BREAKING NEWS
Showing posts with label UPFA. Show all posts
Showing posts with label UPFA. Show all posts

சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு



உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர!
**********************************************
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணியையும் (மஹிந்த அணி) இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வட்டகொடை மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை மீன் குஞ்சுகள் இடும் வைபவத்தில் அமைச்சர் அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது அவரிடம், எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“புதிய அரசியல் யாப்பில் நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு திட்டமும் இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கை பிரிப்பதோ அல்லது பௌத்த சமயத்தை முன்நிறுத்துவதோ போன்ற எந்த நடவடிக்கையும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கவில்லை.

நாட்டில் உள்ள மக்கள் அணைவரும் ஒருமித்த சமாதான வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும். இதற்கமைவாகவே அரசியல் யாப்பு அமைய வேண்டும். இதற்கு அப்பால் அரசியல் யாப்பு அமையுமானால் நாம் இந்த அரசியல் யாப்புக்கு எதிராக வாக்களிக்கவும் தயாராக இருக்கின்றோம்.

இதனால் எமக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை. அதேவேளையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஆழமாக சிந்தித்து நாம் செயல்பட்டு வருகின்றோம். 1983ம் ஆண்டு போல் இது ஆகிவிடக்கூடாது என்பதை நாம் உற்று நோக்குகின்றோம்” என்றார்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் புதிதாக ஒன்றிணைந்த எதிரணி களம் இறங்குகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; “ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சார்ந்தவர்கள்தான். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்த எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் பாரியளவில் வெற்றியை அடைவதற்கு ஒன்றிணைந்த எதிரணியையும் இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

மஹிந்த ராஜபக்ஷவை கண்டு இன் றும் பலர் அஞ்சுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவை கண்டு இன் றும் பலர் அஞ்சுகின்றனர். பல ஊடகங்கள் இன்றும் மஹிந்த ராஜபக் ஷ மீதான அச்சத்திலேயே செய்திகளை நிராகரித்து வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாம் ஒருபோதும் மஹிந்த தரப்பை கண்டுஅஞ்சவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

கடந்த காலத்தில் இந்த நாட்டில் பாரிய அச்சுறுத்தல்கள் இருந்தன. ஊடகங்கள் மீதான அரசியல் அழுத்தங்கள், அடக்குமுறைகள் காணப்பட்டன . ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நிலைமைகள் மாற்றம் பெற்றுள்ளது. இன்று அனைவரும் சுதந்திரமாக செயற்படவும், தைரியமாக கருத்து தெரிவிக்கவும் உரிமை உள்ளது. மாகாணசபைகள், பிரதேச சபைகளில் அனைவரும் தமது கருத்துக்களை தைரியமாக தெரிவித்து வருகின்றனர். எனினும் தகவல்களை தைரியமாக வெளிபடுத்து  இன்றுவரையில் பல ஊடகங்களுக்கு தைரியம் இல்லாதுள்ளது. 

எனினும் இவ்வாறு இன்றும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை. நடுநிலையான கருத்துக்களை அனைவரும் தைரியமாக வெளிப்படுத்த முடியும். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என எண்ணம் உள்ளதாக நினைக்கின்றனரோ தெரியவில்லை. 

அவ்வாறு அச்சம் கொள்ள வேண்டும் என்றால் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அஞ்ச வேண்டும். அவர் இந்த ஆட்சியில் சர்வாதிகார தலைமைகளை எதிர்த்து போட்டியிட்டவர். ஆனால் அவர் எவருக்கும் அஞ்சாமல் தைரியமாக செயற்பட்டு வருகின்றார். ஆகவே எவரும் அஞ்சத் தேவையில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று எவரதும் தனிப்பட்ட தலையீடுகள் இல்லாது சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றது. ஜனநாயக ரீதியில் அனைவரும் தமது எண்ணங்களை முன்வைக்கவும் ஆலோசித்து பொதுவான தீர்மானம் ஒன்றை எடுக்கவும் இன்று சுதந்திரம் உள்ளது. ஆகவே 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான திட்டமொன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்டமாக தற்போதுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அந்தக் கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு தேர்தல் ஆணையகத்துக்கு விண்ணப்பித்திருக்கும் கட்சிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் தம்முடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் பொருத்தமான பதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

உல‌மா க‌ட்சி ஜ‌னாதிப‌தி மைத்ரி ம‌ற்றும் ஐ. ம‌. சுத‌ந்திர‌ முன்ன‌ணியுட‌ன் இணைந்து செய‌ற்ப‌ட‌ முடிவு.




ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியின் செய‌லாள‌ர் அமைச்ச‌ர் ம‌ஹிந்த‌ அம‌ர‌வீர‌ அவ‌ர்க‌ளுக்கும் உல‌மா க‌ட்சியின‌ருக்குமிடையில் இன்று ந‌ட‌ந்த‌ ச‌ந்திப்பை தொட‌ர்ந்து ஐ.ம.சுத‌ந்திர‌ முன்ன‌ணிக்கும் ஜ‌னாதிப‌தி மைத்ரிபால‌ சிறிசேனாவுக்கும் ஆத‌ர‌வ‌ளிப்ப‌து என‌ முடிவு எட்ட‌ப்ப‌ட்ட‌து. இத‌னை தொட‌ர்ந்து க‌ண்டியில் ந‌டைபெற‌வுள்ள‌  மேதின‌த்தில்  உல‌மா க‌ட்சியின‌ர் க‌ல‌ந்து கொள்வ‌தாக‌ உறுதிய‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.
இந்த‌ ச‌ந்திப்பின் போது ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சியின் செய‌லாள‌ர் அமைச்ச‌ர் துமிந்த‌ திசாநாய‌க்க‌வும் உல‌மா க‌ட்சி சார்பில் அத‌ன் த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத், இணைச்செய‌லாள‌ர் இஸ்ஸ‌தீன் பொருளாள‌ர் அர்சாத் ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். 

ஐ. ம. சு. மு போனஸ் ஆசனத்தில் நெளசர் பெளசி


ஐ. ம. சு. மு. வுக்கு கிடைத்துள்ள 4 போனஸ் ஆசனங்களுக்குமான பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, கொழும்பு மாவட்ட ஐ. ம. சு. மு. பட்டியலில் அடுத்து உள்ள நெளசர் பெளசியும் கம்பஹா ஐ. ம. சு. மு பட்டியலில் அடுத்து உள்ள லலந்த

எனது தந்தையின் மரணத்துக்கு அரசு பொறுப்பல்ல - ஹிருணிகா


எனது தந்தையின் மரணத்துக்கு அரசாங்கம் அல்ல, தனிநபர் ஒருவரே பொறுப்பு என மேல் மாகாண சபை வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர  தெரிவித்தார்.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar