BREAKING NEWS
Showing posts with label Poltics. Show all posts
Showing posts with label Poltics. Show all posts

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு


பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார்!

பிணை முறி மோசடி தொடர்பில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு, ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் பிணை முறி மூலம் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மொத்தமாக, சுமார் 1150 கோடி ரூபாய் உழைத்துள்ளது என, ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட உரை இன்று புதன்கிழமை நிகழ்த்தப்பட்டது.

2015 /2016 ம் ஆண்டு கால சம்பவங்கள் தொடர்பில் ஆணைக்குழு சமர்பித்திருப்பது இடைக்கால அறிக்கை அல்ல என்றும், 1257 பக்கங்களைக் கொண்ட முழுமையான அறிக்கை என்றும் ஜனாதிபதி தனது விஷேட உரையில் கூறினார்.

தனது விஷேட உரையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாவது;

மத்திய வங்கியில் 2008 ம் ஆண்டு முதல் இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் தேடிப்பார்க்க முழுமையான கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டியதே முதலில் செய்ய வேண்டியது என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இது இலங்கை மத்திய வங்கியால் செய்ய வேண்டியுள்ளதுடன் அதன் மூலம் கிடைக்கும் தகவல்களுக்கு அமைய, சட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அந்தக் கால கட்டத்திலேயே அதிகமாக EPF நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆணைக்கழு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இந்த அறிக்கையின் பிரதி தன்னால் தற்போது சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அறிக்கையின் பரிந்துரைப்படி குற்றவியல் மற்றும் சிவில் வழக்கு தாக்கல் செய்வது குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரன் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட வேறு நபர்களின் தலையீட்டின் காரணமாக, பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் – சட்டத்திற்கு மாறான முறையில் பணம் உழைக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் நாளன்று இடம்பெற்ற ஏலம் மூலம் மாத்திரம், பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் 688 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வருமானம் குறைந்தது 11,145 மில்லியன் ரூபா என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் இதன்மூலம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் 8,529 மில்லியன் ரூபாவுக்கும் (850 கோடி) அதிகம் என்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளதாக ஜனாதிபதி தனது விஷேட உரையில் கூறினார்.

மகேந்திரன் தன்னிச்சையான தீர்மானத்தின் ஊடாக பிணைமுறி விநியோகத்தின் போது, உள்ளக தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளமைக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புடையவர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

அலோசியஸ் குடும்பத்துக்கு சொந்தமான மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த “வோல்ட் என்ட் ரோ” நிறுவனத்தால் பெண்ட் ஹவுஸ் மாடி வீட்டுக்கு வாடகை செலுத்தியமை சம்பந்தமாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்பு ஏற்க வேண்டும்.

அவருக்கு எதிராக லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும் என்பதுடன், ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சி வழங்கியமைக்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக, பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம், அர்ஜுன் எலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன போன்றோர் மற்றும் அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள பொறுப்புக் கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக, குற்றவியல் மற்றும் சிவில் சட்டத்தை முன்னெடுப்பதற்கு பரிந்துரைப்பதாகவும், அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை மத்திய வங்கியில் இதுபோன்ற மோசடிகள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதற்கு புதிய நிதிச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நிதிச் சபை உறுப்பினர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்கும் போது அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரை இடம்பெற்ற பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கவில்லை என்பதனால், அதுகுறித்து விசாரிக்கவில்லை என்றும், எனினும் அது குறித்து விசாரிப்பது சிறந்தது என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

மீளப்பெற வேண்டிய பணத்தை சிவில் சட்டத்தினூடாக பெற முயற்சிப்பது காலம் தாழ்த்தும் செயல் என்பதால், இதற்காக நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றி அந்தப் பணத்தை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஏற்பட்ட செலவுகளை பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது விஷேட உரையில் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் பதவிகளில் மாற்றங்கள்

அடுத்த வருடம் ஊவா, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 

அரசுடன் இருந்து கொண்டே அரசுடன் தேர்தல் கூட்டு இல்லை எனும் கூத்து

இம்முறை அரசுடன் கூட்டு இல்லை; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவு!


YLS
எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துரை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் முடிவை இன்று எடுத்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று கூடிய கட்சியின் அதியுயர் பீடம் இந்த முடிவை எடுத்துள்ளது.

நஸீர் அஹமதின் துஆ உறுப்பினனர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு!



2
-இர்ஷாத் றஹ்மத்துல்லா-
கொழும்பு மாவட்டத்தில் கடந்த மாகாண சபை தேர்தலில் ஜனநாயக ஜக்கிய முன்னணியில் (துஆ) போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவான முஹம்மத் பாயிஸ், மற்றும் அக்கட்சியில் போட்டியிட்ட அஜித் பெரேரா ஆகியோர் தலைமையிலான ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காபங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.

நாமலின் தலையீட்டையடுத்து போராட்டத்தை கைவிட் இறங்கிய கைதிகள்

கசினோ-- முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீடம் இன்று

இலங்கையில் கசினோவுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக்கூடாது என்ற பிரேரணையை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீடம் இன்று தாருள் குர்ஆனில் கூடுகிறது. இதன் போது கசினோவின் விளைவுகள் பற்றி விரிவாக விளக்கப்படுவதோடு இதனால் முழு நாடும் பாதிப்படையும் என்பது பற்றிய விளக்கங்களும் இடம் பெறும்.

கல்முனை தைக்கா வீதியின் பெயரால் 80 லட்சம் மோசடி

கல்முனை தைக்கா வீதி 80 லட்ச ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாக கல்முனை மேயர் சிராஸ் ஊடகங்களுக்கு பொய் கூறியுள்ளதன் முழு நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளதோடு பாரிய ஊழல் மோசடியும் இடம் பெற்றுள்ளது.

திவிநெகும சட்டத்துக்கே எதிர்த்து வாக்களிக்க முடியாமல் ஆதரித்து விட்டு தலைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என வெட்கமின்றி கூறியவர்கள் மாகாண சபையின் ஆட்சியையே மாற்றப் போவதாக கூறுவது உலக மகா நகைச்சுவையாகும்.

வடக்கில் அமையப்போகும் ஆட்சியை முன்மாதிரியாகக்கொண்டு கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை முன்னெடுப்பதற்கு கிழக்கு முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் தயாராக வேண்டும்

புல்மோட்டை பிரதேச பூர்வீக காணிகள் விடயத்தில் இலவசமாக வாதாடிய சட்டத்தரணிகளுக்கு முஸ்லிம் மக்கள் கட்சி பாராட்டு

அரசியல் சட்டத்தரணிகள் உறங்கிக்கொண்டிருக்கும் போது புல்மோட்டை பிரதேச பூர்வீக காணிகள் விடயத்தில் இலவசமாக வாதாடிய சட்டத்தரணிகளுக்கு முஸ்லிம் மக்கள் கட்சி பாராட்டு தெரிவிப்பதுடன் இதனை முன்னுதாரணமாக வைத்து ஏனைய சமூக விடயங்களிலும் சட்ட உதவிக்கு முஸ்லிம் அரசியல் சட்டத்தரணிகள் முன் வர வேண்டும்

தமிழ் மக்களின் அரசுக்கு ஆதரவான கட்சிகளும் எதிரான கட்சிகளும் ஒன்று சேரவில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழ் மக்கள் தேர்தலில் ஒன்று பட்டுள்ளார்கள். அது போல் நாமும் ஒன்றுபட வேண்டும் என முஸ்லிம் பொதுமக்களும் ஏன் அரசியல்வாதிகளும் கூட பேசிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அடிக்கடி முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்தை பார்த்தே சூடு போட்டுக்கொள்வதையும் அதனைக்கூட புரியாமல் தப்பாக சூடு போடுவதும்தான் வேடிக்கையானது.

வடக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைத்தது மு.கா- அ.இ.மு.கா.


நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இவற்றுள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும்இ ஈ.பி.டி.பி. 2 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

2 ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கினை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம் - பொதுபல சேனா


"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

" என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா. இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. 

திட்ட வெளியீடு
ஒரு இலட்சம் தர்மபாலகர்கள்
2 ஆயிரம் பிக்குகள் அணி
2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள்
10 இலட்சம் கையேடுகள்
10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை
5 மாபெரும் யாத்திரைகள் 



"பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்கள் அனைவரும் சர்வமதக் கொள்கையை எதிர்த்த அநாகாரிக தர்மபால போல் செயற்பட வேண்டும். இதற்கு அனைத்து பெளத்தர்களும் அரசியல் கட்சிப் பேதங்களைக் கடந்து எமக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலபொடஅத்தே ஞானா சார தேரர் அழைப்பு விடுத்தார். 

தென்னிலங்கையில் பள்ளி வாசல்கள் மீது தாக்குதல் நடத்தி தன்னுடைய பெளத்த வெறியை வெளிப்படுத்தி வந்த அமைப்பான பொது பலசேனா தமிழர் தாயகப் பகுதிகளிலும் பாயத் தயாராகி விட்டதையே நேற்றைய அறிவிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

பெளத்த, சிங்கள மறுமலர்ச்சியாளரும், எழுத்தாளருமான அநாகரிக தர்மபாலவின் 149 ஆவது ஜனன தினத்தயொட்டி கொழும்பு, கிருலப்பனையிலுள்ள போதி பெளத்த நிலையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

"இலங்கைக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வெள்ளையர்களுடன் அன்று போராடிய எமது தலைவர் அநாகரிக தர்மபாலவின் 149ஆவது ஜனன தினமான இன்று (நேற்று) பெளத்தத்தைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். 

சர்வமதக் கொள்கையையும், சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் இலங்கை சொந்தம் என்ற வாதங்களையும் எதிர்த்த அநாகரிக தர்மபால, விகாரைக்கு அருகில் கோவில், பள்ளிகள் உருவாகும் நிலை ஏற்படும் என்றார்.

அவர் அன்று கூறியது இன்று அப்படியே நடந்துள்ளது. எனவே, எமது இனம் முகங்கொடுத்துள்ள இந்த அபாயத்திலிருந்து அதை மீட்க பல தர்மபாலர்கள் எமக்குத் தேவை. நாட்டிலுள்ள சிங்கள, பெளத்தர்கள் அனைவரும் அநாகரிக தர்மபால ஆகவேண்டும். அவருடைய கொள்கைகளினூடாக மட்டுமே பெளத்தத்தைக் காக்க முடியும். அத்துடன், பாணந்துறை வாதத்தையும் மீள உருவாக்க வேண்டும்.

பெளத்த கொள்கை நாடு

பெளத்த சாசனத்தைப் பாதுகாக்க அநாகரிக தர்மபாலவின் கொள்கைகளை வடக்கில் தற்போது சிங்களவர்கள் இல்லாததால், கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் சமூகமயப்படுத்த வேண்டும். 

இதனூடாக சிங்கள பெளத்தர்களை தேசிய மட்டத்தில் ஒன்றிணைந்து பெளத்த கொள்கையின் கீழான சமூகத்தை உருவாக்குவோம். அத்துடன், ஒரு இலட்சம் தர்மபாலர்களையும் உருவாக்குவோம். 

இரண்டு வருடங்களில் நடைமுறைப் படுத்தவிருக்கும் இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் இரண்டாயிரம் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளோம். தர்மபாலவின் கொள்கைகளை சமூகமயப்படுத்தி இரண்டாயிரம் பிக்குகளை உருவாக்கி, நாடு முழுவதுமுள்ள 10 ஆயிரம் விகாரைகளில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும் அநாகரிக தர்மபாலவின் கொள்கைகள் அடங்கிய 10 இலட்சம் கையேடுகளை விநியோகிக்க உள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 5 யாத்திரைகளையும் ஒழுங்குசெய்யவுள்ளோம்" என்றார். 

இதன் போது, ஏனைய சிங்கள, பெளத்த அமைப்புகளையும் இந்த வேலைத்திட்டத்தில் பொதுபலசேனா இணைத்துக்கொள்ளுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "ஆம். இதுவரையில் பல சிங்கள, பெளத்த அமைப்புகளுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம்.

எமது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அவை இணக்கம் தெரிவித்துள்ளன. இன்னும் பல அமைப்புகளுடனும் நாம் தற்போது பேசி வருகிறோம். நாட்டிலுள்ள அனைத்து சிங்கள பெளத்தர்களும் அரசியல் பேதங்களைக் கடந்து எமக்கு ஆதரவளிக்கவேண்டும்" என்றார். 

வடக்கிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், "யுத்த காலத்தில் புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் அங்கு மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். சிங்களவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டவுடன், அங்கும் எமது நடவடிக்கையை மேற்கொள்வோம்" என்றார்.

இன்றைய முஸ்லிம் முரசு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை

கூட்டுத்; தலைமைத்துவத்துக்கு  வழிகாட்டும் கூட்டுத்தொழுகை
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

இஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் கூட்டுத்தொழுகையும் ஒன்று. இத்தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை வைத்து இஸ்லாத்தின் அரசியல் தலைமைத்துவ வழி காட்டல்களை நாம் மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா

tl Nky; khfhz rigf;F I. k.R. Kd;dzpapypUe;J Nghl;bapLk; mg;Jy; rj;jhiu Mjhpj;J> nfhl;lk;ggpl;ba> ghdfKt>fDf;nfl;ba>Kk;kd;d>

முஸ்லிம் காங்கிரசை பலமாக குற்றம் சாட்டும் இவர் தனது ஆட்களை மத்தியில் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட வைத்துள்ளார்

மத்திய மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி அமைக்கும் என்பதால் மக்களின் வாக்குகளை சிதைத்து ஆளுங்கட்சியை வெல்ல வைப்பதற்காகவே ஹக்கீம், ஸ்ரீரங்கா, திகாம்பரம் போன்றவர்கள் தனியாக களமிறக்கப்பட்டுள்ளார்கள் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  (14)சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்ததுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

யாழ் சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் விடுதலை

தேசிய சிறை கைதிகள் தினத்தை முன்னிட்டு  யாழ் சிறைச்சாலையில்  இருந்து 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிறைச்சாலை பொறுப்பதிகாரி எஸ்.இந்திரன் தெரிவித்தார்.

நாடு பூராகவும் ஜனாதிபதியின்  பொது மன்னிப்பின் கீழ் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு

யாழ் மாவட்டத்தில் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக  போட்டியிடும் எம்.சிராஸ; மற்றும் இராமநாதன் அங்கஜன் ஆகியோரை ஆதரித்து  மாபெரும் மக்கள் சந்திப்பும் இபிரசார கூட்டமும் நேற்று  மாலை நடைபெற்றது.

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா

முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா

ஹறாங்குட்டி கட்சி

   முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசை கலைத்து விட வேண்டும் என கூறியது கேட்டு அக்கட்சியின் பிச்சையில் வாழும் லத்தீப் என்பவர் தனது மறுப்பறிக்கை மூலம் நன்றிக்கடனை செலுத்தியுள்ளார் என முஸ்லிம் மக்கள் கட்சியின் உப தலைவர் மௌலவி அஸவர் பாக்கவி தெரிவித்துள்ளார்.
அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar