னறிவித்தலும் இன்றி கொண்டு செல்லப்பட்டது. அதுதொடர்பிலும் ஏனைய பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.


இது இவ்வாறிருக்க ஜூலை மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும் அமைச்சரவை மாற்றத்தின் போது முழுமையான அமைச்சரவை மாற்றமொன்றும் இடம்பெறலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெறுமாயின் முக்கிய அமைச்சுகளின் பொறுப்புகள் அபகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுவதாகவும் அறியமுடிகின்றது.


அதில் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கீழிருக்கும் அமைச்சுக்கள் அல்லது நிறுவனங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவ்வாறான மாற்றங்கள் எல்லாமே அடுத்தடுத்து முகங்கொடுக்கவேண்டிய தேர்தலைகளை அடிப்படையாக வைத்து காய்களை நகர்த்துவதற்கான ஆரம்பகட்டமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவற்றுடன் கொழும்பு ​அரசியலை அதிரச் செய்வதற்கான இன்னும் சில அதிரடியான செயற்பாடுகள் அடுத்த வாரத்துக்குள் இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

පොදුජන පෙරමුණ පක්ෂයට සහයෝගය දක්වන මුස්ලිම් පක්ෂයන් ඒකාබද්ධව කටයුතු


පොදුජන පෙරමුණ පක්ෂයට සහයෝගය දක්වන මුස්ලිම් පක්ෂයන් ඒකාබද්ධව කටයුතු කිරීමෙන් මුස්ලිම් සමාජයට යහපත් සේවාවක් ලබාගැනීමට හැකිවනවා පමණක් නොව, එළැඹෙන මැතිවරණයන් හි පොදුජන පෙරමුණ පක්ෂය වෙනුවෙන් මුස්ලිම් ඡන්ද වැඩිකරගැනීමට හැකිවන බවටත් උලමා පක්ෂය අවධාරණය කරයි.

මේ සම්බන්ධයෙන් එම පක්ෂයේ නායක මුබාරක් අබ්දුල් මජීද් මවුලවි තුමන් තවදුරටත් අදහස් දැක්වීමේදී,

ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ පක්ෂයට සහයෝගය දක්වන මුස්ලිම් පක්ෂයන් හා පොදුජන මුස්ලිම් පෙරමුණ ඒකාබද්ධව ප්‍රචාරක කටයුතුවල නියැළිය යුතු බවට අප විසින් මැතිවරණ සමයේදී  ද ආරාධනා කරන ලදී. එහෙත් අපගේ ආරාධනාව පිළිගනු ලැබුවේ නැත. සියල්ලන්ම වෙන්වෙන්ව තනිතනියෙන් කටයුතු කරන ලදී. නෙළුම් පොහොට්ටුවට මුස්ලිම් ඡන්ද අඩුවීමට මෙයද ප්‍රධානතම හේතුවකි. සජිත් ප්‍රේමදාසට සහයෝගය දැක්වු මුස්ලිම් පක්ෂයන් ඒකාබද්ධව වේදිකාවේ පෙනී සිටීම මුස්ලිම්වරුන් තුල ප්‍රසාදයකට ලක්විණි.

වත්මන් වාතාවරණය තුළ ජනාධිපති ගෝඨාභය මැතිදුන් හා අගමැති මහින්ද රාජපක්ෂ මැතිදුන්ගේ නායකත්වයෙන් යුත් රජයේ ප්‍රබල මුස්ලිම් චරිත ඉතා අල්පයකි. එම හේතුවෙන් මුස්ලිම්වරුන් හට ලැබිය යුතු වරප්‍රසාදවල යම් අඩුපාඩුවක් සිදුවිය හැකිය. එය අනාගතයේදී ද අහිතකර බලපෑමක් ඇතිකරමින් පොහොට්ටු පක්ෂයට සම්බන්ධ මුස්ලිම් පක්ෂයන් කෙරෙහි මුස්ලිම් සමාජය තුළ අප්‍රසාදයක් ඇතිකරමින්,   මුස්ලිම්වරුන් විසින් විරුද්ධ පක්ෂයේ මුස්ලිම් පක්ෂවලට ඡන්දය ලබාදීමට පොළඹවනු ඇත.

වත්මනෙහි පොදුජන පෙරමුණ පක්ෂය පාලන බලය හොබවන බැවින් එයට සම්බන්ධ මුස්ලිම් පක්ෂයන් හරහා තම වරප්‍රසාද ලබාගැනීමට ජනතාව පෙළෙඹවීම සාධාරණය. එය නොලැබුණුවිට හිටපු අය හොදයැයි ඔවුන් තුළ අදහසක් මෝදුවීම වැළැක්විය නොහැකිය. එබැවින් පොදුජන පෙරමුණට සම්බන්ධ මුස්ලිම් පක්ෂයන් පෙරමුණක් වශයෙන් ඒකාබද්ධව කටයුතු කිරීමට උලමා පක්ෂය විසින් ආරාධනා කරනු ලැඛේ. පොදුජන පෙරමුණ සහයෝගිතා මුස්ලිම් පක්ෂ සංධානය ලෙසින් කටයුතු කිරීමෙන් මුස්ලිම් සමාජය මුහුණපාන ප්‍රශ්ණයන් එකිනෙක අධ්‍යයනය කොට රජයේ අවධානයට යොමුකොට ඒවාට විසඳුම් ලබාදීමට කටයුතු කළ හැකිය. ඒ වගේම සමාජයට ලැබිය යුතු වරප්‍රසාදයන් ඒකාබද්ධව කටයුතු කිරීම තුළින් පහසුවෙන් ලබාගැනීමට හැකිවනවා මෙන්ම ඒ මගින් ජනාධිපති ගෝඨාභය මැතිඳුන් හා අගමැති මහින්ද මැතිඳුන්ගේ රජය තවදුරටත් ශක්තිමත් කරන්නට හැකිවන බවටත් අවධාරණය කරන්නෙමු.

கோத்தபாய ராஜபக்ஷாவிற்கு ஏன் வாக்களிக்கவேண்டும்

#நாம்_உருவாக்கிய_நல்லாட்சியில் #எமக்கு_நடந்த_நல்லவைகள்
#மீண்டும்_நிபந்தனையற்ற ஆதரவா?

1)முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் வந்ததும் பஸ்களில் முகம்மூடுவோர் ஏறுவதற்குை தடையேன படம் ஒட்டி ஒடுக்கப்பட்டது யாரின் ஆட்சியில் ?

2)அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தது யாரின் ஆட்சியில் ?

3)முஸ்லிம்களுக்கு மற்றும் அவசரகால சட்டத்தை பயன்படுத்தபடுத்தியது  யாரின் ஆட்சியில் ?

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு "நாம் இலங்கையர்" என கை கோர்ப்போம் - மத்திய கொழும்பு அமைப்பாளர் ஏ.எல்.எம். உவைஸ்



( மினுவாங்கொடை நிருபர் )

   இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் "நாம் இலங்கையர்" என ஒன்றிணைந்து ஒற்றுமையாய்  கைகோர்க்க முன்வர  வேண்டுமென, ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் அமைப்பாளருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். உவைஸ் தெரிவித்தார்.
   கொழும்பு, மருதானையிலுள்ள ஸ்ரீல.பொ.பெ. வின் மத்திய கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, உவைஸ் ஹாஜியார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
   "அரசியல் களங்களின் சமகாலப் பார்வை" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அவர் மேலும் பேசும்போது கூறியதாவது,
   இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இது வெளிப்படையான உண்மை. 
இதுகாலவரைக்கும் மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளனர். ஆனால்,  இனிவரும் காலங்களில்,  "நாட்டின் பிரஜைகள்" என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.
   நாட்டின் நலன் கருதி, இந்நாட்டில் வாழும் சகல மக்களினதும் கருத்துக்களைப் பெற்று, மிகச் சிறந்த எதிர்காலத் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், மேலும் பல பயனுள்ள திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம். எனவே, எம்முடன்  இணைந்து கை கோர்க்குமாறு, அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சகல தொழிற் சங்கங்களுக்கும், தொழில் வல்லுனர்களுக்கும் அன்பு அழைப்பு விடுக்கின்றோம்.
   நாட்டில் சமூக மாற்றத்தைக் காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், முதலில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தற்போது மக்கள் அரசியல் மாற்றம் ஒன்றையே  விரும்பியும் வேண்டியும்  நிற்கின்றார்கள். 
   இனவாதம், மதவாதம் இந்நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். இதனை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
   எதிர்காலத்தில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள, மத்திய கொழும்பை நான் தெரிவு செய்துள்ளேன். காரணம், மத்திய கொழும்பு மக்கள் பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். என்றாலும், முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகள் எதுவும் இக்கட்சியால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான், பொதுஜன பெரமுனவில் இணைந்து, கொழும்பு வாழ் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்தேன். எனவேதான், மத்திய கொழும்பை, பொதுஜன பெரமுனவின் கோட்டையாக மாற்றுவதற்கான மிகச்சிறந்த எண்ணக் கருவைப் பின்னணியாகக் கொண்டு செயற்பட உறுதி பூண்டுள்ளேன் என்றார்.   
   இந் நிகழ்வில், உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத், புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் உள்ளிட்ட புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar