BREAKING NEWS
Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

SLMC மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை - சுயேட்சையாக போட்டி


SLMC  மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை ஆகிய சபைகளுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதால் சுயேட்சையாக போட்டி
---------------------------------------------------------------------------
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதால் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை ஆகிய பிரதேச சபைகளில் சயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வாகரை பிரதேச சபையில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்த தவறியதால் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை வாகரை பிரதேச சபைகளில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயேட்சையாக போட்டியிட இன்று(20.12.2017) புதன்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குரிய தேர்தலுக்கான முகவரை சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காததால் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்து கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியிருந்தது.

எனினும் மழையுடன் கூடிய கால நிலை நிலவியதால் அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஹெலி கொப்டரில் மட்டக்களப்புக்கு குறித்த நேரத்திற்கு பயணிக்க முடியாத நிலையில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வாகரை பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியது.

இதனால் சிரீலங்கா முஸ்லிம்; காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபையிலும்  ஓட்டமாவடி பிரதேச சபையிலும் வாகரை பிரதேச சபையிலும் சுயேட்சையாக போட்டியிட இன்று புதன்கிழமை கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கான கட்டுப்பணத்தினை எஸ்.எச்.அஜீஸ் மற்றும் வாகரை பிரதேச சபை மற்றும் ஓடடமாவடி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தினை எம்.றமீஸ் ஆகியோர் செலுத்தியுள்ளனர்.

இன்று புதன்கிழமை 20.12.2017 நண்பகள் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால முடிவடைந்துள்ளது. அதே போன்று வேட்பு மனுப்பத்திரம் தாக்கல் செய்யும் காலம் வியாழக்கிழமை (21.12.2017) நண்பகள் 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் காங்கிரசில் இருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன் சிராஸ் மீராசாஹிப்


காழ்ப்புணர்வு கொண்டோரின் கட்டுக்கதை மக்கள் காங்கிரசில் இருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன்
சிராஸ் மீராசாஹிப் அறிவிப்பு..
.....................................................................

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும் வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருகின்றனர்.

எனது அரசியல் வாழ்வை குழி தோண்டி புதைக்க முடியுமென்ற நப்பாசையில் அவர்கள் தினமும் கற்பனைக்கதைகளை சோடித்து வருகின்றனர்.

சமுதாய நலனில் விருப்பம் கொண்டே கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் அதனை தொடர்ந்து மேயராகினேன். இறைவனின் உதவியால் மிகக் குறுகிய காலத்தில் அரசியல் செய்து இந்த பதவியை பெற்று மக்கள் பணியாற்றி வந்தேன்.

மக்களால் வழங்கப்பட்ட எனது மேயர் பதவியை பறித்தெடுத்த போதும் மக்களை விட்டு நான் ஒரு போதும் ஓடவில்லை, ஒதுங்கவும் இல்லை சமூக நலனை முன்னிறுத்தியே அப்போது தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டேன்.

பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் சமூகம் சார்ந்த போராட்டங்களிலும், செயற்பாடுகளிலும் ஈர்க்கப்பட்டதனால் அவருடன் இணைந்து மக்கள் பணி புரிந்து வருகின்றேன்.

சிறு வயது முதல் அவருடன் நட்பாக இருந்ததனாலும், அவர் என்னுடைய பள்ளித்தோழராக இருந்ததனாலுமே இந்த சமூகப் பயணத்தில் நானும் இணைந்து கொண்டேன். என்னைப் பொருத்த வரையில் எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் காங்கிரஸிலிருந்து வேறு எந்த கட்சிக்கும் தாவுகின்ற எண்ணம் எள்ளளவும் இல்லை.

சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவையடுத்து அந்தப் பிரதேசத்தின் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையில் எனக்கும் பெரிய பங்களிப்புண்டு சாய்ந்தமருது மண்ணில் பிறந்தவன் என்ற வகையிலும் எல்லா பிரதேச மக்களையும் நேசிப்பவன் என்ற வகையிலும் மக்களின் போராட்டத்துக்கு எமது கட்சியோ நானோ குறுக்கே நிற்கப்போவதில்லை.

எங்கள் கட்சித்தலைவரிடமிருந்து என்னை பிரித்தெடுத்து தங்களது எண்ணங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் இறுதியில் தோல்வியையே சந்திப்பார்கள்.

படிப்படியாக இழந்து வரும் தமது அரசியல் செல்வாக்கை சரி செய்வதற்காக சிலர் என்னை பகடைக்காயாக பயன்படுத்த நினைக்கிறார்கள். இவர்கள் இறைவனைப் பயந்து கொள்ளட்டும்.

ஆகவே

பிரதேச மக்களின் ஒற்றுமையில் நலன் கொண்டவன் என்ற ரீதியிலும், சாய்ந்தமருது மக்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளிப்பவன் என்ற ரீதியிலும், இம்முறை நடைபெறுகின்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.....

ஊடக பிரிவு..

பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்!


தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

மு.காங்கிரசின் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பில் பேசுவதற்கு, மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர், ஹெலிகொப்டர் மூலம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலிருந்து மன்னார் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித பேச்சுவார்த்தைகளையும் நடத்தாமல் நிஸாம் காரியப்பரை திருப்பியனுப்பினர்.

ஆயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையினை, தாம் இன்னும் இழக்கவில்லை என்றும் நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸதான்

 - தேர்தல் ஆணையாளர்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே இன்னமும் திகழ்வதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே பதவி வகிப்பதாகவே தம்மிடம் ஆவணங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சூனியக்காரர் திருப்பூர் தீனுடன் அடுத்த சூனிய ஒப்பந்தம்!




கையெழுத்தான ஒப்பந்த விபரம் :
20.08.14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமயகத்தில் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் அவர்களுக்கும் டிஎன்டிஜேவிற்கு இடையே நடைபெற்ற சூனியம் குறித்த ஒப்பந்தத்தின் விபரம் :

நாளை 21.08.14 வியாழக்கிழமை முதல் சரியாக 144 நாட்களுக்குள் (மூன்று மண்டலங்களுக்குள், அதாவது 1மண்டலம் என்பது 48 நாட்கள் ஆகும்) வரக்கூடிய 2015 ஜனவரி 11ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொறுப்பில் உள்ள கீழ்க்கண்ட ஐந்து நபர்களுக்கு கீழ்க்குறிப்பிட்ட பாதிப்புகளை சூனியத்தின் மூலம் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்
பீ.ஜைனுல் ஆபிதீன் சூனியத்தின் மூலம் ஊமையாக்கப்படுவார் என்றும்,
எம்.எஸ்.சையது இப்ராஹீம் சூனியத்தின் மூலம் இரண்டு கண்களும் குருடாக ஆக்கப்படுவார் என்றும்,
கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் சூனியத்தின் மூலம் கோமா நிலைக்கு ஆளாக்கப்படுவார் என்றும்,
எம்.ஐ.சுலைமான் சூனியத்தின் மூலம் புத்தி சுவாதீனமின்றி ஆடையின்றி அலையச் செய்யப்படுவார் என்றும்,
எஸ்.கலீல் ரசூல் சூனியத்தின் மூலம் இடது கை மற்றும் கால் செயலிழந்து முடமாக்கப்படுவார் என்றும் அத்லு எஸ்.கே.தீன் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்பந்தம் செய்கிறார்.
மேற்குறிப்பிட்ட நபர்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று குறிக்கப்பட்டுள்ளதோ அதைத் தவிர வேறெதுவும் ஏற்பட்டால் அது சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பாக ஆகாது.
மேற்குறிப்பிட்டுள்ள விளைவுகள் விபத்து, தாக்குதல் போன்றவற்றால் ஏற்பட்டால் அதுவும் சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பாக ஆகாது.
சூனியம் செய்வதற்குத் தேவையான பொருட்களும், (வேர்வைபட்ட உள்ளாடை, முடி, நகம், சிறுநீர், ) கேட்டுக்கொண்ட விபரங்களும் (பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, அலை பேசி எண்) அத்லு எஸ்.கே.தீனிடம் வழங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி சென்னையில் அமைக்கபடும் மேடையில் அத்லு எஸ்.கே.தீனும் மேற்கண்ட ஐவரும் தோன்றுவர். அப்போது
1.பீ.ஜைனுல் ஆபிதீன் சலாம் கூட சொல்ல முடியாது.
2.எம்.எஸ்.சையது இப்ராஹீம் – இரண்டு கண்களும் தெரியாத குருடராக இருப்பார்.
3.கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் கோமா நிலையில் ஸ்ட்ரக்சரில் தூக்கிவரப்படுவார்.
4.எம்.ஐ.சுலைமான் ஆடையின்றி நிர்வாணமாக புத்தி சுவாதீனமில்லாதவராக அழைத்து வரப்படுவார். (மற்றவர்கள் அவருக்கு ஆடை போர்த்தி அழைத்து வருவர்.)
5. எஸ்.கலீல் ரசூல் இடது கை, கால் முடமாகி அழைத்து வரப்படுவார்.
அன்றைய தினம் மேற்குறிப்பிட்ட ஐவருக்கும் குறிப்பிட்ட பாதிப்பு சூனியத்தால் ஏற்படுத்தப்பட்டால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்லு எஸ்.கே.தீனுக்கு அதே மேடையில் ரூபாய் 50 லட்சம் வழங்கும்.
அன்றைய தினம் மேற்கண்ட ஐந்து நபர்களுக்கும் மேற்குறிப்பிட்ட வகையிலான பாதிப்புகள் ஏற்படாவிட்டால் சூனியம் என்பது பொய் என்பதை அத்லு எஸ்.கே.தீன் ஒப்புக்கொண்டு அதே மேடையில் பகிரங்கமாக அறிவிப்புச் செய்து தவ்பா செய்து கலிமா சொல்லி சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்.
இந்த ஒப்பந்தம் இருதரப்பாரும் முழுமனதோடும், புத்தி சுவாதீனத்தோடும் எவ்வித நிர்பந்தமுமின்றி எழுதிக்கொண்ட ஒப்பந்தமாகும்.

முஸ்லிம்கள் பிரச்சினையை சர்வதேசத்துக்கு கொண்டு போகாமல் தூக்கத்திலிருந்த அமைச்சர் ரிசாதுக்கு இப்போது வந்த ஞானம்


வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர் பில் அன்று சர்வதேச மயப்படுத்தியிருந்தால் எமது மக்களது பிரச்சினைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமையை மறுக்கும் கூட்டமைப்பு ஜெனீவா செல்ல முயல்வது வேடிக்கை- சாத்தான் ஓதும் வேதம்


நாம் அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பாரிய நீர் விநியோகத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். எந்த முஸ்லிம், சிங்கள சமூகங்களும் எதிர்க்கவில்லை. ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கு வடக்கில் ஒரே இனத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அடிப்படை மனித உரிமையை மறுக்கின்றவர்களால் எவ்வாறு ஜெனிவாவில் சென்று மனித உரிமை பற்றிப் பேச முடியும்?

தேர்ச்சியை நிரூபிக்கத்தவறின் பதவி உயர்வுகள், சலுகைகள் ரத்து

இரண்டாம் மொழித் தேர்ச்சியை, நிரூபிப்பதற்காக அரச துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் கவனயீனமாக செயற்படின் எதிர்ப்பு ஏற்படும் :விக்கிரமபாகு

அரசாங்கம் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் கவனயீனமாக செயற்படின் உலகளாவிய முதலாளித்துவ நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படும் நிலை ஏற்படுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன எச்சரித்தார்.
 
முதலாளித்துவ நாடுகள் தேசிய பிரச்சினைகளில் தலையிடாவிடினும் சர்வாதிகார ஆட்சி மற்றும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடுகள் போன்று உலக முதலாளித்துவ நாடுகளும் உள்நாட்டு விடயங்களில் தலையிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசியாவின் இன அழிப்பு நாடாக இலங்கை

ஆசி­யாவின் இன அழிப்பு நாடாக இலங்கை மாறியுள்­ளது. மனித உரிமை மீறும் நாடு­களில் இலங்­கையும் முக்­கிய நாடாக உள்­ள­தென அதி­கா­ரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்­ளது.
மேலும், மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான ஜனா­தி­ப­தியின் விஜ­யத்தின் பின்­னரே இலங்­கையில் போதைப்பொருட்கள் பர­வு­கின்­ற­தெ­னவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்துள்ளது.

முதலமைச்சர் சீ. விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வடமாகாண முதலமைச்சர் சீ. விக்னேஸ்வரன், நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முதலமைச்சருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டார்.

கல்முனை மாநகர பட்ஜட்டை காப்பாற்ற ஹக்கீம் மன்றாட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இன்று திங்கள்கிழமை

National Youth Services Council

National  Youth Services Council (NYSC) Maharagama distributed Sports equipments to the sports clubs held at the Stacepura Playgrounds, Grandpass, Colombo recently. Deputy Minister of Investment Promotion and Colombo Central SLFP Organizer  Faizer Musthapha distributed the sports goods to clubs along with Chairman and Director General of the (NYSC) Lalith Pium Perera, Western Provincial Councilor Jagath  Kumara , Kotte Municipal Council Deputy Mayor Madura Withanage and members of the council were also present

கட்சியின்றி பயணிக்க முயன்ற பலர் அழிக்கப்பட்டுள்ளமையே வரலாறு

தற்போது நாட்டின் சில பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளானது எவ்விதத்திலும் கட்சியின் பிரச்சினையல்ல. அவை அச்சபைகளில் காணப்படும் பதவிகள் தொடர்பில் எழுந்துள்ள தனிப்பட்ட பிரச்சினைகளாகும்.

கல்முனை மாநகர சபையின் கல்முனைக்குடியின் பெரிய பள்ளி வீதியின் நிலை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காhங்கிரசின் ஆட்சியில் உள் ஒரேயொரு மாநகர சபையான கல்முனை மாநகர சபையின் கல்முனைக்குடியின் மிக முக்கிய வீதியான பெரிய பள்ளி வீதியின் நிலைதான் இது

நிந்தவூர் - குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்டமையை முஸ்லிம் மக்கள் கட்சி வண்மையாக கண்டித்திருப்பதுடன் கொள்ளையர்கள் பற்றி நீதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு

வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.  அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்து கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கல்முனை மேயர் சிராஸ் ராஜினாமா

கல்முனை மேயர் சிராஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் கல்முனை மேயர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. சிராஸ் தனது மேயர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

நெத் எப் எம்

நெத் எப் எம் சிங்கள வானொலியின் எட்டாவது வருட விழா இன்று காலையில் கொள்ளுபிட்டியில் உள்ள அதன் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது விசேட விருந்தினராக கலந்து கொண்ட மௌலவி முபாறக் அப்துல் மஜீத், மற்றும் பட்பலப்பிட்டி கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரி உட்பட நெத் எப் எம் வானொலியின் நிர்வாகிகளை படத்தில் காணலாம்.

அடுத்த இரண்டு வருட பதாவிக்காலமும் சிராஸே மேயராக இருக்க அதிக வாய்ப்புண்டு.

மேயர் சிராசுக்கு ஆதரவாக இன்று சாய்ந்தமருதில் நடக்கவிருந்த ஹர்த்தால் சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் தலையிட்டு நிறத்தியதாக தெரிகிறது.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar