BREAKING NEWS
Showing posts with label SLTJ. Show all posts
Showing posts with label SLTJ. Show all posts

ஸ்ரீ லங்கா உலமா கட்சிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வுக்குமிடையில் சிநேகபூர்வமான சந்திப்பு


ஸ்ரீ லங்கா உலமா கட்சிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) வுக்குமிடையில் சிநேகபூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இதன் போது ஸ்ரீ ல தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் தலைவர் A.M.  ரியால், பொதுச்செயலாளர் அப்துர்ராஸிக், துணை தலைவர் பர்ஸான்,துணை செயலாளர்களான ரஸ்மின், ஹிஷாம், முயீன் ஆகியோரும் உலமா கட்சி சார்பில் அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, இணைச்செயலாளர் இஸ்ஸ்தீன் (முன்னாள் கொழும்பு மாநகர உறுப்பினர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த முனையும் முஸ்லிம்களுக்கெதிரான அரசின் சதிக்கெதிராக ஸ்ரீ த ஜமாஅத் மேற்கொண்ட ஜனநாயகரீதியிலான ஆர்ப்பாட்டங்களுக்கு உலமா கட்சித்தலைவர் தமது கட்சி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான மார்க்க ரீதியிலான அமைப்புக்கள் அனைத்தும் சமூக பிரச்சினைகளின் போது மௌனமாக இருக்கும் போது ஸ்ரீ தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அக்கறை காட்டியமை அவர்களின் சமூக அக்கறையை காட்டுகிறது எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இலங்கை அரசியலின் சம கால நிலைமை, சமூகத்தின் எதிர் காலம், தேர்தல் முறை மாற்றத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பாதிப்பு போன்ற பல விடயங்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டன.


தேசிய ஷூறா சபை உருவாக்கப்பட்டதில் எந்தப் பயனும் இல்லை -SLTJ

@ SLTJ  நாட்டில் உருவாக்கப் போகின்ற மாற்றங்கள் என்ன?

எங்களுடைய அடிப்படை நோக்கம் மார்க்க ரீதியாக இந்த சமூதாயத்தில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இயக்கங்களாலும் கொள்கைகளாலும் வேறுபட்டிருந்தாலும் சமூதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
ஒற்றுமை என்பது இந்த சமுதாயத்திற்கு மிக முக்கியமானது. ஆனால் இயக்க வேறுபாடுகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதென்பது சிரமமானது. அதேபோன்று இயக்க வேறுபாட்டில் அல்லது முரண்பாடுகளில் இருந்து கொண்டே ஒற்றுமையாக இருப்பதென்பதும் சாத்தியமான விடயம் அல்ல.
நாங்கள் அல்-குர்ஆன் ஹதீஸை மக்களுக்கு எத்திவைக்கின்ற பணியை முன்னெடுத்து வருகின்றோம். அதுதான் ஒரு முஸ்லிமின் முதன்மைப் பணியாகும். எனவே, சொல்ல வேண்டிய விடயங்களை  பக்குவமாகவும், பணிவாகவும் மக்களுக்கு எத்திவைக்க வேண்டியது எமது கடமை என்பதால் அதனை நாங்கள் செய்து வருகின்றோம். கொள்கை ரீதியாக முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த முடியுமாக இருந்தால் அது காலா காலமாக நிலைத்து நிற்கின்ற ஒற்றுமையாக இருக்கும். இது இலகுவானதொரு விடயம் அல்ல.
வெறுமனே இந்த சமூதாயம் ஒற்றுமைப்பட வேண்டுமென பேச்சுக்களில் மாத்திரம் நின்றுவிடாமல் கொள்கை ரீதியாக முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். அவ்வாறான ஒற்றுமைதான் உண்மையான ஒற்றுமையாகவும் நிலையான ஒற்றுமையாகவும் இருக்கும்.
எமது அமைப்பு 2005 இல் உருவாக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நிறைய அமைப்புக்கள் காணப்பட்டாலும் தஃவா வேலையை செய்யவில்லை. தௌஹீத் ஜமாஅத்தினுடைய உண்மையான நோக்கத்தினை குறித்த பெயர் தாங்கிய அமைப்புகள் செய்யாததன் காரணமாக நாங்கள் கொள்கை ரீதியாக இந்த சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படத் தீர்மானித்தோம். அதனடிப்படையில் செயற்பட்டும் வருகின்றோம்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்திற்கும் (SLTJ) தமிழ் நாட்டு தௌஹீத் ஜமாஅத்திற்குமிடையில் (TNTJ) உள்ள தொடர்புகள் பற்றி?
நிர்வாக ரீதியாக எமக்கும் அவர்களுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை. எமது அமைப்பு இந்த நாட்டில் சுதந்திரமாக இயங்குகின்ற அமைப்பாகும். அதேநேரத்தில் கொள்கை ரீதியாக மார்க்க ரீதியான விடயங்கள், பிரச்சினைகள், ஆய்வுகள் போன்ற விடயங்களில் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத்தோடு ஒரே மேசையில் உட்கார்ந்து கலந்துரையாடியே தீர்மானத்திற்கு வருகின்றோம். ஏனென்றால் அவர்கள் ஆய்வு ரீதியாக மார்க்க விடயங்களை அணுகுவதில் முதன்மையானதொரு அமைப்பாகக் காணப்படுகின்றார்கள்.
ஒரு மார்க்கப் பிரச்சினை தொடர்பில் இதுவும் சரி, அதுவும் சரி என்ற மழுப்புகின்ற தீர்வுகளை அவர்கள் எடுப்பதில்லை. மாற்றமாக தீர்க்கமான முடிவுகளை எடுத்து மக்களை தெளிவுபடுத்துவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. அந்த வகையில் கொள்கை ரீதியாக யாருக்கும் அஞ்சாமல் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமில்லாமல் பணத்திற்கு விலை போகாமல் செயற்படுகின்ற அமைப்பென்பதால் நாங்கள் அவர்களோடு சேர்ந்து செயற்படுகின்றோம். ஆனால் அவர்கள் சொல்பவற்றை கண்மூடித்தனமாக பின்பற்ற மாட்டோம்.
நிர்வாக விடயங்களில் அவர்களை பின்பற்றாவிட்டாலும் 30 வருடங்களுக்கு மேலாக களத்திலே வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்ற ஒரு அமைப்பென்ற வகையில் அவர்களுடைய ஆலோசனைகள் எமக்கு மிக முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, வெளிநாட்டு அரசாங்கத்தினதோ அல்லது நிதி நிறுவனங்களினதோ பணத்தை எடுப்பதில்லை என்பது தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. அதனை நாங்களும் பின்பற்றுகின்றோம். காரணம் எங்களுடைய தஃவாவினுடைய தூய்மையை பாதுகாக்கும் அரணாக அது காணப்படுகின்றது.

@ மௌலவி பாஸில் பாறூக் அவர்கள் ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் SLTJஇற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று ஒரு பத்திரிகை நேர்காணலில் கூறியிருக்கின்றார். ஜம்இய்யதுல் சபையுடனான உங்களுடைய தொடர்புகள் எவ்வாறு காணப்படுகின்றன?

முதலாவது ஜம்இய்யதுல் உலமா சபையுடன் நாங்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டிருக்கின்றோம். ஜம்இய்யதுல் உலமா சபையானது நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட ஒர் அமைப்பல்ல. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பது ஒரு அமைப்பினுடைய பெயரே தவிர முழுக்க முழுக்க இலங்கையிலுள்ள அறிஞர்கள் அனை வரையும் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ மான சபை அல்ல.
மார்க்க ரீதியாக எங்களுக்கும் அவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாங்கள் வஹியை மாத்திரமே பின்பற்றுகின்றோம். ஆனால் அவர்கள் மத்ஹப்கள், ஸஹாபாக்களின் கூற்றுக்கள், இஜ்மா, கியாஸ் என்பவற்றையும் பின்பற்றுகின்றனர். எனவே, அவர்களுக்குக் கீழால் மார்க்க அடிப்படையில் ஒரு போதும் சேர்ந்து செயற்பட முடியாது. என்றாலும் சமுதாயப் பிரச்சினைகள் என்று வருகின்றபோது அனைத்து அமைப்புகளோடும் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

@ இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா, தேசிய ஷூறா சபை, முஸ்லிம் கவுன்ஸில் போன்ற முக்கியமான முஸ்லிம் தலைமை அமைப்புகள் காணப்படுகின்றன. ஜம்இய்யதுல் உலமா சபையுடன் உங்களுக்கு முரண்பாடுகள் காணப்பட்டாலும் ஏனைய இரண்டு அமைப்புகளுடனான உறவுகள் பற்றி…

மார்க்க ரீதியாக அகீதாவோடு முரண்பட்ட எவருடனும் எம்மால் சேர்ந்து செயற்பட முடியாது. ஆனால் சமுதாய விடயங்களில் தேசிய ஷூறா சபையோடு சேர்ந்து செயற்படத் தயார். என்றாலும் ஷூறா சபை உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறை வேறவில்லை. இலங்கை முஸ்லிம்களின் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து ஒரு பிரச்சினை ஏற்படுகின்றபோது அதற்குத் தீர்வு காணும் நோக்கில்தான் அது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரும் ஜம்இய்யதுல் உலமா சபை இருக்குமாக இருந்தால் தேசிய ஷூறா சபை உருவாக்கப்பட்டதில் எந்தப் பயனும் இல்லை என்பதே நிலைப் பாடாகும்.
தற்போது இலங்கை முஸ்லிம்களுக்கு மூன்று தலைமைத்துவ அமைப்புகள் காணப்படுகின்றன என்றால் தீர்மானங்கள் எட்டப்படுகின்றபோது பல்வேற பிரச்சினைகள் எழும். எனவே, சமுதாயப் பிரச்சினைகள் என்று வரும்போது ஓர் அமைப்பின் கீழ் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து அமைப்புக்களும் வரவேண்டும். அப்போது தான் சரியான தீர்வைக் காண முடியும். அப்படி அனைவரும் இணைவார்களாக இருந்தால் நாங்களும் அந்தத் தலைமை அமைப்போடு இணைந்து செயற்படத் தயாராகவே இருக்கின்றோம்.

@ முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தில் ஏனைய வெளி சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் தெளிவாக இருக்கின்றது. இதே நிலைப்பாட்டில் இருக்கும் நீங்கள் ஏன் தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டீர்கள்?

2013 ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கெதிராக பௌத்த இனவாத அமைப்புக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தியபோது ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஆகியன இணைந்து அனைத்து முஸ்லிம்  அமைப்புகளையும் கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் ஒன்று கூட்டின. அதில் நாமும் கலந்து கொண்டோம். அக்கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகளை பொறுமையான முறையிலும் பக்குவமான முறையிலும் கையாள வேண்டும் எனவும் ஒரு ஊடக மாநாட்டைக் கூட்டி தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் முடிவுசெய்யப்பட்டது.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு எத்தகைய செயற்பாடுகளையும் குறித்த தலைமை அமைப்புகள் முன்னெடுக்கவில்லை என்பது எமக்கு மிகவும் கவலை அளித்தது. அவர்களை பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் எத்தகைய பதிலும் வரவில்லை. எனவேதான் நாங்கள் முஸ்லிம் சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளை தனியாகவே எதிர்கொள்வது என்று முடிவெடுத்தோம். என்றாலும் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போது ஏனைய முஸ்லிம் அமைப்புகள் எம்மை அழைத்தால் அவர்களோடு சேர்ந்து செயற்படுவதற்கு இன்னமும் தயாராகவே இருக்கின்றோம்.
முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் 7 வருடங்களுக்கு மேலாக இழுபறிக்குள்ளாகியிருப்பதற்கு மிக முக்கிய காரணம் ஜம்இய்யதுல் உலமா சபை என அந்தக் குழுவிலுள்ள முக்கியமான உறுப்பினர் ஒருவரே தெரிவித்திருக்கின்றார். எனவே தான் ஜம்இய்யதுல் உலமா சபையை  நம்பி எந்தப் பிரயோசனமும் இல்லை. இதனால்தான் தனியாகவே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னால் ஏனைய அமைப்புகள் எங்களை அழைத்து நாம் அனைவரும் ஒன்றாக இந்த விடயத்தை கையாள்வோம் என்று சொல்லியிருந்தால் கூட நாங்கள் அதற்கு இணங்கியிருப்போம். ஆனால் இந்த விடயத்தில் யாருமே கவனத்தில் எடுக்கவில்லை.
ஆர்ப்பாட்டமென்பது ஜனநாயகத்தின் முக்கிய கருவி. எமது அடிப்படையான விடயங்களை வென்றெடுப்பதற்கான ஒரே வழி இதுதான். இதைப் புரிந்துகொள்ள முடியாத தலைமைகளை இனியும் எம்மால் நம்ப முடியாது. ஏற்கனவே நாங்கள் இந்த அமைப்புகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம். ஒரு முஃமின் இரு தடவைகள் ஏமாற மாட்டான். எனவேதான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை தனியாகவே முன் னெடுத்தோம். தனியாக செயற்படுவதை விட சேர்ந்து செயற்படுவதுதான் சிறந்த வழி என்பது எமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம் தலைமை அமைப்புகள் சேர்ந்து செயற்படத் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

@ நீங்கள் அண்மையில் கைதுசெய்யப்படுவதற்கான காரணம் என்ன?

மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு தேரரை திட்டினோம் என்ற காரணத்தை சொல்லியே வழக்குத் தொடுத்தார்கள். ஆனால் இவர்கள் என்னை உண்மையிலேயே பௌத்த மதத்தை அல்லது தேரரை திட்டினேன் என்ற காரணத்தை வைத்து கைதுசெய்யவில்லை. இவர்கள் என்னை அரசியல் தேவையொன்றிற்கா கவே கைது செய்தார்கள். டான் பிரசாத்  பல காலமாக இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கின்ற இனவாதி. அவனை அரசாங்கம் கைதுசெய்யவில்லை. எமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோரை தாக்குவோம் என்று அவன் பகிரங்கமாக எச்சரித்தால் நாம் பொலிஸாரிடம் முறையிட்டோம். அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவன் கைதுசெய்யப்பட்டான். இந்தக் கைதுக்கு நாங்கள்தான் காரணமென முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைப்புகளும் பெருமையாக உரிமை கொண்டாடுகின்றார்கள்.
இதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இவனை கைதுசெய்தால் சிங்கள மக்கள் கொந்தளிப்பார்கள். எனவே மக்களை சமாதானப்படுத்துவதற்காக அப்துர் றாஸிக்கையும் கைதுசெய்ய வேண்டுமென அமைச்சர் சாகல ரத்தனாயக்க பிரதமரிடம் குறிப்பிட்டிருந்தார். எனவே ஒரு பௌத்த இனவாதியை கைதுசெய்வதற்காக அரசினால் பலிக்கடாவாக்கப்பட்டவனே நான். ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே நான் கைதுசெய்யப்பட்டேன். இது கண் டிக்கதக்க ஒரு விடயம். நல்லாட்சி அரசாங் கத்தின் நல்லதொரு அறிகுறியாக இது விளங்கவில்லை.

@ நீங்கள் ஒரு பௌத்த மதகுருவை நிந்தித்தமை குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஒரு மதகுரு என்பவர் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். மதகுரு ஒருவர் சிறுவர் துஷ்பிரயோகம் செய்தால் அவரைக் கண்டிக்க கூடாது அல்லது கைது செய்யக் கூடாது என்ற சட்டம் இருக்கின்றதா? மதகுரு இவ்வாறான பாவங்களை செய்தால் ஏனைய மனிதர்களை விட அவருக்குத்தான் கூடிய தண்டனை வழங்க வேண்டுமென்பது மனித இயல்பு. அவர்கள் மதகுரு என்ற போர்வையில் தூசனம் பேசுவார்கள், மிரட்டுவார்கள், கொலை செய்வோம் என்பார்கள், நாட்டை விட்டு விரட்டுவோம் என்பார்கள். அதை நாங்கள் கண்டிக்கக் கூடாது என்றால் இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது பொய்த்து விட்டது என்றுதான் அர்த்தம். நாங்கள் ஒரு மதகுருவை திட்டவில்லை. இந்த நாட்டில் இனவாதத்தைக் கக்கிய ஒரு நபரைத்தான் திட்டினோம், விமர்சித்தோம்.

@ தனது மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஞானசார தேரர் வழக்குக் தொடுத்திருந்தாரா?

அவர் எனக்கெதிராக எந்த வழக்கும் கொடுக்கவில்லை. இது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இடம்பெற்ற கைதுதான் என் பதை மீண்டும் தெளிவாக சொல்கிறேன்.

@ SLTJ அமைப்பிற்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாயவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜித சேனாரத்ன அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு எதிராக SLTJ அமைப்பு எத்தகைய மறுப்பையும் தெரிவிக்கவில்லையே?

அமைச்சர் ராஜிதவின் கருத்தை மறுத்து எமது அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ராஜித சொன்னது போல எனக்கும் NIB இற்கும் தொடர்பு இருப்பதாக இருந்தால் ஆதாரங்களைக் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும். வாய்க்கு வந்தபடி யாரும் எதையும் சொல்லலாம் ஆனால் அதனை உண்மைப் படுத்துவதற்கு ஆதாரங்கள் மூலமாக நிரூபிக்க வேண்டும்.
NIB இல் நான் வேலை செய்ததாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அது என்ன தப்பு என்று கேட்கின்றேன். அது அரசாங்கத்தினுடைய ஒரு திணைக்களம். நான் அல்கைதாவுடனோ அல்லது LTTE உடனோ அல்து ISIS உடனோ தொடர்பு வைத்திருந்தால் அது பாரதூரமானதொரு விடயம். அது விமர்சிக்கப்பட வேண்டியதுதான். NIB உடன் கூட நான் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.
மஹிந்தவிற்கோ கோத்தாபாயவிற்கோ வால் பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்குக் கிடையாது. குறிப்பாக கோத்தபாயதான் இந்த பொதுபலசேனாவை உருவாக்கியவர் என்று பொது இடங்களில் விமர்சித்திருக்கின்றோம். எங்களுக்கும் NIB இற்கும் இடையிலான ஒரே தொடர்பு அவர்கள் எங்களுடைய அமைப்பு தொடர்பான விடயங்கள் சந்தேகங்களை எங்களிடம் வினவுகின்றபோது அதனை நாங் கள் தெளிவுபடுத்துவது மாத்திரமே.

@ மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். குறிப்பாக முஸ்லிம் அமைப்புகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. இதனால் அனைத்து அமைப்புகளுக்கும் அச்சத்திற்கு மத்தியிலேயே இயங்கின. என்றாலும் நீங்கள் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரமாக இயங்கினீர்கள் ஏதாவது சலுகைகள் வழங்கப்பட்டனவா?

2015 நவம்பர் மாதத்தில் நாங்கள் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வெளி யீட்டு விழாவை நடாத்தினோம். இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே இடம்பெற்றது. எனவே நல்லாட்சியில் தான் நாங்கள் சுதந்திரமாக இயங்கினோம். மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் நாங்கள் எங்களுடைய செயற்பாடுகளை சுதந்திர மாகவே முன்னெடுத்துச் சென்றோம்.
எங் களைப் பொறுத்தவரையில் யாருடைய ஆட்சிக்காலமாக இருந்தாலும் எங்களுடைய செயற்பாடுகளை சட்டத்திற்கு உட்பட்ட வகையில் முன்கொண்டு செல்வோம். கடந்த ஆட்சியில் தம்புள்ள பள் ளிக்கெதிராக பிரச்சிணை ஏற்பட்டபோது ஆர்ப்பாட்டம் செய்தோம். அதுபோன்று மஹிந்தவின் காலத்தில் ஜெனீவா பிரேர ணைக்கு எதிராக இன்னொரு ஆர்ப்பாட்ட மொன்றை செய்தோம். அப்போது மஹிந்த விற்கு ஆதரவாக செயற்படுகின்றோம்  என நினைத்துக் கொண்டார்கள்.
அந்த இடத்தில் நாங்கள் மஹிந்தவை பார்க்கவில்லை. நாட்டைத்தான் பார்த் தோம். எங்களுடைய நாட்டை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கு ஒரு போதும் விடமாட்டோம். அந்த அடிப் படையில்தான் GSP+ சலுகைக்காக எமது முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்  கள் மேற்கொள்ளப்படுவதனை விட மாட் டோம். அமைப்பு ரீதியாக நாங்கள் எந்த ஆட்சியாளர்களுக்கும் ஆதரவு செலுத்து வதுமில்லை எதிர்ப்புத் தெரிவிப்பது மில்லை. இந்த அடிப்படையில் செயற்படக் கூடிய அமைப்பு அரசியல்வாதிகளின் நிக ழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டது என்பத னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

@ தற்போது நாட்டில் இடம்பெற்று வருகின்ற இனவாத செயற்பாடுகளை எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகிறீர்கள்?

இனவாதம் இந்த நாட்டில் தலைதூக்கி  இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவு. இது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. இதற்கு வெளிநாட்டு சக்திகள் உதவி செய்வதாகவும் தகவல்கள் இருக்கின்றன. ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியமால் இருக்கின்றது. உதாரணமாக நோர்வே அரசாங்கம் முழுக்க முழுக்க பொதுபல சேனாவிற்குப் பின்னால் செயற்படுகின்றது. இதனை நிரூபிப்பதற்கு எம்மிடம் ஆதாரமில்லை. நாங்களும் அதற்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கு முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் கோத்தாபாய ஆகியோரும் பொதுபலசேனாவிற்கு பின்னால் இருக்கின்றனர் என்ற சந்தேகமும் எமக்குக் காணப்படுகின்றது.

@ இறுதியாக உங்களுடைய சிறை வாழ்வு பற்றி எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?

சிறைவாழ்வை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். தஃவா களத்திலுள்ள ஒவ்வொரு தாஈயும் மறுமையை இலக்கை கொண்டு செயற்படுகின்ற ஒவ்வொரு முஸ்லிமும் சுகபோகமான முறையில் தஃவா பண்ண முடியாது. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதையும் தவிர்க்க முடியாது.

அப்துல் ராசிக் கைது. நீதி வேண்டி உலமா கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

இனங்களுக்கும் மதங்களுக்கும் எதிராக வெறுப்பேற்றும் பேச்சுக்கள் பேசுவோர் பெரும்பான்மையின சமய தலைவர்கள் என்பதற்காக அவர்கள் கைது செய்யப்படாத நிலையில் எந்த ஒரு இனத்துக்கோ மதத்துக்கோ ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கைவைப்பதை எதிர்த்து செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசாத அதன் செயலாளர் அப்துல் ராசிக் கைது செய்யப்பட்டமை கவலையானது என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த அரசாங்கத்தின் போது முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வரும் என சொன்னதற்காக ஆஸாத் சாலி கைது செய்யப்பட்ட போது அவர் தவ்ஹீத் சார்பு முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற நிலையிலும் தவ்ஹீத்வாதிகள் உட்பட முஸ்லிம்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். எந்தவொரு அமைப்பும் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டது சரி என கூறவில்லை. ஆசாத் சாலியின் கைதை மஹிந்த காலத்திலேயே முதன் முதலில் கண்டித்தது உலமா கட்சியே. ஆனால் தற்போது அப்துல் ராசிக் கைது செய்யப்படுவதற்கு முன்னின்றவர் அதே ஆசாத் சாலி என்பது முஸ்லிம் சமூகம் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

மஹிந்த காலத்தின் இறுதியில் முஸ்லிம்களுக்கெதிராக கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போது அதற்கு மஹிந்தவே பொறுப்பு என கூறப்பட்டது. ஆனால் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளால் கொண்டு வரப்பட்ட இந்த ஆட்சியில் அதை விட மோசமாக இன மத வெறுப்புப்பேச்சுக்கள் பேசப்படும் போது அதற்கு இன்றைய அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும்.  இவற்றின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார் என சிந்திக்கத்தெரியாத சிலர் சொல்கிறார்கள். அவ்வாறு அவர் இருந்தால் அவரின் ஒத்துழைப்புடன் இத்தகைய இனவாதிகள் செயற்படுவதாக இருந்தால் இவர்களை மிக இலகுவாக அரசால் கைது செய்ய முடியும். மஹிந்தவின் இரு மகன்களை கைது செய்ய முடிந்த அரசுக்கு மஹிந்தவினால் இயக்கப்படுவதாக சொல்லப்படும் மத குருக்களை கைது செய்வது கஷ்டமான காரியமா என்று கூட சிந்திக்கத்தெரியாத சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது.

எம்மை பொறுத்தவரை யார் அவர் எந்த மதத்;தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு மதத்துக்கு எதிராகவோ, அல்லது இனத்தை இழுத்து தூற்றினாலோ அவர் கைது செய்யப்பட வேண்டுமென்ற சட்டம் அரசால் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை சொல்லி வருகிறோம். இதில் பெரும்பான்மை, சிறுபான்மை என பார்க்கக்கூடாது. இப்படியான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட ஏலவே முயற்சி எடுக்கப்பட்ட போது அதனை எதிர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று மட்டக்களப்பு விகாராதிபதியின் வெறுப்புப்பேச்சை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஆகவே அப்துல் ராசிக்  விடயத்தில் முஸ்லிம்கள் தமது மார்க்க கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு அவருக்கு நியாயம் கிடைக்க பிரார்த்திப்பதுடன் இது விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 04வது தேசிய பொதுக்குழு தீர்மானங்கள்.



ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய பொதுக்குழு 25.01.2015 சாய்ந்தமருது லீ - மெரீடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர;தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன அவர்கள் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்துள்ள இந்நிலையில்கடந்த ஆட்சியின் போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத தாக்குதல்களுக்குறிய சட்ட ரீதியான நியாயமான தீர்வை இவ்வரசாங்கம் வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் குறுக்குவழியில் சமூக அங்கீகாரத்தை தேடுகிறதா..?



(எம். ஸப்ராஸ்)

முக்கிய குறிப்பு - கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாளருக்கே உரியவை)

பொது பலசேனாவின் மாநாடு நடந்து முடிந்தது. வழமைப் போன்று சவால்கள் விடப்பட்டன. அதனைக் கண்ட சிலர் கொதித்தனர், வேதனைப்பட்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட பல முஸ்லிம் இயக்கங்களுக்கு சவால்விட்டு குறிப்பிட்ட சில அல்-குர்ஆன் வசனங்கள் தொடர்பாக விவாதத்துக்கு வருமாறு பொது பலசேனா செயலாளர் சவால் விட்டார். அந்த சேனாக்களைக் கணக்கிலெடுக்காதவர்கள் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

மாளிகாவத்தையில் தெளஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம்;


tj (3)
தௌஹித் ஜமாஅத், பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு, கோட்டை பகுதிகளில் இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலேயே ஶ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் மாளிகாவத்தையில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டடனர். 

தவ்ஹீத் ஜமாஅத்துகள் தடை செய்யப்படலாம்.



wimal_w_b1
பொதுபல சேனா அமைப்பை தடை செய்யக் கூடாது என அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா விமான சேவைகளை புறக்கணிக்க தீர்மானம்

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை பயன்படுத்துவதில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத- குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் முடிவு செய்துள்ளன.

கடத்தல் நாடகம் ஆடி கொட்டாஞ்சேனையில் மறைந்திருந்த ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் கைது


வென்ளை வேனில் வந்த பொலிஸார் கடத்திச் சென்றதாகவும் சிலாபம் பகுதியில் தமது அமைப்பினால் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பில் புகைப்படங்களை காண்பித்து தன்னிடம் விசாரனைகளை மேற்கொண்டதாகவும் கூறி நாடகமாடிய

அஸாத்சாலி தவ்ஹீத் ஜமாஅத்தை மன்னிப்பு கேட்கும்படி சொல்வதை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

அல்குர்ஆனை அவமதித்தமைக்காக பொது பலசேனா பகிரங்க மன்னிப்புக்கேட்காத வரை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மன்னிப்புக்கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள உலமா கட்சி இது விடயத்தில் அரசியல்வாதியான அஸாத்சாலி தவ்ஹீத் ஜமாஅத்தை மன்னிப்பு கேட்கும்படி சொல்வதை வன்மையாக கண்டித்துள்ளது.

ஜெனிவா பிரேரணையை எதிர்த்தும் அரசை ஆதரித்தும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்.

ஜெனிவா பிரேரணையை எதிர்த்தும் அரசை ஆதரித்தும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் கொழும்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தை காணலாம்.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar