BREAKING NEWS
Showing posts with label kalmunai DS. Show all posts
Showing posts with label kalmunai DS. Show all posts

கல்முனைக்குடியும் கல்முனையும்

 


:::::::::::::*::::::::*::::::::::::::::::::::::::::::::::::::

அரங்கம் இணையத்தளதளத்தில் தம்பியப்பா கோபலகிருஸ்ணன் அவர்கள் எழுதிய கட்டுரையினை வாசித்த போது இந்த கட்டுரையினை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது...

------------------------------------------------ எம்.எம்.றியாஸ்

            @3.00am

பலர் தொடாத பக்கமாகவும் அரசியல் வாதிகள் அடிக்கடி தொடுகின்ற பக்கமாகவும் கல்முனை விவகாரம் காணப்பட்ட போதிலும் தம்பியப்பாவின் கட்டுரையினை வாசிக்கும் போது எழுந்த கேள்விக் கணைகளுக்கு விடை தேடிப் புறப்பட்டேன்...


கல்முனையும் கல்முனைக் குடியும் ஒன்றா வேறுவேறா? ?


தம்பியப்பாவின் கருத்துப்படி கல்முனை என்பது தாளவட்டுவான் வீதியிலிருந்து தரவைப் பிள்ளையார் வீதி வரை எனக் குறிப்பிடுகின்றார். அதற்கு அவர் வைக்கும் ஆதாரம் கிராம சேவக பிரிவுகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள்.


கல்முனைக் குடி என்பது தரவைப் பிள்ளையார் வீதியிலிருந்து ஸாஹிறாக் கல்லூரி வரையானது என்று கூறும் அவர் கல்முனை வேறு கல்முனைக் குடி வேறு என்று சுட்டிக்காட்டுகிறார்.


இந்த விடயமாக முஸ்லீம்கள் தமது வர்த்தகம் செய்யும் பிரதேசம் கல்முனை என்றும் தாம் குடியிருக்கும் பிரதேசம் கல்முனைக்குடி என்றும் குறிப்பிடுகின்றனர்.


இந்த இரு வேறுபட்ட இரு சமூகத்தவர்களின் கருத்துக்களையும் வரலாற்று ரீதியாகவும் சட்ட ஆவணங்கள் ரீதியாகவும் எடுத்துக் காட்டுக்கள் மூலமாகவும் ஆராய்ந்து பார்ப்போம்.


கல்முனை வஸார் பகுதியில் குடியிருப்புக்கள் பெரிதாக இருக்கவில்லை என்று கூறப்படும் அதேவேளை மக்கள் குடியிருந்த கடற்கரைப் பள்ளிப் பிரதேசத்தில் 1520களில் கடற்கரைப் பள்ளிவாசல் நிரமாணிக்கப்பட்டதாகவும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னரே கல்முனை பஸார் பிரதேசத்தினை நோக்கி மக்கள் நகரத்தொடங்கியதாகவும் கல்முனையின் தொண்மை வரலாறு கூறுகிறது.


17ம் நூற்றாண்டில் கல்முனை ஒரு சிறிய குடியேற்றமாகவே காணப்பட்டதாகவும் அக்காலத்தில் கத்தோலிக்கர்கள் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.


முஸ்லீம்கள் வாழும் இடங்களில் தங்களுக்கான பள்ளிவாசல்களை அமைத்து வணங்குபவர்களாகக் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் கல்முனை நகர்பள்ளிவாசல் 1834ம் ஆண்டு பக்கீர் தம்பி மரைக்கார் பிச்சை தம்பி மரைக்கார் ஆகிய இரண்டு முஸ்லிம் பெரியார்களின் காணியிலேயே நிர்மாணித்தனர். இதனை 1854ம் ஆண்டின் PP 294ம் இலக்க வரைபடத்தின் மூலம் கண்டு கொள்ளலாம். அதே வேளை இந்த நகர்பகுதியில் தமிழ் மக்களுக்கான எந்த வணக்க வழிபாட்டு தளங்களும் இன்றுவரை இருக்கவில்லை என்பது வரலாற்றினை தேடிப்பார்க்கின்ற போது புலப்படுகிறது. இந்த வரலாற்றுச் சான்று மூலம் பார்க்கும் போது கல்முனை நகர்பகுதி முஸ்லீங்கள் வசமிருந்திருக்கறது என்பது புலப்படுகிறது.


மேலும் 1952ல் இந்தியர் பாக்கிஸ்தானியர் குடிவரவு குடியகல்வு சட்டத்தினை நிறைவேற்றியதன் காரணமாக கல்முனை வசார் பகுதியில் வர்த்தகம் செய்து வந்த இந்தியர்களும் பாக்கி ஸ்தானியர்களை அவர்களது வர்த்தக நிலையங்களையுமய நிலங்களையும் உள்ளூர் வாசிகளிடம் விற்று விட்டு தமது சொந்த நாட்டிற்குச் சென்றனர். இதனால் வியாபார நிலையங்களின் பெரும் பகுதி முஸ்லீம்கள் வசமாகியது என்ற வரலாற்று தடயத்தோடு கட்டுரையாளரின் விடயத்திற்கு வருவோம்...


1897.02.19ம் திகதி அரச வர்த்தமானி மூலம் கல்முனைக்கான சனிட்டரி போட் உருவாக்கப்பட்டது. இதில் கல்முனைக்கான எல்லையாக தாளவட்டுவான் வீதியில் இருந்து சாய்ந்தமருது (ஸாஹிறாக் கல்லூரி) வீதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கட்டுரையாளரும் ஏற்றுக் கொள்கிறார் இதனை திட்டமிட்ட சதி என்கிறார். இந்த சனிட்டரி போட் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் தலைமையில் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவணத்தில் ஓரிடத்திலும் தரவைப் பிள்ளையார் வீதி கல்முனைக்கான எல்லையாக குறிப்பிடப்படவில்லை.


1920ல் கல்முனை உள்ளூர் சபை (Local Board) உருவாக்கப்பட்டது. இந்த சபையும் ஏற்கனவே குறிப்பிடும் சனிட்டரி போட்டின் எல்லையையே குறிப்பிடுகிறது. இதில் கூட கல்முனையின் எல்லையாக தரவைப் பிள்ளையார் வீதியினைக் குறிப்பிடவில்லை. இந்த சபையும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் தலைமையில்தான் இயங்கி வந்தது.


1946ல் கல்முனை பட்டின சபை உருவாக்கப்பட்டது அப்போதும் கல்முனையின் எல்லையானது தாளவட்டுவானில் இருந்து ஸாஹிறாக் கல்லூரி வீதி வரை வரையறுக்கப்பட்டிருந்தது. 


இது இவ்வாறிருக்க எப்படி கட்டுரையாளர் ஆதாரமற்ற தகவலைக் கொண்டு கல்முனை வேறு கல்முனைக் குடி வேறு என்று நிறுவ முடியும்.


1946ல் உருவாக்கப்பட்ட இந்த பட்டின சபை ஏழு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் 5 வட்டாரங்களில் முஸ்லீம்களும் 2 வட்டாரங்களில் தமிழர்களும் வாழ்ந்தனர். இந்த 7 வட்டாரங்களிலும் 6904 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 5131பேர் முஸ்லீம்களும் 1773 பேர் தமிழர்களுமாவர். 


கட்டுரையாளர் காட்ட முனையும் கல்முனையும் கல்முனைக் குடியும் வேறு வேறு என்ற விடயத்திற்கு ஆதாரமாக அவர் கொண்டுவருவது கிராம சேவகப் பிரிவுகளுக்கு இடப்பட்டிருக்கும் பெயரினை கொண்டு என்பது புலனாகிறது. 


1978ற்கு முன்னர் கல்முனையில் மொத்தமாக 17 கிராமசேவகப் பிரிவுகளும் சாய்ந்தமருது 6 கிராமசேவகப் பிரிவுகளும் அடங்கலாக 23 கி.சே.பி காணப்பட்டுள்ளன. 


1989ற்கு பின்னரே கல்முனை சாய்ந்தமருது அடங்கலாக மொத்தமாக 76 கிராம சேவகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் "கல்முனை"  எனப் பெயர் குறிப்பிடப்படும் இடம் மட்டும்தான் கல்முனைக்கு சொந்தமானது ஏனைய பெயர்கள் கொண்டு அழைக்கப்படுபவை கல்முனைக்கு சொந்தமற்றவை என கட்டுரையாளர் சொல்ல முனைகிறார். 

 

எடுத்துக்காட்டுக்கா சில பிரதேச செயலகங்களை எடுத்து நோக்கினால்


சம்மாந்துறை 51 கிராமசேவகப் பிரிவுகளைக் கொண்ட ஒரு பிரதேச செயலகம் அங்கு 01 தொடக்கம் 14 வரை சம்மாந்துறை என அழைக்கப்படுகிறது. அதற்காக சம்மாந்துறை என அழைக்கப்படும் கிராமசேவகப் பிரிவு மாத்திரம்தான் சம்மாந்துறைக்கு சொந்தமானது  மற்றயவை சம்மாந்துறைக்கு சொந்தமற்றவை எனக் கூற முடியுமா?

அதில் மட்டக்களப்பு தரவை என்ற பெயருடனும் கிராம சேவகப் பிரிவு அழைக்கப்படுகிறது. ஆகவே இந்த கிராம சேவகப் பிரிவு மட்டக்களப்புக்குச் சொந்தமானது அது சம்மாந்துறைக்கு சொந்தமானதல்ல எனக் கூற முடியுமா?


இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும் கல்முனையின் எல்லை தாளவட்டுவானில் இருந்து ஸாஹிறாக் கல்லூரி வரை என்கிறது முஸ்லிம் தரப்பு.  இல்லை தாளவட்டுவானில் இருந்து தரவைப் பிள்ளையார் கோயில் வரை எனக் கூறுகிறது தமிழ்த் தரப்பு.


எப்போதும் ஆட்சி செய்பவன் நிருவாகம் செய்ய விரும்புபவன் ஒரு பெரும் நிலப்பினையே கோருவான்.  ஆனால் கல்முனையில் அது விசித்திரம். பெரும் நிலப்பரப்பு வேண்டாம் தரவைப் பிள்ளையார் வீதியுடன் போதும் எனக் ஒரு நிருவாகப் பரப்பினைக் குறுக்கிக் கொள்வதில்தான் இந்தப் பிரச்சனையின் தொடக்கப்புள்ளி உள்ளது.


இரு சமூகத்தவர்களும் இந்தளவுக்கு முட்டி மோதுவதற்கு காரணம் கல்முனை சந்தை உட்பட கல்முனை பசார் யாருக்கு சொந்தம்.  என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.


தரவப் பிள்ளையார் வீதியிலிருந்து தாளவட்டுவான் வரையான பிரதேசத்தில்தான் கல்முனை பஸார் உட்பட கல்முனை பிரதேசசெயலகம் கல்முனை பொலிஸ் நிலையம். கல்முனை உயர் நீதிமன்றம், ரெலிகொம், கல்முனை ஆதார வைத்தியசாலை, கல்முனை உப பிரதேச செயலகம், கார்மேல் பாத்திமா கல்லூரி,உவெஸ்லி உயர்தரப் பாடசாலை,கல்முனை நூலகம், கல்முனை மாநகரசபை,மாகாண சுகாதார பிராந்திய காரியாலயம், வலயக் கல்வி அலுவலகம், மாகாண நீர்ப்பாசனத்  திணைக்களம், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம், கடற்றொழில் மீன்பிடித் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம், சந்தாங்கேணி மைதானம், பஸ் இஸ்ராண்ட்,பஸ் டிபோ, காணிப்பதிவகம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வங்கிகள் அத்தனையும் இவ்வாறு ஒரு பிரதேசத்தின் அரச தனியார் நிறுவனங்கள் அத்தனையும் இங்கு குறிப்பிடப்படும் இரண்டு சமூகங்களும் கோரி நிற்கும் பிரதேசத்தில்தான் அமைந்துள்ளன. இதனால் இந்தப் பிரதேசத்தினை இரு சமூகங்களும் விட்டுக் கொடுக்க தயாரில்லாத நிலையில் இருக்கும் நிலையினை கருத்தில் கொண்டு இதனை அரசியல் வாதிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.


அப்படியானால் கல்முனையைப் பிரிக்க முடியாதா? இது தொடர் கதையா என்றால் அதுதான் உண்மை...


சரி இவை தவிர கல்முனையினைப் பிரிப்பதற்கான வேறுதடைகளும் உண்டா? எனக் கோட்பின் ஆம் என்றே கூற முடியும்.


இன ரீதியாக பிரிப்பதில் உள்ள தடைகள்...


கல்முனைப் பிரதேசத்தினைப் பொறுத்தவரை ஒரு சரியான இயற்கை நியதிகளுடன் கூடிய எல்லைப் பிரிப்பு இல்லை.


தெற்கு எல்லையான தரவைப் பிள்ளையார் கோயில் என்பது கல்முனை அக்கரைப்பற்று வீதிக்கு மேற்காக அமையப்பெற்றுள்ளது. ஆனால் பிரதான வீதியின் மறுபுறத்தில் கிழக்கு நோக்கி கோயிலுக்கு முன்னால் இந்த தரவப் பிள்ளையார் வீதி அமைந்துள்ளது.  இந்த வீதியில் எந்த தமிழ்க் குடும்பமும் இல்லை. இந்த வீதியில்தான் கல்முனை கடற்கரை பள்ளிவாசலும் அமைந்துள்ளது. இந்த வீதியினை தமிழர்கள் தரவைப் பிள்ளையார் வீதி என அழைக்கின்றனர். முஸ்லீம்கள் கடற்கரை பள்ளிவீதி என அழைக்கின்றனர் ஒரு வீதி இரு பெயர்...


ஆளுக்காள் 29 கிராம சேவகப் பிரிவுகளைப் பிரித்துக் கொண்டு ஆழுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் கற்பனைக் கோடுகளே...


தமிழ் மக்கள் அனைவரும் கல்முனை உப பிரதேச செயலகத்தாலும் முஸ்லிம் மக்கள் அனைவரும் கல்முனை பிரதேச செயலகத்தாலும் நிருவகிக்கப்படுகிறார்கள் ஆனால் இரண்டு பிரதேச செயலக எல்லைக் கிராம சேவகப் பிரிவுகளில் மக்கள் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள்.  இன ரீதியாக பிரிந்து நிருவகிக்கப்பட்டாலும் நில ரீதியாக பிரிக்கப்படாமல் வாழ்கிறார்கள். 

இது ஏனைய பிரதேசங்கள் போல் இலகுவாக பிரிக்கக் கூடிய விடயமும் அல்ல


எப்படி குடியிருப்பு நிலங்களை தனித்தனியே பிரிக்க முடியாதோ அதே போன்றே வயல் நிலங்களையும் பிரிக்க முடியாதுள்ளது. இரண்டு சமூகத்தவர்களின் வயல் நிலங்களும் மாறி மாறி காணப்படுகின்றன.


எந்தளவுக் கெனின் இரண்டு ஏக்கர் வயற்காணி தமிழ் மகனின் பெயரிலும் முஸ்லிம் மகனின் பெயரிலும் எழுதப்பட்டிருக்கும் தமிழ் சகோதரன் வயலைச் செய்யும் போது முஸ்லிம் சகோதரன் இருவருக்கும் சொந்தமான வேறு ஒரு வயலைச் செய்வார். அடுத்த முறை தமிழ் சகோதரன் செய்த வயலை முஸ்லிம் சகோதரனும் முஸ்லிம் சகோதரன் செய்த வயலை தமிழ் சகோதரனும் மாறி மாறி வேளாண்மை செய்வார்கள் இருவருக்குக்கு பிரிக்க முடியாத இரு வயலும் சொந்தமானதாகக் காணப்படும். இதனை "தட்டுமாறும் வயல்" என அழைப்பர். இந்த நடைமுறை அன்றிருந்து இன்றுவரை தொடர்கிறது. இந்த நடைமுறை வேறு பிரதேசங்களில் இல்லை.


 கல்முனைப் பிரந்திய மாகாண சுகாதாரப் பணிமனையில் ஒரு தமிழ் அதிகாரி நிருவகிக்கிறார். அதே போல் கல்முனை வலயக் கல்வி அதிகாரியாக ஒரு தமிழ் மகன் நிருவகிக்கிறார். இதற்காக முஸ்லீம்கள் யாரும் போர்க்கொடி தூக்க வேண்டிய அவசியமில்லை. அரச நிறுவனங்களில் அரசாங்கம் நியமிக்கும் அதிகாரிகள் நிருவகிப்பர் இதற்கு இனவாத சாயம் பூசுவது மடமைத்தனம்.


ஆகவே அண்ணன் தம்பிகளாக வாழும் இரு சமூகத்தினையும் அதிகார வேட்கையில் பிரித்துவிடாமல் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ வழியைத் தேடுவோம் இல்லை பிரியத்தான் வேண்டுமென்றால் இன ரீதியாக பிரிக்காமல் அவ்வாறு பிரித்தால் இரண்டு பிரதேச செயலகங்களும் நிலத்தொடர்பற்ற பிரதேசங்களாக மாறுவதுடன் இரண்டு இனங்களும் அடிகடி மோதிக் கொள்ளும் மயான பூமியாகவும் மாறும்.  


ஆகவே இரண்டு சமூகங்களும் மனந்திறந்து போசி ஒரு இயற்கையான எல்லையினால் இரண்டாக பிரிப்பதோடு இரண்டு சபைகளுக்குள்ளும் இரண்டு சமூகங்களும் சுமூகமாக வாழ வழியைத் தேடுவதோடு எந்த சமூகத்திற்கும் பாதிப்பு வந்திடாமல் இந்த முரண்பாட்டினை அடுத்த சந்ததிக்கும் கடத்தாமல் முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பாடுபடுவோம்....

க‌ட‌ந்த‌ ஆட்சியில் ப‌ல‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள், பி. அமைச்ச‌ர்க‌ள் இருந்தும் க‌ல்முனை செய‌ல‌க‌த்தை தாள‌வெட்டுவானால் சின்ன‌ விட‌ய‌த்தைக் கூட‌ செய்ய‌வில்லை

 


கிழ‌க்கு மாகாண‌த்தில் த‌மிழ் அமைச்ச‌ர்க‌ள் இருந்த‌து மிக‌ குறைவு. முஸ்லிம் எம்பீக்க‌ளே அதிக‌ம் அமைச்ச‌ர்க‌ளாக‌ இருந்த‌துண்டு.

1989ம் ஆண்டு அமைச்ச‌ராக‌ இருந்த‌ தேவ‌நாய‌க‌ம் க‌ல்முனையில் க‌ர‌வாகு வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் ஒன்றை உருவாக்கும்ப‌டி அம்பாரை அர‌ச‌ அதிப‌ருக்கு க‌ட்ட‌ளையிட்டிருந்தார்.


அது அமைச்ச‌ரின் க‌ட்ட‌ளைதானே த‌விர‌ அத‌ற்குரிய‌ வ‌ர்த்த‌மாணி வ‌ந்த‌தாக‌ தெரிய‌வில்லை.


ஆனாலும் தேவ‌நாய‌க‌ம் த‌ன் ச‌மூக‌த்துக்கு ஏதாவ‌து செய்ய‌ வேண்டும் என‌ முய‌ற்சி செய்த‌தை பாராட்ட‌த்தான் வேண்டும்.

89ல் க‌ல்முனையின் அமைச்ச‌ராக‌ ஏ ஆர் எம் ம‌ன்சூர் இருந்தும் இத‌னை த‌டுக்க‌வில்லை.


அத‌ன் பின்  1989 தொட‌க்க‌ம் முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் அஷ்ர‌ப் எம் பியாக‌ க‌ல்முனையை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தினார். அவ‌ராவ‌து க‌ரைவாகு வ‌ட‌க்கின் எல்லை எது என்ப‌தை த‌ன‌து நேச‌த்துக்குரிய‌வ‌ராக‌ இருந்த‌ ஜ‌னாதிப‌தி பிரேம‌தாச‌ மூல‌ம் வ‌ர்த்த‌மாணி வெளியிட்டிருக்க‌லாம். செய்ய‌வில்லை.


94 முத‌ல் அஷ்ர‌ப் பெரும் ப‌ல‌ம் வாய்ந்த‌ அமைச்ச‌ராக‌ இருந்த‌ போதும் இது விட‌ய‌த்தில் எதுவும் செய்ய‌வில்லை.

அத‌ன் பின் ர‌வூப் ஹ‌க்கீம் கெபின‌ட் அமைச்ச‌ராக‌ ப‌ல‌ கால‌ம் இருந்தார். அவ‌ர் க‌ல்முனையை க‌ண‌க்கில் எடுக்க‌வும் இல்லை. அத‌ன் பின் ஹ‌ரீஸ் எம் பி பிர‌தி அமைச்ச‌ர், ராஜாங்க‌ அமைச்ச‌ராக‌ இருந்தார். 


அவ‌ரும் இதோ முய‌ற்சிக்கிறேன் என‌ கால‌ம் க‌ட‌த்தினாரே த‌விர‌ உப‌ செய‌ல‌கத்தின் ஒரு ம‌யிரைக்கூட‌ பிடுங்க‌வில்லை. ஹ‌ரீசுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ல்ப‌டுவார் என‌ எதிர்பார்த்த‌ ர‌வூப் ஹ‌க்கீம் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ருக்கு சார்பாக‌வே ந‌ட‌ந்துகொண்டார்.


க‌ட‌ந்த‌ ஆட்சியில் ப‌ல‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள், பி. அமைச்ச‌ர்க‌ள் இருந்தும் க‌ல்முனை செய‌ல‌க‌த்தை தாள‌வெட்டுவானால் சின்ன‌ விட‌ய‌த்தைக் கூட‌ செய்ய‌வில்லை. இத‌ற்காக‌ உல‌மா க‌ட்சியின‌ராகிய‌ நாம் பாரிய‌ அழுத்த‌ங்க‌ளை இவ‌ர்க‌ளுக்கு கொடுத்தோம். எதுவும் செய்யாம‌ல் க‌ல்முனை ம‌க்க‌ளை ஏமாற்றி விட்ட‌ன‌ர்.


க‌ல்முனையின் சில‌ முஸ்லிம் சிவில் இய‌க்க‌ங்க‌ளும் ஹ‌க்கீமுட‌ன் சேர்ந்து சாதிக்க‌லாம் என‌ கூறி அவ‌ரோடு தொட‌ராக‌ பேசினர். க‌டைசியின் ஹ‌க்கீமை ந‌ம்பி ப‌ல‌ன் இல்லை என‌ கூறி அவ‌ர்க‌ளும் ஒதுங்கின‌ர்.


முஸ்லிம் காங்கிர‌சுக்கு எதிராக‌ க‌ல்முனை ம‌க்க‌ள் குர‌ல் எழுப்புவ‌த‌ன் மூல‌ம் ம‌ட்டுமே க‌ல்முனையை காப்பாற்ற‌ முடியும் என‌ நாம் எவ்வ‌ள‌வோ கூறினோம். க‌டைசியில் இன்று வ‌ரை க‌ல்முனை செய‌ல‌க‌ பிர‌ச்சினை தீர‌வில்லை.


இப்போதும் கூட‌ இதுவிட‌ய‌த்தில் ஹ‌ரீசுட‌ன் இணைந்து அவ‌ர‌து க‌ட்சியின‌ர் செய‌ற்ப‌டுவ‌தை காண‌வில்லை.


க‌ல்முனை செய‌ல‌க‌ம் ப‌ற்றி யாழ்ப்பாண த‌மிழ் எம் பி பாராளும‌ன்றில் பேசுகிறார். கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம் எம்பீக்க‌ள் அத‌ற்கு ப‌தில் கொடுக்க‌க்கூட‌ வக்கில்லாம‌ல் உள்ள‌ன‌ர்.



- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர்.

வெளிச்சக்திகளே கல்முனை தமிழ் மக்களை குழப்புகிறது- கல்முனை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர்

 



எங்களின் பிரச்சினையை நாங்கள் பேசி தீர்ப்போம் : வெளிச்சக்திகளே கல்முனை தமிழ் மக்களை குழப்புகிறது- கல்முனை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர். 


நூருல் ஹுதா உமர். 


பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் தமிழ் முஸ்லிம் உறவை சங்கடப்படுத்தி சகோதரத்துவத்தை சீரழிப்பது போன்று பொய்யான நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறார். இப்படியான ஒரு அநியாயமிக்க காரணியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் இருக்கக்கூடாது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எல்லா சமூகத்தினதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு யாருக்கும் அநீதி இடம்பெறாத வகையில் கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்படும் என கல்முனை மாநகர பிரதிமுதல்வரும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார். 


அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்குமுகமாக கல்முனை கட்சி காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், 


வெளிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையின் அளவு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எமது பிரச்சினையை இங்கு இருக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி தீர்வை பெறலாம் என்பதை உறுதியாக நம்புகிறேன். தமிழருக்கும் முஸ்லிங்களுக்குமான உறவு காலாகாலமாக நீடித்து வருவது. தலைவர் அஸ்ரபுக்கும்  தமிழ் கூட்டமைப்புக்கும் நெருங்கிய உறவு இருந்தது. எமது பிரச்சினைகளை தீர்க்க இனரீதியாக, அரசியல் ரீதியாக சிந்திக்காமல் நியாயபூர்வமாக சிந்திக்க வேண்டும். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மஹேந்திரன் மக்கள் அங்கீகாரம் பெற்ற ஆளுமையான ஒருவர். அவர் கல்முனை விடயத்தில் மு.கா பிரதித்தலைவர் ஹரீஸ் எம்.பியை தொடர்புபடுத்தி பேசுவதை விடுத்து நியாயத்தை சிந்திக்க வேண்டும். எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு நிர்வாகத்தை சரியாக வகைப்படுத்தி தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளுமில்லை. 


தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக பயணித்து நாம் பிட்டும் தேங்காய் பூவும் போன்று வாழ்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். எதிர்வரும் நான்காம் திகதிய கூட்டத்தில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், மு.கா பிரதித்தலைவர் ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு இது தொடர்பில் பேசுவார்கள். யாருக்கும் அநியாயம் நடக்க கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். இந்த விடயத்தில் வெளி சக்திகளே கல்முனை தமிழ் மக்களை குழப்பிக்கொண்டிருக்கிறது என்றார். இந்த ஊடக சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம். பைரூஸ், ஏ.அமீர், ஏ.சி.ஏ.சத்தார், எம்.எஸ்.எம். நிஸார், ஏ.எம். நவாஸ் ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

க‌ல்முனையில் த‌மிழ் முஸ்லிம் முர‌ண்பாட்டை ஏற்ப‌டுத்தும் முய‌ற்சிகளை கைவிடும்ப‌டி உல‌மா க‌ட்சி கோரிக்கை

 


நூறு வீத‌ம் த‌மிழ் மொழி மூல‌ க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை  இர‌ண்டாக‌ பிரித்து க‌ல்முனையில் த‌மிழ் முஸ்லிம் முர‌ண்பாட்டை ஏற்ப‌டுத்தும் முய‌ற்சிகளை கைவிடும்ப‌டி உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து.


இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஊட‌க‌ங்க‌ளுக்கு குறிப்பிட்ட‌தாவ‌து,


க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை த‌ர‌முய‌ர்த்துவ‌த‌ற்காக‌ பாராளும‌ன்ற‌த்தில் பேச‌ப்போவ‌தாக‌ த‌மிழ் கூட்ட‌மைப்பின் சாண‌க்கிய‌ன் எம் பி  த‌ன‌து ப‌திவில் போட்டுள்ளார்.


க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ப‌து  எப்போதோ த‌ர‌முய‌ர்த்த‌ப்ப‌ட்டு த‌னியான‌ செய‌ல‌க‌மாக‌வே செய‌ல்ப‌டுகின்ற‌து என்ப‌து கூட‌ தெரியாத‌ ஒருவ‌ராக‌ சாண‌க்கிய‌ன் உள்ளார். 

அத்துட‌ன் க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தில் இது ப‌ற்றி கூட்ட‌ம் ந‌ட‌த்திய‌தாக‌வும் கூறி த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றுகின்றார். க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ற‌ ஒன்று க‌ல்முனையில் இல்லை. இங்கு இருப்ப‌து இன்ன‌மும் க‌ல்முனை உப‌ செய‌ல‌க‌ம் - வ‌ட‌க்கு ம‌ட்டும்தான் என்ப‌து  தெரியாத‌ சாண‌க்கிய‌ன் எம் பி க‌ல்முனை ப‌ற்றி அரை குறை அறிவுள்ள‌வ‌ராக‌வே உள்ளார் என்ப‌து தெரிகிற‌து.


ஆக‌வே நாம் சாண‌க்கிய‌னுக்கு சொல்கிறோம். ஒற்றுமையாய் இருக்கும் த‌மிழ், முஸ்லிம் ம‌க்க‌ள் ம‌த்தியில் குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்த‌ வேண்டாம். நீங்க‌ள் த‌மிழ், முஸ்லிம் ஒற்றுமையை  உண்மையாக‌வே விரும்புப‌வ‌ராக‌ இருந்தால் க‌ல்முனை உப‌ செய‌ல‌க‌த்தை ர‌த்து செய்துவிட்டு, க‌ல்முனையை த‌மிழ், முஸ்லிம் என‌ பிரிக்காம‌ல் க‌ல்முனைக்கென‌ இப்போது இருக்கும் ஒரே செய‌ல‌க‌த்தை அப்ப‌டியே இருக்க‌ விட்டு  க‌ல்முனை நீதிம‌ன்ற‌ எல்லையிலிருந்து பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு பிர‌தேச‌ங்க‌ளை இணைத்து பாண்டிருப்பு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் எனும் இன்னுமொரு செய‌ல‌க‌ம் உருவாக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள். அத‌ற்கான‌ முழு ஒத்துழைப்பையும் நாம் த‌ருவோம்.


- உல‌மா க‌ட்சி

க‌ல்முனைக்கான‌ எல்லையிலும் எந்த‌ பிர‌ச்சினையும் இல்லை.

 


க‌ல்முனைக்கான‌ எல்லையிலும் எந்த‌ பிர‌ச்சினையும் இல்லை. 1987ம் ஆண்டு இருந்த‌து போல் க‌ல்முனையை பிரிக்க‌ வேண்டும் என்று சொன்னால் அங்கு எல்லை பிர‌ச்சினை என்ப‌தே இல்லை.

இத‌னை விடுத்து எல்லையில் பிர‌ச்சினை என்ப‌து புதிதாக‌ ஒவ்வொருவ‌ரும் த‌ம‌க்கு அந்த‌ எல்லை வேண்டும் இந்த‌ எல்லை வேண்டும் என‌ சொல்வ‌துதான். அப்ப‌டி பார்த்தால் சாய்ந்த‌ம‌ருதிலும் த‌ம‌க்கு வேறு எல்லை வேண்டும் என்று குர‌ல் எழுப்புவோரும் உண்டு. அத‌ற்காக‌ சாய்ந்த‌ம‌ருதிலும் எல்லை பிர‌ச்சினை உண்டு என‌ கூறி ச‌பை வ‌ழ‌ங்க‌லுக்கு கொமிச‌ன் போட‌ப்ப‌டுமா? இல்லை. 

உண்மையில் ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது சாய்ந்த‌ம‌ருதுக்கு வ‌ந்த‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச‌ மிக‌த்தெளிவாக‌ சொன்னார். அதாவ‌து க‌ல்முனையை நான்கு ச‌பைக‌ளாக‌ முன்பிருந்த‌து போல் பிரித்து சாய்ந்த‌ம‌ருதுக்கும் ச‌பை கிடைக்கும் என‌.


ம‌ஹிந்த‌வின் இந்த‌ நிலைப்பாட்டை அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு கெடுத்த‌வ‌ர்க‌ள் யார் என்று தெரிய‌வில்லை.


க‌ல்முனையில் எல்லை பிர‌ச்சினை உண்டு என்ப‌தால் கொமிச‌ன் போட‌ வேண்டும் என‌ ம‌ஹிந்த‌ சொல்ல‌வில்லை. அவ‌ரை ச‌ந்திக்க‌ சென்ற‌வ‌ர்க‌ள் க‌ல்முனையில் எல்லை பிர‌ச்சினை உண்டு என்றும் சாய்ந்த‌ம‌ருதில் எல்லை பிர‌ச்சினை இல்லை என்ப‌தால் அத‌ற்கு ச‌பை கொடுக்க‌லாம் என்று சொன்ன‌த‌ன் கார‌ண‌மாக‌வே ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ்வால் க‌ல்முனைக்கு கொமிச‌ன் போட‌ப்ப‌ட்ட‌து.

1987ம் ஆண்டு இருந்த‌து போல் நான்கு ச‌பைக‌ளும் செய‌ற்ப‌டும் என‌ வ‌ர்த்த‌மாணி வ‌ந்திருந்தால் இது மீண்டும் அமைச்ச‌ர‌வை மூல‌ம் ர‌த்தாகும் நிலை வ‌ந்திருக்காது.


இந்த‌ நிலைக்கு கார‌ண‌ம் க‌ல்முனை சார்பாக‌ சென்ற‌ க‌ல்முனை எம் பி ஹ‌ரீசும் ச‌ரியாக‌ இது விட‌ய‌த்தை இடித்துரைக்க‌வில்லை என்ப‌தும்தான். தான் ச‌ஜித்துக்கு ஆத‌ர‌வாக‌ நின்ற‌வ‌ன் என்ற‌ குற்ற‌ உண‌ர்வு அவ‌ரை இடித்துரைக்கும் தைரிய‌த்தை இல்லாம‌லாக்கியிருக்க‌லாம்.  இத‌னால்த்தான் நாம் சொல்வ‌து க‌ல்முனை த‌லைமை கொண்ட‌ ம‌ஹிந்த‌ சார்பு முஸ்லிம் க‌ட்சியை க‌ல்முனை ம‌க்க‌ள் த‌ம் பிர‌திநிதியாக‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்று. அவ்வாறு பிர‌க‌டன‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌ம் அக்க‌ட்சி எதிர் கால‌த்திலாவ‌து இது விட‌ய‌த்தை சாதிக்க‌ முடியும். ம‌க்க‌ள் அதிகார‌ம் இல்லாத‌ க‌ட்சியால் பெரிதாக‌ சாதிக்க‌ முடியாது.


ஆக‌வே சாய்ந்த‌ம‌ருதுக்கு ச‌பை, க‌ல்முனைக்கு கொமிச‌ன் என்ற‌ வ‌ர்த்த‌மாணி அறிக்கை அமைச்ச‌ர‌வையால் ர‌த்து செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌தால் இனி கொமிச‌ன் என்ற‌ பேச்சுக்கு இட‌மில்லை. அந்த‌ வ‌கையில் இனி பிர‌த‌ம‌ருட‌னோ ஜ‌னாதிப‌தியுட‌னோ சாய்ந்த‌ம‌ருது க‌ல்முனை ப‌ற்றி பேச‌ செல்ப‌வ‌ர்க‌ள் ஒரேயொரு வார்த்தைதான் சொல்ல‌ வேண்டும். அதுதான் 1987ம் ஆண்டைய‌ வ‌ர்த்த‌மாணியை ர‌த்து செய்து 1987ம் ஆண்டுக்கு முன் இருந்த‌ எல்லைக‌ளின் ப‌டி க‌ல்முனையை நான்காக‌ பிரியுங்க‌ள் என்ப‌துதான்.  அந்த‌ எல்லைக‌ளின்ப‌டியே செய‌ல‌க‌ங்க‌ளும் ச‌பைக‌ளும் இருக்க‌ வேண்டும் என்ப‌தை ம‌ட்டுமே வ‌லியுறுத்த‌ வேண்டும்.


அவ்வாறு பிரிந்த‌பின் க‌ல்முனையுட‌ன் சேர‌ விரும்பும் ச‌பைக‌ள் மீண்டும் சேர முடியும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

உலமா க‌ட்சி

23.2.2020

கௌரவ ஹரிஸ் பா.உ. அவர்கட்கு “



அல்லாஹ்வின் திரு நாமத்தால்,

கௌரவ ஹரிஸ் பா.உ. அவர்கட்கு “
அஸ்ஸலாமு அலைக்கும்”

கல்முனையின் புரையோடிப்போய் உள்ள பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணை கொண்டு வருமாறு அன்பாக வேண்டுகின்றேன் . அவை வருமாறு.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

கௌரவமான இந்த சபையிலே கல்முனையில் புரையோடிப்போய் இருக்கும் பிரச்சினைக்கு இன. பிரதேச நல் லிணக்கத்துக்கான தீர்வாக எனது பிரேரணையை முன்வைக்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

கல்முனை என்பது ஒரு பிரதானமான பிரசித்தி பெற்ற நகரமாகும். அது இலங்கை முஸ்லிம்களின் முக வெற்றிலை.

கல்முனையில் “முனை” என்னும் ஒரு துறைமுகமுண்டு. அதில் 1912ம் ஆண்டு முதல் தென்மாகாண சிங்கள சகோதரர்களும், உள்ளுர் முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையாக  மீன்பிடித் தொழிலில் ஈடுபடலானார்கள்.
கல்முனையின் பொருளாதாரத்தில் 50% மீன்பிடியிலிருந்தே பெறப்பட்டது. ஒரு போக வேளாண்மை செய்யும்  சுமார் 8000 ஏக்கர் விவசாய காணிகள் உரிய பாச்சல் வடிச்சலின்றி மாரிகாலத்தில் தாழ்வதும், நீர் தேங்கும் குளங்கள் ஏக்கர் கணக்கில் சட்ட விரோதமாக  மூடப்பட்டுள்ளதனால் பாச்சலுக்கு நீரில்லாமலும் விவசாயம் பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதுவிடயமாக நீர்பாசன திணைக்களதிலும், ஏனைய அதிகாரிகளிடமும் பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்தும் அது கணக்கிலெடுக்கப்படுவதில்லை. பொதுவில் விவசாயிகளும் மீனவர்களும் வறுமையில்  வாழ்கின்றார்கள்.

1986.08.10ம் திகதி இரவு வேளை கல்முனை முஸ்லிம்கள் தூங்கிக் கொண்டிருக்கும் வேளை தமிழ் ஆயூததாரி இயக்கதினர்கள் ஊருக்குள் அத்துமீறி புகுந்து தாக்கியதில் சில முஸ்லிம்கள் இறந்தனர். பலர் காயமுற்றனர். கல்முனை நகர வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டது, கல்முனையில் மீன்பிடித் தொழில் செய்துவந்த சிங்களவர்களதும், முஸ்லிம்களும் மீன்பிடி வாடிகள் தமிழ் பயங்கர வாதிகளால் கொள்ளையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. அன்று கைவிட்பபட்ட அந்த துறை முகமும், மீன்பிடியும் அந்த இடத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனையில் தென் மாகாண சிங்களவர்களது மீன்பிடி இல்லாமலாக்கப்பட்டதோடு கல்முனை மீனவர்களும் வறுமையில் வாழ்கிறார்கள்.

கௌரவ பிரதமர் அவர்கள் 1994ல் மீன்பிடி அமைச்சராக இருந்தபோது கல்முனை மீனவர் பிரச்சினைபற்றி மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அவரிடம் கூறியுள்ளார்கள்.

கௌரவ சபாநபயகர் அவர்களே!

கல்முனை 2001.06.01ம் திகதி முதல் ஒரு மாநகர சபையாக இயங்கி வருகின்றது. 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் உருவாக்கம் பற்றிய பாராளுமன்ற சட்டம் உருவானபோது கரைவாகு தெற்கு கிராமசபை (சாநய்தமருது), கரைவாகு மத்தி  பட்டினசபை (கல்முனை), கரைவாகு வடக்க கிராம சபை, கரைவாகு மேற்கு  கிராம சபை என்றிருந்த நான்கு உள்ளுராட்சி சபைகள் ஒன்றாக்கப்பட்டு கல்முனை பிரதேச சபை என நிர்வகிக்கப்பட்டது. இந்த பிரதேச சபையின் எல்லைகளாக-

வடக்கு:- துரைவந்திறங்கிய மடுவுக்கு அண்மையில் ஏரியின் மத்திய புள்ளியிலிருந்து கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் மீண்டும் கிழக்கு நோக்கியும், அதிலிருந்து கார்ட் வீதியின் மத்திய கோடு நெடுகிலும் கடற்கரைக்கு (அம்பாரை மட்டக்களப்பு மாவட்ட எல்லை)

கிழக்கு: கார்ட் வீதியிலிருந்து மாளிகைக்காட்டு வீதியின் கடற்கரை நெடுகிலும்.

தெற்கு:  கடற்கரை நெடுகிலும் மாளிகைக்கட்டு வீதியின் மத்திய கோடு நெடுகிலும் கொழும்பு-மட்டக்களப்பு பெரு வீதிக்கு அங்கிருந்து சொல்லப்பட்ட பெருவீதியின் மத்திய கோடு நெடுகிலும் காரைதீவு சந்திக்கும் அங்கிரந்து காரைதீவு சம்மாந்தறை பெருவீதி நெடுகிலும், மாவடிப்பள்ளிவாசலுக்கு, அங்கிருந்து வடக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் கும்புறுகொட இடத்தில் எல்லை நெடுகிலும் மீண்டும் காரைதீவு -சம்மாந்துறை பெருவீதியின் மத்திய கோட்டுக்கு அங்கிருந்து சொல்லப்பட்ட மத்திய கோடு நெடுகிலும் கோட்டை ஆற்றுக்கு குறுக்காகவுள்ள மதகின் மத்திய புள்ளிக்கு.

மேற்கு: கடைசியாக கூறப்பட்ட மதகின் மத்திய புள்ளியிலிருந்து கோட்டை ஆற்றின் மத்மிய கோடு நெடுகிலும் வடக்கு நோக்கியும் துரைவந்திறங்கியமடுவுக்கு அண்மையிலுள்ள ஏரியின் மத்திய புள்ளிக்கு.

என 1188/1ம் இலக்க 2001.06.11ம் திகதிய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கௌரவ சபாநாயகர் அவாகளே!

கல்முனை மாநகரின் வடக்கு எல்லை அம்பாரை-மட்டக்களப்ப மாவட்டஎல்லையாகும். இந்த வடக்கு எல்லையே, கல்முனை பிரதேச செயலகத்தினதும், கல்முனை மாநகரத்தினதும் வடக்கு எல்லையாகும். இந்த வடக்கு எல்லையில் இரு மாவட்டத்தாலும், கல்முனை பிரதேச செயலகத்தாலும், கல்முனை மாநகர சபையாலும் தீர்க்கப்படாத தொடர் எல்லைப்பபிரச்சினை உள்ளது. இதுபற்றி கல்முனை மாநகர சபை கூட்டங்களில் தமிழ் அங்கத்தவர்கள் பிரஸ்தாபித்துள்ளார்கள்.

அம்பாரை நில அளவையாளர் திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கல்முனை பிரரேச செயலகம், கல்மனை மாநகரசபை என்பன வடக்கு எல்லையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருப்பதாக 2016ம் ஆண்டின் 12ம் இலக்க தகவலறியயும் சட்டத்தின் மூலம் அறியத்தந்துள்ளார்கள்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இதே போன்றுதான், கல்முனை மாநகரசபையின் வடக்கிலும் எல்லைப் பிரச்சினை உள்ளது. கல்முனையின் 1987ம் ஆண்டைய பிரதேசபை, 1989ம் ஆண்டின் நகரசபை, 2001.06.11ம் திகதிய கல்முனை மாநகர சபை என்பன வடக்கில் ஒரே எல்லைகளையே கொண்டிருந்தது. தற்போதும் அதுவே எல்லையாகும்.
நிந்தவூர் பிரதேச சபை நிர்வாகத்துடன் இருந்த காரைதீவு கிராமம் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி ஆகிய 40% முஸ்லிம்களை உள்ளடக்கி தனியாக காரைதீவு பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அப்போது நிந்தவூர் பிரதேச சபைக்கும், காரைதீவு பிரதேச சபைக்கும் 2005.12.01ம் திகதி தனித்தனியே வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கும் போது 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபை உருவாக்கம் பற்றிய பாராளுமன்றின் சட்டம் கருத்தில் கொள்ளப்படாது அதிகாரிகளால் அச்சட்டம் மீறப்பட்டு மோசடி செய்யப்பட்டள்ளது. அதாவது, மேற்படி பாராளுமன்ற சட்டத்தில் “பாகம் 1, பிரதேச சபையை அமைத்தல் எனும் தலைப்பில், சட்டம் 2(1)ல் மாநகரசபை பிரதேசத்தில் அல்லது நகரசபைகள் கட்டளைகள் சட்டத்தின் பொருளுக்குட்பட்ட ஒரு பட்டினத்தில் அடங்கியிருப்பதான  எவையேனும் இடப்பரப்புகள் நீங்கலான ஒரு பிரதேச சபை அமையவேண்டும் என சட்டம் குறிப்பிடுகிறது.

அதே காரைதீவு பிரதேசசபை 40% முஸ்லிம்களை உள்ளடக்கி உருவானபோது அதன் வடபுறமுள்ள கல்முனை மாநகருக்கு ஒரு வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படவில்லை. மாறாக கல்முனை மாநகரின் தென்புற எல்லை மேற்படி சட்டத்தை மீறி சட்டவிரோதமாக காரைதீவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதாவது காரைதீவு  பிரதேச சபையின் வடக்கு எல்லை:-
வட்டி ஆற்றினூடாக ஒரு புள்ளியில் ஆரம்பித்து, வட்டி ஆறு வழியே (வட்டி ஆறினூடாக  ஒரு புள்ளியென்பது வட்டி ஆறை சந்திக்கும்வரை எல்லை வீதியை ஊடறுத்து வரையப்பட்ட நேர் கோட்டைக் குறிக்கும்) கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதி ஊடாக சாநய்தமருது-மாளிகைக்காடு சந்தியை அடைந்து, பின் அங்கிருந்து மேலே குறிப்பிட்ட வீதியின் மத்திய கோட்டின் வழியே கடல் வரைக்கும்.
என்று கெசெட் செய்யப்பட்டள்ளது. ஆனால் கல்முனை மாநகரசபைக்கு 2005.12.01ல் ஒரு வாத்தமானி அறிவித்தல் காரைதீவால் களவாக காவு  கொள்ளப்பட்ட எல்லை நீங்கலாக என பிரசுரித்தால், களவு வெளியாகவிடும் என்பதால் பிரசுரமாகவில்லை.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

2005.12.01ல்இ 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபை  உருவாக்கம் பற்றிய சட்டத்தை மதியாது, அதை மீறி உருவாக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட வத்தமானி அறிவித்தலை வறிதாக்கி பாராளுமன்ற சட்டத்தை மதித்து நடக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடுமாறு வினயமாக வேண்டுகிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இதேபோன்றுதான் கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்துள் இருந்த சாய்ந்தமருது பிரிந்து சென்றபோது, 2001.02.20ல் 1172ஃ8ம் இலக்க அரசவர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்முனை பிரதேச செயலகத்திற்கான தென்புற எல்லை கல்முனை ஸாஹிறா வீதிவரை என மாற்றப்பட்டு வர்த்தமானியில் குறிப்படப்பட்டது. அந்த வHத்தகமானியிலும் கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்துள் உள்ள 58 கிராம சேவகர் பிரிவுகளுக்கப்பதிலாக 40 கிராம சேவகர் பிரிவுகள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது. கல்முனையில் 14 கிராமசேவகர் குறிச்சிகளும் நீலாவணை பகுதியில் 4 குறிச்சிகளும் வாத்தமானியில் பிரசுரிக்கப்படாமலேயே நிர்வகிக்கப்படுகின்றது.
1886ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் திகதிய 1210ம் இலக்க நில அளவைப்படத்தில் கரைவாகு பற்றில் கல்முனை, சாநய்தமருது ஆகிய ஊர்கள் மட்டக்களப்பு மாட்டத்தின் கிழக்கு மாகாணத்தில் இருப்பதாக கறிப்பிடப்பட்டுள்ளது. நிர்வாக பெயர்கள் மாறினாலும் அவ்வாறே இன்றும் அந்த ஊர்கள் அமைந்திருக்கின்றன.
ஆகையால் வாத்தமானியில் பிரசுரிக்கப்படாத கல்முனை பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படும் கல்முனையின் 14 குறிச்சிகளையும் கல்முனை 3 முதல் கல்முனை 16 வரையும், ஏனைய 4 குறிச்சிகளையும் சேர்த்து 18 குறிச்சிகளையும் நிர்வகிக்க வர்த்தமானி அறிவித்தல் செய்ய கட்டளை பிறப்பிக்கமாறும் வினயமாக வேண்டுகிறேன்.

கல்முனை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்ட எல்லைகளைக்கொண்டு 58 கிராம சேவகர் பகுதிகளும் ஒரு பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்பட்டு கொண்டிருக்கம்போது. 1989.04.12ம் திகதி ஆயுதமுனையில் தமிழ் ஆயுததாரிகாளல் சட்டவிரோதமாக 1992ம் ஆண்டின் 58ம் இலக்க பிரதேச செயலகம் உருவாக்கம் பற்றிய பாராளுமன்ற சட்டம் “அமைச்சரானவர், பெயரையும், எல்லையையும் வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும் எனும் பாராளுமன்ற சட்டத்தை மீறி ஆயுததாரிகளால் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டு தமிழ் செயலகமெனவும், 2018.09.10ம் திகதி ADM/ADMN/AWANB/01 எனும் இலக்கத்தில் மாவட்ட செயலகம், அம்பாரை எனும் கடிதத்தலைப்பில் 1992ம் அண்டின் 58ம் இலக்க பாராளுமன்ற சட்டத்தை கருத்தில் கொள்ளாது அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிகபராக இருந்த கே.விமலநாதன் என்பவர் ஒப்பமிட்டு உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் கல்முனை (தமிழ்) என விலாசமிட்டு “இனிவரும் காலங்களில் உதவி பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு என பயன்படுத்தமாறு தயவுடன் அறியத்தருகிறேன்” எனக்குறிப்பிட்டு அந்த சட்டவிரோத காரியாலயத்தை கல்முனை வடக்கு என பாவிக்கமாறு கட்டளை இட்டதன் மூலம் திரு.கே.விமலநாதன் அவர்கள் 1992ம் ஆண்டின் 58ம் இலக்க பாராளுமன்ற சட்டததை மீறிய குற்றத்தை செய்துள்ளார்.

மேலும், மேற்படி கே.விமலநாதன் அவர்கள் இலங்கையில் எங்குமில்லாதவாறு 2018.08.16ம் திகதிய ADM/ESTB/TRANS/06/02/.04ம் இலக்க அம்பாரை மாவட்டச்செயலக கடிதத்தலைப்பில் மேலதிக அரசாங்க அதிபர் என ஒப்பமிட்டு கல்முனை தெற்கு என ஒரு பிரதேச செயலகத்தை சட்டவிரோதமாக உருவாக்கியுள்ளார்.

மேற்படி கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு ஆகிய சட்டவிரோத செயலகங்களுக்கு கல்முனை வடக்கிற்கு 117 ஆளணியும், கல்முனை தெற்கிற்கு 115 ஆளணியயும் கே.விமலநநதன் தான்தோன்றத்தனதாக உருவாக்கி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அம்பாரை மாவட்ட செயலகத்தினூடாக அனுப்ப, முகாமைத்துவ சேவைகள் திணைக்கள மேலதிக பணிப்பார் நாயகம் எம்.கோபாலரெட்னம் என்பவர் அவைகளை அங்கிகரித்துள்ளார். இதன் மூலம் கல்முனை பிரதேச செயலகத்தில் இரட்டிப்பு நிர்வாகத்தை உருவாக்கி கடந்த 30 வருடங்களாக நாட்டின் பல கோடி ரூபாய் பிழையாக நிதி முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது.

காணாக்குறைக்கு, கல்முனை சட்டவிரோத செயலகத்திற்கு IIIம் தர கணக்காளர் நியமிக்க ஆளணி அனுமதி வேண்டி அம்பாரை மாவட்ட செயலாளரால் வேண்டுதல் விடுக்கப்பட்டு முகாமைத்துவ சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தமறா டீ சில்வா அவர்களும், உள்நாட்டலுவல்கள் அமச்சின் மேலதிக செயலாளர் W.M.A.P.B.வன்னியநாயக்க அவர்களும் HAF-2/8/Accon/05/829ம் இலக்க 11.07.2019, 21.08.2019ம் திகதிகளிலான கடிதங்களின் மூலம் ஆளணி அனுமதி வழங்கியூள்ளார்கள். மேற்படி சட்டவிரோத மோசடி நிர்வாகத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு நாட்டின் பொதுநிர்வாக, பாராளமன்ற சட்டங்களை மீறி தான்தோன்றித்தனமாக செயலபட்டு நாட்டில் இன நல்லுறவை உருவாக்குவதற்கு தடையாகவும், நாட்டின் நிதியையும் மோசடி செயத அதிகாரிகளுக்கு நடவடிக்கை மேற் கொள்ளமாறு வினயமாக வேண்டுகிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

சட்டவிரோத கல்முனை  செயலக நிர்வாக விடயமாக மேன் முறையீட்டு நீதிமன்றில் 300/18 ம் இலக்க வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 3 நிமிட நடை தூரத்துள் ஒரு நிர்வாகம் ஆயுதமுனையில் பலவந்தமாக தப்பாக பிறந்த பிள்ளைக்கு பதிவு வைக்க முனைகிறது. இது நாட்டிற்கு பாரிய சுமையாகவும்,  இன நல்லிணக்கத்திற்கு பாதகமாகவும் இருப்பதனால் நீதிமன்ற தீர்ப்புக்கு தலை சாய்க்குமாறும், அதுவரை எந்த அழுத்தங்களுக்காகவும் ஒரு பிழைக்கு துணை போகாது நீதிக்கு தலைவணங்கமாறும் வினயமான வேண்டுகிறேன்.

நன்றி.

--------------------------------------------------------

அன்புள்ள ஹரிஸ் இந்த விடயத்தை அப்படியே தனிநபர்  பிரேரணையாக பாராளுமன்றில் சமர்ப்பிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு சமர்ப்பிக்கும்போது நீங்கள் 18 வருடம் பாராளுமனறத்தில் இருந்து ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பிராயசித்தமாக இதனை செய்யுமாறு கல்முனை மண்னை எந்த பிரதி உபகாரமுமில்லாது நேசிக்கும் ஒருவன் என்ற வகையில் வினயமாக வேண்டுகிறேன்.

இதை நீங்கள் செய்தால் அதாவுல்லா என்ன, எந்த கொம்பனாலும் கல்முனையை வைத்து அரசியல் சித்து விழையாட முடியாது.

வஸ்ஸலாம்
வெற்றி அல்லது வீர சுவர்க்கம்
ஹாஜி நஸீர் .

மூன்றாக உடைகிறது கல்முனை :

மூன்றாக உடைகிறது கல்முனை : மருதமுனைக்கும் செயலகம் மலர்கிறது - ஹரீஸ் எம்.பி !!

கல்முனை செயலகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மருதமுனை- நற்பட்டிமுனை பிரதேசத்தை இணைத்து மருதமுனை பிரதேச செயலகம் என மூன்று நிர்வாக செயலகங்களாக பிரிக்க கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை விவகாரம் குறித்து தொடர்ந்தும் உள்ளுராட்சி, மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன அவர்களை சந்தித்து வரும் முஸ்லிம், தமிழ் தரப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று உள்நாட்டு அழுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களை அமைச்சில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகிய நானும் ஏ.எல்.எம். நஸீர், எம்.எஸ். தௌபீக், செய்யத் அலீஸாஹிர் மௌலானா ஆகியோர் சந்தித்து பேசினோம்.

கல்முனை பிரதேச செயலக எல்லைப் பிரச்சினையை நீண்ட நேரம் பேசினோம். இங்கு நற்பட்டிமுனை மருதமுனை மக்களின் தேவைகளை உணர்த்தி மருதமுனைக்கான பிரதேச செயலக உருவாக்கத்தின் அவசியம், மற்றும் அது சார்பிலான சாத்தியபாடுகளை தெளிவாக விளக்கி கூறியவுடன் அந்த கோரிக்கையின் தேவையை அமைச்சரும் ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் நிரஞ்சனும் கலந்துகொண்டிருந்தார். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அமைச்சர் வஜிர பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த பிரதேச செயலக பிரச்சினை நிறைவுக்கு வரும் அன்றைய தினத்தில் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக இருக்கும் நகரசபையை உருவாக்குதல் என தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மேலும் விளக்கமளித்தார்.

(நூருள் ஹுதா உமர்)

முஸ்லிம் தலைமைகள் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் ; எம்.எ.சுமந்திரன்.


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் ; எம்.எ.சுமந்திரன்...!!!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம் தலைமைகளுக்கு காத்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக அதன் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அனாவசியமாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம்.

கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினை செய்யவேண்டிய எந்தவித தேவையும் இல்லை.

கல்முனை தெற்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்பு இல்லாததது. இதில் தான் எல்லை நிர்ணயங்கள் செய்தாகவேண்டும். இது அவர்களின் பிரச்சினை, இதனை தீர்க்க தெரிவுக்குழு அமைத்துக்கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் அவர்களின் பிரச்சினை ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் அனாவசியமாக முஸ்லிம் பிரதிநிதிகள் தலையிட்டு தமிழர்களின் பிரச்சினைகளை குழப்புவது கண்டிக்கத்தக்கது.

கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது ஆனால் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டாம் என கூறுவதற்கு அவர்களு எந்த அதிகாரமும் இல்லை.

இந்த விடயத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் நாம் கண்டிப்பாக தெரிவித்து வருகின்றோம்.
எவ்வாறு இருப்பினும் இந்த பிரசினை ஜூன் மாதத்தில் தீர்க்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே எமக்கு வாக்குறுதி கொடுத்தது.

அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த வாரத்தில் இருந்து கணக்காய்வாளர் கல்முனை வடக்கு செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பிப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று “ கல்முனையை” கேட்கின்றான்!

ஏன்? ஏன்? ஏன்?
=============
வை எல் எஸ் ஹமீட்

கல்முனை ( தமிழ்) பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம், ஊள்ளூராட்சிசபை நன்காகப் பிரிப்பு, மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட பிரச்சினைகளை இப்பொழுதாவது முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையாக முன்வைத்து காலக்கெடு விதித்து சாதிக்கவேண்டும்; அல்லது அரசைவிட்டு வெளியேற வேண்டும்; என்கின்ற கோசத்தை ஏன் முஸ்லிம்களால் முன்வைக்க முடியாமல் இருக்கிறது.

முஸ்லிம் கட்சிகளால் முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லையென்றால் எதற்காக அவர்கள் இன்னும் அரசுடன் இருக்கிறார்கள்?

இதை ஏன் முஸ்லிம்கள் கேட்காமல் இருக்கிறார்கள்?

உலமாக்கள் ஏன் உசும்பாமல் இருக்கிறார்கள்?
பள்ளி நிர்வாகங்கள் ஏன் அசமந்தமாக இருக்கிறார்கள்?
புத்திஜீவிகள் ஏன் புதினமாக மௌனம் சாதிக்கிறார்கள்?
சிவில் அமைப்புகள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்?
இளைஞர்கள் ஏன் தூங்குகிறார்கள்?

மொத்த சமூகமும் ஏன் பிரமை பிடித்துப்போய் இருக்கிறது.

இவர்களால் எதுவும் செய்யமுடியாவிட்டால் எதற்காக இவர்கள்?

இவர்களின் சில .........இவர்களை அடிக்கடி முகநூல்களில் பாராட்டுகிறார்களே! எதைச் சாதித்ததற்காக?

இவர்களே கொஞ்சமும் கூச்சமில்லாமல் இந்த அரசு எதையும் செய்துதரவில்லை; என்றும் சிலநேரம் கூறுகிறார்களே! அவ்வாறெனில் இவர்கள் இத்தனை நாளும் ஏன் அரசுடன் இருந்தார்கள்? இனியும் ஏன் இருக்கிறார்கள்?

இதை ஏன் என்று கேட்க நாதியற்ற சமூகமாய் ஏன் என் சமூகம் இருக்கிறது?

எதைச் சாதித்தோம்; என்று சொல்லி அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்?

எதைச் சாதித்தற்காக அடுத்த தேர்தலில் வாக்களிப்பீர்கள்?

அவர்களும் waste...
சமூகமும் waste....

இப்படிப்பட்ட சமூகம் இன்று இந்த நாட்டில் அனுபவிப்பவை நியாயமா? இல்லையா?

நம் தலைவிதியை நாமே மாற்றாமல் இறைவன் மாற்றுவானா?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் கல்முனைத் ( தமிழ்) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது; என்பதை எத்தனைபேர் உணர்ந்திருக்கின்றோம்.

கல்முனையில் பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களின் எதிர்காலம் என்ன?

சிந்திக்க முடியாத சமூகமே!
உன் தலைவிதியை உணரமுடியாத சமூகமே!
ஏமாற்றபடுவதற்கென்றே வாழுகின்ற சமூகமே!
ஏமாறுகின்றபோது மட்டும் ஒரு சிறிய ஓலத்துடன் அமைதியடையும் சமூகமே!

தமிழன் ஒருநாள் தமிழீழம் கேட்டான்!
சமஷ்டி ஆட்சி கேட்டான்!
அதிகாரப்பகிர்வு கேட்டான்!
வட கிழக்கு இணைப்பைக் கேட்டான்!

இன்று அவை அனைத்தையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு “ கல்முனையை” கேட்கின்றான்!

ஏன் என்று சிந்தித்தாயா?
மொத்த TNA யும் இந்த கல்முனை பிரிப்புக்குப் பின்னால் கொத்தாக நிற்கிறதே! ஏன் என்று புரியுமா உனக்கு?

அன்று முஸ்லிம்கள் ஒத்துழைத்திருந்தால்!

தமீழம் பெற்றிருப்பான் தமிழன்!

வட கிழக்கை நிரந்தரமாக இணைத்திருப்பான்!

நூற்றுக்கணக்கில் முஸ்லிம்களை குருவிகளைச் சுடுவதுபோல் பள்ளிவாசலுக்குள்ளும் வெளியிலும்,
இரவிலும் பகலிலும்
கிராமங்களிலும் நகரங்களிலும் என்று சுட்டுத் தள்ளினான். தாங்கினாய்!

உன்னை சுட்டு,  அழிக்கவும் முடியாது; அடிமையாக்கவும் முடியாது; என்பதைப்
புரிந்துகொண்டான்.

உன்னை அடிமையாக்க உன் பொருளாதாரத்தை அழிப்பதே வழி எனப் புரிந்துகொண்டான்.

தெற்கும் கிழக்கும் இணைந்துவிட்டான்.

தெற்கில் உன் சொத்து தொடர் நெருப்பில் வேகுகிறது.

கிழக்கில் தீயிடுவதைவிட, உன் தலைநகரத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தயாராகிவிட்டான்.

உனக்குள் ஏற்பட்டிருக்கும் சில்லறைச் சண்டை- உனக்கு சபையா? எனக்கு சபையா? என்பதை கண்டதும் இவர்கள் பிளவுபட்டிருக்கும்போதே காரியத்தைச் சாதித்துக் கொள்ளவேண்டும்; என கங்கணம் கட்டிக்கொண்டான்.

நீ, உனக்குள் சண்டை பிடிக்க அதில் ஒரு பகுதியை அவன் ஆதரித்தான். அந்தப் பகுதிக்கோ பெரும் சந்தோசம் தமிழனே எங்கள் நியாயத்தைப் புரிந்துகொண்டானென, அவன் ஆதரித்ததன் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல்.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தான். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் குரல்கள் கிழம்பின; பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமென்று.

வரலாற்றில் என்றுமே TNA கல்முனை விடயத்தில் இவ்வளவு முனைப்புக் காட்டியதில்லை. இம்முறை தமிழீழத்திற்காகப் போராடுவதுபோன்று இத்தரமுயர்த்தலுக்காக போராடுகிறார்கள்.

ஒரு பிரதேச செயலகத் தரமுயர்த்தலுக்காக அடுத்த மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்போகிறார்கள்.

உனக்கு அருகருகேயுள்ள இரண்டு ஊர்களில் ஒற்றுமையில்லை. கேவலம். என்ன சமூகம் நீ!

அவன் புரிந்துகொண்டான், இந்தக் கையாலாகத தலைமைத்துவங்கள் இருக்கும்போதே உன்னை அடிமைப் படுத்திவிடவேண்டுமென்று.

பேசத்தெரியாத, பதில் கொடுக்கத் தெரியாத பிரதிநிதித்துவங்கள் இருக்கும்போதே சாதித்துக் கொள்ளவேண்டும்; என்று தீர்மானித்து விட்டான்.

உன் கோழைத் தலைவன் கண்விழிக்க மாட்டானா?

உன் தொடை நடுங்கித் தலைவன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால் ஏன் இந்த அரசில் இருக்கிறாய் என கேட்கமாட்டாயா?

எண்ணவேண்டாம். இப்போராட்டம் கல்முனையுடன் மட்டுப்படுத்தப்படப் போகிறதென்று.

கல்முனை மாநகரை அவன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்து உனக்கு அடிமை விலங்கிட்டால் அது ஆரம்பம் மட்டுமே!

அதன் முடிவு.......?

ஒ முஸ்லிமே!
அன்று “ என் சமூகம் தூங்கிக்கிக் கொண்டிருக்கின்றது; நான் விழித்துக்கொண்டிருக்கின்றேன்” என்றார் காயிமே மில்லத்.

அதைத்தான் மறைந்த உன் தலைவனும் செய்தான். அந்தத்தலைவன் நிரந்தரமாய் தூங்கச் சென்றுவிட்டான்!

நீ இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்காமல் இருக்கிறாயே!

விழித்தெழு!
வீரத்துடன் எழு!
உன் தலைவன் என்பவனிடம் கேள்!
சாதிக்க முடியுமா? முடியாதா? என்று.

முடியாதெனில், மானம், ரோசம், சூடு, சுரணை உன் தலைவனுக்கு இருந்தால் அரசை விட்டு வெளியேறச் சொல்.

அதன் பின் அரசே இல்லை; புரிந்துகொள்.

தங்கத்தட்டில் உன் பிரச்சினைக்குரிய தீர்வுகளை ஏந்திக்கொண்டு வருவான் எதிர்க்கட்சி உன் காலடிகளுக்கு. சாதித்துக்கொள்.

நீ இப்பொழுது சாதிக்கத் தவறினால் வேதனைகள் உனக்கு நியாயமே!
              நியாயமே!

ஓ! முஸ்லிமே!
நானும் உன்னில் ஓர் அங்கம்
அதனால் தாங்கமுடியவில்லை.

எழுந்திடு!!!

முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌மிழ‌ர்க‌ளை க‌ல்முனையின் ஆட்சியாள‌ராக்குவ‌த‌ற்கு முய‌ற்சிக்க‌ப்போகிற‌து.


க‌ல்முனையில் ப‌டு தோல்வியை எதிர் கொண்டுள்ள‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து ஆட்சியை கைப்ப‌ற்ற‌வும் த‌யார் என‌ ர‌வூப் ஹ‌க்கீம் தெரிவித்திருப்ப‌த‌ன் மூல‌ம் க‌ல்முனை முஸ்லிம்க‌ளிட‌மிருந்து ப‌றி போகும் ஆப‌த்து உள்ள‌து என‌ அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் வேட்பாள‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

த‌ன் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ம‌த்தியில் உரையாற்றும் போது அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து

நேற்று வ‌ரை க‌ல்முனையை த‌மிழ‌ர் பிடித்து விடுவார்க‌ள் என்ப‌தால் மு. காவுக்கு வாக்க‌ளிக்க‌ வேண்டும் என‌ இன‌வாத‌த்தை கிள‌ப்பி ஆட்சியை கைப்ப‌ற்றிய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌ற்போது த‌மிழ‌ர்க‌ளை க‌ல்முனையின் ஆட்சியாள‌ராக்குவ‌த‌ற்கு  முய‌ற்சிக்க‌ப்போகிற‌து.

உண்மையில் த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் முஸ்லிம்க‌ளுக்குமிடையில் ஒற்றுமையை உருவாக்கும் நோக்க‌ம் மு. காவுக்கு இருந்திருந்தால் அக்க‌ட்சியியும் த‌மிழ் கூட்ட‌மைப்பும் இணைந்து ஒரு கூட்ட‌மைப்பாக‌ பொதுச்சின்ன‌த்தில் போட்டியிட்டிருக்க‌லாம். அத‌னை நாமும் வ‌ர‌வேற்றிருப்போம்.
ஆனால் ம‌க்க‌ளால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ பின் த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து க‌ல்முனையின் அதிகார‌த்தை பெறுவ‌து க‌ல்முனை முஸ்லிம்க‌ளை நிர‌ந்த‌ர‌ அடிமைக‌ளாக்கி விடும்.

உள்ளூராட்சி ச‌பையில் மேய‌ர் அல்ல‌து த‌லைவ‌ரை நிய‌மிக்கும் அதிகார‌ம் க‌ட்சித்த‌லைவ‌ருக்கும் செய‌லாள‌ருக்குமே உண்டு.
க‌ல்முனையில் முஸ்லிம் காங்கிர‌ஸ் யானையில் கேட்கிற‌து. யானையின் த‌லைவ‌ர் ர‌ணில் விக்கிர‌ம‌சிங்க‌. ஹ‌க்கீம் சொல்வ‌து போல் க‌ல்முனையில் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து ஆட்சியை அமைத்தால் யாரை மேய‌ராக‌ நிய‌மிப்ப‌து என்ற‌ அதிகார‌ம் ர‌ணிலிட‌மே உண்டு. ரணிலை பொறுத்த‌வ‌ரை த‌மிழ் கூட்ட‌மைப்புக்கே முன்னுரிமை கொடுப்ப‌வ‌ர். ஹ‌க்கீமையும் முஸ்லிம் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ளையும் ந‌க்குத்திண்ண‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளாக‌  பார்ப்ப‌வ‌ர்.  அத்துட‌ன் ர‌ணிலை எதிர்த்து பேசும் தைரிய‌ம் ஹ‌க்கீமுக்கு அற‌வே இல்லை என்ப‌து மாய‌க்க‌ல்லி ம‌லை சிலை மூல‌ம் தெரிந்த‌து.

மேய‌ரை நிய‌மிக்கும் அதிகார‌ம் கூட‌ த‌ற்றுணிவாக‌ ச‌பைக்கு இல்லை. அப்ப‌டியிருந்திருந்தால் க‌ட‌ந்த‌ மாந‌க‌ர‌ச‌பையில் மேய‌ர் பிர‌ச்சினை வ‌ந்திருக்காது.

இவ்வாறான‌ நிலையில் க‌ல்முனையின் மேய‌ராக‌ த‌மிழ‌ர் ஒருவ‌ரை நிய‌மித்தாலேயே க‌ல்முனையில் யானையின் ஆட்சியை கொண்டு வ‌ர‌ உத‌வ‌ முடியும் என்றே த‌மிழ் கூட்ட‌மைப்பு சொன்னால் ர‌ணில் நிச்ச‌ய‌ம் அத‌னை ஏற்றுக்கொள்வார். ஹ‌க்கீமும் இத‌னை ஏற்று ச‌ர‌ண‌டைந்து விட்டு க‌ல்முனை முஸ்லிம்க‌ளிட‌ம் வ‌ந்து சொல்வார் ஆயிர‌த்தி இர‌ண்டாவ‌து த‌ட‌வையாக‌ முட்டாளாகி விட்டேன் என‌. அத‌ன் பின் க‌ல்முனை முஸ்லிம்க‌ளின் நிலை என்ன‌ என்ப‌தை நாம் இன்றே சிந்திக்காவிட்டால் க‌ல்முனை பாரிய‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளுக்கு முக‌ம் கொடுக்க‌ வேண்டி வ‌ரும் என்ப‌தை இப்போதே எச்ச‌ரிக்கிறோம். க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நாம் சொன்ன‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் ய‌தார்த்த‌மாகியுள்ள‌து என்ப‌தை ம‌க்க‌ள் அறிவ‌ர்.

இத்த‌கைய‌ நிலையை த‌விர்க்க‌ வேண்டுமாயின் க‌ல்முனை முஸ்லிம்க‌ள் அனைவ‌ரும் யானைக்கு வாக்க‌ளிக்காது இன்றைய‌ நிலையில் பெரு வெற்றியை பெறும் நிலையில் உள்ள‌ அ.இ.ம‌. காங்கிர‌சின் ம‌யில் சின்ன‌த்துக்கு வாக்க‌ளித்து க‌ல்முனையின் ஆட்சியை த‌மிழ் கூட்ட‌மைப்பிட‌ம் கொடுக்க‌ முய‌லும் முஸ்லிம் காங்கிர‌சுக்கு பாட‌ம் ப‌டிப்பிக்க‌ எம்முட‌ன் ஒன்றிணைய‌ வேண்டும். 

கல்முனைத் தமிழர்கள் கட்சிகளை தவிர்த்து ஒரணியில் போட்டியிட ஆயத்தம்;

கல்முனைத் தமிழர்கள் கட்சிகளை தவிர்த்து ஒரணியில் போட்டியிட ஆயத்தம்;
தமிழர் மகாசபையின் ஏற்பாட்டில் சனிக்கிழமை கூட்டம்!

கல்முனை பிரதேச தமிழர்கள், அரசியல் கட்சிகளை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையாக ஒரு அணியில் மட்டும் கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை, கல்முனை தமிழர்களால் பரவலாக முன்வைக்கப்படுவதனால், அவ்வாறான ஒரு பொதுத் தீர்மானத்தை கூடி ஆராய்து எடுப்பதற்காக கல்முனை தமிழர் மகாசபையின் ஏற்பாட்டில், நாளை மறுதினம் சனிக்கிழமை (09) பி.ப 3.00 மணிக்கு கல்முனை 01 கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது.

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழரின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் தமிழர்களின் ஆசனங்களை காப்பாற்றவேண்டியதன் முக்கியத்துவம் கருதியும், தமிழ் கட்சிகளிடையே ஆசனப்பங்கீடுகள் தொடர்பாக முரண்பாடுகள் நிலவுவதாலும், பல கோணங்களில் கல்முனை பிரதேச தமிழர் வாக்குகள் சிதறடிக்க மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்கள் என்பவற்றின் மத்தியில் காலத்தின் தேவை கருதி கட்சிகளுக்கப்பால் அனைவரும் ஒரணியில் போட்டியிட வேண்டும் என்பதையே கல்முனை பிரதேச தமிழர்கள் தற்போது எதிர்பார்க்கின்றார்கள்.

இதனடிப்படையிலேயே கல்முனை பிரதேச அனைத்து தமிழ் கிராம மக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து இத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வேட்பாளர் தெரிவு எவ்வாறு அமைய வேண்டும் என்ற பல விடயங்களை பொதுமக்களின் கருத்துக்களுடன் ஆராய்ந்து, மக்களின் ஒருமித்த தீர்மானத்தின்படி முடிவுகளை எடுப்பதற்காக இக் கூட்டம், கல்முனை தமிழர் மகா சபையினால் நடாத்தப்படவுள்ளது.

Saha Devaraja

கல்முனை தமிழர்களின் பூர்வீக தாயகம், 3 ஆக பிரிக்க முடியாது -

கல்முனை தமிழர்களின் பூர்வீக தாயகம், 3 ஆக பிரிக்க முடியாது - கோடீஸ்வரன் Mp

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது தோன்றி மறைகின்றபோதும் தற்காலத்தில் அது வலுப்பெற்று வருவதை நாம் அறிகின்றோம். இச்செயற்பாடானது இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மையை ஏற்படுத்தி இனமுறுகலை தோற்றுவிக்க வாய்ப்பளிப்பதையும் உணருகின்றோம்.இதற்கிடையே சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கான தனியான பிரதேச சபையை உருவாக்கித்தருமாறு பல காலமாக போராடுகின்றமையும் அப்போராட்டமானது அரசியல் தலையீடுகள் காரணமாக வெற்றி பெறாமல் உள்ளதையும் நாம் அறிவோம்.

இந்த நிலையில் கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டும் எனவும் சில அரசியல்வாதிகள் கூறி வருவதும் அதனை கல்முனை வாழ் தமிழ்மக்கள் பலமாக எதிர்த்து வருகின்றமையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இச்சந்தர்ப்பத்தில் கல்முனை மண்ணிண் நிலை தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நேர்காணலின் போது இவ்வாறு தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

கேள்வி-: கல்முனை தொடர்பான உங்களது கருத்து என்ன?

பதில்: -கல்முனை நகரம் தமிழர்களின் பூர்வீக தாயகம். நூறு வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசம். ஒரு காலகட்டத்தில் 92வீதம் தமிழர்களும் 5வீதம் சிங்களவர்களும், 3வீதம் முஸ்லிம்களும் வாழ்ந்த பிரதேசம். ஆனால் இன்று இப்பிரதேசத்தில் 82வீதமான தமிழர்களே வாழ்கின்றனர்.

கடந்த கால திட்டமிடப்பட்ட செயற்பாடே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக சுனாமியின் பின்னர் குடியேற்றப்பட்ட இஸ்லாமபாத் எனும் கிறவல் குளியாக இருந்த பிரதேசம் இதற்கு சிறந்த உதாரணம்.அது மாத்திரமன்றி கல்முனைக்குடி, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான ஆதாரங்களாக தற்போதைய பாலிகா பாடசாலையை கூறலாம். 1946ஆம் ஆண்டளவில் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையாக இருந்த இந்த பாடசாலை இன்று பாலிகாவாக மாற்றப்பட்டுள்ளது.இப்பாடசாலையில் பெருமளவிலான தமிழ் மாணவர்கள் கல்வி கற்றதுடன் குறித்த பிரதேசத்தில் வாழ்ந்தும் உள்ளனர். இதற்கு மேலாக ஐயனார், பிள்ளையார், அம்மன், விஷ்ணு என நான்கிற்கு மேற்பட்ட ஆலயங்களும் இப்பகுதியில் இருந்துள்ளதுடன் கல்முனைக்குடியில் இருந்த இந்து மயானமும் சான்று பகர்கின்றன.இவையெல்லாம் இன்று அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் வாழும் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டுள்ளது. யுத்தகாலத்தை பயன்படுத்தி தமிழர்களின் எல்லையும் மாற்றப்பட்டுள்ளது.

கேள்வி- கல்முனைக்கும் கல்முனைக்குடிக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

பதில்- கல்முனை வேறு. கல்முனைகுடி வேறு. ஆனால் இன்று இரண்டும் ஒன்றென சொல்கின்றார்கள். கல்முனைக் குடியில் பிறந்தவர்களின் பிறப்பு சான்றிதழ், காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களில் இடத்தின் பெயர் கல்முனை குடி என்றே குறிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் பிறந்த அமைச்சர் ஒருவரின் பிறப்பு பதிவிலும் அவ்வாறுதான் இருக்கும் என நான் நினைக்கின்றேன். கல்முனையை கபளீகரம் செய்வதற்காகவே இவ்வாறு தங்களது பிறந்த இடத்தின் பெயரை மாற்ற எத்தனிக்கின்றனர் எனவும் கருதுகின்றேன். அத்தோடு கடந்த காலத்தில் கல்முனைக்குடி என பெயரிடப்பட்டு வீதி அருகில் நடப்பட்டிருந்த பெயர்ப்பலகை கல்முனை என மாற்றம் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கேள்வி-: அப்படியானால் கல்முனையில் வாழுகின்ற முஸ்லிம் மக்களை பற்றி....?

பதில்-: கல்முனை குடியிருப்பாளர்கள் தமிழர்களே. கல்முனை மத்தியில் வியாபார நடவடிக்கையிலேயே முஸ்லிம்கள். ஈடுபடுகின்றனர். அதிலும், இந்தியாவில் இருந்து வருகை தந்த முஸ்லிம் மக்களே அதிகம். அவர்களும் வாடகைக்காக அமர்த்தப்பட்டவர்கள். மெதடிஸ்த திருச்சபையால் வழங்கப்பட்ட காணிகளிலேயே இவர்கள் வியாபார நிலையங்களை அமைத்தனர். ஆனால் காலப்போக்கில் தங்களது உடமையாக மாற்றி கொண்டனர்.அக்காணிகள் யாவும் அரசகாணிகள். 1956 தொடக்கம் 1975 வரையான காலப்பகுதியில் அரசகாணியாக பராமரிக்கப்பட்டு வந்தவை. அவ்வாறான அரசகாணிகள் மற்றும் அருகில் இருந்த நீர்ப்பாசன குளங்களை அபகரித்து நிரப்பியே இவர்கள் வியாபார நிலையங்களை அமைத்துக் கொண்டனர். ஆனாலும் இங்கு அவர்களது வியாபார நிலையங்கள் மட்டுமே உள்ளது. மக்கள் இல்லை.

கேள்வி- ஆனாலும் இன்று அவர்கள் கல்முனை நகரை கேட்பதாக கூறப்படுகின்றதே....?

பதில்-: வியாபார நோக்கத்திற்காக வந்தவர்கள் நகரத்தை கேட்பது எந்த வகையில் நியாயம் என நீங்கள் நினைக்கின்றீர்கள். இதுபோன்ற விடயங்கள் நாட்டின் பல சிங்கள பகுதிகளில் ஏற்பட்டது. ஆனாலும் சிங்கள மக்கள் யாராவது கொடுத்தார்களா? அப்படி இருக்கும்போது கல்முனை நகரை நாம் எப்படி விட்டுக்கொடுப்பது.

கேள்வி-: சரி. சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்: சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது. அதற்கு நாங்கள் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியாது. மாறாக அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றோம். ஏனெனில் சனத்தொகையாலும், அறிவாற்றல் மிகுந்த மக்கள் வாழும் பிரதேசமாக உள்ளமையினாலும் அவர்களுக்கென பிரதேச சபை உருவாக்குவது சிறந்தது. அதன் மூலம் அவர்களது பிரதேசம் வளம் பெறும்.

கேள்வி-: சாய்ந்தமருது பிரதேச சபை உருவாகுவதால் அந்த மக்கள் வளம் பெறுவதாக நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படி பிரிவதனால் கல்முனை முஸ்லிம் மக்களின் பலம் குறைவடைவதாக கூறுகின்றார்களே....?

பதில்: - இது அப்பட்டமான பொய். சில அரசியல்வாதிகள் தங்களது இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூறப்படும் மாயை. சாய்ந்தமருது மண்ணில் உள்ள கல்வி அறிவு மிகுந்தவர்களின் திறமையினால் அந்த மண் வளம் பெற்று விடும். கல்முனைக்குடிக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் வித்தியாசம் தோன்றும். இவையனைத்தும் இடம்பெறாமலிருப்பதற்கே இந்த நாடகம். அதேவேளை கல்முனை மாநகர சபையில் தற்போது 68வீதம் முஸ்லிம்களும் 32வீதம் தமிழர்களும் உள்ளனர். சாய்ந்தமருதை பிரிப்பதனால் 60வீதமும் 40வீதமுமாக மாறும். இதனால் கல்முனை மாநகர சபைக்குட்ட முஸ்லிம் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

கேள்வி-: கல்முனையை நான்காக பிரிப்போம் என ஒரு அரசியல்வாதி குறிப்பிட்டார். அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: - இது தமிழர்களை கொத்தடிமையாக்கும் வேலைத்திட்டம். கல்முனையில் ஒற்றுமையாக வாழும் தமிழ் மக்களை பிரித்தாளும் தந்திரோபாயம். கல்முனையை நான்காக பிரித்தால் எந்த பிரிவிலும் தமிழர்கள் பெரும்பான்மை பெற முடியாததுடன் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும். இதன் மூலம் தமிழர்களின் நிலங்களை இலகுவாக அபகரிக்கலாம். தங்களது கட்டுப்பாட்டில் தமிழர்களை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் தங்களது அரசியலை பலப்படுத்தலாம் என சிலர் கனவு காண்கின்றனர்.மேலும் இதன் மூலம் இனமுறுகல் வலுவடையும். அதனை பயன்படுத்தி தமது அரசியலை இலகுவாக முன்னெடுக்க முடியும் எனவும் நினைக்கின்றனர்.

கேள்வி-: இது ஒரு புறம் இருக்க, கல்முனை தமிழ் மக்கள் எதனை விரும்புகின்றனர்?

பதில்: - இரண்டு கோரிக்கையினை அவர்கள் முன்வைத்துள்ளனர். முதலாவது கல்முனை வடக்கு நகர சபை ஒன்றினை உருவாக்குதல். அதாவது கல்முனை பிரதேசத்தின் தெற்கேயுள்ள தரவைப்பிள்ளையார் ஆலயத்தையும், வடக்கே பெரியநீலாவணை கிராமத்தையும் மேற்கே சேனைக்குடியிருப்பையும் மையமாக வைத்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளடங்கியதான நகர சபை ஒன்றினை புதிதாக உருவாக்குவதுடன் கல்முனைக்குடியையும் சாய்ந்தமருதையும் இணைத்து மற்றுமொரு நகரசபையை உருவாக்குதே அவர்களது விருப்பம். இரண்டாவது தேர்வாக, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களை எத்தனையாக பிரித்தாலும் பரவாயில்லை. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை மையப்படுத்திய தமிழர்கள் வாழும் பிரதேசங்களை நிலத்தொடர்புடன் இணைத்து நகர சபையை உருவாக்க வேண்டும். இதுவே நல்லாட்சி தமிழர்களுக்கு செய்யும் ஊசிதமான நடவடிக்கையாகும். இதன் மூலம் நாட்டிற்கு நன்மை பெறக்கூடிய உச்ச அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கும் வாய்ப்பும் கல்முனை தமிழ் மக்களுக்கு ஏற்படும்.

கேள்வி-: இந்நிலையில் தமிழ் மக்களுடனான உறவு எவ்வாறு அமையும் என கருதுகின்றீர்கள்?

பதில்-: இங்குள்ள சில அரசியல்வாதிகள் மாற்று இனத்திற்கு மட்டுமல்ல தங்களது இனத்திற்குள்ளும் எதனையும் பங்கிடக்கூடாது என நினைக்கின்றார்கள். இவர்கள்தான் இன்றுவரை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவிடாது தடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதால் முஸ்லிம் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கத்துடன் இணைந்து தடுத்து வருகின்றனர். எப்படியானாலும், தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கக்கூடாது என்பதையே இவர்கள் விரும்புகின்றனர். அத்தோடு கல்முனையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புக்களால் அண்மையில் கொடுக்கப்பட்டுள்ள புதிதாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரம் உயர்த்தல் தொடர்பான திட்ட முன் மொழிவுகளில் கூட திரிபுபடுத்தப்பட்ட இனவாதத்தை ஒட்டுமொத்தமாக கக்கிய விடயங்களே உள்வாங்கப்பட்டுள்ளன.

கேள்வி: இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் யாரும் உங்களுடன் தொடர்பு கொண்டார்களா?

பதில்-: ஆம். அமைச்சர் றிசாட் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் தொடர்பு கொண்டு சாய்ந்தமருது பிரதேச சபையை பிரிப்பது தொடர்பில் ஆட்சேபனை உள்ளதா? ஏன வினவினர். இவ்விடயம் தொடர்பில் தமிழர்களுக்கோ எனக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என பாராளுமன்றத்திலும் கூறியுள்ளதாக தெரிவித்தேன்.

கேள்வி: - இது தொடர்பில் யாராவது பேசுவதற்கு அழைத்தால் நீங்கள் செல்ல தயாரா?

பதில்-: நிச்சயமாக செல்வேன். பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்வேன். ஆனாலும் தமிழர்களுக்கு எதிரான பாதிப்பான நியாயமற்ற எந்த விடயத்திற்கும் துணைபோக மாட்டேன். அதற்கெதிராக போராடுவேன் என பகிரங்கமாக தெரிவிக்கின்றேன். அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் நான் அல்ல என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

வி. சுகிர்தகுமார் 

சாய்ந்தமருது பிரிந்தால் முஸ்லிம்கள் 60% உம் தமிழர்கள் 40ம% உம் ஆக்கப்படுவர்.

முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம் - குஞ்சித்தம்பி ஏகாம்பரம்

இழந்தவைகள் இழந்தவைகளாக இருக்கட்டும். இருப்பவைகளையாவது எமது சந்ததியின​ரை காப்பாற்ற வேண்டும். இதனால் நடந்தவைகளை மறந்து இரு சமூகங்களும் இணைந்து வாழவே விரும்புகிறோம். கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள். ஆனால் எதையும் இழந்து வாழ விரும்பவில்லை. இவ்வாறு கூறுகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம். கல்முனையின் இன்றைய சமகால நிலைவரம் மீண்டும் முறுகல்நிலைக்கு இட்டுச்செல்வதாக தெரிகிறது. இது தொடர்பில் இரு சமூகங்களிலும் சாத்வீகவாதி எனப்பெயரெடுத்த அவரது கருத்துக்களைக் கேட்டபோது...

கல்முனை வரலாறு

கரவாகுப்பற்றின் எல்லை தெற்கே மாளிகைக்காட்டு வீதியையும் வடக்கே கோட்டைக்கல்லாறையும் கொண்டுள்ளது. இதில் கல்முனை அதிகாரமுடைய மூன்று குறிச்சிகளாகவும் இதற்குரிய கிராம தலைவர்கள் தமிழர்களாகவுமே இருந்தனர்.இதன் எல்லை வடக்கே பாண்டிருப்பு- கல்முனை எல்லை வீதியையும் தெற்கே தரவைக் கோயில் வீதியையும் உள்ளடக்கியது. இவ்வெல்லையிலிருந்து தெற்கே கல்முனைக்குடியில் அதிகாரங் கொண்ட ஐந்து குறிச்சிகளில் முஸ்லிம்கள் கிராமத் தலைவர்களாக இருந்தார்கள்.

கல்முனை சுகாதார சபையாய், உள்ளூராட்சி சபையாய் இருந்து பட்டின சபையாய் மாற்றமடைய வேண்டுமென்ற நோக்கோடு கல்முனைக்குடியையும் இணைக்க வேண்டுமென்ற நோக்குடைய முஸ்லிம் தலைவரொருவர் எடுத்த முயற்சிக்கு கல்முனையின் வடபுறம் தமிழர்களை உள்ளடக்கிய பாண்டிருப்பையும் சேர்க்க வேண்டுமென்ற நியாயமான கருத்தை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் தலைவர் பிரித்தானிய ஆட்சி தலைவரை அணுகி இதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென்ற யோசனையை முன்வைத்த போது முஸ்லிம் தலைவரால் ஒரு தமிழ்க் கல்விமானின் பெயர் குறிப்பிடப்பட்டு தனியான ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் தமிழர்களின் பிற்கால நலன் கருதாது கல்முனையுடன் கல்முனைக்குடியையும் இணைத்து பட்டின சபைக்கு அங்கீகாரம் அளித்தார்.

இதன் பிரகாரம் கல்முனை தமிழ் கிராமத் தலைவர்கள் அடங்கிய மூன்று குறிச்சிகளையும் கல்முனைக்குடியின் முஸ்லிம் கிராமத் தலைவர்கள் அடங்கிய ஐந்து குறிச்சிகளையும் உள்ளடக்கிய பட்டின சபையில் மூன்று தமிழர்களும் ஐந்து முஸ்லிம்களையும் கொண்ட எட்டு வட்டாரங்கள் அமைய வேண்டிய நிலையில் வஞ்சக ஆசை வலையில் அகப்பட்ட தமிழ்க் கல்விமான் தமிழர்களிற்கு துரோகம் விளைவித்து தமிழ்க் குறிச்சிகளில் ஒன்றான தமிழர்கள் வாழும் மூன்றாம் குறிச்சியை மாரியார் வீதியிலிருந்து இரண்டாகப் பிரித்து வடபுறமுள்ள இரண்டாம் குறிச்சி தமிழர்களுடன் இரண்டாம் வட்டாரமாகவும் தெற்கே கல்முனைக்குடி முஸ்லிம் கிராமத்தலைவர் பகுதியுடன் இணைத்து மூன்றாம் வட்டாரமாகவும் பிரித்ததனால் ஏழு வட்டாரங்களாக்கப்பட்டது.

இதனால் தமிழர்கள் மூன்று பேர் வரவேண்டிய இடத்தில் இரண்டு அங்கத்தவர்கள் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து முஸ்லிம் சகோதரர்களே தலைவர்களாக வரும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்ப் பிரிவிற்குள் அரச காணிகளும் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரிய சந்தாங்கேணி குளம், தாழையடிக் குளம் போன்ற வளங்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தது.

1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டம் உருவாகிய போது கரவாகுப்பற்றுடன் கோட்டைக் கல்லாறு பெரிய கல்லாறு, துறைநீலாவணை ஆகிய கிராமங்கள் கல்முனைத் தொகுதியுடன் இணைந்திருந்தன. இக்கிராமங்களில் இருந்தவர்கள் 100% தமிழர்கள் ஆவர். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடந்திருப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழரொருவர் வந்திருப்பார்.

இதனை விரும்பாத முஸ்லிம் தலைவர் கரவாகுப்பற்றுடன் இணைந்திருந்த கோட்டைக் கல்லாறு, பெரிய கல்லாறு, துறைநீலாவணை ஆகிய கிராமங்களை பட்டிருப்புத் தொகுதியுடன் சேர்ப்பதற்கு பட்டிருப்பு தொகுதியை சேர்ந்த தமிழ் அரசியல் தலைவரும் கல்விமானுமாகிய ஒருவரை அணுகினார். இதனால் தனக்கு அதிக பலன் இருப்பதாக கருதிய தமிழ்த் தலைவர் இதற்கு சம்மதித்தார். இதன் காரணமாக கல்முனையில் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழரொருவர் வரும் வாய்ப்பு இழக்கப்பட்டது.

பட்டினசபைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம்களாக இருந்தமையால் தமிழ் பிரதேசத்திலுள்ள அரச காணிகள், நீர்ப்பாசன குளங்கள் ஆகிய வளங்கள் அனைத்தும் வியாபார நோக்கத்திற்காகவும் அத்துமீறிய குடியேற்றத்திற்காகவும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதனால் தமிழர்களின் இருப்புகளில் பாதிப்பு ஏற்பட தொடங்கியது. 1967 இல் திட்டமிட்டு கல்முனை முதலாம் குறிச்சியில் தமிழர் பகுதியில் முஸ்லிம்கள் தென்னை, வாழை போன்ற மரங்களை நட்டு அத்துமீறி கொட்டில்களும் அமைத்ததனால் இரு சமூகங்களுக்குமிடையில் குழப்பநிலை ஏற்பட்டு இதனால் கல்முனை மூன்றாம் குறிச்சியில் சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு தமிழர்கள் பெரும் இழப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் உந்துசக்தியாக இருந்தனர்.

1986 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக கல்முனையில் நடந்த இனக்கலவரத்தினால் கல்முனை மூன்றாம் குறிச்சியும் கல்முனை இரண்டாம் குறிச்சியின் சிறு பகுதியும் தீக்கிரையாக்கப்பட்டு வீடுகளும் சூறையாடப்பட்டது. அத்துடன் ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயம், கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம் என்பன தரைமட்டமாக்கப்பட்டன. மக்கள் அஞ்சி கிராமத்தை விட்டு வெளியேறி அகதிகளாக அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.

2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கென வெளிநாட்டிலுள்ள பெரும் தனவந்தராகிய இராசரெட்ணம் அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த திருமதி பேரியல் அஷ்ரபிடம் தொடர்மாடி வதிவிட வீடுகள் கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

உரிய தொடர்மாடி வீடுகள் கல்முனை முதலாம் குறிச்சியில் கட்டப்பட்டது. கட்டி முடிவடைந்தததும் இவ்வீடுகள் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களை சமனாக சென்றடைய வேண்டுமென்பதே அவருடைய வேண்டுகோள். ஆனால் ஒரே இரவில் அத்தனை வீடுகளும் முஸ்லிம் மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது.

கல்முனை பட்டின சபையாய் இருந்த காலந்தொட்டு மாநகர சபையாக இருக்கும் காலம் வரை அபிவிருத்திகளில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு மாற்றாந்தாய் மனப்பாங்குடனே நடத்தப்பட்டு வருகின்றன.
சமீப காலமாய் கல்முனையின் பூர்வீகம் தெரியாதவர்கள் பூர்வீகவாழ் தமிழர்களை புறந்தள்ளி கல்முனை முஸ்லிம்களின் பிரதேசம், இதயம், முகவெற்றிலை, தலைநகர் என்று பத்திரிகை மகாநாடுகளை நடாத்தி பிரகடனப்படுத்தியுள்ளனர்.

பூர்வீக வதிவிடம் கல்முனைக்குடி என்பதை மறைத்து கல்முனை தான் தாயகம் என்ற தொனியில் பேசுகிறார்கள். இதன் மர்மம் என்ன? கல்முனைக்குடியின் மக்கள் தொகையையும் வளங்களையும் இணைத்து கல்முனை எங்களுடையது என்பதை நிலைநிறுத்துவதற்காக வேண்டித்தான் இந்த நெருக்குவாரங்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய கலாசாரம் ஒன்றை ஏற்படுத்த தமிழர்கள் முனைவார்கள் எனின் குரோத மனப்பான்மையுடன் செயல்படுபவர்களே அவர்களின் பின் சந்ததியினருக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனை மிக வேதனையுடன் அறியத்தருகின்றேன்.

கல்முனைக்குடி எனும் பெயர் ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறது. இதனை வதிவிட நிலங்களின் உறுதிகளில் புரட்டிப் பார்க்கலாம். உதாரணமாக 1989 ஆம் ஆண்டு மூன்று பிரிவுகளாக இருந்த கல்முனை பதின்மூன்று பிரிவுகளாகவும் ஐந்து பிரிவுகளாக இருந்த கல்முனைக்குடி பதினான்காகவும் அமையப்பெற்றது. கல்முனை உதவி அரசாங்கப்பிரிவில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கிராமோதய தலைவர்கள் உருவாக்கப்பட்டனர்.

அதில் நீலாவணைக்கு 2, மருதமுனைக்கு 2, பாண்டிருப்புக்கு 2, நற்பட்டிமுனைக்கு 2, கல்முனைக்கு 3, கல்முனைக்குடிக்கு 5, சாய்ந்தமருதுக்கு 4 என வகுக்கப்பட்டது.சாய்ந்தமருது தமிழர்களும் முஸ்லிம்களும் மிக சந்தோசமாக சகோதரர்கள் போல வாழ்ந்து வந்தனர்.

தமிழர்களுக்கு 3 கோயில்களும் மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையொன்றும் மயானமும் தமிழ் குறிச்சி என்ற பெயரில் ஒன்றும் அதற்கென தமிழ் கிராம அதிகாரியொருவரும் கிராம சபை தேர்தலில் இரு தமிழ் பிரதிநிதிகளும் இருந்தனர்.

இந்த நிலையில் 1967 இல் கல்முனையில் ஏற்பட்ட தமிழ்,முஸ்லிம் பிரச்சினையின் எதிரொலியால் உணர்ச்சிவசப்பட்ட சில விஷமிகளால் எடுக்கப்பட்ட சுத்திகரிப்பில் மேற்குறிப்பிட்ட வளங்கள் அத்தனையையும் கைவிட்டு தமது தாயகத்திலிருந்து தமிழர்கள் அனைவரும் படிப்படியாக வெளியேறினர். தமிழர்கள் இருந்தார்கள் என்பதற்கான தடயங்கள் யாவும் அழிக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருது தனியான பிரதேச சபையாய் அமைய வேண்டுமென்ற அவர்களது நியாயமான கோரிக்கையை அவர்களது அரசியல் தலைவர்களும் அங்கீகரித்தனர்.

கல்முனை தற்போது உள்ளவாறு மாநகர சபையாய் இருந்தால் முஸ்லிம்கள் 70% உம் தமிழர்கள் 30ம% உம் இருப்பார்கள். சாய்ந்தமருது பிரிந்தால் முஸ்லிம்கள் 60% உம் தமிழர்கள் 40ம% உம் ஆக்கப்படுவர்.

தப்பித்தவறி தமிழர் ஒருவர் நகரபிதாவாக வந்துவிடுவார் என்ற அச்ச உணர்வு காரணமாக கல்முனைக்குடியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் சாய்ந்தமருது பிரிந்தால் எஞ்சிய பிரதேசங்களை மூன்றாக பிரிக்க வேண்டுமென வாதாடியமையால் தலைமைகட்குள் தளர்ப்பம் ஏற்பட்டு ஏட்டிக்குபோட்டியாய் இரு பிரதேசங்கட்கிடையிலும் கடையடைப்பு வீதித்தடை பேரணிகளை நடாத்தி வருகின்றனர்.

இதில் எப்பகுதியும் தமிழர்களின் ஒத்துழைப்பை நாடவோ அவர்களின் விருப்பை அறியவோ விரும்பாது ஓரங்கட்டும் ஏற்பாடுகளில் இறங்கி உள்ளனர். இதனால் கல்முனையை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களை இறந்தகாலம் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது.

இதனால் பிற்கால சந்ததியினரின் நலன்கருதி சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

குரங்கு அப்பம் பங்கிட்ட கதை




05,06-11-2017ம் திகதிய வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் வெளியாகிய கோடீஸ்வரன் பா.உ., கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், ரெலோ அமைப்பின் உப தலைவருமாகிய ஹென்றி மகேந்திரன் போன்றோர் குரங்கு அப்பம் பங்கிட்ட கதைபோல கல்முனை முஸ்லிம்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

கல்முனை என்பது 1886 ஏப்ரல் 03ம் திகதிய இல:1210 நிலஅளவை படத்தின்படி கல்முனையும் சாய்ந்தமருது கிழக்குமாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தின், கரைவாகு எனும் ஊரின் இரு கிராமங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. The villages Kalmunai and Shanshamarutu of Karaivaku Pattu in the district of Batticaloa Eastern Province இந்த நிலஅளவைபடம் நீர்வழிப்பாதை உள்ள காலத்தில் தயாரிக்கப்பட்டது. இதில் அப்போது கல்முனைக்குடி என்ற பெயர் கிடையாது.
நமது நாட்டின் அரச நிர்வாகம் பொது நிர்வாகம் உள்ளுராட்சி என இரண்டுவகையாக நிர்வகிக்கப்படுகின்றது.

கரைவாகு எனும் ஊரின் உள்ளுராட்சி 1892ல் சுகாதார சபையாக நிர்வகிக்கப்பட்டது 1920ல் உள்ளுர் சபையாக Local Board நிர்வகிக்கப்பட்டது 1946ல் கல்முனை பட்டினசபையானது.
பொது நிர்வாக முறையிலிருந்த வன்னிமை முறை 1946ல் மாற்றப்பட்டு இறைவரி உத்தியோகத்தர் என்ற சுனுழு முறை உருவாக்கப்பட்டது. 1973ல் இதன் காரியாலயம் கல்முனை பட்டினசபை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

1961ல் உருவான அம்பாரை மாவட்டம் மட்டக்களப்பின் தென்பகுதியில் உள்ள கரைவாகுபற்று, அக்கரைப்பற்று, பாணமைபற்று, வேகம்பற்று ஆகிய ஜந்து பற்றுகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. 1946 முதல் 1978 வரை பொது நிர்வாகம் செய்த னுசுழு முறை மாற்றப்பட்டு 1978ல் உதவி அரசாங்க அதபர் எனும் யுபுயு  முறை உருவாக்கப்பட்டது.

1946ல் உள்ளுராட்சியில் கல்முனை பட்டின சபையின் நிர்வாகம் தெற்கே ஷாஹிறா வீதி, வடக்கே தாளவட்டான் வீதிவரை ஏழு வட்டாரங்கள் கல்முனை என பிரிக்கப்பட்டது. இதில் குருந்தயடியை கல்முனை 01 என்பதுபோல கல்முனைக்குடியும் கல்முனை 03 முதல் கல்முனை 07 வரை மொத்தம் 7 வட்டாரங்களில் பிரதிநிதிகள் தெரிவாகி 5 முஸ்லிம்களும், 2 தமிழர்களும் நிர்வாகம் செய்தார்கள்.
1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைச் சட்டடத்திற்கு அமைவாக 1987-12-31ல் மாவட்ட சபைகள் கலைக்கப்பட்டு 1988-01-01ல் கல்முனை பிரதேசசபை உருவாக்கப்பட்டது. அப்போது கல்முனையின் முடிசூடா மன்னனான ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களது அதிகார காலம்.

கல்முனை ஸாஹிறாவில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் சாநய்தமருதை சேர்ந்த சகோதரர்களான வை.எம்.ஹனிபாமாஸ்ட (மன்சூர் அமைச்சரின் பீ.ஆர்.ஓ), கபூர்(தற்போதைய யூ.என.பி. கணக்காளர்), றிப்போடர் ஜூனைட், வாவா மாஸ்டர், மர்ஹூம் ஜப்பார் தபாலதிபர் உட்பட 9பேர்கள் இடம் பெற்றனர். வளம் கொழிக்கும் கல்முனை பட்டினத்தடன் சாநய்தமருது இணைய தயாரா என கேட்டபோது ஏகோபித்து ஆம் என்றனர். மருதமுனை காதர் இப்றாஹீம் சேர், நற்பிட்டிமுனை கபூர் மாஸ்டர் ஆகியோரும் கல்முனையுடன் இணைந்து செயல்பட விரும்பினர்.

ஆதன்காரணமாக 1886 ல் கரைவாக என்ற நிர்வாகத்தில் இருந்து கரைவாகு தெற்கு (சாய்ந்தமருது) கிராமசபை,, கரைவாகு மத்தி (கல்முனை) பட்டினசபை, கரைவாகு மத்தி (நற்பிட்டிமுனை, சேனைக்குடி) கிராமசபை, கரைவாகு வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை) கிராமசபை என்பன ஒன்றாக்கப்பட்டு கல்முனை பிரதேசசபை உருவானது.

1953ல் கல்முனை பட்டினசபையின கட்டுமான பணிகளை தடைசெய்ய தமிழர்கள் பகிரதப் பிரயத்தனம் செய்தனர். 1956ல் கல்முனை கடற்கரைப்பள்ளி மையவாடி மதில்கட்டுதலை தடுக்க போராடினர். 1967ல் கல்முனை வாடிவீட்டை அண்டிய பிரதேசத்தில் சட்டபுர்வமாக அமைந்த 250 முஸ்லிம் குடியேற்றத்தை தீயிட்டுக் கொழுத்தி விரட்டினர்.ஒருமாதகாலம் கலவரம் நீடித்தது. இஸ்லாமாபாத் பாடசாலைக்கு இடம் எடுப்பதில் முட்டுக்கட்டை போட்டனர். 1992ல் இஸ்லாமாவாத் முஸ்லிம் மையவாடி அமைக்கவிடாது தடுத்தனர். இந்த தடைகளையெல்லாம் அப்போதைய சிங்கங்களாக வாழ்ந்த சோரம்போகாத சாணக்கிய அரசியல் தலைவர்கள் போராடி சாதித்தனர். தற்போது 100 வீதம் முஸ்லிம்கள் வாழும் கடற்கரைப்பள்ளி வீதிக்கு பெயர்வைக்க, வரவேற்பு கட்டுமானம் செய்ய முடியாமல சோரம்போய் அசிங்கங்களாக வாழ்கிறார்கள். பொதுவில் முஸ்லிம்கள் என்னசெய்தாலும் அதை தடுப்பது தமிழர்களது பிறவிக்குணம்..
முஸ்லிம்கள் கல்முனையில் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்று கூறுகின்றார்கள். ஒருவர் வசிக்கும் வீட்டில் சமையலறை, உணவறை, படுக்கை அறை, வரவேற்பறை, கழித்தல் அறை என இருப்பதுபோல ஒரு ஊரின் வியாபாரம் செய்யும் இடம் வியாபார நிலையம், விவசாயம் செய்யுமிடம் வயல், மீன் பிடிக்கமிடம் கடல், குடி இருக்கமிடம் குடியிருப்பு. இதன் காரணமாக குடியிருக்கும் இடத்தை குடியிருப்ப என்றும், வியாபாரம் செய்யும் இடத்தை வியாபார நிலையம், சந்தை என்றும், அழைக்கின்றோம். இதில் கொச்சைப்படுவதற்கு ஒன்றமில்லை. கக்குகின்ற சட்டிக்குள் காச்சபவர்களுக்கு இது புரியாது.

குல்முனை இலங்கையின் மூன்றாவது வர்த்தக மையம். குல்முனைமீது தமிழர்கள் கொண்ட காழப்பணாச்சியின் வெளிப்பாடு, கல்முனையை துவமசம் செய்ய வேண்டும் என்பதில் தமிழர்கள் கொண்ட வெறி 1985 முதல் பயங்கரவாத தாக்கதலாக அமைந்தது. 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்பின் இந்தியாவின் கூலிப்படைகளாக , பெம்மைகளாக இயங்கிய பயங்கரவாத இயக்கங்கள் கல்முனைமீது மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் தெழிவுபடுத்துகின்றன.
1986.08.10, 1987 செப்டம்பர், 1987 டிசம்பர், 1988 மார்ச், 1989 ஏப்ரல், 1989 மே என சுமார் ஆறுதரம் பயங்கரவாத தாக்குதல்கள.; மேற்கொள்ளப்பட்டது. 1990ல் புலிகள் முஸ்லிம் தனவந்தர்களை சுற்றிவளைத்து பிடித்து கப்பம்கேட்டனர்.

1987ல் ரெலோ எனும் அப்போதைய பயங்கரவாத இயக்கத்தின் கல்முனை பொறுப்பாளர் ஹென்றி மகேந்திரன் கல்முனை பிரதான வீதியில் பஸ்நிலையத்திற்கு முன் அமைந்த ரெலோ காரியாலயத்திலிருந்து ஆயுதத்துடன் வந்து, மருதமுனையிலிருந்து கல்முனை நோக்கி வந்த மு.கா. தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களை ஆயுதமுனையில் காரைவிட்டு இறங்கச் சொன்னதும் அவரை இறந்கவிடாது நான் இறங்கிச்சென்று ஹென்றியுடன் வாதிட்டவன் என்ற வகையில் நான் அவர்களை நன்கு புரிந்தவன்.

1987ல் தமிழ் முஸ்லிம் உறவின் பாலமாக இருந்த அண்ணன் வேல்முருகு அவர்களை சுட்டுக் கொன்று சவத்தை கடற்கரைப்பள்ளி வீதிக்கு அருகாமையில் போட்டு தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டிய இயக்கத்தினர் கூறுகிறார்கள் கல்முனை தமிழர் வசமாகிவிடுமென்ற இனவாதம் வேண்டாமென்று. ஆடுநனயிதென்று ஓநாய் அழுதகதையாக உள்ளது தம்பி ஹென்றியின் கதை.

ஆண்ட பரம்பரை மீண்டமொரு முறை ஆள நினைப்பதில் தவறென்ன? என்று தமிழீழம் கேட்டதுபோல 1892ல் சுகாதார சபையாக இருந்தது முதல் 1987 வரை தனியாக ஒரு செல்வம் கொழிக்கம் பட்டின சபையாக இருந்த வடக்கே தாளவட்டான வீதி, தெற்கே ஸாஹிறா வீதி வரையான கல்முனைப் பட்டினத்தை கல்முனை முஸ்லிம்கள் இனவாதமற்ற தமிழ் தந்தைக்கும், தமிழ் தாய்க்கும் பிறந்த தூய தமிழனுடன் சேர்ந்து ஆள்வதில், அதை கோரிக்கையாக வைப்பதில் என்ன தவறு இருக்கின்றது.
1987 கலவரத்தின் பின் எனது ஆசிரியர் புலவர்மணி பெரியதமிபி பிள்ளையின் மகன் விஜயரெட்னம் சேர் அவர்கள் கல்முனை பிரதான வீதியில் பெட்டி படக்கைகளை பைசிகலில் வைத்து தள்க்கொண்டு சென்றர். அவரை கண்ட நான் சேர் என்ன இது என்று அன்பாக கேட்டேன். கீழ்சாதிகள் இண உறவுகளை சீரழித்து நிம்மதியை கெடுத்துவிட்டர்கள் நான் எனது தாய்வீட்டுக்கு மண்டுருக்கு போகிறேன் என்றார்.

அன்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வெறுத்து விடுதலைப் புலிகள் காட்டுக்குள் சென்றதும், இந்திய இராணுவத்தின் தயவில் தமிழ் கிராமங்களில் காரியாலயங்களை அமைத்து இயங்கிய ரெலோ, ஈ.பி.ஆர்.எல.எப்., ஈ.என்.டி.எல.எப்., புளட் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தமிழ் மக்களது ஆதரவை பெறுவதற்காக விதைத்த எல்லை சண்டைகள் நிர்வாக சண்டைகளை உருவாக்கி புலி ஆதரவாளர்களாக இருந்த அப்பாவி தமிழர்களை மூளைச்சலவை செய்து தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசியலை செய்ய மேற்கொண்ட கைங்கரியங்கள்தான் இந்த இனப்பூசல்களின் உருவாக்கம். தாங்கள் விரும்பியவாறு தேசதுரோக கோட்பாடுகளை உருவாக்கி கூப்பாடுகள் போட்டு அதை அடையலாம் என்றால் அது ஒருபோதும் நிறைவேறாது.

கல்முனை மூவினத்திற்கும் சொந்தமான பட்டினம். அதை சிதைக்க யாருக்கும் இடம் கொடுக்க முடியாது. கல்முனையில் 1912 முதல் முஸ்லிம்களும், சிங்களவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு காலத்தில் முனையில் சிஙகளவர்களது வாடிகள் இருந்தன. அம்பலத்தடி கோயிலடியில் இருந்த தறமடுவ, அறுனோலிசின் மதுக்கடை, வெலிகம் ஹோட்டல், அம்மன் கோயில் வீதியில் வாழும் சிங்கள் தமிழ் கலப்பு குடும்பங்கள் இவைகள் ஹென்றி மகேந்திரனுக்கு தெரியாத விடயங்களல்ல.

கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள் 7 உறுப்பினர்களை கொண்ட மு.கா. வுக்கு முதலமைச்சரை கொடுத்ததாக எழதியுள்ளார்கள். வடகிழக்கு இணைப்பக்கு தமிழர்கள் செய்த தந்திரம்தான் அது எஎன்பது ஒரு சிறுபிள்ளைக்கம் தெரிந்த உண்மை. கிழக்கு மாகாண சபை கலைவதற்கு முன்  வடகிழக்கு இணைப்பு பற்றி பேசிய ஹக்கீம், சபை கலைந்தபின் சற்று நிதானித்து பேசுவதன்மூலம் புரிகிறது. முஸ்லிம் முதலமைச்சர் இருந்தும் செய்ததுதான் என்ன? கேவலம் 100 வீதம் முஸ்லிம்கள் வாழும் கடற்கரைப்பள்ளி வீதிக்கு பெயர்வைக்க வக்கில்லாத முதலமைச்சரும், மு.கா.கட்சியும், உறுப்பினர்களும். வெறுங்கை முழமளக்குமா?

மாடு வாலை கிழப்பும்போது எங்களுக்கு தெரியும் பேலவா, மறிக்கா என்று. எதிரி நெரங்கினால் கவனமாக இருக்கவேண்டும். ஆடு நனயிதென்ற ஓநாய் அழுவதுபோல சாநய்தமருதுக்கு நீங்கள் வக்கலாத்து வாங்கும்போது எங்களுக்கு தெரியும் உங்கள் உள்நோக்கம்.
1949ல் மர்ஹூம் எம்.எஸ்.காரியப்பர் பா.உ.வாக இருந்தகாலம்முதல் எம.சி.அஹமது, ஏ.ஆர்.மன்சூர், அஸ்ரப் வரை சகலரது நிதி ஒதுக்கிடு;டிலும், முயற்சியிலும் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக கல்முனை பட்டினத்திலுள்ள சகல அரச கட்டிடங்களையும் கொண்டுவந்தார்கள். எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் இதை செய்ய வில்லை.

தமிழர்கள் போராட்டம் எடின்ற பெயரில் றாண்ஸ் போமர்களை தகர்த்து ஊரை இருட்டாக்கியதும், கட்டிடங்களை உடைத்ததும், குண்டவைத்து தகர்த்தும், அதிகாரிகளை குறிப்பாக முஸ்லிம் அதிகாரிகளை சுட்டுக் கொண்றதும்தான் மறைக்க முடியாத உண்மைகள்.

எங்கள் முஸ்லிம் பிரதிநிதிகள் அபிவிருத்தி செய்த பகுதிகளை விட்டு விட்டு எங்களை ஓரம்கட்ட தமிழர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் தவிடுபொடியாக்கப்படும். நீங்கள் எங்களை சீண்டாதிருந்தல் ஈழம் பெற்றிருப்பீர்கள். சுமார் 800 முஸ்லிம் இழைஞர்கள் அப்போது தமிழ் இயக்கங்களில் இருந்தனர். நீங்கள் எப்போது எங்களை சீண்டிநீர்களோ அப்பொது உங்கள் போராட்டம் தோற்றது.
கல்முனையில் ஒரு பிரதேச செயலகத்தில் ஒன்றாக வாழ முடியாது, ஒரு மிருக வைத்திய கந்தோரில் ஒன்றாக வாழ முடியாது., ஒரு கூட்டுறவு கடையில், சுகாதார காரியாலயத்தில், கல்வி காரியாலயத்தில் ஒன்றாக வாழ முடியாது வெட்கம், ரோசம் இருந்தால் இனவாதம் பேசும் கீழ்சாதி தமிழர்களது போக்கை கண்டிக்காமல் சம்சமந்தன் ஜயா, சுமேந்திரன் போன்றோர் வடகிழக்கு இணைப்பக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கவேண்டும்மென்று கூறவார்களா?

கடந்த 30 வருட பயங்கரவாத காலத்தில் ஒரு வெடிச்சத்தத்தைதானம் கேட்காத ஹக்கீம் எதையும்பேசலாம். இரு ஊருக்களுக்குள் எழுந்த பிரச்சினையை சுமூகமாக தீhக்கமுடியாமல் கல்லில் பேண்ட பூனைபேல முழிக்கும்  ஹக்கீமால் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ் தலைவர்கள் அவரை நம்புவது மண்குதிரை நம்பிய கதையாகதான் அமையும். முஸ்லிம்கள் வடகிழக்கு தமிழர்களுடன் வாழந்து பழகியவர்கள். அவர்களிடம் எந்த புச்சாண்டியும் பலிக்காது.

1987க்கு முன் கல்முனை பட்டினம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இருக்க, ஏனைய மூன்று சபைகளையும் வேறாக பிரிப்பதே கல்முனை முஸ்லிம்களின் தாகம்.

நஸீர் ஹாஜி

நான்காக பிரிப்பதில் கல்முனை வாழ் தமிழ் ழ்மக்களுக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை

கல்முனை மாநகரசபை பிரதேசத்தை நான்காக பிரிப்பதில் கல்முனை வாழ் தமிழ் ழ்மக்களுக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை என்று ரெலோ கட்சியின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது திட்டமிட்டு கல்முனை பிரதேச தமிழ்க்கிராமங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் சதி முயற்சியாகும்.

இதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கப்பபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சர் மனோகணேசன் ஆகியோரை இன்று சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கல்முனையை நான்கு உள்ளுராட்சிசபைகளாகப் பிரிப்பது தொடர்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டபோது நாம் பகிரங்கமாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம்.

அது எவ்விதத்திலும் எமக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்.

சாய்நதமருதுக்கு தனியான பிரதேசசபை வழங்கப்படுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. அதற்கு எமது தார்மீக பரிபூரண ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், மிகுதிப்பரப்பை மூன்று துண்டுகளாப பிரிப்பது என்பது தமிழ்மக்களை திட்டமிட்டு பிரிக்கச் செய்யும் சதி முயற்சியாகும்.

அது மாத்திரமல்ல பாரம்பரியமாக கல்முனையில் வாழ்ந்து வரும் தமிழ்மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம் என்றும் ரெலோ கட்சியின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகரத்தினை ஏக காலத்தில் நான்கு உள்ளூராட்சிகளாக உடனடியாக பிரிக்க வேண்டும்


கல்முனை மாநகரத்தினை ஏக காலத்தில் நான்கு உள்ளூராட்சிகளாக உடனடியாக பிரிக்க வேண்டும். கல்முனை மக்கள் பிரகடணம்.

கல்முனை மாநகரத்தின் இருப்பு, நீண்ட கால உள்ளூராட்சி வரலாறு, பிரதேச ஒற்றுமை என்பவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு பக்க நலனை மட்டும் கருத்திற்கொண்டு சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை யாவரும் அறிந்திருப்பீர்கள்.

நீண்ட நெடிய வரலாற்று பூர்வீகத்தினைக் கொண்ட கல்முனையின் இருப்பு, பாதுகாப்பு, அரசியல் மற்றும் நிர்வாகத்தினை பலவீனப்படுத்தும் முயற்சிகளிலிருந்து கல்முனையை பாதுகாக்கும் பொருட்டு 26-10-2017 வியாழக்கிழமை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளத்தின் அழைப்பில் கல்முனை பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடிய பெரும் சபை கீழ்வரும் தீர்மானங்களை ‘அல்லாஹு அக்பர்’ கூறி நிறைவேற்றியது. அல்ஹம்துலில்லாஹ்!

தீர்மானங்கள்;

01. கல்முனை மாநகர சபைப் பிரதேசத்தை 1897ம் ஆண்டு மற்றும் 1936ம் ஆண்டுகளுக்குரிய வர்த்தமானி அறிவித்தல்களின் படி அமைந்த எல்லைகளுக்குரிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக ஏக காலத்தில் பிரித்து வழங்க வேண்டும்.

02. தாளவட்டுவான் வீதி முதல் ஸாகிறா கல்லூரி வீதி வரையிலான எல்லைகளுக்குரிய கல்முனை பட்டிண சபையை மா நகர சபை அந்தஸ்துடன் பிரித்துத்தர வேண்டும்.

03. அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன் மற்றும் பிரதியமைச்சர் எச். எம். எம். ஹரீஸ் ஆகியோரின் உடன்பாட்டுடன் இரு ஊர்ப் பிரதிநிதிகள், கெளரவ பிரதம மந்திரி அவர்களின் பணிப்புரையின் பேரில் கல்முனை மாநகர சபையை நான்காக பிரித்து வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை குறிப்பிட்ட குறுகிய கால எல்லைக்குள் வழங்க வேண்டும்.

04. கல்முனை மா நகர் நாங்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்கப்படும் வரை நடைமுறையிலுள்ள மா நகர சபையிலிரிந்து எந்தவொரு பிரதேச சபையும் பிரிந்து செல்ல அனுமதிக்கக்கூடாது.

05. 26-10-2017ம் திகதி பிரசுரிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பான பத்திரிகை விளம்பரம் குறித்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த பத்திரிகை விளம்பரமானது உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

06. கல்முனை மா நகர சபை பிரதேசத்தை நான்கு உள்ளூராட்சி சபைகளாக ஸ்தாபித்தல் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக்கொள்வதால கூறி காலத்தை இழுத்தடிப்பு செய்யாமல் இப்பிரதேச மக்களின் ஒரே கருத்தான நான்கு உள்ளூராட்சி மன்றங்களை அமைச்சின் தத்துணிவைப் பயன்படுத்தி வர்த்தமானி பிரகடணம் செய்ய வேண்டும்.

07. மேற்கூறப்பட்ட எமது கோரிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாது தட்டிக்கழிக்கப்படும் பட்சத்தில் எமது கல்முனை பிரதேசத்தில் எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுடன் இவ் நடவடிக்கைக்கு ஊர் அரசியல்வாதிகள் கட்டுப்பட வேண்டும் என்று இப் பெரும் சபை தீர்மானிக்கிறது.

- அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம்.
கல்முனை.

உடுத்த சீலையை உரிந்து கொடுத்துவிட்டு கோமணத்துக்கு துண்டுத்துணி தேடுகிறார்கள் கோமாளிகள்.

உடுத்த சீலையை உரிந்து கொடுத்துவிட்டு
கோமணத்துக்கு துண்டுத்துணி தேடுகிறார்கள் கோமாளிகள்.
---------------------------------------------------------------------------------------

அன்று பிரிட்டிஸ் ஆட்சியில் துருக்கித் தொப்பிக்கு வழக்காடி வெற்றிபெற்றது நம் சமுகம் என வீரவரலாறு பேசியவர்கள் நாங்கள். தற்போது இலங்கையில் இருபது இலட்சம் முஸ்லிம்கள் வாள்கின்றோம். 20 தாவது திருத்தம் பாராழுமன்றில் நிறைவேறியது. முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க, பெற்றுத்தரச் சென்ற முஸ்லிம் தலைமைகள், பாரழுமன்ற பிரதிநிதிகள் என்ன செய்துள்ளார்கள்.

எஜமானிய விசுவாசத்தில் கையை உயர்த்திவிட்டு, வீடுகளிலும், டி.வி.யிலும், பத்திரிகையிலம் சமுகம்பற்றி வீறாப்பு பேசுகிறார்கள். ஹிஸ்புல்லாஹ் விட்டில் கூட்டம்போட்டு தவறுக்காக ஒப்பாரி வைக்கிறார். பிரதமர் றணிலின் காரியாலயத்தில் சுமந்திரனும். நோர்வே அதிகாரியும் உருவாக்கியதுதானாம் அந்த 20வது திருத்தச் சட்டம் ? வெட்கம் இருந்தால் கையை உயாத்திவிட்டு இதை சொல்வார்களா?

ஹக்கீம் கழுகு விழுங்கிபோல கையை உயர்த்திவிட்டு சும்மா இருக்கிறார். றிசாட் துணிச்சலானவர், சோரம்போகமாட்டார் என்றுதான் முஸ்லிம் சமுகம் எதிர்பார்த்தது. நல்லது கெட்டா  ---- ம் உதவாது என்றாகிவட்டது.

27.09.2017 தினகரனில் தம்பி ஹரீஸ் 'வடகிழக்கு இணைய விடமாட்டாராம், கல்முனை மாவட்டம் தராட்டி பதவி துறப்பாராம்'. இதெல்லாம் கை உயர்த்துறதுக்கு முன் செய்ய வேண்டிய விடயங்கள். 20 தாவதுக்கு கையை உயர்த்திவிட்டு வந்து விறாப்பு பேசுவது 'உடுத்த சீலையை உரிந்து கொடுத்துவிட்டு கோமணத்துக்கு துண்டுத்துணி தேடுகிறாமாதிரி இருக்கின்றது.

கல்முனை மாவட்டம் ஒரு தேர்தல்கால உண்டியல் அதை கேட்டுக்கேட்டு மக்களுக்கு புளிச்சிப் போச்சி. அந்த கல்முனை மாவட்டம் எடுக்க எத்தனையோ சந்தர்ப்பம் கிடைத்தது. கேட்டோமா? பேற்றோமா?

1989ல் அஷ்ரப் பிரமாதாசாவை ஆதரித்தபோது கேட்டிருக்கலாம் தந்திருப்பார் கோட்டை விடடோம். பிரேமதாசாவின் 'இம்பீச்மன்' நேரம் கேட்டிருக்கலாம் கேட்டோமா? சந்திரிக்காவின் ஆட்சியை ஒரு அங்கத்துவத்தால் பாதுகத்தபோது கேட்டிருக்கலாம் கேட்டோமா? இரவு 11மணி மட்டும் அவவோட பேசிக்கிருந்து விட்டு வீடு வந்தோம், தீகவாப்பிக்கு 10 ஆயிரம் எக்கர் காணி சுவீகரிப்பு பற்றி பாராழுமன்றில் பேசப்பட்டபோது எந்த எதிர்ப்பும் இல்லை  என்று சொன்னோம். கல்முனை மாவட்டம் பற்றிப்பேசவில்லை.

ஹக்கீமின் தலைமையில் கட்சி அகப்பட்டபின் எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தது. பேசினாரா? கேட்டாரா? ஹென்சாட்டில் ஏதாவது ஒரு இடத்தில் கல்முனை மாவட்டம்பற்றி காட்டுங்கள் பார்க்கலாம். தனது செல்வாக்கையும, தனது  ஜ.தே.க.வையம் பாதுகாக்க, பிரதமர் றணிலின் கையை பலப்படுத்த அக்குறணைக்கு மார்க்கட் அபிவிருத்திக்கு 60 கோடி ஒதுக்கியுள்ளார் ஹக்கீம். இலங்கையில் 3ம் தரத்திலுள்ள கல்முனை மார்க்கட் ஒழுகிக் கரைகிறது. இவர்கள் கல்முனை மாவட்டம் பெற்றுதரப் போறார்களாம். வெட்கமில்லை அதை தொடர்ந்து பேச. காகத்தக்கு அது இருந்தால் பறக்கக்க தெரியுமாம்.

முடிந்தால் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி வாக்கைப்பெற பிரதமர் றணிலைக் கொண்டு பிரதேச சபை தருவோம் என்றமாதிரி, பிரதமரையோ, ஜனாதிபதியையோ வைத்து கல்முனை மாவட்டம் தருவேன் என்று சும்மாவாகுதல் சொலலச் சொல்லுங்கள் பார்க்கலாம்? யாரை பூச்சாண்டி காட்டுகிறீர்கள். ஹரீஸின் வலது தோழில் எழுதும் மலக்கின் பட்டியலை பார்த்தால் அதில் கூடுதலாக 'கல்முனை மாவட்டம' என்ற வார்த்தையும் என்னை ஒன்றும் செய்ய தலைவர் விடுகிறார் இல்லை என்ற வார்த்தையும்தான் இருக்கும். அல்லாவுக்காக இனியும் அதை பேசாதீர்கள்.

கல்முனை ஒரு அழகான தாய் அந்த தாயை 17 வருடமாக ஒரு மலடன் திருமணம் செய்து அந்த தாய்க்கு மலடி என்ற நாமத்தை சூட்டிவிட்டான். அவனை வலுகட்டாயமாக தலாக் சொல்லவைத்து. அந்த தாயின் மானத்தை காக்க, வேறு திருமணம் செய்விக்க கல்முனை இளைஞர்கள் துணிந்துவிட்டார்கள். யார் பதவி விலகினாலும் சரி. பதவி விலகாவிட்டாலும் சரி இது அல்லாஹ் உதவியால் நடந்தேதீரும்.

மர்ஹூம் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் கட்டிய கல்முனை மாநகர கட்டிடம் ஒழுகுகின்றது மழைக்கோட்டு சீலை போட்டு மூடியுள்ளோம். கட்டிடம் யார்ர தலையில் விழும் என்று தெரியாதுள்ளது. பிள்ளை சோடடைக்கு சாணை கொஞ்சுற மாதிரி ஏறாவூர் நகரசபை கட்டிட திறப்பு விழாவுக்கு பிரதமருடன் சென்று பார்த்துவிட்டு வந்தோம். வெட்கம் வரல்லியா அதை பார்க்கப்போன நமது அரசில்வாதிகளுக்கு.

முன்பெல்லாம் என்னத்தை எடுத்தலும் அதாவுல்லா விடுறாரில்ல என்று உங்கட ஏலாமையை சமாளித்தீர்கள். அவர் தோத்துபோய் வீட்டில் இருக்கிறார். இப்ப தலைவர் விடுறாரில்ல என்கிறீங்க. அப்ப நாய்க்கேன் தோல் தேங்காய். அதற்கேன் விடிவிளக்கு என்று சும்மாவா சொன்னாங்க.  

நாங்க 'சாணையோட வந்தது சந்தூக்குவரை' என்று வாழ்ந்து முடிச்சிட்டோம். எங்கட சந்ததிகள் எங்களை பார்த்து இதுதானா கல்முனை? என்று கேட்க வைத்துவிடாதீர்கள்.

கல்முனை ஏன் இவ்வளவுக்கு கேவலப்படுகிறது? மக்களே! சிந்தியுங்கள்.

உலகை ஷியோனிசம் சீரழிக்கின்றது.
கல்முனையை "ஹரீஸிஷம்" சீரழிக்கின்றது.

ஹாஜி நஸீர்
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar