BREAKING NEWS
Showing posts with label ULAMA party. Show all posts
Showing posts with label ULAMA party. Show all posts

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

 


பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா? 

பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா?

இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை.

ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள்.

பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். 

அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும்.

ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா?

இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம்.

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை.


முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். 

அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்?


பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு தெரியும்.


சிங்க‌ள‌ ம‌க்க‌ளில் உள்ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ள் எந்த‌ அர‌சிய‌லை விரும்புகிறார்க‌ளோ அந்த‌ அர‌சிய‌லை அர‌வ‌ணைத்து செல்வ‌தே முஸ்லிம்க‌ளுக்கு சிற‌ந்த‌தாகும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

உல‌மா க‌ட்சி

نشاطات حزب العلماء المسلمين سري لانكا

 


ان حزب العلماء يتحدث عن وحدة المجتمع المسلم منذ نشأته وضرورة العيش مع السنهاليين والتاميل الذين يعيشون في هذا البلد.


 كما يؤكد حزبنا على السياسة الروحية ، فإنه يروج لسياسة خالية من الكذب والخداع والاحتيال والخداع.


 ليس ذلك فحسب ، بل تستمر في الدعوة إلى توحيد جميع المسلمين ، بغض النظر عن اختلافاتهم الطائفية.


 لقد أسس حزب العلماء نفسه كحزب ضد أي تطرف وإرهاب في هذا البلد.  ونتيجة لذلك ، كان حزب العلماء يدعم بشكل مباشر الرئيس السابق ماهيندا راجاباكسي منذ عام 2005 ، الذي أدان الإرهاب بشكل مباشر وسعى إلى إنهاء الحرب.


 الإرهاب يعني أن حزب العلماء لن يقبل بأي تطرف سواء أكان سنهاليًا أم تاميلًا أم مسلمًا.  يواصل حزبنا إدانة كافة أشكال العنصرية والتطرف والإرهاب.


 ننصح المسلمين دائمًا بقبول سياسي غالبية السنهاليين في هذا البلد ، والاستمرار في إخبار الناس بمبدأ أن على المسلمين اتباع سياسة المصالحة وأن كل ما يفعلونه يجب ألا يؤدي إلى صراع عرقي.  كما يدعو حزب العلماء إلى إحلال السلام في البلاد وخلق التفاهم بين الناس من جميع الأعراق من خلال كونه "لنكن سريلانكيين"

الشيخ- مبارك عبد المجيد

متخرج بجامعة الإمام محمد بن سعود الإسلامية  قسم  الثقافة 

رئيس  حزب العلماء.

20 தோற்கும் நிலை உறுதியாக‌ தெரிந்த‌து.



 உண்மையில் 20வ‌து திருத்த‌ யாப்பு பாராளும‌ன்ற‌த்துக்கு வ‌ந்த‌ போது அர‌சுக்கு நேர‌டி ஆத‌ர‌வாக‌ 145 ம‌ட்டுமே இருந்த‌து.

அர‌சில் மொத்த‌ம் இருப்ப‌து 150


அதில் 20ஐ எதிர்ப்ப‌தாக‌ மைத்திரியும் இன்னொரு சுத‌ந்திர‌ க‌ட்சி உறுப்பின‌ரும் விஜ‌ய‌தாச‌ ராஜ‌ப‌க்ஷ‌வும் கூறின‌ர்.

150- 3= 147.


அத‌னால் 20 தோற்கும் நிலை உறுதியாக‌ தெரிந்த‌து.


இத‌ற்கிடையில் வாசுதேவ‌வும், விம‌லும்  கொஞ்ச‌ம் மிர‌ட்டுவ‌து போல்  பேசின‌ர். இவ‌ர்க‌ள் எதிர்த்து வாக்களித்தால் என்ன‌ செய்வ‌து என்ற‌ அச்ச‌ம் அர‌சுக்கு இருந்த‌து. 

அவ்வாறு ந‌ட‌ந்தால் 145 என்றால் ச‌ட்ட‌ம் ப‌டு தோல்வி. இத‌னால் எதிர்க்க‌ட்சியிலிருந்தும் உறுப்பின‌ர் பெற‌ வேண்டும் என்ற‌ நிலை அர‌சுக்கு வ‌ந்த‌து.


இந்த‌ நிலையில் அர‌ச‌ த‌ர‌ப்பு ஹ‌ரீசிட‌ம் பேசிய‌து. அவ‌ர் சாத‌க‌மாக‌ ப‌தில் த‌ந்தார்.


அதே போல் ட‌யானாவும், அர‌விந்த‌ குமாரும் அர‌சை ஆத‌ரிப்ப‌தாக‌ உறுதியாக‌ சொல்ல‌வில்லை. ஆத‌ரிக்க‌லாம், எதிர்க்க‌லாம் என்ற‌ நிலை இருந்த‌து.


ஆனால் அர‌சை ஆத‌ரிப்ப‌து என்ப‌தில் மு. கா குழு உறுதியாக‌ இருந்த‌து.


அந்த‌வ‌கையில் மு. கா, ம‌.கா உறுப்பின‌ர்க‌ள் 6 பேர் வாக்க‌ளித்து 151 என்ற‌ எண்ணிக்கையில் 20 வெற்றி பெற்ற‌து.

க‌டைசி நேர‌த்தில் மைத்திரி த‌விர‌ ம‌ற்ற‌வர்க‌ளும், எதிர்க்க‌ட்சி இருவ‌ரும் ஆத‌ரித்த‌ன‌ர். 156 ஆகிய‌து.

சில‌ வேளை ட‌யானாவும், அர‌விந்த‌குமாரும் வ‌ராம‌ல் விட்டிருந்த‌ நிலையில் மு.காவும் ம‌. காவும் ஆத‌ர‌வ‌ளிக்காத‌ நிலை ஏற்ப‌ட்டிருந்து விம‌லும், சு. க‌ட்சி உறுப்பின‌ரும் எதிர்த்திருந்தால் 20 தோல்வியுற்றிருக்கும்.


 அர‌சுக்குள்ளும் எந்த‌ப்புற்றில் எந்த‌ பாம்பு இருக்கும் என‌ எவ‌ருக்கும் சொல்ல‌ முடியாது.


இத‌ன் கார‌ண‌மாக‌ ஹ‌ரீசின் வாக்குறுதியை ந‌ம்பி அர‌சு ந‌ம்பிக்கையுட‌ன் இருந்த‌து.


அத‌னால் ஹ‌ரீஸ் த‌லைமையிலான‌ உறுப்பின‌ர்க‌ள் ஆத‌ரித்த‌தால்தான் ந‌ம்பிக்கையுட‌ன் 20 வெற்றி பெற்ற‌து என்ப‌தே உண்மை.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

த‌லைவ‌ர், உல‌மா க‌ட்சி.

செய‌லாள‌ர் நாய‌க‌ம்

ஸ்ரீ ல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்

முஸ்லிம் உலமாக் கட்சியின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழா




( மினுவாங்கொடை நிருபர் )
   ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌ சிறிசேன‌ த‌லைமையிலான‌ ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியின் கூட்டுக் க‌ட்சிக‌ளில் ஒன்றான‌ முஸ்லிம் உல‌மாக்  க‌ட்சியின் 12 ஆவ‌து ஆண்டு நிறைவு விழா,  அண்மையில்  கொழும்பு -  ம‌ருதானையில்  ந‌டை பெற்ற‌து. இத‌ன் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் மெளலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் உரையாற்றுவ‌தையும், க‌ட்சியின் செய‌லாளர் மௌல‌வி அஸ்வ‌ர் பாக்க‌வி, பொருளாள‌ர் அர்ஷாத், செந்த‌மிழ் க‌விஞ‌ர் தாஜ்ம‌ஹான்,  க‌ட்சியின் உய‌ர்பீட‌ உறுப்பின‌ர்க‌ளான‌ மௌல‌வி ந‌சீர் அஹ‌ம‌த்,  மௌல‌வி ஜெஸ்மின் உள்ளிட்ட உய‌ர்பீட‌ உறுப்பின‌ர்க‌ள் கலந்து கொண்டிருப்பதையும் காண‌லாம்.
( ஐ. ஏ. காதிர் கான் )

ம‌த‌ம் வேறு அர‌சிய‌ல் வேறு என்ப‌து


ம‌த‌ம் வேறு அர‌சிய‌ல் வேறு என்ப‌து ஜ‌ன‌நாய‌க‌த்தின் கொள்கை அல்ல‌, மாறாக‌ ந‌வீன‌ கிறிஸ்த‌வ‌த்தின் கொள்கையே அது.
ஒரு கால‌த்தில் ஐரோப்பா இருண்ட‌ யுக‌த்தில் இருந்த‌ போது கிறிஸ்த‌வ‌ பாதிரிக‌ளை ச‌மூக‌த்தை த‌லைமை தாங்கின‌ர். அவ‌ர்க‌ள் உண்மையான‌ கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்தின் அடிப்ப‌டைக‌ள் மூல‌ம் ஆட்சி செய்யாது த‌ங்க‌ள் சுய‌ந‌ல‌னுக்காக‌ ம‌க்க‌ளை ப‌க‌டைக்காய்க‌ளாக‌ ந‌டாத்தின‌ர்.
இத்த‌கைய‌ கிறிஸ்த‌வ‌ த‌லைமைக‌ளுக்கெதிராக‌ ஐரோப்பிய‌ கிறிஸ்த‌வ‌ ம‌க்க‌ளால் ம‌க்க‌ள் புர‌ட்சி முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து. இப்புர‌ட்சியை ம‌த‌த்தின் பெய‌ரால் அட‌க்கி ஒழிக்க‌ முற்ப‌ட்ட‌ போதுதான் ம‌த‌த்தை கோவில்க‌ளுக்கு வைத்துக்கொள்ளுங்க‌ள், ம‌த‌ம் வேறு அர‌சிய‌ல் வேறாக‌ இருக்க‌ விடுங்க‌ள் ஐரோப்பிய‌ கிறிஸ்த‌வ‌ ம‌க்க‌ளினால் சொல்ல‌ப்ப‌ட்ட‌து. ம‌ற்ற‌ப‌டி ஜ‌ன‌நாய‌க‌த்தின் அடிப்ப‌டை கோட்பாட்டில் அர‌சிய‌லும் ம‌த‌மும் வேறாக‌த்தான் இருக்க‌ வேண்டும் என்று ச‌ட்ட‌ம் இல்லை. மாறாக‌ ம‌னித‌ர்க‌ள் அனைவ‌ரும் ஆட்சியாள‌ர்க‌ள் என்ற‌ ஜ‌ன‌நாய‌க‌  கோட்பாட்டுக்கிண‌ங்க‌ ம‌த‌ம் சார்ந்தோரும் ஆட்சியாள‌ராக‌லாம். அதாவ‌து அர‌சிய‌லும் ம‌த‌மும் ஒன்றுத‌ச்ன்.

ஆனால் ஐரோப்பா ம‌த‌த்தின் பெய‌ரால் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌த‌ன் வெறுப்பே ம‌த‌ம் வேறு அர‌சிய‌ல் வேறு என்ப‌தாகும். இந்த‌ வாத‌ம் இஸ்லாமிய‌ உல‌குக்கு ஏற்புடைய‌த‌ல்ல‌. இஸ்லாத்தை பொறுத்த‌வ‌ரை ம‌த‌ம் வேறு அர‌சிய‌ல் வேறு அல்ல‌. மாறாக‌ அர‌சிய‌லுக்கு அடிப்ப‌டையே மார்க்க‌ம்தான் என்ப‌து இஸ்லாத்தின் கொள்கை. ஜ‌ன‌நாயக‌மும் இத‌ற்கு முர‌ண்ப‌ட்ட‌த‌ல்ல‌.

ஜ‌ன‌நாய‌க‌ முறையில் முஸ்லிம்க‌ள் நாங்க‌ள் செல்ல‌ வேண்டும் என்றில்லை. ந‌ம‌து இஸ்லாமிய‌ பாதையில் ஜ‌ன‌நாய‌க‌த்தையும் அணுச‌ரித்து செல்கின்றோம்.
கைப‌ர் யுத்த‌ம் சூழ்ந்திருந்த‌ போது பார‌சீக‌ர்க‌ளின் யுத்த‌ முறையை ச‌ல்மான் ர‌ழி கூறிய‌ போது அது காபீர்க‌ளின் வ‌ழி முறை என‌ ந‌பியுள்ளாஹ் த‌ட்டிக்க‌ழிக்க‌வில்லை. மாறாக‌ அந்த‌ முறையை இஸ்லாத்துக்காக‌ பாவித்தார்க‌ள். அது போல் ஜ‌ன‌நாய‌க‌த்தை ந‌ம‌து வ‌ழிக்கு ஏதுவாக‌ பாவிக்க‌ முடியும்.
கொலைக்கு கொலை என்ப‌து இஸ்லாத்தில் ம‌ட்டும‌ல்ல‌ ஜ‌ன‌நாய‌க‌ நாட்டிலும் அதுதான் ச‌ட்ட‌ம். ஜ‌ன‌நாய‌க‌த்துக்கு பேர் போன‌ இந்தியாவில் அண்மையில் ப‌ல‌ தூக்கு த‌ண்ட‌னைக‌ள் நிறைவேற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை நிறைவேற்ற‌ப்ப‌டும் வித‌த்தில்தான் வித்தியாச‌ம் இருக்கின்ற‌தே த‌விர‌ த‌ண்ட‌னையில் அல்ல‌.
அதே போல் ஜ‌ன‌நாய‌க‌த்தின் இஸ்லாத்துக்கு முர‌ணான‌ ச‌ட்ட‌ங்க‌ளை நாம் க‌ட்டாயம் பின்ப‌ற்ற‌த்தான் வேண்டும் என்றில்லை. உதார‌ண‌மாக‌ ஓரின‌ சேர்க்கை. இதை ஜ‌ன‌நாய‌க‌ம் அனும‌தித்தாலும் அது க‌ட்டாய‌ம் என்றில்லை.

ஆக‌வே ஜ‌ன‌நாய‌க‌த்தை ந‌ம‌க்கு ஏதுவாக‌ நாம் ஆக்கிக்கொள்ள‌ முடியும். இதுதான் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மிக‌ப்பெரிய‌ ப‌ல‌வீன‌ங்க‌ளில் ஒன்று.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ள் ஐம்ப‌துக்கு ஐம்ப‌து என்ற‌ முறையிலாவ‌து ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும்

உள்ளூராட்சி தேர்த‌ல் அறுப‌துக்கு நாற்ப‌து என்ற‌ முறையில் ந‌டைபெறும் என‌ அர‌சு தீர்மானித்திருப்ப‌து சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு செய்யும் அநியாய‌மாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.
எம்மை பொறுத்த‌வ‌ரை வ‌ட்டார‌, ம‌ற்றும் தொகுதிவாரி தேர்த‌ல் முறை என்ப‌து சிறு பான்மை ம‌க்க‌ளை ந‌சுக்கும் நோக்குட‌னேயே க‌ட‌ந்த‌ ஆட்சிக்கால‌த்தில் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை அன்றுமுத‌ல் சொல்லி வ‌ருகிறோம். இத‌ற்காக‌ சிறுபான்மை இன‌த்தின் அமைச்ச‌ராக‌ இருந்த‌ மாகாண‌ச‌பை, உள்ளூராட்சி அமைச்ச‌ர் அதாவுள்ளா ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டார்.
உல‌மா க‌ட்சியை பொறுத்த‌ வ‌ரை புதிய‌ தேர்த‌ல் முறையை நிராக‌ரித்து வ‌ந்த‌துட‌ன் அப்ப‌டித்தான் தேவை என்றால் ஐம்ப‌துக்கு ஐம்ப‌து என‌ விகிதாசார‌மும், தொகுதி முறையும் இருக்க‌ வேண்டும் என்ற‌ நிலைப்பாட்டிலேயே இருக்கிற‌து. கார‌ண‌ம் இந்த‌ புதிய‌ முறை மூல‌ம் கிழ‌க்குக்கு வெளியே உள்ள‌ முஸ்லிம்க‌ள் த‌ம‌து பிர‌திநிதித்துவ‌த்தை க‌ணிச‌மாக‌ இழப்ப‌ர்.
இன்றைய‌ அர‌சாங்க‌த்தில் ப‌திவு பெற்ற‌ அனைத்து சிறுபான்மை க‌ட்சிக‌ளும் அங்க‌ம் வ‌கித்தும் அறுப‌துக்கு நாற்ப‌து என‌ முடிவு செய்துள்ள‌மை சிறுபான்மை க‌ட்சிக‌ளுக்கு கிடைத்த‌ தோல்வியாகும். இது விட‌ய‌த்தை ஆணித்த‌ர‌மாக‌ எடுத்து சொல்ல‌ வேண்டிய‌ எதிர் க‌ட்சியான‌ த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பு ம‌வுன‌மாக‌ இந்த‌ அநீதிக்கு துணை போயுள்ள‌து.

ஆக‌வே உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ள் ப‌ழைய‌ விகிதாசார‌ முறைப்ப‌டி அல்ல‌து ஐம்ப‌துக்கு ஐம்ப‌து என்ற‌ முறையிலாவ‌து ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி அர‌சை மீண்டும் கோருகிற‌து.

மாற்று ம‌த‌த்த‌வ‌ர்க‌ள் ஏற்பாடு செய்யும் இப்தாருக்கு போக‌லாமா


எல்லாப்பிர‌ச்சினையும் முற்றி இப்போது மாற்று ம‌த‌த்த‌வ‌ர்க‌ள் ஏற்பாடு செய்யும் இப்தாருக்கு போக‌லாமா என்ற‌ பிர‌ச்சினையை கிள‌ப்பி விட்டுள்ளார்க‌ள்.
நோன்பு துற‌த்த‌ல் ஒரு வ‌ண‌க்க‌ம் என்றும் விருந்துக்கு செல்ல‌ல் என்ப‌து ஆகுமாக‌ இருந்தும் இப்தாருக்கு செல்ல‌ல் கூடாது என‌ சில‌ர் ப‌திவிடுவ‌தை காண‌க்கூடிய‌தாக‌ உள்ள‌து.

இன்றைய‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை பிடித்த‌ முசீப‌த்துதான் எடுத்த‌ உட‌னே ஹ‌ராம், ஹ‌ராம் என‌ ப‌த்வாக்க‌ள் வ‌ழ‌ங்குவ‌தாகும். மாற்று ம‌த‌த்த‌‌வ‌ர்க‌ளின் இப்தாரில் க‌ல‌ந்து கொள்ள‌ வேண்டாம் என‌ குர் ஆன் ஹ‌தீத் சொல்லியிருந்தால் அதில் எந்த‌ மாற்றுக்க‌ருத்தும் இல்லை. இந்த‌ நிலையில் எங்கும் எந்த‌ இட‌த்திலும் இப்தார் செய்வ‌து ஆகும் என்ற‌ அடிப்ப‌டையை புரிந்து கொள்கிறோம்.

அதே வேளை இப்தார் என்ப‌து ஒரு வ‌ண‌க்க‌ம் என்ப‌தால் அத‌னை மாற்று ம‌த‌த்த‌வ‌ரின் இட‌த்தில் செய்வ‌து கூடாது என்கிறார்க‌ள். ந‌பிய‌வ‌ர்க‌ள் ஒரு யூத‌ பெண்ம‌ணியின் அழைப்பை ஏற்று அவ‌ர் வீட்டுக்கு சென்று விருந்து உண்டார்க‌ள் என்ற‌ நேர‌டி ஹ‌தீதை ஏற்றுக்கொள்ளும் இவ‌ர்க‌ள் விருந்து உண்ப‌து ஆகும் என்றும் இப்தார் கூடாது என்றும் சொல்கிறார்க‌ள்.

இஸ்லாத்தை பொறுத்த‌ வ‌ரை வ‌ண‌க்க‌ வ‌ழிபாடுக‌ள் யாவும் விள‌க்க‌மாக‌ சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அதேவேளை வ‌ண‌க்க‌த்தை முஸ்லிம் அல்லாத‌வ‌ர்க‌ளின் இட‌த்தில் நிறைவேற்ற‌ கூடாது என்ற‌ த‌டை வ‌ர‌வில்லை. முஸ்லிம் அல்லாதாரின் வ‌ண‌க்க‌ஸ்த‌ல‌ங்க‌ளில் நேர்ச்சை போன்ற‌வ‌ற்றை நிறைவேற்ற‌ கூடாது என‌ ஹ‌தீதில் வ‌ந்திருந்தாலும் சில‌ வ‌ண‌க்க‌ங்க‌ளை முஸ்லிம் அல்லாதாரின் இட‌த்தில் நிறை வேற்ற‌லாம் என்ப‌தை ந‌பிக‌ளார் வாழ்வில் நாம் காண்கிறோம்.

ம‌க்கா கைப்ப‌ற்றப்ப‌டு முன் அது காபிர்க‌ளின் க‌ட்டுப்பாட்டிலேயே இருந்த‌து. அங்கு சிலைக‌ள் கூட‌ இருந்த‌ன‌. ஆனாலும் ந‌பிய‌வ‌ர்க‌ள் ஹ‌ர‌மில் தொழ‌க்கூடிய‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள்.
இந்த‌வ‌கையில் சில‌ வ‌ண‌க்க‌ங்க‌ளை முஸ்லிம் அல்லாதார் இட‌த்தில் நிறைவேற்ற‌லாம் என்று காண்கிறோம்.

மாற்று ம‌த‌த்த‌வ‌ர் இட‌த்தில் வ‌ண‌க்க‌த்தை நிறைவேற்ற‌க்கூடாது என‌ பொதுவான‌ த‌டை இருந்திருக்குமாயின் முஸ்லிம் ச‌மூக‌ம் பாரிய‌ பல‌ பிர‌ச்சினைக‌ளுக்கு முக‌ம் கொடுக்க‌ வேண்டி வ‌ரும்.
உதார‌ண‌மாக‌ நாம் தூர‌ ப‌ய‌ண‌ம் போனால் முஸ்லிம் அல்லாதோரின் ஹோட்ட‌ல்க‌ளில்தான் த‌ங்க‌ வேண்டி வ‌ருகிற‌து. அங்கு அறையில் நாம் தொழ முடியாது என‌ இத்த‌கைய‌வ‌ர்க‌ள் சொல்ல‌ வ‌ருகிறார்க‌ளா? அதே போல் ஹ‌ஜ்ஜுக்கு நாம் செல்லும் போது முஸ்லிம் அல்லாதோரின் விமான‌த்தில் செல்கிறோம். ஹ‌ஜ்ஜுக்கு நிய்ய‌த் வைப்ப‌து க‌ட்டாய‌ வ‌ண‌க்க‌மாகும். அத‌னை மாற்று ம‌த‌த்த‌வ‌ரின் விமான‌த்தில் வைத்து அந்த‌ வ‌ண‌க்க‌த்தை செய்ய‌லாமா? அதே போல் விமான‌த்தில் அல்ல‌து க‌ப்ப‌லில், புகையிர‌த‌த்தில்  தொழுகிறோம். அவை மாற்றாருக்கு சொந்த‌மாக‌ இருந்தால் அதில் தொழ‌ முடியாது என்று சொல்வ‌து எத்த‌கைய‌ முட்டாள்த‌ன‌ம்?

அதே போல் நாம் பிர‌யாண‌ம் சென்றால் வ‌ழியில் நோன்பு துற‌க்க‌ வேண்டி ஏற்ப‌ட்டால் முஸ்லிம் க‌டை கிடைக்காவிட்டால் மாற்று ம‌த‌த்த‌வ‌ரின் க‌டைக்கு சென்று த‌ண்ணீராவ‌து அருந்தி நோன்பு துற‌த்த‌ல் என்ற‌ வ‌ண‌க்க‌த்தை நிறைவேற்றுவ‌தும் கூடாது என‌ சொல்ல‌ வேண்டி வ‌ரும்.
மாற்று ம‌த‌த்த‌‌வ‌ரின் அழைப்பை ஏற்று அவ‌ர‌து இட‌த்தில்  இப்தார் செய்ய‌ கூடாது ஆனால் நாமாக‌ மாற்றார் ஹோட்ட‌லுக்கு சென்று அந்த‌ வ‌ண‌க்க‌த்தை நிறைவேற்ற‌லாம் என‌ சொல்ல‌ வ‌ருகிறார்க‌ளா?.

ஆக‌வே இஸ்லாம் ப‌ற்றிய‌ தெளிவு இல்லாம‌ல் அரை குறையாக‌ சில‌தை க‌ற்றுக்கொண்டு ப‌த்வா கொடுக்கும் ப‌டுவாக்க‌ள் திருந்த‌ வேண்டும் அல்ல‌து ச‌மூக‌ம் அவ‌ர்க‌ளை எச்ச‌ரிக்க‌ வேண்டும். இது போன்ற‌ விட‌ய‌ங்க‌ளில் த‌னி ந‌ப‌ர்க‌ள் கூடி ப‌த்வா கொடுப்ப‌தை விடுத்து உல‌மாக்க‌ள் ஓரிட‌த்தில் கூடி ஆராய்ந்து தெளிவு க‌ண்ட‌பின் ம‌க்க‌ளுக்கு சொல்ல‌ வேண்டும் என்ப‌தை உல‌மா க‌ட்சி நீண்ட‌ கால‌மாக‌ சொல்லி வ‌ருகிற‌து.

த‌டி எடுத்த‌வ‌ன் எல்லாம் த‌ண்ட‌ல்கார‌ன் என்ப‌து போல் ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌த்தில் எழுத‌ தெரிந்த‌வ‌ர்க‌ள் எல்லாம் முஃப்திக‌ளாகி விட்ட‌ மோச‌மான‌ சூழ‌லில் வாழும் நாம் மிக‌ எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும் என‌ கேட்டுக்கொள்கிறோம்.
- மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத், க‌பூரி, ந‌த்வி, ம‌த‌னி.
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர். 

மல்லிகைத்தீவு சம்பந்தமாக மட்டு. ஆயரின் கருத்து தவறானது.- உலமா கட்சி

மல்லிகைத்தீவு சிறுமியர் துஷ்பிரயோக சம்பவத்தை எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் கவனத்தில் கொள்ளவில்லை என மட்டு. ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா கூறியிருப்பது கவலை தருவதுடன் அவரது பொது அறிவையும் கேள்விக்குட்படுத்துகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

அண்மையில் கௌரவ மட்டக்களப்பு ஆயர் விடுத்துள்ள அறிக்கையில் மதத்தலைவர்கள் அரசியலுக்குள் இறங்குவது பிரச்சினைகளின் தோற்றுவாயாக இறங்கும் என கூறிக்கொண்டே முழுக்க முழுக்க அரசியலையே மதிப்புக்குரிய ஆயர் பேசியுள்ளதன் மூலம் தானும் அரசியல்வாதிதான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.
மல்லிகைத்தீவு சம்பவம் பற்றி அறிய வந்த போது அதனை முதலில் உலமா கட்சி கண்டித்ததுடன் இது விடயத்தில் இனவாதமாக பார்க்காது குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கோரியிருந்தது. அது போன்றே இன்னும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் அறிக்கை கண்டித்து விட்டிருந்தனர். இவை பல ஊடகங்களில் வெளிவந்தும் அவற்றை படிக்காமல், அல்லது தேடாமல் ஒரேயடியாக பிழையாக குற்றம் சொல்வது சமயத்தலைவர் என்ற முறையில் ஆயருக்கு அழகானதல்ல.

மல்லிகைத்தீவு சம்பவம் முஸ்லிம் இளைஞர்களால் நடத்தப்படவில்லை என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் பொலிஸ் அடையாள அணி வகுப்பில் நிரூபித்துள்ளனர். அப்பெண்கள் வேறு ஏதும் காரணத்துக்காக அடையாளம் காணவில்லை என  கூறியிருப்பார்களோ என ஆயர் சந்தேகப்படுவது தமிழ் பெண்களுக்கு இழிவானதாகும். அதாவது பணம் போன்றவற்றுக்காக இவ்வாறு நடந்திருக்கலாம் என்பதாகவே ஆயரின் கருத்து உள்ளது. அப்படி இருக்குமாயின் இதையே அப்பெண்கள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாத சக்திகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தாம் முஸ்லிம்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக முதலில் சொல்லியிருக்கலாமல்லவா. காரணம் அடையாள அணிவகுப்பில் பணம் வாங்கியிருந்தால் அவர்கள் பணம் பெறுவதில் வல்லவர்கள் என்றல்லவா தெரிகிறது. ஆனாலும் அந்தப்பெண்கள் அடையாள அணிவகுப்பில் உண்மையையே சொல்லியுள்ளதாகவே நாம் கருதுவதுடன் அவர்கள் உண்மை பேசும் தமிழ் பெண்கள் என்பதும் அவர்களை வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள் தமிழ் சினிமா பாணியில் தம்மை முஸ்லிம் என பொய்யாக சொல்லியிருக்கலாம் என்பதையும் புரிய முடியாத உலகிலா நாம் வாழ்கிறோம்? ஒரு இந்து தொப்பியை போட்டுக்கொண்டு இந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதை எத்தனை இந்திய சினிமாக்களில் காட்டியுள்ளனர் என்பது ஆயர் அறியாததா?

அத்துடன் சமயத்தலைவரான ஞானசாரவை கைது செய்துதான் விசாரிக்க வேண்டுமா என ஆயர் கேட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது. எந்தவொரு மதத்தலைவர்களையும் கைது செய்யாமல் விசாரிக்க வேண்டும் என நாட்டில் சட்டம் இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம். ஆனால் அப்படியொரு சட்டம் இல்லாத நிலையில் அதுவும் பாரிய பல குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவரை, நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்பட்டும் வராத ஒருவரை, அநியாயமாக இன மோதல்களுக்கு வித்திடுபவரை கைது செய்யாமல் விசாரிக்க வேண்டும் என ஆயர் கூறுவது எதற்காக என்ற சந்தேகம் எழுகிறது. இக்குற்றங்களை ஒரு மௌலவி செய்தால் மதிப்பிற்குரிய ஆயர் இவ்வாறு நியாயம் சொல்லியிருப்பாரா?

ஆகவே சமயத்தலைவர்கள் அரசியலில் நடக்கும் தவறுகளையும, அநியாயங்களையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற அடிப்படையிலேயே ஆயரும் அரசியல் பேசியுள்ளமை வரவேற்புக்குரியதாகினும் அவர் பேசிய அனைத்தும் தவறாகவும் அரை குறை விளக்கம் கொண்டதாகவும் இருக்கிறது என்பதையும் இஸ்லாம் சமய தலைவர்களின் அரசியல் கட்சி என்ற வகையில் எமது கவலையை தெரிவித்துக்கொள்வதோடு ஆயர் விரும்பினால் இவை பற்றி ஆயருடன் சினேகபூர்வமாக சந்தித்து உரையாடவும் உலமா கட்சி தயாராக உள்ளது என தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் க‌த்னா செய்வ‌து

ما حكم ختان البنات؟ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் க‌த்னா செய்வ‌து இஸ்லாம் காட்டிய‌ வ‌ழி என்ப‌தை ஆதார‌ங்க‌ளுட‌ன் விள‌க்கும் ப‌த்வா.

منذ 2007-07-28
السؤال: بالطلب المقدم من السيد: ... قال فيه: إن له بنتين صغيرتين، إحداهما ست سنوات والأخرى سنتان، وأنه قد سأل بعض الأطباء المسلمين عن ختان البنات، فأجمعوا على أنه ضار بهن نفسياً وبديناً، فهل أمر الإسلام بختانهن أو أن هذا عادة متوارثة عن الأقدمين فقط؟
الإجابة: الرقـم المسلسل: 709
الموضوع: (1202) ختان البنات.
التاريخ: 29/01/1981م.
الـمـفـتـــي: فضيلة الإمام الأكبر الشيخ جاد الحق علي جاد الحق.

المراجع:

1- اتفق الفقهاء على أن الختان في حق الرجال والخفاض في حق الإناث مشروع، ثم اختلفوا في كونه سنة أو واجباً.
2- الختان للرجال والنساء من صفات الفطرة التي دعا إليها الإسلام وحث على الالتزام بها.

الجواب:

قال الله تعالى: {ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين} [النحل: 123]، وفى الحديث الشريف (متفق عليه - البخاري في كتاب بدء الخلق وفى باب الختان في كتاب الاستئذان - ومسلم في باب فضائل ابراهيم - في كتاب الفضائل ): "اختتن إبراهيم وهو ابن ثمانين سنة".

وروى أبو هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "الفطرة خمس أو خمس من الفطرة الختان والاستحداد ونتف الإبط وقص الشارب وتقليم الأظافر" (متفق عليه - شرح السنة للبغوى ج - 12 ص 109 باب الختان)، وقد تحدث الإمام النووى الشافعى في المجموع (جـ1 ص 284 في تفسير الفطرة بأن أصلها الخلقة)، قال الله تعالى: {فطرة الله التي فطر الناس عليها} [الروم: 30]، واختلف في تفسيرها في الحديث قال الشيرازي والماوردي وغيرهما: هي الدين، وقال الإمام أبو سليمان الخطابي: فسرها أكثر العلماء في الحديث بالسنة، ثم عقب النووي بعد سرد هذه الأقوال وغيرها بقوله قلت تفسير الفطرة هنا بالنسبة هو الصواب.

ففي صحيح البخاري عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال: "من السنة قص الشارب ونتف الإبط وتقليم الأظافر"، وأصح ما فسر به غريب الحديث تفسيره بما جاء في رواية أخرى، لاسيما في صحيح البخاري.

وقد اختلف أئمة المذاهب وفقهاؤها في حكم الختان: قال ابن القيم (هامش شرح السنة للبغوى ج - 2 ص 110 في باب الختان ) في كتابه (تحفة المودود): اختلف الفقهاء في ذلك.
فقال الشعبي وربيعة والأوزاعي ويحيى بن سعيد الأنصاري ومالك والشافعي وأحمد هو واجب، وشدد فيه مالك حتى قال: من لم يختتن لم تجز إمامته ولم تقبل شهادته، ونقل كثير من الفقهاء عن مالك، أنه سنة، حتى قال القاضي عياض: الاختتان عند مالك وعامة العلماء سنة، ولكن السنة عندهم يأثم تاركها، فهم يطلقونها على مرتبة بين الفرض والندب، وقال الحسن البصرى وأبو حنيفة لا يجب بل هو سنة.

وفى فقه الإمام أبى حنيفة (الاختيار شرح المختار للموصلي ج - 2 ص 121 في كتاب الكراهية) إن الختان للرجال سنة، وهو من الفطرة، وللنساء مكرمة، فلو اجتمع أهل مصر (بلد) على ترك الختان قاتلهم الإمام، لأنه من شعائر الإسلام وخصائصه.

والمشهور في فقه الإمام مالك في حكم الختان للرجال والنساء كحكمه في فقه الإمام أبى حنيفة.

وفقه الإمام الشافعي (ج - 1 ص 297 من المهذب للشيرازي وشرحه المجموع للنووي) إن الختان واجب على الرجال والنساء.

وفقه الإمام أحمد بن حنبل (المغنى لابن قدامة ج - 1 ص 70 مع الشرح الكبيرة) إن الختان واجب على الرجال، ومكرمة في حق النساء وليس بواجب عليهن، وفي رواية أخرى عنه أنه واجب على الرجال والنساء كمذهب الإمام الشافعي.

وخلاصة هذه (الافصاح عن معاني الصحاح ليحيى بن هبيرة الحنبلي ج - 1 ص 206 ) الأقوال إن الفقهاء اتفقوا على أن الختان في حق الرجال والخفاض في حق الإناث مشروع، ثم اختلفوا في وجوبه، فقال الإمامان أبو حنيفة ومالك هو مسنون في حقهما وليس بواجب وجوب فرض ولكن يأثم بتركه تاركه، وقال الإمام الشافعي هو فرض على الذكور والإناث، وقال الإمام أحمد هو واجب في حق الرجال، وفى النساء عنه روايتان أظهرهما الوجوب.

والختان في شأن الرجال قطع الجلدة التي تغطى الحشفة، بحيث تنكشف الحشفة كلها، وفى شأن النساء قطع الجلدة التي فوق مخرج البول دون مبالغة في قطعها ودون استئصالها، وسمى بالنسبة لهن (خفاضاً).

وقد استدل الفقهاء على خفاض النساء بحديث أم عطية رضي الله عنها قالت: إن امرأة كانت تختن بالمدينة، فقال لها النبي صلى الله عليه وسلم: "لا تنهكى، فإن ذلك أحظى للزوج، وأسرى للوجه".
وجاء ذلك مفصلاً في رواية أخرى تقول: (إنه عندما هاجر النساء كان فيهن أم حبيبة، وقد عرفت بختان الجوارى، فلما رآها رسول الله صلى الله عليه وسلم قال لها: "يا أم حبيبة هل الذى كان في يدل، هو في يدك اليوم"، فقالت: نعم يا رسول الله، إلا أن يكون حراماً فتنهانى عنه، فقال رسول الله صلى الله عليه وسلم: "بل هو حلال، فادني منى حتى أعلمك"، فدنت منه، فقال: "يا أم حبيبة، إذا أنت فعلت فلا تنهكى، فإنه أشرق للوجه وأحظى للزوج"، ومعنى: "لا تنهكي" لا تبالغي في القطع والخفض ، ويؤكد هذا الحديث الذي رواه أبو هريرة رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم قال: "يا نساء الأنصار اختفضن (أى اختتن) ولا تنهكن" (ألا تبالغن في الخفاض)، وهذا الحديث جاء مرفوعاً (نيل الأوطار للشوكانى جـ1 ص113 ) برواية أخرى عن عبد الله بن عمر رضي الله عنهما.

وهذه الروايات وغيرها تحمل دعوة الرسول صلى الله عليه وسلم إلى ختان النساء ونهيه عن الاستئصال.

وقد علل هذا في إيجاز وإعجاز، حيث أوتى جوامع الكلم فقال: "فإنه أشرق للوجه وأحظى للزوج".

حزب العلماء المسلمين بسريلانكا






حزب العلماء المسلمين بسريلانكا  
حزب سياسي وديني  يرأسها العلماء المسلمون من سريلانكا  أسس في عام 2005 م ،

كان يدافع عن المسلمين ويرفع أصواتهم في المجال السياسي  ويعد نفسه ممثلا لهم في الحكومة السريلانكية حيث يشارك مع حزب رئيس البلاد

يتولى الدكتور الشيخ مبارك عبد المجيد من أحد خريج جامعة الامام محمد بن سعود الاسلامية بالمملكة العربية السعودية  رئاسة الحزب عند تأسيسه لاول مرة عام 2005 الى الوقت الحاضر،

التأسيس وأبرز الشخصيات

اجتمع بعض العلماء المسلمين في يوليو عام 2005 م  في كولومبو  وتباحثوا في قضية شعبهم  المسلم، وما أصابهم من تمزق ودمار وهلاك على يد النمور التامل  في البلاد الموزعين فيها.. وحاجة وحدة الامة المسلمة في سريلانكا تحت رئاسة العلماء المسلمين الذين يعلمون الاسلام واللغة العربية لغة القرآن الكريم  وتوجيه المسلمين  الى السياسة الاسلامية محترمين سياسة البلاد الديمقراطي، فقاموا بتأسيس حزب باسم حزب العلماء المسلمين بسريلانكا
ومن أبرز شخصيات الحزب،
1. الشيخ مبارك عبد المجيد، خريج جامعة الامام محمد بن سعود الاسلامية
2. الشيخ محمد جلال الدين محمد بدر الدين، خريج جامعة الامام محمد بن سعود الاسلامية، توفي قريبا
3. الشيخ الحافظ نصير أحمد ، من أحد كلاب جامعة الامام محمد بن سعود الاسلامية
4. الشيخ أزهر من خريج مدرسة الباقيات الصالحات في الهند
وغيرهم من العلماء المسلمين


الجذور الفكرية والعقائدية:

 يرجح حزب العلماء المسلمين بسريلانكا في أصوله الفكرية والعقائدية إلى الإسلام السني بوجه عام وعقيدة السلف الصالحين

و حزب العلماء المسلمين بسريلانكا ليس يقوم  بحث الإسلام في كل مجالات الحياة السياسية والاقتصادية والاجتماعية.

أماكن الانتشار:
ينتشر حزب العلماء المسلمين بسريلانكا في جميع مناطق سريلانكا

أهداف حزب العلماء المسلمين بسريلانكا
1. توعية المسلمين السريلانكا التمسك بالاسلام الحنيف
2. رفع صوت المسلمين ويمثل المسلمين والعلماء في سياسة البلاد
3. محاولة حماية المجتمع من الفقر زإعطاء الأغنياء فُرصة لتقديم المُساعدة لغيرهم من فئات المُجتمع،
4.  رفع الحواجز بينَ فئات المُجتمع المُختلفة، بحيث يتم نشر المودة فيما بينها عن طريق التبرُعات والاهتمام المُتبادل من جميع الأطراف.
5. تقديم المعونات للكبار في السن أو ذوي الاحتياجات الخاصّة، أو الأيتام وغيرها من الفئات،
6. رفع مُستوى الوعي بينَ النّاس
7.. حل بعض المشاكل الأساسيّة في المُجتمع، كمُشكلة الأُميّة وعدم مقدرة الأطفال على التعلُّم، بحيث ينشئ الحزب  صرحاً تعليميّاً مجانيّاً خاصّاً بها، بحيث يؤمّن فُرص التعليم للفُقراء وغير المُقتدرين ماديّاً، ويتم بناؤه بشكلٍ أساسيّ عن طريق جمع التبرُعات من الأغنياء والشركات الكبيرة
8. وحدة الامة الاسلامية والوعي عن التفرق بالفرق والجماعات الباطلة
9. القيام باصدار التقرير عن حاجة المسلمين وما يحتاجون  للسلطة

ولذا نرجو من المسلمين والجمعيات الخيرية في الدول الاسلامية وغيرها  ومن الحكام للدول الاسلامية ما يأتي:

1. تسجيل عنوان حزبنا العلماء المسلمين بسريلانكا تحت المدعويين للاجتماعات والمؤتمرات الدولية للحضور ممثلا  للحزب والشعب الاسلامي السريلانكي الذي يواجه الضغط الشديد من المتمردي التامل والبوذي
2. التكرم بتقديم الدعم المادي والمعنوي لرفع كلمة الله العليا بين أبناء سريلانكا
3. ارسال الصدقات والزكاة لتقديمها بين الفقراء والايتام وإفطار رمضان الكريم
4. الدعم المادي لبناء البيوت للذين لا يملكون اي نوع من البيوت
5. حفر الآبار
6. تكفيل الايتام المسلمين
7. مساعدات ومعونات للارامل اللاتي يواجهن صعوبة  المعيشة
8. عمارة المساجد في القرى     


وشكرا

أخوكم


الشيخ الدكتور  مبارك عبد المجيد،
 خريج جامعة الامام محمد بن سعود الاسلامية

  

عنوان الحزب
حزب العلماء المسلمين بسريلانكا
Muslim Ulama Party
21, Symonds Road
Colombo
Sri Lanka
Tel: 0094777570639
Fax: 0094112672244

வ‌ய‌தை நிர்ண‌யிப்ப‌த‌ற்கு எக்கார‌ண‌ம் கொண்டும் அனும‌திய‌ளிக்க‌ முடியாது



11 வ‌ய‌து சிறுமி க‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ல்லுற‌வுக்குட்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ செய்தியான‌து முஸ்லிம் பெண்க‌ளின் திரும‌ண‌ வ‌ய‌து ப‌ற்றிய‌ இஸ்லாத்தின் ச‌ட்ட‌த்தில் உள்ள‌ நியாய‌ங்க‌ளை வ‌லியுறுத்துகிற‌து.
இதே போன்று 14 வ‌ய‌து மாண‌வியும் பாலிய‌ல் ப‌லாத்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்டு ஒரு குழ‌ந்தைக்கும் தாயாகியுள்ளார்.

இவ்வாறு பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நியாய‌ம் வேண்டி அவ‌ளை இந்த‌ நிலைக்கு இட்டுச்சென்ற‌வ‌ர்க‌ளுக்கு நீதி ம‌ன்ற‌ம் த‌ண்ட‌னையை கொடுக்க‌லாம். ஆனாலும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கும் அவ‌ள‌து குழ‌ந்தைக்கும் இல‌ங்கை திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் இட‌மே இல்லை.
அவ‌ள் அந்த‌க்குழ‌ந்தையை பெற்ற‌ போதும் அவ‌ளுக்கு 18 வ‌ய‌தாகும் வ‌ரை அக்குழ‌ந்தையை த‌க‌ப்ப‌ன் பெய‌ர் தெரியாத‌ ஹ‌ராமியாக‌வே வ‌ள‌ர்த்தெடுக்க‌ வேண்டும். கார‌ண‌ம் ஒரு பெண் 18 வ‌ய‌து வ‌ரை திரும‌ண‌ம் முடிக்க‌ முடியாது என்ப‌து இல‌ங்கையின் பொதுச்ச‌ட்ட‌மாகும்.
அந்த‌ப்பெண்ணை இந்த‌ நிலைக்கு ஆக்கிய‌வ‌ன் அவ‌ளை ம‌ண‌ முடிக்க‌ முன் வ‌ந்தாலும் அவ‌ள் திரும‌ண‌ம் முடிக்க‌ முடியாது. அதே போல் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணின் வ‌யிற்றில் குழ‌ந்தை என‌ தெரிய‌ வ‌ந்த‌தும் அந்த‌க்குழ‌ந்தையையும் அவ‌ளையும் பொறுப்பெடுக்க‌ ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைத்த‌ யாரும் முன் வ‌ந்தாலும் அவ‌ளை திரும‌ண‌ம் செய்ய‌ முடியாது என்ப‌து எந்த‌ள‌வுக்கு இல‌ங்கையின் திருமண‌ பொதுச்ச‌ட்ட‌ம் என்ப‌து பெண்க‌ளுக்கு பாதிப்பை ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தை காட்டுகிற‌து.
இந்த‌ இட‌த்தில் இஸ்லாமிய‌ திரும‌ண‌ ச‌ட்ட‌ம் இவ்வாறு பாதிக்க‌ப்ப‌டும் பெண்ணுக்கு திரும‌ண‌ பாதுகாப்பை த‌ருகிற‌து என்ப‌தை காண்கிறோம். அதன் மூல‌ம் பெண்ணின் திரும‌ண‌த்துக்கென‌ குறிப்பிட்ட‌ வ‌ய‌தை இஸ்லாம் நிர்ண‌யிக்காத‌த‌ன் மூல‌ம் இஸ்லாமிய‌ திரும‌ண ச‌ட்ட‌ம் என்ப‌து ம‌னித‌ன் எழுதிய‌ ச‌ட்ட‌ம் அல்ல‌ எல்லாம் அறிந்த‌ இறைவ‌னின் ச‌ட்ட‌ம் என்ப‌து மிக‌த்தெளிவாகிற‌து.

ஆக‌வே முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் பெண்க‌ளின் திரும‌ண‌ வ‌ய‌து என்ப‌து அவ‌ள் ப‌ருவ‌ம‌டைத‌ல் என்றிருப்ப‌தை மாற்றி வ‌ய‌தை நிர்ண‌யிப்ப‌த‌ற்கு  எக்கார‌ண‌ம் கொண்டும் அனும‌திய‌ளிக்க‌ முடியாது என்ப‌தே முஸ்லிம் உல‌மா க‌ட்சியின் உறுதியான‌ நிலைப்பாடாகும்.
- மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

முஸ்லிம் ச‌மூக‌த்துள் ம‌ட்டுமே வ‌ண்டி ஓட்டும் ஜ‌மாஅத்துக‌ள்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு இஸ்லாத்தை சொல்வ‌து க‌ட‌மையா அல்ல‌து முஸ்லிம் அல்லாத‌வ‌ர்க‌ளுக்கு இஸ்லாத்தை சொல்வ‌து க‌ட‌மையா?

ந‌பிய‌வ‌ர்க‌ளின் வாழ்வை பார்க்கும் போது அவ‌ர்க‌ள் ம‌க்கா முத‌ல் ம‌தீனாவில் ம‌ர‌ணிக்கும் வ‌ரை முஸ்லிம் அல்லாத‌வ‌ர்க‌ளுக்கு இஸ்லாத்தை சொல்வ‌திலேயே அதிக‌ கால‌த்தை செல‌வு செய்துள்ளார்க‌ள்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு தொழுகைக்கு பின்ன‌ரான‌ உரைக‌ள், வெள்ளிக்கிழ‌மை குத்பா, ச‌க‌ஜ‌மாக‌ அம‌ர்ந்து பேசிக்கொண்டிருப்ப‌து, ச‌ம்ப‌வ‌ங்க‌ள் போன்ற‌வை மூல‌ம் அவ்வ‌ப்போது இஸ்லாத்தை க‌ற்றுக்கொடுத்தார்க‌ள். ஆனால் ம‌தீனாவில் உள்ள‌ முஸ்லிம்க‌ளை முழுக்க‌ முழுக்க‌ திருத்தி விட்டு அத‌ன் பின் இஸ்லாத்தை ஏனைய‌வ‌ர்க‌ளுக்கு சொல்ல‌ப்போகிறேன் என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் இருக்க‌வில்லை. இத்த‌னைக்கும் ம‌தீன‌த்து முஸ்லிம்க‌ளில் சில‌ர் ந‌ய‌ வ‌ஞ்ச‌க‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். தொழுகையில் பொடு போக்குள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். விப‌ச்சார‌ம், க‌ள‌வு என்ப‌ன‌ குறைந்த‌ அள‌விலாவ‌து இருந்த‌து.

ந‌பிய‌வ‌ர்க‌ள் இத்த‌கைய குற்ற‌ச்செய‌ல்க‌ளுக்கு த‌ண்ட‌னைக‌ள் வ‌ழ‌ங்கினார்க‌ள். ம‌ற்ற‌வ‌ர்க‌ளை அழைத்து புத்திம‌தி சொன்னார்க‌ள்.

அதே போல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌ ம‌க்க‌‌ளுக்கு இஸ்லாத்தை க‌ற்பிக்க‌ உல‌மாக்க‌ளை நிய‌மித்தார்க‌ள். அவ‌ர்க‌ள் ப‌ள்ளிவாய‌ல்க‌ளில் முஸ்லிம்க‌ளுக்கு இஸ்லாத்தை க‌ற்றுக்கொடுத்தார்க‌ள்.

ஆனால் முஸ்லிம்க‌ளுக்கு இஸ்லாத்தை க‌ற்றுக்கொடுக்க‌வென‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் குழுக்க‌ளை அனுப்பி வைக்க‌வில்லை. மாறாக‌ முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாத்தை க‌ற்றுக்கொடுக்க‌வே குழுக்க‌ளையும் த‌னி ந‌ப‌ர்களையும் அனுப்பி வைத்தார்க‌ள். அவ்வாறு முஸ்லிம் அல்லாத‌ ம‌க்க‌ளுக்கு இஸ்லாத்தின் பால் அழைக்க‌ செல்வ‌தையே ந‌பிய‌வ‌ர்க‌ள் ஃபீ ச‌பிலில்லாஹ் - அள்ளாஹ்வின் பாதை - என‌ குறிப்பிட்டார்க‌ள்.

முஸ்லிம்க‌ளுக்கு இஸ்லாத்தை க‌ற்றுக்கொடுத்த‌லை ந‌பிய‌வ‌ர்க‌ள் ஒரு போதும் ஃபீ ச‌பீலில்லாஹ் என‌ சொல்லவில்லை. ம‌றாக‌ அத‌னை ஒருவ‌ருக்கு ஒருவ‌ர் உப‌தேச‌ம் செய்த‌ல் என்ற‌ வ‌கையில் அனைவ‌ர் மீதும் க‌ட‌மை என‌ காட்டினார்க‌ள்.

இன்று ப‌ல‌ ஜ‌மாஅத்துக்க‌ள் முஸ்லிம்க‌ள் ம‌த்தியிலேயே குண்டுச்ச‌ட்டிக்குள் வ‌ண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்க‌ள். இத‌ற்கு அள்ளாஹ்வின் பாதை என‌ பொய்யாக‌ கூறி அள்ளாஹ்வையும் ர‌சூலையும் ஏமாற்ற‌ நினைக்கிறார்க‌ள். இன்னும் சில‌ர் முஸ்லிம்க‌ளுக்கு ஏக‌த்துவ இஸ்லாத்தை சொல்வ‌து ம‌ட்டுமே த‌ம‌து ப‌ணி என‌ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌ர். இதுவும் ந‌பி வ‌ழிக்கு மாற்ற‌மான‌தாகும்.

 முஸ்லிம்க‌ளுக்கு இஸ்லாத்தை க‌ற்றுக்கொடுக்க‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் இஜ்திமாக்க‌ளை ந‌ட‌த்த‌வில்லை. த‌ர்பிய்யாக்க‌ளை ந‌ட‌த்த‌வில்லை. மாறாக‌ ப‌ள்ளிக‌ளை உருவாக்கி அதில் ம‌துர‌சாக்க‌ளை உருவாக்கி க‌ற்றுக்கொடுக்கும் வ‌ழி முறையை க‌ற்றுக்கொடுத்தார்க‌ள். முஸ்லிம் அல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ஏக‌த்துவ‌த்தை சொல்ல‌வே இஜ்திமா ந‌ட‌த்தினார்க‌ள். ம‌க்ஜாவின் ம‌லைய‌டிவார‌த்தில் அனைத்து முஸ்லிம் அல்லாத‌வ‌ர்க‌ள் இஜ்திமா திர‌ட்டி த‌ஃவா செய்தார்க‌ள்.

 முஸ்லிம்க‌ளுக்கு ஏக‌த்துவ‌த்தை க‌ற்றுக்கொடுப்ப‌தே த‌ம் ப‌ணி என‌ ந‌பிய‌வ‌ர்க‌ளும் ச‌ஹாபாக்க‌ளும் இருந்திருந்தால்  இஸ்லாம் ம‌தீனாவை தாண்டி இராது.

இதே போன்றே இன்னொரு ஜ‌மாஅத் முஸ்லிம்க‌ளை ஒரு ச‌மூக‌ அமைப்பாக‌ மாற்றுவ‌து ம‌ட்டுமே த‌ம் ஆயுள் க‌ட‌மை என‌ செய‌ல்ப‌டுகின்ற‌ன‌ர். ந‌பிய‌வ‌ர்க‌ள் ம‌தீனா சென்று அங்கு  முஸ்லிம் ச‌மூக‌ க‌ட்ட‌மைப்பை உருவாக்கிய‌ அடுத்த‌ வ‌ருட‌மே முஸ்லிம் அல்லாத‌ ம‌க்க‌ளிட‌ம் இஸ்லாத்தை சொல்ல‌ த‌னிந‌ப‌ர்க‌ளையும் குழுக்க‌ளையும் அனுப்பி வைத்தார்க‌ள்.

ஆக‌வே முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் உள்ள‌ இய‌க்க‌ங்க‌ள் த‌ம‌து முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் ம‌ட்டுமேயான‌ பிர‌சார‌ங்க‌ளை குறைத்துக்கொண்டு முஸ்லிம் அல்லாத‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் ஏக‌த்துவ‌த்தையும், இஸ்லாத்தையும், இஸ்லாமிய‌ க‌ட்ட‌மைப்பையும் ஆயுத‌த்தை முத‌ன்மையாக‌ க‌ருதாம‌ல் இஸ்லாம் ப‌ற்றிய‌ அறிவு, ந‌ற்ப‌ண்புக‌ள், ஏழை வ‌ரிக‌ள் என்ப‌வ‌ற்றை எடுத்துக்கொண்டு போக‌ வேண்டும். அதுதான் உண்மையான‌ ஃபீ ச‌பீலில்லாஹ்.

அத‌னை விடுத்து இந்த‌ இய‌க்க‌ங்க‌ள் முஸ்லிம் ச‌மூக‌த்துள் உருவாகி இந்த‌ 70 - 80 வ‌ருட‌ கால‌ங்க‌ளுள் முஸ்லிம் ச‌மூக‌த்துள் ஏற்ப‌ட்ட‌ ம‌றும‌ல‌ர்ச்சி என்ன‌ என்ப‌தை பார்க்கும் போது ச‌ண்டைக‌ளும் ச‌ச்ச‌ர‌வுக‌ளும் பிள‌வுக‌ளுமே அதிக‌ரித்துள்ள‌ன‌. ஒரு வீட்டுக்குள் நான்கு ஜ‌மாஅத்துக்க‌ள் என்ற‌ நிலையே ஏற்ப‌ட்டுள்ள‌து‌.

ஆக‌வே அனைத்து இய‌க்க‌ங்க‌ளும் இனி முஸ்லிம் ச‌மூக‌த்துள் ம‌ட்டும் த‌ம‌து ப‌ணிக‌ளை செய்வ‌தை வெகுவாக‌ குறைத்துக்கொண்டு இந்த‌ ஏக‌த்துவ‌த்தை தெரியாத‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் இத‌னை கொண்டு போக‌ முய‌ல‌ வேண்டும். ஆயிர‌ம் முஸ்லிம்க‌ளை மீண்டும் மீண்டும் இஸ்லாத்துக்கு எடுக்க‌ முய‌லும் ந‌பி வ‌ழிக்கு மாற்ற‌மான‌ வ‌ழியை விட்டு விட்டு  ஆயிர‌ம் முஸ்லிம்க‌ளை மீண்டும் மீண்டும் இஸ்லாத்துக்கு எடுப்ப‌தை விட‌ ஒரு முஸ்லிம் அல்லாத‌வ‌ர் இஸ்லாத்தை ஏற்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌து என்ற‌ குர் ஆன் ஹ‌தீத் வ‌ழி காட்ட‌லை பின்ப‌ற்ற‌ முன்வ‌ர‌ வேண்டும்.
- மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
முஸ்லிம் உல‌மா க‌ட்சி

மாகாணத்தை ஆளுகின்ற முஸ்லிம் முதலமைச்சருக்கு இற‌க்காம‌ம் ஏன் தெரியாமல் போனது??


நல்லாட்சி அரசை நிறுவுவதில் அளப்பரிய பங்கை வகித்தவர்கள் முஸ்லிங்கள்.அதிலும் குறிப்பாக வடக்கு,கிழக்கில் வாழும் முஸ்லிம்கள்.
எமது வாக்குகளால் பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் எமது தலைவர்கள் இந்த ஜனாதிபதியை கொண்டுவருவதட்க்கு தயங்கி பின்நின்ற போது அச்சமின்றி மௌனப்புரட்சியினால் இந்த ஆட்சிக்கு அடித்தளமிட்டவர்கள் நாமே என்பதை ஜனாதிபதி அடங்கலாக சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி இருக்க கடந்த ஆட்சியை கவிழ்த்து சில குழுக்கள் நன்மையடைய வேண்டிய தேவையை கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுகொண்டு அவர்களின் தரகர்களாக கோஷமிட்டு ஒட்டிக்கொண்ட சில அரசியல்வாதிகளால் இந்த சமுகத்திற்க்கு எதனையும் பெற்றுத்தர முடியாது என்பதை நன்றாக அறிந்தும் நமது புத்திஜீவிகளும் பொது மக்களும் அவர்களின் தயவையும் அந்த‌க்க‌ட்சி இன்ன‌மும் ந‌ம‌க்கு வ‌ர‌ம் த‌ரும் என்றும் எதிர்பாத்திருப்பது எந்தவிதத்தில் நியாயமாகும் என கேட்க விரும்புகிறேன்.
தயாவின் நிகழ்ச்சி நிரளுக்கு இயங்கும் ஐ தேக‌ த‌ர‌க‌ர்க‌ளான‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் அரசியல்வாதிகளிடத்தில் தயவை எதிர்பார்ப்பது மலடி வயிற்றில் குழந்தை எதிர்பார்ப்பது போன்றதாகும்.
இறக்காமத்தில் புத்த பெருமானின் வருகை நிகழ்ந்த போது அதனை தட்டிக்கேட்கவும், அநியாயத்தை எதிர்த்து குரல்கொடுக்கவும் முன்வந்த இளம் போராளிகளை நயவஞ்சகமாக சூட்சகமான பேச்சுக்களை பேசி அடக்கிவைத்தவர்களும் ,இந்த சிலை வைப்பின் மூலம் எந்த மதமாற்றமும் நடக்காது என்றவர்களும் இப்போது செய்வதறியாது நிற்பதை என்னவென்று சொல்வது ? இப்படியேல்லாம் நடக்கும் என எதிர்வு கூறிய அரசியல்வாதிகளையும்,புத்திஜீவிகளையும் வார்த்தைகளால் துவம்சம் செய்த போராளிகள் இதற்கு கொடுக்கப்போகின்ற பதில் என்ன?

 மாகாணத்தை ஆளுகின்ற முஸ்லிம் முதலமைச்சருக்கு இறக்காமம் தனது ஆட்சிக்கு உட்பட்டதுதான் எனது ஏன் தெரியாமல் போனது??
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தலைவர்கள் சகலரும் பிரதேசவாதங்கள் இல்லாது குரல் கொடுத்து சாதிக்க முடியுமாக இருந்தால் ஏன் முஸ்லிம் தலைவர்களால் முடியாது?
மு.கா பணம்பெற்றதன் பின்னர்தான் இந்த ஆட்சியை ஆதரித்ததாகவும்,அதனை அவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதாகவும் கௌரவ நாமல் ராஜபக்ஸ எம் பி அவர்கள் பேரின மக்களிடம் உரையாற்றும் அளவிற்க்கு நமது சமுகம் நாரிக்கிடக்கின்றது என்றால் கசப்பான உண்மைதான்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஆட்சியாளர்களிடம் பேரமாக பேசி தீர்த்து வைத்து அரசை நிறுவிய கட்சியும் அதனை சார்ந்த சமூகமும் இன்று செல்லும் பாதையை நோக்குகின்ற போது எதிர்வரும் காலங்களில் இந்த சமுகம் படப்போகின்ற அவலத்தை நன்றாக உணரக்கூடியதாக உள்ளது.

ஆட்சியாளர்களிடமிருக்கும் தமது கோப்புக்களுக்கும்,பணத்துக்கும்,கட்சிசார் உறுப்பினர்களின் பதவியாசைகளுக்குமே எமது தலைவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள் என்பதுக்கு அரச ஊடகங்களிலும்,தனியார் ஊடகங்களிலும் ஒவ்வொருவராக மாறிமாறிக்கொடுத்த வாக்கு மூலங்களே போதுமானது. அல்லாஹ்வையும் ரசூலையும் மேடைகளில் பேசுகின்ற இவர்கள் ஒப்பந்தம் செய்கின்ற போது மறந்துபோகின்ற மர்மம் என்ன??
அல்லாஹ்வை பயந்து கொண்டு நாளைய கேள்வி கணக்குகளையும் நினைவில் கொண்டு,உங்களுக்கு அமானிதங்களை கையளித்த மக்களை மறக்காமல் அவர்களின் தேவைகளை இந்த ஆட்சியாளர்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க நமது அரசியல் வாதிகள் இனியாவது முன்வாருங்கள் என‌ ச‌மூக‌ம் வ‌லியுறுத்த‌ வேண்டும். இல்லாவிட்டால் இவ‌ர்க‌ளுக்கெதிராக‌ கிழ‌க்கு முஸ்லிம் ச‌மூக‌ம் ஜ‌ன‌நாய‌க‌ரீதியில் வீதிக்கு இற‌ங்க‌ வேண்டும். முஸ்லிம்க‌ளை விற்று பிழைக்கும் முஸ்லிம் காங்கிர‌சுக்கெதிராக‌ ம‌க்க‌ள் ஒன்று திர‌ள‌ வேண்டும்..
வில்பத்து மக்களின் கண்ணீருக்கும், இறக்காம மக்களின் அச்சத்துக்கும்,கல்முனை மக்களின் அபிவிருத்தி ஏக்கத்துக்கும்,சாய்ந்தமருது மண்ணின் கனவுக்கும்,நுரைச்சோலை வீட்டின் கதவுகளுக்கும்,முதிர்கன்னிகளின் கண்ணீருக்கும்,பட்டதாரிகளின் குரலுக்கும் தீர்வு காண்ப‌தாயின் அன்று முத‌ல் இன்று வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌த்துக்காக‌ தைரிய‌மாக‌ குர‌ல் எழுப்பும் உல‌மா க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்துங்க‌ள் என‌ அழைப்பு விடுக்கின்றேன்.
அல்-ஹாஜ் ஹுதா உமர்
உல‌மா க‌ட்சி உய‌ர் ச‌பை உறுப்பின‌ர்.
மாளிகைக்காடு.😉😬😬

ச‌ட்ட‌த்தின் அனும‌தியுட‌ன் முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ இன‌வாத‌ம்

ச‌ட்ட‌த்தின் அனும‌தியுட‌ன் முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ இன‌வாத‌ம் ந‌ட‌ந்த‌து ம‌ஹிந்த‌ ஆட்சியில்தான் ஆர‌ம்ப‌ம்  என‌ அர‌சிய‌ல் வ‌ர‌லாறு தெரியாத‌ சில‌ர் கூறுகிறாக‌ள். ம‌ஹிந்த‌ ஆட்சியில் ச‌ட்ட‌ம் பார்த்துக்கொண்டிருக்க‌ முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ ந‌ட‌ந்த‌ ஒரேயொரு ச‌ம்ப‌வ‌மான‌ அளுத்க‌ம‌ ச‌ம்ப‌வ‌ம் ஒரே இர‌வில் விடிவ‌த‌ற்கு முன்ன‌ரே ச‌ட்ட‌ம் க‌ட்டுப்ப‌டுத்திய‌து. அத‌ற்கு முன்ன‌ரே க‌ட்டுப்ப‌டுத்தாத‌து த‌வ‌றுதான். ஆனாலும் வேறு ஊர்க‌ளுக்கு ப‌ர‌வாம‌ல் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் இதை விட‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌ ச‌ட்ட‌ அனும‌தியுட‌ன் அத்துமீற‌ல்க‌ள் வ‌ர‌லாற்றில் ந‌ட‌ந்த‌ன‌. 90ல் பிர‌ம‌தாச‌ unp அர‌சின் அனும‌தியுட‌ன்  ச‌ட்ட‌ம் கை க‌ட்டி வாய் பொத்தி நிற்க‌ கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ப‌ல‌ர் புலிக‌ளால் பிடித்து செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். இன்று வ‌ரை அவ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் இல்லை. அவ‌ர்க‌ள் பொலிசாரும் இராணுவ‌மும் பார்த்துக்கொண்டிருக்க‌ அவ‌ர்க‌ள் க‌ண் முன்பாக‌வே பிடித்துச்செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.  அதே போல்

மாவ‌ன‌ல்லை க‌ல‌வ‌ர‌த்தை ச‌ட்ட‌ம் 2 நாட்க‌ள் பார்த்துக்கொண்டிருந்த‌து. 2001ல் வாழைச்சேனையில் ச‌ட்ட‌மும் நீதியும் வாய் பொத்தி கைக‌ட்டி நிற்க‌ முஸ்லிம்க‌ளின் இரு உட‌ல்க‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ எரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ந‌ல்லாட்சியில் ச‌ட்ட‌ம் பார்த்து நிற்க‌ பெஷ‌ன் பெக் எரிக்க‌ப்ப‌ட்ட‌து. cctv க‌மெராவையும் ச‌ட்ட‌ம் ப‌றித்து சென்ற‌து. இவை எல்லாம் ம‌ஹிந்த‌ ஆட்சிக்கு முன்பே ச‌ட்ட‌ம் அனும‌தியுட‌ன் ந‌டைபெற்ற‌ கொடூர‌ங்க‌ளாகும். இவை போன்ற‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் நாட்டில் ந‌டை பெற்றுள்ள‌தையும் புரிந்து கொள்ள‌ வேண்டும்.


இவ்வாறு சொல்வ‌த‌ன் மூலம் அளுத்க‌ம‌ ச‌ம்ப‌வ‌த்தை யாரும் நியாய‌ப்ப‌டுத்த‌ முடியாது. த‌வ‌று யார் செய்தாலும் த‌வ‌றுதான். அதேவேளை த‌வ‌றுக‌ளை விம‌ர்சிக்கும் போது நியாய‌த்தின் அடிப்ப‌டையில், உண்மையாக‌ விம‌ர்சிப்ப‌தே இஸ்லாமிய‌ர்க‌ளின் ப‌ண்பாக‌ இருக்க‌ வேண்டும். உல‌மா க‌ட்சியை பொறுத்த‌வ‌ரை யாரையும் உண்மைக்கு மாற்ற‌மாக‌ த‌லையில் தூக்கி வைக்காது. யார் ந‌ல்ல‌து செய்தாலும் அவ‌ர்க‌ளை பாராட்டுவோம். யார் ச‌மூக‌த்துக்கு தீங்கு செய்தாலும் அவ‌ர்க‌ளை க‌ண்டிப்போம். ம‌ஹிந்த‌ அர‌சில் முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ இன‌வாத‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளின் சூத்திர‌தாரிக‌ளை கைது செய்ய‌ த‌ய‌ங்கிய‌ போது ம‌ஹிந்த‌ அர‌சுக்கு பாராளும‌ன்ற‌த்துக்கு வெளியே ஆத‌ர‌வ‌ளித்த‌ உல‌மா க‌ட்சி த‌ன‌து ஆத‌ர‌வை வில‌க்கிய‌து. இவ்வாறு செய்த‌ ஒரேயொரு முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே. அதே போல் ம‌ஹிந்த‌வுட‌ன் இருந்த‌ இன‌வாதிக‌ள் தேர்த‌லின் போது வெளியேறிய‌தன் கார‌ண‌மாக‌ நாம் மீண்டும் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வ‌ளித்து ந‌ல்லாட்சியை ந‌ம்ப‌ முடியாது என‌ தெரிவித்தோம். இன்று முஸ்லிம்க‌ள் ந‌ல்லாட்சியை ப‌ற்றி த‌ம் த‌லையில் தாமே அடித்துக்கொள்கிறார்க‌ள்.


ம‌ஹிந்த‌ ஆட்சியில் த‌வ‌று ந‌ட‌க்க‌வே இல்லை என‌ நாம் ஒரு போதும் சொல்ல‌வில்லை. ஆனால் ச‌ந்திரிக்காவின் ஆட்சி, ஐ தே க‌ ஆட்சி என்ப‌வ‌றோடு ஒப்பிட்டு பார்க்கையில் ம‌ஹிந்த‌வின் கால‌த்தில் குறைவான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளே முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ ந‌டைபெற்ற‌து என்ப‌துட‌ன்  ம‌ஹிந்த‌வின் கால‌த்திலேயே முஸ்லிம்க‌ள் மிக‌ அதிக‌ ந‌ன்மைக‌ளை பெற்ற‌ன‌ர் என்ப‌தே எம‌து உறுதியான‌ வாத‌ம்.

இந்த‌ நாட்டின் வ‌ர‌லாற்றை நாம் பார்க்கும் போது

ஐ தே க‌ கால‌த்தில்தான் சிறுபான்மை ம‌க்க‌ளுக்கெதிராக‌வும்  முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌வும் இன‌வாத‌ம் மிக‌ அதிக‌மாக‌ வ‌ள‌ர்ந்த‌து. 1960க‌ளில் டி எஸ் சேனாநாய‌க்க‌ அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளை க‌ல்லோயா திட்ட‌ம் என்ற‌ பெய‌ரில் விர‌ட்டி அடித்தார். அத‌ன் பின் அம்பாரையில் முஸ்லிம்க‌ளுக்கு வியாபார‌ம் செய்ய‌ க‌டைக‌ள் கொடுக்க‌ கூடாது என்ற‌ ச‌ட்ட‌த்தை அமுல் ப‌டுத்தின‌ர். பின்ன‌ர் 83ல் முஸ்லிம்க‌ளும் அடி வாங்கின‌ர். கொழும்பு முஸ்லிம்க‌ளின் வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ளும் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌. 87ல் ஜே ஆர் கிழ‌க்கை வ‌ட‌க்குடன் இணைத்து முஸ்லிம்க‌ளை அடிமையாக்கினார். த‌மிழ் முஸ்லிம் மோத‌ல்க‌ளை உருவாக்கினார். 90ல் பிரேம‌த‌ச‌ புலியுட‌ன் சேர்ந்து கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை கொன்றார். புலிக‌ளின் முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை க‌ட்டுப்ப‌டுத்த‌ எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையையும் ஐ தே க‌ எடுக்க‌வில்லை. பின்ன‌ர் புலிக‌ள் அவ‌ர் மார்பில் பாய்ந்த‌ போதே உண்மையை உண‌ர்ந்தார்க‌ள்.


 2001ல் ர‌ணில் பிர‌த‌ம‌ராக‌ இருந்த‌ போது கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை மொத்தமாக‌ புலிக்கு விற்றார். 98ல் க‌ல‌கெத‌ர‌ க‌ல‌வ‌ர‌ம் ப‌ல‌ராலும் ம‌ற‌க்க‌ முடியாது.  இப்போது ர‌ணிலின் ஆட்சியில் ப‌ட்டிய‌ல் போட்டு முடிக்க‌ முடியாத‌ அள‌வு இன‌வாத‌ம் த‌லை விரித்தாடுகிற‌து.


ஆக‌வே முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ இன‌வாத‌ம் என்ப‌து ஐ தே க‌வினால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்டு ஏனைய‌ அரசுகளினால் வ‌ள‌ர்த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து. இதில் விசேச‌ம் என்ன‌வென்றால் சுத‌ந்திர‌த்துக்கு பின் பெரும்பாலான‌ முஸ்லிம்க‌ள் ஐ தே க‌வுக்கு வாக்க‌ளிப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தும் அக்க‌ட்சியின‌ர் முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌வே செய‌ற்ப‌ட்ட‌ன‌ர் என்ப‌தை முஸ்லிம் ச‌மூக‌ம் இன்ன‌மும் புரிந்து கொள்ளாம‌ல் இருப்ப‌துதான். என‌வே நாம் இன‌வாத‌த்தை விதைத்த‌வ‌ர்க‌ள்  ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ வேண்டும். ம‌ஹிந்த‌ ஆட்சியின் இறுதி இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் ந‌டைபெற்ற‌ இன‌வாத‌ செய‌ல்க‌ளின் பின்ன‌ணியிலும் ஐ தே க‌வும் ஹெல‌ உறும‌ய‌வும் இருந்த‌ன‌ என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து. அவ‌ற்றின் பின்னால் ம‌ஹிந்த‌ அர‌சு இருந்திருந்தால் இந்த‌ அர‌சினால் இன‌வாத‌ம் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு ம‌ஹிந்த‌ அர‌சில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளுக்கு நியாய‌ம் கிடைத்திருக்கும். இது எதுவுமே ந‌ட‌க்காத‌த‌ன் மூல‌ம் இவ‌ர்க‌ளே ம‌ஹிந்த‌ ஆட்சியில் இர‌க‌சிய‌மாக‌ செய‌ற்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌து தெளிவாகிற‌து.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி

த‌லைவ‌ர்

உல‌மா க‌ட்சி

ம‌ன்னார் ம‌றிச்சுக்க‌ட்டியில் ச‌ர்வ‌ ச‌ம‌ய‌த்தலைவ‌ர்க‌ளின் க‌ண்ட‌ன‌க்கூட்ட‌மும் ஆர்ப்பாட்ட‌மும்




ம‌றிச்சுக்க‌ட்டி க‌ர‌டிக்குழி உட்ப‌ட‌ முஸ்லிம்க‌ளின‌தும் த‌மிழ் ம‌க்க‌ளின‌தும் காணிக‌ளை காடு என்ற‌ வ‌ர்த்த‌மாணிக்கெதிராக‌ 11.04.2017 ம‌ன்னார் ம‌றிச்சுக்க‌ட்டியில் ச‌ர்வ‌ ச‌ம‌ய‌த்தலைவ‌ர்க‌ளின் க‌ண்ட‌ன‌க்கூட்ட‌மும் ஆர்ப்பாட்ட‌மும் ந‌டை பெற்ற‌து.  கூட்ட‌த்தை தொட‌ர்ந்து ச‌ர்வ‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ள் புளிய‌ங்குள‌த்தில் த‌மிழ் ம‌க்க‌ள் ந‌டாத்தும் ம‌ண் மீட்பு ச‌த்தியாக்கிர‌க‌ம் ந‌ட‌க்கும் இட‌ம்வ‌ரை ஊர்வ‌ல‌மாக‌ சென்ற‌ன‌ர்.  இந்நிக‌ழ்வுக‌ளில் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் பிர‌த‌ம‌ அதிதியாக‌ க‌ல‌ந்து கொண்டார்.  இன்றைய‌ இந்த‌ நிக‌ழ்வில் சுமார் ப‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ கிறிஸ்த‌வ‌ பாதிரிமார் ம‌ன்னார் ஆய‌ர் த‌லைமையில் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

நீங்க‌ள் எப்போது முஸ்லிம் காங்கிர‌சில் சேர்ந்தீர்க‌ள் எப்போது வில‌கினீர்க‌ள்

ஒருவ‌ர் கேட்டுள்ளார் நீங்க‌ள் எப்போது முஸ்லிம் காங்கிர‌சில் சேர்ந்தீர்க‌ள் எப்போது வில‌கினீர்க‌ள் என‌.
நான் என‌து 14 வ‌ய‌து முத‌ல் த‌லைவ‌ர் அஷ்ர‌பின் சிஷ்ய‌ன். முஸ்லிம் காங்கிர‌ஸ் அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ 86ம் ஆண்டு பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து முதல் அக்க‌ட்சியில்தான் இருக்கிறேன். 1988ம் ஆண்டு க‌ட்சி ப‌திய‌ப்ப‌ட்டு 89ல் நான் முஸ்லிம் காங்கிர‌சின் இணைப்பாள‌ராக‌ த‌லைவ‌ர் அஷ்ர‌பால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டேன்.
என‌க்கும் த‌லைவ‌ருக்குமிடையில் சில‌ த‌னிப்ப‌ட்ட‌ முர‌ண்பாடுக‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. புலிக‌ளால் என‌து த‌ம்பி உட்ப‌ட‌ ப‌ல‌ க‌ல்முனை இளைஞ‌ர்கள் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌த்தில் அஷ்ர‌ஃப் ச‌ரியான‌ அணுகு முறையை கையாண்டு அவ‌ர்க‌ளை விடுவிக்க‌ முய‌ல‌வில்லை என்ப‌து என‌க்குள் ம‌ன‌ வ‌ருத்த‌ம். அப்போது அஷ்ர‌ஃபால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ பிரேம‌தாச‌வுக்கும் புலிக‌ளுக்குமிடையில் நெருங்கிய‌ ந‌ட்பு இருந்த‌து.
ஆனாலும் நான் மு. காவிலிருந்து வில‌க‌வில்லை. அத‌ன் பின் 95ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது என‌க்கும் த‌லைவ‌ருக்குமிடையில் முர‌ண்பாடு ஏற்ப‌ட்ட‌து. அவ‌ர் ச‌ந்திரிக்காவை ஆத‌ரிக்க‌ வேண்டும் என‌ அறிக்கை விட்டார். ச‌ந்திரிக்கா த‌லைவ‌ரின் க‌ப்ப‌ல் அமைச்சை ப‌றித்த‌வ‌ர் என்ப‌தால் முஸ்லிம்க‌ள் அவ‌ரை ந‌ம்ப‌ முடியாது என்ப‌தால் ச‌ந்திரிக்காவை ஆத‌ரிக்க‌ முடியாது என‌ நான் அறிக்கை விட்டேன்.
த‌லைவ‌ரையே எதிர்க்கிறார் என‌ வால்க‌ள் குதித்த‌ போதும் த‌லைவ‌ர் என‌க்கெதிராக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை. நான் சொன்ன‌து உண்மை என்ப‌தை க‌டைசிக்கால‌த்தில் இறைவ‌ன் அவ‌ருக்கு புரிய‌ வைத்தேன்.
இன்று வ‌ரை நான் முஸ்லிம் காங்கிர‌சிலிருந்து வில‌கிக்கொண்ட‌தாக‌ க‌டித‌ம் கொடுக்க‌வுமில்லை. அவ‌ர்க‌ள் என்னை நீக்கிய‌தாக‌ க‌டித‌ம் அனுப்ப‌வுமில்லை, அனுப்ப‌வும் முடியாது. கார‌ண‌ம் நான் த‌லைவ‌ர் அஷ்ர‌பால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன்.

நான் த‌லைவ‌ருக்கு ஜால்ரா அடிப்ப‌வ‌னாக‌ இருக்க‌வில்லை. ந‌ல்ல‌ விட‌ய‌ங்க‌ளை பாராட்டினேன். தீய‌தை ப‌கிர‌ங்க‌மாக‌ க‌ண்டித்தேன். த‌லைவ‌ர் உயிரோடு இருக்கும் வ‌ரை என‌து க‌ட்சியை ப‌திவ‌து ப‌ற்றி நான் சிந்திக்க‌வில்லை. மாறாக முஸ்லிம் காங்கிர‌ஸ் ம‌ட்டுமே முஸ்லிம்க‌ளின் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ட்சியாக‌ இருக்க‌ வேண்டும் என்ற‌ நிலைப்பாட்டிலேயே இருந்தேன்.
ஹ‌க்கீம் தலைமை பொறுப்பை எடுத்த‌ போது அவ‌ரை ஆத‌ரித்தேன். 2001ம் ஆண்டு த‌னித்த‌ர‌ப்பு த‌னி மாகாண‌ம் என்ப‌தெல்லாம் இப்போது பேச‌ முடியாது என‌ ஹ‌க்கீம் சொன்ன‌ போது அவ‌ரை ச‌மூக‌த்துரோகி என்றேன். இன்று வ‌ரை ஹ‌க்கீம் அப்ப‌டியேதான் இருக்கின்றார்.
உல‌மாக்க‌ள் த‌லைமையில் அர‌சியல் க‌ட்சி தேவை என்ப‌தை 1993ம் ஆண்டு முத‌ல் என‌து க‌ருத்தாக‌ இருந்த‌து.  ஆனாலும் நான் என‌து தொழிலில் கூடிய‌ க‌வ‌ன‌ம் செலுத்திய‌தால் அர‌சிய‌லில் முழு மூச்சாக‌ ஈடுப‌ட‌வில்லை.
அத‌ன் பின் 2005ம் ஆண்டு உல‌மா க‌ட்சியை ஆர‌ம்பித்தோம். அது ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில் காத்தான்குடியின் இணைப்பாள‌ராக‌ காத்தான்குடி அப்துல் ர‌ஹீம் மௌல‌வி சிற‌ப்பாக‌ க‌ட‌மையாற்றினார். பின்ன‌ர் அவ‌ர் த‌ன‌து தொழில் நிமித்த‌ம் ஒதுங்கிக்கொண்டார். நாம் அவ‌ரை வில‌க்கவில்லை.
உல‌மா க‌ட்சி இன்ன‌மும் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்தில் ப‌திவு பெற‌வில்லை. அத‌ற்கான‌ முய‌ற்சியில் உள்ளோம்.

ஒரு க‌ட்சி செய‌ற்ப‌ட‌ வேண்டுமாயின் அவ‌சிய‌ம் ப‌ண‌ம் தேவை

Kalmunai Rafeek

ம‌க்க‌ள் செல்வாக்குள்ள‌ க‌ட்சியின் மூல‌ம் அர‌சிய‌ல் முக‌வரியை பெறாத‌ ஒருவ‌ர் த‌னிக்க‌ட்சி ஒன்றை ஆர‌ம்பித்து அத‌னை வ‌ள‌ர்த்தெடுப்ப‌து சாதார‌ண‌ விட‌ய‌ம‌ல்ல‌. இந்த‌ நிலையில் நிறைய‌ ப‌ண‌ம் தேவை. இத‌னை க‌ட்சியின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் வ‌ழ‌ங்க‌ வேண்டும் அல்ல‌து வ‌ழ‌ங்கி வைக்க‌ உழைக்க‌ வேண்டும். இப்ப‌டித்தான் முஸ்லிம் காங்கிர‌ஸ் வ‌ள‌ர்த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் உல‌மா க‌ட்சியை பொறுத்த‌வ‌ரை இத்த‌கைய‌ நிதி உத‌வி எதுவும் இல்லாம‌ல் த‌லைவ‌ரின் த‌னிப்ப‌ட்ட‌ பொருளாதார‌ உத‌வியை வைத்தே வ‌ள‌ர‌ முய‌ற்சித்து வ‌ருகிற‌து.

க‌ட‌ந்த‌ ஆட்சியில் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌ 2005 முத‌ல் உல‌மா க‌ட்சி செய‌ற்ப‌ட்ட‌ போதும் அக்க‌ட்சியை வ‌ள‌ர்ப்ப‌த‌ற்குரிய‌ எந்த‌ உத‌வியையும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ த‌ர‌ப்பு செய்யாதது பெரும் த‌வ‌றாகும். நிதியுத‌வி ம‌ற்றும் க‌ட்சி முக்கிய‌ஸ்த‌ர்க‌ளுக்கான‌ ப‌த‌விக‌ள் என‌ எதுவும் வ‌ழ‌‌ங்க‌ப்ப‌ட‌வில்லை.  அல‌வி மௌலானா போன்றோர் முஸ்லிம் காங்கிர‌ஸ் போன்றோர் த‌ம‌க்கு இருந்தால் அது போதும் என‌ ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு நினைத்த‌து. க‌டைசியில் முஸ்லிம் காங்கிரஸ் காலை வாரிய‌ போதுதான் முழித்தார்க‌ள்.

ஒரு க‌ட்சி செய‌ற்ப‌ட‌ வேண்டுமாயின் அவ‌சிய‌ம் ப‌ண‌ம் தேவை. கூட்ட‌ங்க‌ள், மாநாடுக‌ள், ச‌ந்திப்புக்க‌ள் என‌ ந‌டைபெறுவ‌தாயின்  அத‌ற்கான‌ ஏற்பாடுக‌ள், ஏற்பாடு செய்யும் அங்க‌த்த‌வ‌ர்க‌ளின் செய‌ற்பாடுக‌ளுக்கு அவ‌சிய‌ம் ப‌ண‌ம் தேவை. இத‌ற்காக‌ ஒரு அர‌சிய‌ல் க‌ட்சி ப‌ண‌ம் வ‌சூலிப்ப‌து அல்ல‌து தாம் ஆத‌ர‌வு வ‌ள‌ங்கும் பெரிய‌ க‌ட்சியிட‌ம் ப‌ண‌ம் பெறுவ‌து த‌வ‌ற‌ல்ல‌.  ஆனால் ம‌க்க‌ளின் வாக்குக‌ளை பேர‌ம் பேசி ப‌ண‌த்துக்கு விற்ப‌துதான் மோச‌மான‌ செய‌லாகும். அதுவும் அப்ப‌ண‌த்தை சில‌ர் சுருட்டிக்கொண்டு விடுவ‌து மிக‌ப்பெரிய‌ துரோக‌மாகும்.

இப்போதெல்லாம் ப‌ல‌ர் உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌ பேசுவ‌தால் ம‌ஹிந்த‌ ப‌ண‌ம் கொடுத்திருப்பார் என‌ நினைக்கிறார்க‌ள். எழுதுகிறார்க‌ள். அவ்வாறு ம‌ஹிந்த‌ ப‌ண‌ம் கொடுத்திருந்தால் இந்நேர‌ம் உல‌மா க‌ட்சி பாரிய‌ வ‌ள‌ர்ச்சியை பெற்றிருக்கும். குறிப்பாக‌ கிழ‌க்கில் அதீத‌ செல்வாக்கை பெற்றிருக்கும்.
அத்துட‌ன் ப‌ல‌ பாரிய‌ கூட்ட‌ங்க‌ளை ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் ந‌ட‌த்தியிருக்கும். மாறாக‌ ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு ஒரு ச‌த‌மும் ப‌ண‌ம் கொடுக்காத‌தால் ஊட‌க‌ அறிக்கையுட‌ன் உல‌மா க‌ட்சியின் செய‌ற்பாடு சுருங்கியுள்ள‌து. ஆனாலும் முஸ்லிம் ச‌மூக‌த்தின் ம‌த்தியில் ம‌ஹிந்த‌வின் பெறுமான‌த்தை உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் த‌ன‌து எழுத்துக்க‌ள் மூல‌ம் ஊட‌க‌ ம‌ய‌ப்ப‌டுத்திய‌தால் த‌ற்போது ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்சவின் தேவையை உண‌ர‌ச்செய்துள்ள‌மை உல‌மா
க‌ட்சிக்கு கிடைத்த‌ பெரு  வெற்றியாகும்.
K
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar