BREAKING NEWS
Showing posts with label Muslim marriage. Show all posts
Showing posts with label Muslim marriage. Show all posts

காதி நீதிமன்றத்தில் மாற்றங்களோ அடிப்படையிலான சட்டத்தில் மாற்றங்களோ வரப்போவதில்லை

 


காதி நீதிமன்றத்தில் பாரிய மாற்றங்களோ அடிப்படையிலான சட்டத்தில் மாற்றங்களோ வரப்போவதில்லை. மாறாக காதி நீதிமன்றங்களில் விசாரணையின் போது அநீதி இழைக்கப்படும் என்ற சந்தேக உணர்வு தோன்றும் பட்சத்தில் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போதைய முஸ்லிம் விவாக விவாரகத்துச் சட்டத்தில் இயலாத ஒன்றைப் பெற்றுக் கொடுக்கவே முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என்று யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினரும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் இணைப்புச் செயலாளருமான வசீர் முக்தார் தினகரனுக்கு வழங்கிய கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.


கேள்வி: முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் குறித்து இலங்கையில் சமீபகாலமாக சூடான களநிலவரம் காணப்படுகிறது. இது தொடர்பில் நீங்கள் கூறும் கருத்து?


பதில்: குர்ஆன், சுன்னா அடிப்படையில் தான் உலக முஸ்லிம்களுடைய வாழ்க்கை முறை இருக்கிறது. நாடுகளுக்கிடையே வித்தியாசங்கள் காணப்பட்டாலும் கலாசார மார்க்க விடயங்களில் வித்தியாசம் காண முடியாது. திருமணம் என்பது மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயம். குர்ஆன், ஹதீஸ் சம்பந்தப்பட்ட விடயம்.


பொறுமையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவதன் மூலமே இந்த விவாகம் விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தத்திற்கான ஓர் நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்க முடியும். இது தவிர்த்து ஒருவரை ஒருவர் விமர்சிப்பதன் மூலம் இது தொடர்பில் எமது எதிர்கால சந்ததியினருக்கு நிரந்தரமான தீர்வை உடன் பெற்றுக் கொடுக்க இயலாது.நாகரிகமானதும் பண்பட்டதுமான சமுதாய இருப்புக்கு இந்த விவகாரம் விரைவில் சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும்.


கேள்வி: இலங்கை காலனித்துவ ஆட்சியிலும் சுதேச மன்னர்களுடைய ஆட்சியிலும் இஸ்லாமிய சட்டங்கள் தொடர்பில்,..


பதில்: இலங்கைக்கும் அரபியர்களுக்கும் இடையே தொடர்பு சுமார் 2500 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்தது. அவ்வாறுதான் இலங்கையில் இஸ்லாத்தின் தொடர்பு சுமார் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தது. அரேபிய வர்த்தகர்களின் தொடர்பு இலங்கை முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


கி. பி. 7 ஆம். நூற்றாண்டில் சிறு அளவிலான வர்த்தக நோக்கில் அரேபிய குடியேற்றங்கள் இலங்கையின் முக்கிய துறைமுக மற்றும் கரையோர நகரங்களில் இருந்துள்ளன. அவர்கள் சுயதேசிய பெண்களை திருமண முடித்து கரையோர நகரங்களில் வாழ்ந்ததன் ஊடாகவும் முஸ்லிம் சமுதாயம் இலங்கையில் உருவானது. இஸ்லாமிய முறைமையினை தமது தனித்துவமாகவும் அடையாளமாகவும் முன்னிலைப்படுத்தி இந்த திருமணங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கை வரும் முன்னரே கரையோரப் பிரதேசங்களில் ஒரு பிரத்தியேகமான நீதி மன்றம் காணப்பட்டதற்கான சான்றுகள் எஸ். ஜீ. பெரேரா 1947 ல் எழுதி வெளியிட்ட 'த இஸ்ட்ரி ஒப் சிலோன்' நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான தனியார் சட்ட ஒழுங்குகள் காணப்பட்டன. இலங்கையைக் கைப்பற்றி காலனித்துவ ஆட்சியை மேற்கொள்ளளும் முன்னர் இருந்தே முஸ்லிம் சமூகத்திற்கான தனியார் சட்டம் ஒழுங்குகள் பின்பற்றப்பட்டுள்ளன. அது தொடர்ந்து முறையாக இருந்து வந்துள்ளது. முதல் சட்டம் ஒல்லாந்தர் காலத்தில் 1803 ஆம் ஆண்டில் முஹம்மதிய்யன் கோவை திருமணச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. இது இந்தோனேசியாவில் பின்பற்றப்படும் சட்ட வரையறைகளைக் கொண்டதாகும்.


1929 இல் முஸ்லிம் மெரேஜ் விவாகம் விவாகரத்து பதிவு செய்தல் என்ற சட்டம் மூலமாக்கப்பட்டது. 1924 களில் மிஸ்கீன் உம்மாவின் ஒரு முக்கியமான வழக்கு ஒன்று பேசப்பட்டது. ஜஸ்டிஸ் அக்பர் இதனை முன்னெடுத்தார். அந்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் பிரித்தானிய அரசாங்க காலத்தில் மார்க்கான் மரைக்கார், டீ. பி. ஜாயா ஆகியவர்களின் வழிகாட்டலுடன் ஜஸ்டிஸ் அக்பர் தலைமையில் ஒரு குழுவொன்றை நியமித்தனர்.


அப்பொழுது முஹம்மதிய்யன் கோவை இருந்தது. அந்தக் குழுவினரேதான் காதி நீதிமன்றம் உருவாக்குவதற்கான கோரிக்கை யொன்றை முன்வைத்தார்கள். அதன் பின்னர் 1926 களில் அதற்கான சீர்திருத்தக் குழுவொன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டது. 1929 ல் முஸ்லிம் விவாகம் விவாகரத்துப் பதிவு செய்தல் சட்டம் மூலமாக்கப்பட்டது,


அதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைக்கு வரும் கால கட்டத்தில் சுதந்திரத்திற்குப் பின்பு 1951ல் பாராளுமன்றத்தில் சட்ட மூலமாக இணைக்கப்பட்டது. எனினும் 1954 ல் தான் இது இயங்க ஆரம்பித்தது. பொதுவான விவாகப் பதிவுச் சட்டம் 1907 ஆம் ஆண்டு பிரித்தானிய காலத்தில் உருவாக்கப்பட்டாலும் முஹம்மதிய்யன் கோவை முஸ்லிம்களுக்கு இருந்தமையால் பொதுவான விவாகப் பதிவுச் சட்டம் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கவில்லை.


கேள்வி: மிஸ்கின் உம்மா சம்பவத்தை வினைத் திறனாக உள்ளீர்த்து தனித்துவமான இஸ்லாமிய சட்டத்தை தேசிய ரீதியில் அங்கீகாரத்தையும் பலத்தையும் உருவாக்கிய அந்த வழக்குச் சம்பவம் பற்றிக் கூறுவீர்களா?


பதில்: ஒரு முஸ்லிம் பெண் விவாகம் செய்கிறார். அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்றவர் சில வருடம் காலம் வரவில்லை. அவருடைய தகவல்கள் எதுவுமே கிடைக்கவில்லை. இந்தப் பெண்ணின் குடும்பம் அந்தக் கணவனை (தலாக்) விவாகரத்துச் செய்ய வேண்டும். அல்லது (பஸஹு) விடுவிக்க வேண்டும்.


எவ்வாறாயினும் இரண்டாவது திருமணம் முடிக்க வேண்டும் எனில் கணவர் மரணம் எய்த வேண்டும்.அல்லது (தலாக்) விவாகரத்துச் செய்ய வேண்டும். ஏதாவது ஒன்று நடக்க வேண்டும். இல்லையேல் மறுமணம் முடிக்க இயலாது.


இதற்கான சட்டம் ஒன்றைத் தேடினார்கள். இப்படி தேடும் போது தான் இந்தியாவிலிருந்து இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் இலங்கை வந்தார். அறிஞரிடம் அறிவுரை கேட்டார்கள். அப் பெண்மணி அக்கணவரை விடுத்து (பஸஹ்) இன்னுமொரு திருமணம் முடித்து கொள்ளலாம் என்று அந்த மார்க்க அறிஞர் சட்ட விளக்கம் வழங்கினார். அதற்கு இணங்க அப்பெண்மணி இன்னுமொரு திருமணம் ஒன்றை முடித்துக் கொண்டார்.


ஆனால் வெளியே சென்ற அந்தக் கணவர் மீண்டும் திரும்பி வருகின்றார். அப்பொழுது அந்த பெண்மணி இரண்டாவது திருமணம் முடித்திருந்தார். முதல் கணவர் இருக்க எப்படி இன்னுமொரு திருமணம் முடிக்கலாம் என்று பழைய கணவர் இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.


இந்த வழக்கில் இரண்டாவதாக முடித்த திருமணத்தை இரத்து செய்து விட்டதாக நீதி மன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இது தொடர்பில் ஜஸ்டிஸ் அக்பர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்து அந்த பெண்மணி இரண்டாவது திருமணம் முடித்தது இஸ்லாமிய சட்டப்படி சரியானது என வாதிவிட்டு வழக்கில் வெற்றி பெறுகின்றார்.


இஸ்லாமிய சட்டப்பிரகாரம் நடைபெற்ற திருமணம். இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் குறித்த திருமணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் தான் முதல் திருமணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பொதுவான சட்ட திட்டத்தின் கீழ் இந்த விவாக விவாகரத்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்ற கருத்தை முன்வைத்து வாதிட்டதில் தேசிய ரீதியில் இஸ்லாமிய சட்டத்திற்கு ஆதரவான தளம் உருவாக்கப்பட்டது.


அதற்குப் பின்னர் 1951 ல் சுதந்திரத்திற்குப் பின்னர் இதில் சில தேவையான சீர்திருத்தங்களுடன் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத்தில் முதல் முதலாக காதிமார்களையும் காதி சபையையும் உள்துறை அமைச்சின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டு சட்டமூலமாக்கப்பட்டது. இது 1954 கல் தான் நடைமுறைக்கு வருகிறது,. இந்த சீர்திருத்தங்களின் போதும் அடிப்படை விடயங்களில் யாருமே கைவைக்கவில்லை. 70 வருடமும் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார்கள். எல்லோரும் இருப்பதைத்தான் மாற்றியமைத்தார்கள்.


கேள்வி: முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்த விவகாரம் தொடர்ச்சியாக ஸ்திரமற்ற விடயமாகவும் தற்காலத்தில் இது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் அரசியல் நாடகமாக அரங்கேற்றப்படுகிறதா அல்லது ஏதாவது ஒன்று நடக்குமா?


பதில்: யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அநியாயங்கள் நடக்காத முறையில் காதி நீதிமன்றங்கள் இயங்குவதற்கான சீர்திருத்தங்கள் வருதல் அத்தியாவசியமானதாகும். ஏனென்றால் நாங்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் குர்ஆன் ஹதீஸ்களுக்கு மாறாக செயற்பட முடியாது. உண்மையிலேயே சீர்திருத்தம் அவசியம்.ஆனால் அந்த சீர்திருத்தம் குர்ஆன் ஹதீஸின் பிரகாரம் முஸ்லிம்கள் பின்பற்றக் கூடிய உரிமைகளைத் தான் கொண்டிருக்கும். அது பலதார திருமணமாக இருக்கலாம். விவாகரத்து தொடர்பாக இருக்கலாம். இவை அனைத்து குர்ஆன் சுன்னாவுக்கு உட்பட்ட விடயம்.


இந்த நாட்டின் நிரந்தரக் குடி மக்களாகிய முஸ்லிம் சமூகத்திற்கு எந்த அரசாங்கம் இருந்தாலும் முஸ்லிம்களுடைய தனித்துவமான உரிமைகளை வழங்குவது இந்த நாட்டினுடைய கடமை. முஸ்லிம் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் தங்களது தனித்துவமான வரையறைகளுக்கு உட்பட்டு வாழ்வதற்கான உரிமையினை இலங்கையின் அரசியல் யாப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.


சீர்திருத்தமானது முஸ்லிம்களுடைய நலனைக் கருத்திற் கொண்ட மாற்றங்கள் கொண்டு வரப்படுதல் வேண்டுமே தவிர ஏனைய சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களுக்கோ அவர்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கோ அரசியல் ரீதியிலான தேவைகளுக்கோ மாற்றம் செய்ய முடியாது.


எவ்வாறாயினும் அமைச்சர் அலி சப்ரியின் காலத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகம் இல்லாமல் காதி நீதிமன்றங்கள் சிறந்த முறையில் செயற்பட வழிகோலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது.


கேள்வி: முஸ்லிம் விவாகம் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரின் முன்னெடுப்புக்கள் பற்றிக் கூறுவீர்களா?


பதில்: நான் அவருடன் மிக நெருக்கமான தொடர்பினை வைத்திருக்கின்றேன். அரசியல் தொடர்புகளுக்கு முன்னர் இருந்தே சமூக சார்ந்த விடயங்களில் ஒருங்கிணைந்து செயற்பட்டவன் என்ற வகையில் அவருடன் நெருக்கமான உறவு இருந்து வருகிறது.


நான் எந்த கட்சிக்கு அதரவளிக்கின்றேனோ அவரும் அந்தக் கட்சியில் அமைச்சராக இருக்கிறார். அரசியல் ரீதியாகவும் அவருடன் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இது சம்பந்தமாக உரையாடியவன் என்ற அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பில் அவர் பற்றி சமூக ஊடகங்களின் வெளிவரும் விமர்சனங்கள் உண்மைக்கும் புறம்பானவையாகும்.


நாங்கள் வாழக் கூடிய இன்றைய சூழல் சிறுபான்மையின முஸ்லிம் சமூகம் என்ற வகையில் ஒரு சவாலாக இருந்து கொண்டிருக்கிறது.இந்த சூழலில் நாங்கள் பெற்றுக் கொண்ட உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் சலுகைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் தூர நோக்குடன் சிந்தித்து பொறுமையான காய் நகர்த்தல்களைச் செய்தால் மாத்திரம் தான் எதிர்கால சமூகத்திற்கு இந்த விடங்களைப் பாதுகாத்து நாங்கள் அவர்களின் கையில் ஒப்படைக்கலாம்.


ஒரு காலத்தில் எமது மூதாதையர்கள் பெற்றுத் தந்த சலுகைளையே தான் இன்று நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அவர்களால் தான் 100 வருடங்கள் சென்றும் அவற்றைப் பின்பற்றி நடந்து கொண்டிருக்கின்றோம்.


அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது.


இந்த நாட்டின் கடந்த 4 தசாப்பாத அரசியல் சூழல் இனவாத முரண்பாட்டைக் கொண்டது. அது உச்ச நிலை அடைந்துள்ளது.1956 களில் இருந்து இனவாத கட்சி அரசியல் இருக்கிறது.சிங்கள, தமிழ் முரண்பாடாக இருக்கலாம், சிங்கள, முஸ்லிம் முரண்பாடாக இருக்கலாம், தமிழ், முஸ்லிம் முரண்பாடாக இருக்கலாம். இவை எல்லாம் அரசியல் ரீதியாக அரங்கேற்றப்பட்டு சமூகங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் காய் நகர்த்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


1980 களில் இருந்து 2009 வரையிலும் சிங்கள, தமிழ் முரண்பாடு தோற்றம் பெற்றிருந்தது. 2010 ல் இருந்து இன்று வரையிலும் சிங்கள, முஸ்லிம் முரண்பாட்டை மையமாக வைத்து அரங்கேற்றப்பட்ட இனவாத செயற்பாட்டை முன்வைத்துத் தான் இந்த நாட்டினுடைய அரசியல் ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது.நாங்கள் எமது முதாதையர்கள் பற்றி பெருமை பேசினாலும் எங்களைப் பற்றி அடுத்து வரும் சந்ததியினர் எதிர்காலத்தில் பெருமை பேச வேண்டும்.அந்த அடிப்படையில் அமைச்சர் அலி சப்ரி தூரநோக்குடன் எதிர்கொள்ளக் கூடிய அனைத்து சவால்களையும் நிதானமான முறையில் முறியடிப்பதற்கான சகல முயற்சிகளையும் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


கேள்வி: ஆனால் இவ்விடயம் இவ்வளவு காலமும் இழுபறி நிலமை ஏற்படுவதற்கான காரணம் என்ன?


கேள்வி: 2008 ஆம் ஆண்டில் மிலிந்த மொரகொடவினால் நீதியரசர் மர்சூக் தலைமையில் நியமிக்கப்பட்ட சீர்திருத்த குழு அறிக்கை 10 வருடங்களுக்கு பின்னர் தான் ஆவணமாக கொண்டு வரப்பட்டது. அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டு முன் வைக்கப்பட்டாலும் அந்தக் குழு முரண்பட்டு இரு தரப்பினர்களாகப் பிரிந்தனர்.


அது ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையிலும் நீதியரசர் மர்சூக் தலைமையிலும் இரு குழுக்களாகப் பிரிந்தனர். இந்த இரு தரப்பினர்கள் தயாரித்த சீர்திருத்த சட்டவரைபுகள் அன்று நீதி அமைச்சராக கடமையாற்றிய தலாதா அத்துகோரளவுக்கு கையளிக்கப்பட்டது.


இந்த சந்தர்ப்பத்தில் அன்றைய நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள். அவர்கள் இருந்தும் கூட அதற்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்க இயலாத நிர்ப்பந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள்.காரணம் சமூகத்தில் இரு தரப்பினர்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு பிளவுகள் உருவானதால் அவர்களுக்கு ஒரு தீர்மானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது இருந்தது.


துரதிஷ்டவசமாக 2019 ல் ஈஸ்டர் தாக்குதல் ஏற்பட்டதால் முஸ்லிம்களுக்கு எதிர்பாராமல் பாரிய சோதனை ஏற்பட்டது. இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் தக்கவைத்துக் கொண்டு வந்த நம்பிக்கை கௌரவத்திற்கு பாரிய அடி வீழ்ந்தது.அந்த தாக்குதல் கடும் போக்குவாதிகளுக்கு தீனி போட்டமாதிரி இருந்தது. அதைத் தொடர்ந்து எமது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய சவால்கள் அதிகம்.


அதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பல சீர்திருத்தங்களை எதிர்பார்த்து தேசிய பாதுகாப்புச் சம்பந்தமான ஒரு குழுவினை நியமனம் செய்தனர்.


17 அங்கத்தவர்களைக் கொண்ட குழுவில் எல்லாக் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். முஸ்லிம் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். இந்த நாட்டின் பாதுகாப்புச் சம்பந்தமாக முஸ்லிம் சமூகத்திற்குள் வரக் கூடிய மாற்றங்கள் குறித்து தீர ஆராயப்பட்டது. அந்தக் குழுவின் இறுதி அறிக்கை 19-02-2020 சமர்ப்பிக்கப்பட்டது.


அந்த அறிக்கையில் ஒரு முக்கிய அம்சமாக காதி நீதிமன்றம் முற்றாக ஒழிக்கப்பட்டு ஏனைய தனியார் சட்டங்கள் போல் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட விடயங்கள் பொது நீதி மன்றத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏகமனதாக முஸ்லிம் பிரதிநிதிகளும் ஆமோதித்து கையொப்பிட்டிருந்தார்கள்.


அன்று இருந்த களநிலவரத்தால் கையொப்பம் இட வேண்டிய சூழ்நிலை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் என நான் கருதுகின்றேன். ஆனாலும் இது ஒரு கவலையான விடயம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே ஏதோ ஒரு அடிப்படையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு இந்தத் தீர்மானங்கள் பரிந்துரைக்கு முன் செயற்படாமல் விட்டதை நான் ஒரு குறைபாடாக கருதுகின்றேன்.


அந்நேரத்தில் அதனை நிவர்த்தி செய்திருந்தால் இன்றுள்ள பல அழுத்தங்களைக் தவிர்த்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம்.இவ்வாறான பல சவால்களை சுமந்து கொண்டு தேசிய பட்டியல் நியமன அமைச்சர் என்றும் பாராமல் சமூகத்திற்கு வரக் கூடிய சவால்களை உள் இருந்து முறியடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர் அலிசப்ரி செயற்படுகின்றார்.


கேள்வி: காதி நீதிமன்ற முறைமை எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றை விருத்தி செய்து கொள்வதற்கான தேவைப்பாடுகள் குறித்து கூற முடியுமா?


கேள்வி: காதி முறைமை முற்றாக நீக்கப்படும் என்பது சித்திரிக்கப்பட்ட செய்தியாகும். காதி முறைமை முற்று முழுதாக நீக்கப்படப்போவதில்லை.


இதில் முஸ்லிம் பெண்கள் ஏதோ ஒரு அடிப்படையில் சில இன்னல்களுக்கு உட்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம் பெண்கள் அநீதி இழைக்கப்பட்ட ஒரு சமூகமாக உள்ளனர் என நான் கருதுகின்றேன். எல்லா முஸ்லிம்களும் இதனைப் பாரபட்சமின்றி ஏற்றுக் கொள்வார்கள்.


இதில் எல்லாக் காதிகளையும் குற்றம் சுமத்த நான் விரும்பவில்லை. சில காதிமார்களுடைய நடவடிக்கைகளால் எமது சமூகத்தின் முஸ்லிம் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டு அநாதையாக்கப்படுகின்றனர். வார்த்தை துன்புறுத்தலுக்கும் உட்பட்டவர்களாக உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி 2000 வழக்குகளை எடுத்து ஆய்வுகள் செய்துள்ளார். தற்போதைய காதி நீதிவான்கள் குறைந்தளவிலான கொடுப்பனவே பெறுகின்றனர்.ரூபா 15,000 வரைதான் உள்ளன.அமைச்சர் அலி சப்ரி அதனை 50,000 ரூபாவாக அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.அத்தோடு தகைமை வாய்ந்தவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என சில திட்டங்களையும் வகுத்துள்ளார்.


காதி நீதிமன்ற மேம்பாட்டுக்காக புதிய சொல்வடிவத்தையும் அறிமுகம் செய்யலாம். கடந்த காலங்களில் இந்நாட்டில் ஹலால் பிரச்சினை இருந்தது. அன்று இருந்த இலட்சினை இல்லை இன்று. அது எச். ஏ. சி என்ற பெயரில் தொடர்ந்து இயங்கி வருகிறது. முன்னர் அரபு எழுத்தில் ஹலால் என்று இருந்தது.


சிலவேளை சில சொற்பதங்கள் மாற்ற வேண்டிய நிலைமை வரலாம். களநிலவரத்தைப் பொறுத்தவரையில் சொற்பதங்களில் சில மாயைகளை உருவாக்கக் கூடிய வகையில் மாற்றங்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.சீர்திருத்தத்தின் ஊடாக நூற்றுக்கு நூறு விகிதம் எந்த மாற்றங்களும் நடைபெறாது என்பது நான் அறிந்த வரையில் தெரிவிக்கின்றேன்.


கேள்வி: காதிநீதிமன்றங்களில் எவ்வாறான சீர்திருத்தங்கள் வரலாம் ?


பதில்: பெண்கள் விவாகரத்தை கோரும் போது அவர்களுக்கு சரியாக நீதி கிடைக்காத சந்தர்ப்பத்தில் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். அதே போன்று ஆண்களுக்கும் உண்டு.


இந்த இரு தரப்பினர்களுக்கிடையே காணப்படும் பிணக்குகள் எல்லாம் நூற்றுக்கு நூறு இந்த காதி நீதி மன்றங்கள் ஊடாகத் தான் தீர்க்கப்படும்.ஆனால் இரு தரப்பினர்களுக்கிடையே தொடர்ந்து தமது வாழ்க்கையில் ஒன்றாகப் பயணிப்பதற்கான சமரசம் காணாத பட்சத்தில் அல்லது இரு சாராருக்குமிடையே இணக்கப்பாடு காண்பதில் இயலாமை போகுமானால் மாவட்ட நீதி மன்றத்திற்கு முன் வைக்கப்படும்.


அங்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் பிரகாரம் தான் மனுக்கள் விசாரணைக்காக முன்னெடுக்கப்படும். பொது நீதிமன்ற சட்டத்தின் கீழ் எமது வழக்குகள் விசாரணைகள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன்.


எவ்வாறாயினும் மாவட்ட நீதிமன்றத்திற்கு 10 விகிதத்திற்கு குறைவான வழக்குகள் தான் அங்கு செல்லும். குறிப்பாக அந்த வழக்குகள் அங்கு செல்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாவே இருக்குமெனக் கருதுகின்றேன்.


பராமரிப்பு, கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, நிதி உதவி போன்ற விடயங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாமை இருந்தால் காதி நீதிபதியின் அனுமதியுடன் மாவட்ட நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். நஷ்டஈடு (மதா) என்ற விசயம் இன்றுள்ள காதி முறையில் இல்லை. இதனால் தான் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.


குறித்த பெண்ணை எந்தவிதமான காரணமும் இல்லாமல் விவாகரத்துச் செய்தால் அந்தப் பெண் எதைக் கேட்கின்றாரோ அதனைக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இது ஆண், பெண் இருவருக்கும் சமனாக அமையும். இதன் மூலம் இரு தரப்பினர்களும் நஷ்டஈடு பெற்றுக் கொள்ள இயலுமாகும். காதி நீதிமன்றத்தில் இதற்கான பிணக்குகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை எனில் மாவட்ட நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து தீர்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.


இன்று காரசாரமாக பேசப்படும் காதி நீதி மன்ற முறைமையில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சில காதிமார்களின் தவறுகளினால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அநியாயம் நடக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கென எடுக்கும் முன்னெடுப்பாகவே இதனை நாம் நோக்க வேண்டியுள்ளது.


இதனை அமைச்சர் அலி சப்ரியின் காலத்தில் செய்யாவிட்டால் வேறு எவராலும் செய்ய முடியாது எனக் கருதுகின்றேன். சுமார் 70 வருட காலமாக இதில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக முயற்சிகள் செய்கின்றோம்.அவருடைய காலத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தால் மட்டுமே மாற்றங்களை செய்யலாம் ஏன்னென்றால் நீதி தொடர்பில் நன்கறிந்தவர் என்பதால். இந்த காதி முறைமை தொடர்பில் எந்தவிதமான சந்தேகங்களையும் வைத்துக் கொள்ள வேண்டாம். அமைச்சருக்கு எதிரான விமர்சனங்களையோ தேவையற்ற கட்டுக்கதைகளையோ பரப்புகின்ற நடவடிக்கைளில் ஈடுபட வேண்டாம் என நான் தயவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.


குர்ஆன் சுன்னாவுக்கு மாறாக நடைபெறுமாயின் நாங்களும் முன்னின்று அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோம். ஆனாலும் இது சம்பந்தமான தெளிவூட்டல்களைப் பெற்றுக் கொள்வது அவசியம். இது பற்றி சரியான தகவல்கள் இல்லாமை காரணமாக திரிவுபடுத்தப்பட்ட தகவல்களை முன்வை விமர்சனங்கள் செய்கின்றனர்.


இதனை மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் இதன் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திடம் இருக்க வேண்டும். முழுமையாக இந்த முறைமை ஒழிக்கப்படமாட்டாது.


ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் கூட பெப்ரவரி 12 ஆம் திகதி அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரையில் அவரது உறுதியான கருத்தை தெளிவாக முன்வைத்தார். அந்த நிலைப்பாட்டில் தான் அவர் இன்றும் இருக்கின்றார்.


அவர் இந்தப் பதவில் இருக்கும் வரையிலும் எந்த சமூகத்திற்கோ வேறு இதர சிறுபான்மை சமூகத்திற்கோ எமது தேசத்திற்கோ எந்தவிதமான பாதகங்களும் வராது என்ற அடிப்படையில் தான் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.


இதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


வசீர் முக்தார்-🇱🇰

மக்கள் பிரதிநிதி

காதி நீதிபதிபதிகளின் அவசியத்தை உணர்த்திய 1925ம் ஆண்டின் வழக்கு..!

 


2020 பது காலப்பகுதியில் என்னால் எழுதப்பட்ட கட்டுரை இதுவாகும்...!


காதி நீதிமன்றம் உருவாகிய வரலாறு

,-----------


பாராளுமன்றத்தில் முஸ்லிம் விவாக,விவாவகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கு,பாராளுமன்ற உறுப்பினர் தனி நபர் பிரேரனை ஒன்றை சமர்ப்பித்திருக்கும் இவ்வேளையில் 

காதி நீதிமன்றத்தின் தேவை முஸ்லிம் சமூகத்தால் எப்போது உணரப்பட்டது,எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்தும் கட்டுரை.


நன்றி:- முனை மருதவன்  என்.எச்.எம்.

இப்ராஹிம்


காதி நீதிபதிபதிகளின்  அவசியத்தை  உணர்த்திய 1925ம்  ஆண்டின் வழக்கு..!

இலங்கையின் முஸ்லிம் சட்ட வரலாற்றில் 1925ம் ஆண்டு மிஸ்கின் உம்மா என்ற முஸ்லிம் பெண்மணிக்கு எதிராக அன்றிருந்த அரசாங்கம் தொடுத்த வழக்கின் மூலமாக கிடைத்த தீர்ப்புத்தான் முஸ்லிம் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்ல காதி நீதிபதிகளின் தேவையையும் அந்த தீர்ப்பின் அதிர்வலை உணர்த்தியது என்றால் அது பொய்யாகாது. இந்த தீர்ப்பின் மூலம் ஒரு முஸ்லிம் பெண்மணி அரசாங்கத்தால் கைது செய்யப்படும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது எனலாம்.

உயர் குடும்பத்தை சேர்ந்த மிஸ்கின் உம்மா என்ற பெண்மணியை முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்திருந்த வேளையில், அந்தக் கணவன் அந்த பெண்மணியின் பெரும்பாலான சொத்துக்களை செலவு செய்த நிலையில் தலைமறைவாகிவிட்டார்.  அவர் நீண்டகாலமாக எங்கே இருக்கின்றார் என்று அறிந்துகொள்ள முடியாத அந்த பெண்மணியின் குடும்பத்தாரும் ஊரார்களும் அவர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவர்களாக, தென்னிந்தியாவிலிருந்து ஒரு மார்க்க அறிஞர் ஷேய்க்கின் ஆலோசனைப்படி  அவரை இறந்துபோன கணவனின் வொலியாக ( பிரதிநிதியாக) நியமித்து அவர் மூலம் அப்பெண்ணுக்கு தலாக் (விவாகரத்து) வழங்கினார்கள். அந்த நேரம் காதி நீதிபதி இல்லாத காரணத்தினால் ஊர் ஜமாஅத்தார் இந்த முடிவை எடுத்திருந்தார்கள்.

விவாகரத்து பெற்ற மிஸ்கின் உம்மா, உரிய காலத்தில் இத்தா என்னும் இஸ்லாமிய கடமையை நிறைவேற்றியதன் பின் புதிய கணவன் ஒருவரை திருமணம் செய்திருந்தார். அதுவரையும் நீண்டகாலம் தலைமறைவாக இருந்த முன்னய கணவன் திடீரென்று தோன்றி கணவன் நான் உயிரோடு இருக்கும்போது நீ செய்துகொண்ட இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது என்று பொலிசில் முறைப்பாடு கொடுத்தார். உடனே பொலிசும் ' இருமணவாழ்வு' என்ற குற்றத்தை அந்த பெண்மணிமீது சுமத்தி மிஸ்கின் உம்மாவை கைது செய்தது. பொலிசாரின் இந்த நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பரவி ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது.

மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி இலங்கைச் சட்டத்தின் கீழ் 'மிஸ்கின் உம்மா செய்தது குற்றமே'  என்று தீர்ப்பு வழங்கினார். உடனே மிஸ்கின் உம்மா சார்பில் உயர் நீதிமன்றிக்கு இந்த வழக்கை மேன்முறையீடு செய்திருந்தார்கள். அப்பொழுது அரசாங்க சட்டத்தரணி நாயகமாக  கடமையாற்றிய எம்.றி.அக்பர் அவர்கள் இது பொது சட்டத்தின் பார்வையில் குற்றமாக கருதப்பட்டாலும் ஒரு காதிநீதிபதி இல்லாதபட்சத்தில் ஊர் ஜமாஅத்தார் அந்த முடிவை எடுத்ததில் தவறில்லையென்றும், இஸ்லாமிய சட்டப்படி அந்த பெண்மணி குற்றவாளியல்ல என்றும் உயர் நீதிமன்றுக்கு ஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனையின் பிரகாரம் அந்த வழக்கு முடிவுக்கு வந்திருந்தது.

இந்த நிலையை சீர்செய்வதற்காக அன்றய முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். இது சம்பந்தமாக 1926ம் ஆண்டு என்.எச்.எம்.அப்துல் காதர் அவர்கள் முஸ்லிம் திருமண சட்டத்தை மறுபரிசீலனை செய்து சட்டசபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு விசேட குழுவொன்று நியமிக்கபடவேண்டும் என்று சட்டசபையிலே ஒரு பிரேரணையை முன்வைத்தார். அதன்படி குழுவொன்று அமைக்கப்பட்டது அந்த குழுவிலே எம்.றி.அக்பர் தலைவராகவும், என்.எச்.எம்.அப்துல்காதர், கே.பாலசிங்கம், டபிள்யு. துரைசாமி, றி.பி.ஜாயா, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா, எச்.என்.மாக்கான் மாக்கார், மொலமுரே, தம்பிமுத்து, ஆகியோர்கள் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டனர். 

இந்தக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம்களின் விவாக விவாகரத்து விடயங்களில் அநியாயங்கள் நடந்துவிடாமல் இருப்பதற்கு காதி நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்று அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்கள். இதன் காரணத்தை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், 1929ம் ஆண்டு 'அக்பர் குழுவின்' அறிக்கையின் பிரகாரம் 1888ம்ஆண்டில் அமுலாக்கப்பட்ட முகம்மதிய சட்டக்கோவையை அரசாங்கம் வாபஸ் பெற்றதுடன், 1929ல் கொண்டுவரப்பட்ட 'திருமண- மனமுறிவு பதிவு ' என்ற சட்டக்கோவையை அமுல்படுத்தியது. அதன் மூலம் காதிநீதிபதிகளை நியமிக்கும் வழமை நடைமுறைக்கு வந்தது. 

இன்னும் சில வரலாறுகள் தொடரும்..!

~முனைமருதவன்

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் கையொப்ப வேட்டை.

 



 காதி நீதிமன்ற முறைமையையோ , முஸ்லிம் விவாக , விவாகரத்துச் சட்டத்தையோ இல் லாமற் செய்ய வேண்டாம் . மாறாக காதி நீதி மன்ற கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக் கைகளையே முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி , பிரதமர் மற்றும் நீதியமைச் சரைக் கோரும் மனுவொன்று தற்போது  முஸ்லிம் சமூகத்தினால் கையொப்ப வேட் டைக்கு விடப்பட்டுள்ளது . முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இம்மனுவில் 2500 கையொப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன . குறிப்பிட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள - தாவது , காதி நீதிமன்ற கட்டமைப்பில் மாற் றங்களைச் செய்வதற்காகவும் , முஸ்லிம் விவாக , விவாகரத்து சட்டத்தில் குர்ஆனிய சட்டங்களை மாற்றியமைப்பதற்கும் அமைச் சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டு தற் போது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . அத்தோடு முஸ்லிம்கள் பொதுச் சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்து கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சில முஸ்லிம் பெண்களின் கோரிக்கைக்கு அமைவாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.


முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்த‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையை முத‌லில் முன் வைத்த‌வ‌ர் முன்னாள் அமைச்ச‌ர் ர‌வூப் ஹக்கீமாகும். ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ப‌ண‌த்துக்காக‌ ஆடும் சில‌ பெண்க‌ளின் கோரிக்கையை ஏற்றே ஹ‌க்கீம் இத‌னை முன்வைத்தார்.

அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ வை எம் எம் ஏ போன்ற‌ மார்க்க‌ம் தெரியாதோரும் வ‌க்கால‌த்து வாங்கின‌ர்.

எக்கார‌ண‌ம் கொண்டும் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் கை வைக்க‌ வேண்டாம் என‌ சொன்ன‌வ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ம‌ட்டுமே.

க‌ட‌ந்த‌ ந‌ல்லாட்சியில் இத‌ற்கான‌ அமைச்ச‌ர‌வை அனும‌தி கிடைத்த‌ போது ம‌வுன‌மாக‌ இருந்த‌ முஸ்லிம்க‌ளும், அமைப்புக்க‌ளும் இப்போது முழித்துள்ள‌ன‌ர். 


முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் சில விடயங்களில் காலத்திற்குத் தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் ACJU

 


®முஸ்லிம் சட்ட விடயத்தில் அமைச்சரவை தீர்மானம் பற்றி ஜம்ய்யத்துல் உலமா அதிருப்தியும், கவலையும் வெளியீடு..!


இந்நாட்டு முஸ்லிம்கள் 1000 வருடங்களுக்கு மேலாக தமது மத மற்றும் கலாச்சார விவகாரங்களையும், மார்க்க சட்டதிட்டங்களையும் எவ்வித பிரச்சினையுமின்றி பின்பற்றி வந்துள்ளதுடன் இது சட்ட அமைப்பில் தொகுக்கப்பட்டு ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலத்திலும், சுதந்திரத்திற்கு பின்பும் இன்றுவரை முஸ்லிம் தனியார் சட்டம் என்ற அடிப்படையில் சட்ட ரீதியாக இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 


இச்சட்டங்கள் முஸ்லிம்களின் மார்க்க விடயங்களோடு தொடர்புபட்டிருப்பதால் ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை உரிய முறையில் உள்வாங்கியே இதில் தேவையான மாற்றங்களை செய்து வந்துள்ளனர்.


முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் சில விடயங்களில் காலத்திற்குத் தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் நாம் உடன்படுகின்றோம். 


குறிப்பாக பெண்களின் ஆதங்கங்கள் இம்மாற்றங்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். 


எனினும், இது முஸ்லிம்களது மார்க்கத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதனாலும், ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கை அவனது மார்க்கத்தோடு இணைக்கப்பட்டிருப்பதனாலும் இம்மாற்றங்கள் மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையிலும் உரிய தரப்பினரினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை உள்வாங்கியுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். 


காலத்திற்குத் தேவையான இம்மாற்றங்கள் குறித்த முன்மொழிவுகளை ஏற்கனவே பல தடவைகள் பல கட்டங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.


இந்நிலையில் இஸ்லாமிய மார்க்க, சிவில் நிறுவனங்களுடைய ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் அமைச்சரவையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் சம்பந்தமாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பது மிகக் கவலைக்குரிய விடயமாகும். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அதிருப்தியையும், கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது.


எனவே, அமைச்சரவையின் இத்தீர்மானங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யும்படியும், குறித்த விடயங்கள் தொடர்பான மார்க்க அடிப்படைகளை உரிய முறையில் கவனித்து, நாட்டின் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் மதித்து, எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில், இந்நாட்டின் பல்லின கலாச்சாரத்தைப் பேணக்கூடிய விதத்தில், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த ஒரு பொறிமுறை மூலம் இவ்விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் படியும் அரசாங்கத்தையும் கௌரவ நீதி அமைச்சரையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றது. 


மேற்கூறிய அடிப்படையில் நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் எடுக்கப்படக் கூடிய சகல முன்னெடுப்புக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.


நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தீர்மானமும் நமது நாட்டுக்கும், நமது எதிர்கால சந்ததியினருக்கும் நலவுகளையும், பிரயோசனங்களையும் உண்டாக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.  


வஸ்ஸலாம்.

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர் 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஸ்லிம் திருமண‌ சட்டத்தை மாத்திரம் நீக்குவதன்றி , அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும்.

'ஒரே நாடு ஒரே சட்டம் ' என்ற கோட்பாடு செயல்படுத்தப்பட வேண்டுமாயின் , முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் நீக்குவதன்றி , அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்படுவதன் மூலமே மேற்கொள்ள முடியமென , நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார் . 


பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்வைக்கப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு நேற்று ( 12 ) பாராளுமன்றத்தில் பதிலளித்த அவர் இதனைத் கூறினார் . அவர் இதன் போது பதிலளிக்கையில் , இலங்கையில் ' ஒரே நாடு ஒரே சட்டம் ' என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா என , ரத்தன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார் . அதாவது ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் பொருளானது "சட்டம் அனைவருக்கும் சமமானதாகும் . அனைத்து இடங்களிலும் அது ஒரே வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்," என்பதாகும் . 


அவர் மற்றுமொரு கேள்வியை எழுப்பியிருந்தார் , இலங்கையில் தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ளது பற்றி நீங்கள் அறிவீர்களா என்று , இலங்கையில் ப‌ல‌ தனியார் சட்டங்கள் செயற்பாட்டிலுள்ளன . உதாரணமாக , கண்டி திருமண - விவாகரத்து சட்டம் , யாழ்ப்பாண விவாக விவாகரத்து சட்டம் மற்றும் தேச வழமை சட்டம் , முஸ்லிம் விவாகச் சட்டம் , பௌத்த கிராமங்கள் , விகாரைகள் சட்டம் , இந்து கலாசார சட்டம் , முஸ்லிம் வக்ஃப் சட்டம் , சேர்ச் ஒப் சிலோன் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் இலங்கையில் தனியார் சட்டங்களாக அமுலிலுள்ளன . இலங்கையில் மாத்திரமல்ல இந்தியா , பிலிப்பைன்ஸ் , இஸ்ரேல் , சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் முஸ்லிம் பிரஜைகளுக்கு முஸ்லிம் சட்டம் அமுலில் உள்ளன .


 எதிர்வரும் காலத்தில் இதனை மாற்றி , பொதுவாக ' ஒரே நாடு ஒரே சட்டம் ' என்பதற்கு அமைய அனைவருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் , முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் நீக்குவதன் மூலம் மேற்கொள்ள முடியாது . அவ்வாறாயின் அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும் . அவ்வாறில்லாமல் இதனை பிரச்சினையாக மாற்றி , அங்கும் இங்கும் பேசிக்கொண்டு , இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல.


 அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டம் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றதா என‌ அவர் கேள்வி எழுப்பியிருந்தார் .  அவ்வாறு இல்லை சபாநாயகர் அவர்களே .


1806ஆம் ஆண்டில் , ' மொஹமட் அன் கோர்ட் ' எனும் பெயரில் ஆங்கிலேயர்களால் , முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களுக்கும் , யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் , கண்டியில் கண்டி தனியார் விவாக விவாகரத்து சட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன . காலப்போக்கில் ஒரு சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . அவை முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் இளம் சிறுவர்கள் பலவந்தமாக திருமணம் முடித்துவைப்பதாக அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார் . அது தவறான கருத்தாகும் . அது பிரயோக ரீதியில் மேற்கொள்ளப்படுவதில்லை . பெண்ணின் விருப்பத்தை பெற்று , தந்தை கையொப்பமிடுகிறார் . அதில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் செய்யலாம் . அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க முடியும் .


 பல்வேறு நாடுகளில் பெண்களின் , சிறுவர்களின் திருமண வயது தொடர்பில் பல்வேறு வயது வேறுபாடுகள் காணப்படுகின்றன . அமெரிக்காவின் ஒரு சில பிராந்தியங்களில் தற்போது வரை 13 வயதாக காணப்படுகின்றது . ஜப்பானின் ஒரு சில பிராந்தியங்களில் 15 வயதாக அது காணப்படுகின்றது . இலங்கையில் 1995 ஆம் ஆண்டு வரை கண்டி சட்டத்தில் பெண்களின் திருமண வயது 16 ஆக காணப்பட்டது . முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் 12 வயதை நிறைவடைந்த ஒரு பெண் , பருவ வயதை அடைந்த பின்னர் , அவரது விருப்பத்தின் பிரகாரம் திருணம் செய்து வைக்க முடியும் . ஆயினும் அதனை மாற்றுவதற்கான காலம் எழுந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் . அதற்கமைய நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் . ஆயினும் கண்டி விவாக விவாகரத்து ஆயினும் கண்டி விவாக விவாகரத்து சட்டத்தின் 8 முதல் 15 வரையான பிரிவு மற்றும் வழமையான திருமண சட்டத்தின் 22 ஆம் பிரிவு ஆகியவற்றை வாசிப்பதன் மூலம் பெற்றோரின் சம்மதத்துடன் வயதுக்கு குறைந்தவர்களையும் திருமணம் செய்து வைக்க முடியும். எனவே முஸ்லிம் சட்டத்தின் மாத்திரமன்றி இது இங்கும் இவ்வாறு காணப்படுகின்றது . 


ஆயினும் கண்டி தனியார் சட்டம் 1997 ஆம் ஆண்டு 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னரே இது மாற்றியமைக்கப்பட்டது . ஆயினும் சட்டப்படி கண்டி தனியார் சட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை என்பதுட‌ன் பொதுவான திருமண சட்டமும் சட்டமும் மாற்றி அமைக்கப்படவில்லை என்பதோடு , திருமண பதிவு சட்டம் மாத்திரமே திருத்தி அமைக்கப்பட்டிருந்தது . இதன் காரணமாக , 2002 ஆம் ஆண்டில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு ஒன்றை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது . அதாவது திருமண வயதெல்லை 18 ஏற்பட்டது . அதாவது திருமண வயதெல்லை 18 வயதாக பொதுவான சட்டத்தின் கீழ் காணப்படுகின்றமையால் , பெற்றோரின் சம்மதத்திற்கு உட்பட்டதாக இருந்தபோதிலும் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என அத்தீர்ப்பு வழங்கப்பட்டது .  தற்போது சவுதி அரேபியாவிலும் திருமணத்திற்கான வயதெல்லை 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . எனவே அது தொடர்பில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்பதனை நான் இந்த அவைக்கு கூற விரும்புகின்றேன் . 


இந்த அனைத்து சட்டங்களும் ஒரேயடியாக உருவாகவில்லை என்பதோடு , காலத்துக்கு காலம் தேவைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன .


 1938 வரை , ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் முறையும்  காணப்பட்டிருந்தது . அது காலத்துடன் மாற்றியமைக்கப்பட்டது .   எனவே இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தையோ இனத்தையோ குறி வைத்து அதன் தலைவர்களை குறி வைத்து சாடுவது தொடர்பாக எமக்கு உடன்பாடு இல்லை . அதற்கமையவே 2020 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி நான் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தேன் . அதில் நாட்டின் ஏனைய இன பெண்களைப் போன்று முஸ்லிம் பெண்களுக்கும் திருமணம் செய்வதற்கான மிகக்குறைந்த வயது 18 ஆக இருக்க வேண்டும் என நாம் யோசனை முன் வைத்துள்ளோம் . அது மாத்திரமன்றி பெண்கள் காதி நீதிபதிகளாக செயற்படுதல் , திருமணத்தின் போது பெண்களும் கையொப்பம் இடுதல் உள்ளிட்ட யோசனைகளையும் முன் வைத்த‌தோடு இது தொடர்பில்  குழுவொன்றை நியமித்துள்ளோம் . 


நாம் இது தொடர்பில் படிப்படியாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளோம் . நிச்சயமாக அது தொடர்பில் திருத்தங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்போம் . இவ்விடயம் தொடர்பில் தனியான ஆலோசனைக் குழு ஒன்றையும் நான் நியமித்துள்ளேன் . அவர்களின் தகவல்களின் படி , சமூகத்தின் மீது இதனை திணிக்காமல் அவர்களது அனுமதியைப் பெற்று செயற்பட வேண்டும் என்று , நான் அதனை மேற்கொள்ள முடியும் என்று மிக உறுதியுடன் நம்புகிறேன் . 


அவர் அதற்கு அடுத்தபடியாக , குறைந்த வயதில் திருமணம் முடிப்பதன் மூலம் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ? என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் . ஆம் . நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன் .   சிறு வயதில் திருமணம் முடிப்பது சிறந்ததல்ல . 18 வயதுக்குப் பின்னர்தான் அவர்களால் அதனை சமாளிக்க முடியும் . 18 வயதுக்கு குறைந்தவர்கள் திருமணம் முடிக்க கூடாது எனும் நிலைப்பாட்டை , நான் ஒரு கொள்கையாக கொண்டுள்ளேன் . 


ஆயினும் இலங்கையில் குறைந்த வயதில் திருமணம் முடிப்பது எவ்வாறாக இருந்த போதிலும் , குறைந்த வயதில் பெண்கள் தாய்மை அடைகின்றனர் . அதில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம் சமூகத்திற்கு வெளியிலேயே காணப்படுகின்றனர் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . திருமண பதிவு மேற்கொள்ளாத போதிலும் அச்சிறுவர்கள் தாயாகியுள்ளனர் . எனவே நாம் அது தொடர்பிலும் அவதானம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்து அதனை தீர்க்கவுள்ளோம் என‌ அறிவிக்க விரும்புகின்றேன் . 


 எனவே , முஸ்லிம் சட்டத்தை மறுசீரமைக்க  வேண்டுமென அரசாங்கம் நினைக்குமாயின் , அது தொடர்பில் செயற்பட்டு , அதனை புதிய அரசியலமைப்பின் மூலம் அதனை எம்மால் மேற்கொள்ள முடியுமென நான் நம்புகிறேன் .



 எனவே சபாநாயகர் அவர்களே , இது தொடர்பில் ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு , எதிர்காலத்தில் அதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதனை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் . 

12.2.2021

முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒழிக்க‌ முற்ப‌டும் ர‌த‌ன‌ தேர‌ரின் முய‌ற்சிக்கு ர‌வூப் ஹ‌க்கீம் ஆத‌ர‌வு.


முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரை நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது . அதனை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதேபோன்று ஏனைய தனியார் சட்டங்களில் இருக்கும் குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராய வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர், முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார். 



  பாராளுமன்றத்தில் இன்று அத்துரலிய ரத்ன தேரரினால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான கருத்துக்கு தன‌து நிலைப்பாட்டை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் . முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில் , தனியார் சட்டங்கள் பல எமது நாட்டில் செயற்பட்டு வருகின்றன . குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் , அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக தொடர்பாக என‌து கால‌த்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டு , குழுவின் பரிந்துரை நீதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது . அது தற்போது பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்க ஏற்பாடாகி இருப்பது யாரும் அறிந்த விடயம் . அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்களுக்கு அநீதி ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அது தொடர்பாக ஆராய்ந்து , நாட்டின் பொதுவான சட்டத்துக்கு திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றோம் .  அதனால் நீதி அமைச்சுக்கு நாங்கள் சமர்ப்பித்திருக்கும் திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார் ஹ‌க்கீம்.


இதே வேளை முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் உல‌மா ச‌பையின் முடிவு இன்றி எத்த‌கைய‌ திருத்த‌மும் கொண்டு வ‌ர‌ அனும‌திக்க‌ முடியாது என‌ ர‌வூப் ஹ‌க்கீம் நீதி அமைச்ச‌ராக‌ இருந்த‌ கால‌த்தில் இருந்தே உல‌மா க‌ட்சி சொல்லி வ‌ருகிற‌து. அத்துட‌ன் திருத்த‌த்துக்கு முய‌ற்சிப்ப‌து அத‌னை இல்லாதொழிக்க‌ வ‌ழி செய்யும் என்றும் எச்ச‌ரிக்கை செய்து வ‌ந்துள்ள‌து. 


 

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar