BREAKING NEWS
Showing posts with label TNA. Show all posts
Showing posts with label TNA. Show all posts

வ‌ட‌க்கை கிழ‌க்குட‌ன் இணைக்க‌ அஷ்ர‌ஃப் எழுத்துமூல‌ம் கொடுத்தார்.


வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நீதிமன்றத்துக்கு சென்றிருந்த சுமந்திரன் எம்.பியிடம், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடாகும். அந்த ஒப்பந்தத்தில் கூட, மாகாண எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய சபைகள் ஒன்று சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம், வடக்கு, கிழக்கு இணைக்கப்பட முடியும் என்பதற்காகத் தான். இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலும் தெட்டத் தெளிவாக கூறப்பட்டு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்காரணமாகத் தான், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திலும் மாகாணசபை சட்டத்திலும், அதற்கான ஏற்பாடுகள் இருந்தன. தற்காலிகமாக இணைக்கப்பட்டும் இருந்தது. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

2010ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் முன்வைத்து வருகின்ற எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில், வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று தெட்டத் தெளிவாக சொல்லுவதுடன், அந்த இணைப்பு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பூரண சம்மந்ததுடன் இடம்பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றோம். அதற்கும் அடிப்படையான சில காரணங்கள் உண்டு.

இலங்கை தமிழரசுக் கட்சி 1949 டிசெம்பர் 19ஆம் திகதி உருவாக்கப்பட்ட யாப்பிலேயே, முஸ்லிம் மக்களும் ஒரு தேசத்துக்கு உரியவர்கள். அவர்களுக்கும் அந்த அடிப்படையில் சுயநிர்ணய உரித்து உண்டு என்பது எங்களாலே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம்.

ஆகையினாலேயே, வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். மொழி வாரியான ஒரு அலகு உருவாக்கப்பட வேண்டும். தமிழ் பேசுகின்ற மக்களின் பிரதேசம் என்கின்ற ரீதியில் அது செய்யப்பட வேண்டும். ஆனால், அப்படி செய்யப்படுகின்ற போது தங்களுக்கு என்று ஒரு தனித்துவம் கொண்ட முஸ்லிம் மக்களினுடைய சம்மதத்தோடும் சேர்ந்து தான் அது செய்யப்பட வேண்டும்” என்றார்.

இதன்போது, “வடக்கு – கிழக்கை இணைக்க அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளாரே” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “முஸ்லிம் மக்களினுடைய நிலைப்பாடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூற்றினாலே வருவதல்ல. மர்ஹூம் அஷ்ரப் உயிருடன் இருந்த காலத்திலேயே வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் எழுத்து மூல ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த இணக்கப்பாடு, இன்றும் செல்லும் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக எங்களுக்கு வலியுறுத்தி வருகிறது.

அந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே நாங்கள் என்னவிதமாக இந்த இணைப்பை முன்கொண்டு செல்லலாம் என்பதை ஆராய்ந்து வருகின்றோம்.

கடந்த 25 வருடமாக ஏற்பட்ட கசப்பான சில சம்பவங்களால் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். ஆனால், நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்குரிய வேலைகளை செய்து வருகின்றோம். அதற்காக வடக்கு, கிழக்கு இணைப்பு ஒருநாளிலே இரவோடு இரவாக ஏற்படுத்தக் கூடியது அல்ல. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகின்றோம்” என சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார். (TM)

100 நாள் வேலைத்திட்டத்தில் முழு நாட்டிற்கும் நன்மை

பிரிக்கப்படாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். அதற்கு நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு வழங்குவரென எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.
சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். தேர்தலின் பின்னர் நடைபெற்ற முதலாவது

மு.கா, தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு. பின்னணியில் வெளிநாட்டு பணமா?

தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையே ஆக்­க­பூர்­வ­மான பேச்­சுக்­களை எதிர்­கா­லத்­திலும் தொடர்­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ள­துடன்,கிழக்கு மாகாணத்தில் கிராம மட்­டத்­தி­லி­ருந்து பிரச்­சி­னை­களை ஆராய்ந்து தீர்­வு­ கா­ணவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

TNA – முஸ்லிம் மூவருடன் தேசியப்பட்டியல் பேச்சுவார்த்தை








author image
ஊடுருவி

ஐ.ம.சு.கூட்டமைப்பின் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள அதிருப்தி நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு –  முஸ்லிம்களின் வாக்குகளை தம்பக்கம் இழுத்துக்கொள்ளும் முயற்சியில் தற்போது தீவிரம் காட்டி வருவதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச்சபை. தமிழ் கூட்டமைப்பு முயற்சி, அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் ஒத்துவரார்.


தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார்.

இதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபையை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் குறித்து nf வினவியபோதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தைக் கூறினார்.

பிரதம செயலாளரை நியமிக்கும், இடமாற்றும், நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கிறது


வடமாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷை நியமித்தல், இடமாற்றம் செய்தல், அகற்றுதல் ஆகியவற்றுக்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.
மாகாணத்தின் சிறந்த எதிர்காலத்துக்காக முதலமைச்சரும், பிரதம செயலாளரும் ஒத்துழைப்புடனும் சமாதானத்துடனும் பணியாற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ரமபோச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைசந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோச தலைமையிலான குழு இன்று காலை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இராசமபந்தன்,

தமிழ் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் திரும்பியதற்கு கூட்டமைப்பின் ஆணவமே காரணம்


தமிழினத்திற்கு சாபக்கேடு த.தே.கூட்டமைப்புதான். இராமாயணத்தில் கூனியாகவும் பாரதத்தில் சகுனியாகவும் இயங்கும் இவர்களால் தமிழினம் விடிவுகாணுமா? திருமண வீட்டிற்குச் சென்று தாசிகளைப் பாராட்டும் த.தே.கூ. நல்லவைகளைப் பாராட்டும் என்று எதிர்பார்க்க முடியாதென பியசேன எம்.பி. தெரிவித்தார்.

தமிழர்களின் பொது நலன்களை பின்தள்ளும் TNA யின் சுயநலம்


வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மே தின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால் தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.

சர்வதேச சுயாதீன விசாரணை உறுதியாகிவிட்டது; சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு!

இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இம்முறை நிறைவேறுவது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.

சர்வதேச விசாரணைகள் அவசியம் : யாழ். ஆயர் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை தேவை எனவும் இந்த விசாரணைகள் இலங்கையில் நடத்தப்பட்டால் இராணுவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களே அதனை மேற்கொள்வார்கள் என்பதால் இவ்விசாரணைகள் சர்வதேச அளவில் நடத்தப்படவேண்டும் என்பதையே மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம்

வரவு - செலவுத்திட்டத்தை தோற்கடிக்க காரணமாக இருந்த உறுப்பினர்களும் குறித்த விசாரணை

கட்சியின் பணிப்புரைக்கு அமைய நடவாமல் 2014 ஆம் ஆண்டின் வரவு - செலவுத்திட்டத்தை தோற்கடிக்க மூல காரணமாக இருந்த அனைத்து உறுப்பினர்களும் குறித்த விசாரணையின் பின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழரசுக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
 
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை  கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்று, முடிவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட, பிரதேச சபைகளின் சிலவற்றில் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கட்சியின் உறுப்பினர்களாலேயே தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக கட்சி மத்திய குழு எடுத்திருக்கும் தீர்மானத்தை அறிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

கோத்தாபாய கூறுவதை நம்ப உலகத் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல: சுரேஷ்

வட மாகாண தமிழ் மக்கள் யுத்தம் முடிந்து நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்­னரும் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே வாழ்­கின்­றனர். இதனை உலகம் அறியும். எனவே, அங்கு சமா­தானம் நில­வு­வ­தாக பாது­காப்புச் செய­லாளர் கூறு­வதை நம்ப உலக நாடுகள் அதன் தலை­வர்கள் முட்­டாள்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

ஊடகத் துறையை அரசு நடத்துகின்ற விதம்

ஊடகத் துறையை இலங்கை அரசு நடத்துகின்ற விதம் சர்வதேச ரீதியில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் என்ற பாகுபாடின்றி பலர் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகை விநியோகஸ்தர்களையும் கொன்றுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar