BREAKING NEWS

இன்று வீரகேசரியில் சுருக்கமாக வெளியாகியுள்ள பலதார மணம் சம்பந்தமான முழு விபரம்

பலதார மணம் ஆண்களின் மட்டுமல்ல பெண்களினதும் உரிமையாகும்.
வீரகேசரி வார வெளியீட்டில் இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணம் பற்றியும் அதற்கென மேலும் பல சட்டங்கள் கடுமைப்படுத்தப்படவேண்டும் என்றும் கூறும் எம்.சி. றஸ்மின் அவர்களின் கட்டுரைக்கு என்னால் எழுதப்பட்ட மறுப்புக்கட்டுரைக்கு அவர் பதில்கட்டுரை என்ற பெயரில் தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளதோடு நபிகளாரையும் அவமானப்படுத்தியுள்ளார்.

இஸ்லாம் சம்பந்தமான விடயங்களை ஆராயும் போது எமது தனிப்பட்ட மனக்குமுறல்களுக்கோ எண்ணங்களுக்கோ இடமளிக்காமல்;. குர்ஆன். ஹதீத் அவற்றுக்கு முரண்படாத இமாம்களின் கருத்துக்களை முன்வைத்தே எழுத வேண்டும். இஸ்லாத்தைப்பொறுத்த வரை பலதார மணம் என்பது அனுமதிக்கப்பட்டதுதானே தவிர ஊக்குவிக்கப்பட்டதல்ல என றஸ்மின் கூறியுள்ளார். 
இதற்கு அவர் குர்ஆன் ஹதீத் ஆதாரம் எதையும் தரவில்லை. உண்மையில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டது மட்டுமல்ல ஊக்குவிக்கப்பட்டதும்தான் என்பதைத்தான் நபிவழி நமக்கு காட்டுகிறது. மேலும் எனது கட்டுரைக்கு 13.2.2012 வீரகேசரி வார வெளயீட்டில் சம்சாத் பேகம் என்பவர் எழுதுகையில் றஸ்மின் அவர்கள் பலதாரத்திருமணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை என எழுதியதாக நான் எழுதியதாக குற்றம் சாட்டியுள்ளார். இவர் எனது பதிலை இன்னொரு தடவை வாசித்தால் புரியும் அதில் நான் பல தார மணத்தை கட்டுப்படுத்த மேலும் சட்டங்கள் தேவை என றஸ்மின் கூறுவதைத்தான் மறுத்துள்ளேன். முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைமைத்துவம் மிக விழிப்பாக இருக்கிறது என்பதை சகோதரி சம்சாத் பேகம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக முதலாவது திருமணம் என்பதே அனுமதிக்கப்பட்ட -சுன்னத் தானே தவிர கடமையானதல்ல. ஆனாலும் திருமணத்தை விட்டவன் என்னைச்சார்ந்தவனல்ல என நபிகளார் கூறியுள்ளதன் மூலம் திருமணம் கடுமையாக ஊ;க்குவிக்கப்பட்டுள்ளதை புரிகிறோம். அதே போல் பலதார மணமும் நபிகளாரின் வாழ்க்கை முறைதான். அதனை விட்டவனும் நபிகளாரை சேர்ந்தவனாக மாட்டான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பலதார மணம் என்பது உஹத் யுத்தத்தின் பின்னரே அங்கீக்கப்பட்ட ஒன்று என இவர்கள் கூறுவது இஸ்லாத்தின் மீதான இட்டுக்கட்டாகும். உண்மையில் பலதார மணம், நபியவர்கள் பிறக்கு முன்பிருந்தே அறபுக்களின் வழக்கத்தில் இருந்தது. ஒருவர் 10க்கு மேற்பட்ட மனைவியரையும் வைத்திருந்தனர். இந்;நிலையில் இஸ்லாம் மனைவியரை  நான்குக்குள் வரையறுத்ததே தவிர புதிதாக பலதார மணத்தை இஸ்லாம் ஏற்படுத்தவில்லை.
புலதார மணம் நபியவர்களால் அனுமதிக்கப்பட்டது மாத்திரமின்றி ஊக்கமளிக்கப்பட்டதும் தான். நபி (ஸல்) சிலவற்றை அனுமதித்திருப்பார்கள்.; ஆனாலும் அவர்கள் அதனை தவிர்த்த்pருப்பார்கள். உதாரணமாக மாட்டிறைச்சி சாப்பிடுவதை நபியவர்கள் அனுமதித்தாலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை அன்னார் தவிர்ந்து கொண்டார்கள். இங்குதான் சொல்ல முடியும் மாட்டிறைச்சி சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டதே தவிர ஊக்குவிக்கப்பட்டதல்ல என. பலதார மணத்தை நபியவர்கள் அனுமதித்ததோடு தாமும் செய்து காட்டியுள்ளதன் மூலம் அதனை ஊக்குவித்துள்ளார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள்  தௌ;ளத்தெளிவாக இருக்கின்றன. அத்துடன் “அதிகம் திருமணம் செய்யுங்கள் அதிகமாய் பிள்ளைகளை பெறுங்கள். நிச்சயமாக நான் மறுமையில் அதிகமானோரைக்கொண்ட உம்மத்துக்குரியவனாக இருப்பேன்” என ரசூல் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீத் புகாரியில் உள்ளது.
குர்ஆனின் சூரத்துன்னிசாவில் திருமணம் பற்றிய வசனமும் முதலில் பலதார மணத்தையே ஊக்குவிக்கிறது. “உங்கள் மனதுக்குப்பிடித்த பெண்களை இரண்டிரண்டாக மண முடித்துக்கொள்ளுங்கள்” என்றுதான் ஆரம்பிக்கிறது. அதன் பின் “உங்களால் நீதமாக நடக்க முடியாது எனப்பயந்தால் ஒன்றோடு நிறுத்திக்கொள்ளும்படி”யும் கூறுகிறது. இதன் மூலம் அவ்வாறு பயப்படாவிட்டால்; ஒன்றுக்கு மேல் முடித்துக்கொள்ளலாம்  என அனுமதிக்கிறது. ஆனாலும் இந்த இடத்தில் இறைவன் மனித யதாhர்த்தத்தை மிக அழகாக படம்பிடித்து காட்டுகிறான். அதாவுது “நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் நீதமாக நடக்க முடியாது” என கூறுகிறான். இதனை வைத்து றஸ்மின் போன்றவர்கள்; “நீதமாக நடக்கவே முடியாது என்பதால் ஒரு மனைவியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என குர்ஆனுக்கு முரணாக கூறுகிறார்கள். ஆனால் குர்ஆனோ “அவ்வாறு ஒருவர் நீதியாக நடக்கவே முடியாது என்றிருந்தாலும் ஒரேயடியாக ஒருத்தியின் பக்கம் சாய்ந்து விடாதீர்கள்” என்றுதான் இதற்கு அழகான முடிவை  தருகிறது.
இங்கு நாம் விளங்கிக்கொள்வது என்னவெனில் ஏற்கனவே திருமணம் முடித்த ஒருவன் தன்னால் நீதியாக நடக்க முடியாது என  நினைத்தால் அவன்  இரண்டாவது மணம் செய்யக்கூடாது. ஆனால் தன்னால் முடிந்தளவு நீதியாக நடக்க முடியும் என நினைத்த ஒருவன் இன்னொரு மணம் முடிக்கலாம். தவறே இல்லை. அவ்வாறு முடித்த பின்பு நீதியாக நடந்து கொள்ள அவனால் முடியாமல் போனால் மற்ற மனைவியை அந்தரத்தில் விட்டு விட்டு ஓடும் படி குர்ஆன் சொல்லவில்லை. மாறாக முற்றாக  இரண்டாவது மனைவியின் பக்கமோ அல்லது முதல் மனைவியின்  பக்கமோ சார்ந்து விடாமல் முடிந்தளவு நீதியாக நடக்க முயல வேண்டும் என்பதைத்தான் இங்கு குர்ஆன் தெளிவாக சொல்கிறது. எனவேதான் மீண்டும் சொல்கிறேன் இஸ்லாமிய சட்டங்கள் ஈமானிய (இறை விசுவாச) அறிவுடன் சம்பந்தப்பட்டவையாகும். ஈமான் இல்லாதவனுக்கு எத்தனை ஆயிரம் சட்டங்களை நாம் கொண்டு வந்தாலும் அதனை அவன் இலகுவாக தட்டிக்கழித்து விடுவான்.
உண்மையில் ஒருவன் முதலாவதாக திருமணம் செய்யும் போது அங்கு பெண்ணின் உரிமையும் நிறைவேறுகிறது. இதே போல் பலதார மணம் மூலமும் ஏனைய பெண்களின் உரிமைகளும் நிறைவேறுகின்றன. ஆகவே பலதார மணம் என்பது ஆண்களின் உரிமை மட்டுமல்ல, பெண்களினதும் உரிமையாகும் என்பதில் தெளிவு வேண்டும். இதனை புரியாமல் நான் ஏதோ பெண்களின் உரிமையில் கைவைப்பதாக இவர் சொல்வது சிரிப்பைத் தருகிறது.
பலதார மணம் என்பது  விதவைகளுக்கும், ஏழைகளுக்கும் வாழ்வளித்தல் என்ற நிபந்தனைடன்  அனுமதிக்கப்படுவதாக இவர் சொல்வது இவரது கற்பனை. மாறாக முடிந்தளவு நியாயமாக நடக்க வேண்டும் என்ற ஒரேயொரு நிபந்தனையே  இதற்கு இடப்பட்டுள்ளது. ஒருவன் பலதார மணம் முடிக்கும் போது அதற்குள் விதவை, ஏழை என்பவர்களும்; உள்வாங்கப்படுகிறார்கள்.  அதே வேளை விதவையை அல்லது ஏழையைத்தான் இரண்டாவதாக முடிக்க வேண்டும் என்று நிபந்தனை இடப்படவில்லை. அவனது மனதுக்குப்பிடித்தால் ஒரு பணக்காரியை, கன்னியை அவன் இரண்டாவதாக மணக்கலாம். நபியவர்கள் கன்னியரையும் பலதாரமாக முடித்துள்ளார்கள்.
பணக்காரர்கள் தம்மைக்கட்டுப்படுத்த அவர்களுக்கு ஈமான்  இல்லையா என சிறுபிள்ளைத்தனமாக இவர் கேட்டுள்ளார். இவரது கருத்துப்படி பார்த்தால் முஸ்லிம் வாலிபர்கள் முதல் திருமணம் கூட செய்யக்கூடாது. ஏனென்றால் திருமணமே முடிக்காமல் தம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு வாழும் ஈமான் (இறை நம்பிக்கை) அவர்களுக்கில்லையா என கேட்பது போல் உள்ளது. வேறு சமயத்தில் வாலிப துறவிகளே தம்மை கட்டுப்படுத்தி திருமணமே செய்யாமல் வாழ் நாள் முழுதும் வாழும் போது முஸ்லிம் ஆண்களும் அவ்வாறு வாழ முடியாதா என கேட்பது போல் உள்ளது. இஸ்லாம் வெறுமனே தத்துவமான மார்க்கம் அல்ல, யதார்த்தப+ர்வமான மார்க்கமாகும். அத்துடன் பாலியலைப்பொறுத்தவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பெண் தூண்டப்படுவதன்  மூலம் கிளர்ச்சியுறுகிறாள். ஆண் தானாகவே கிளர்ச்சியுறுகிறான். இதில் ஒரு சிலரே விதிவிலக்கு. இது  தனியாக பேசப்பட வேண்டிய விடயம்.
எனது மறுப்புக்கட்டுரையில் என்னால் எழுதப்பட்ட எக்கருத்தையும் தன்னால்; ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். இவர் ஏற்றுக்கொள்வது என்பதல்ல பிரச்சினை, மாறாக வீரகேசரி வாசகர்கள் வழிகெடக்கூடாது என்பதற்காகவும் பலதார மணம் பற்றிய இஸ்லாத்தின்  கொள்கை கொச்சைப்படுத்தப்படக்கூடாது என்பதற்காகவும்தான் எழுதுகின்றேன். மேலும் கணவன் என்ன செய்தாலும் முதல் மனைவி சமாளித்துப்போக தெரிந்திருக்க வேண்டும் என நான் எழுதியுள்ளதாக இவர் பொய் கூறியுள்ளார். பலதாதார மணம் விடயத்தில் இறைதிருப்தி கருதி முதல் மனைவியிடம் விட்டுக்கொடுப்பு வேண்டும் என்றுதான் எழுதியிருந்தேன். தனது கணவன் ஊதாரியா, இஸ்லாத்தின் படி வாழ்பவனா என்பதை ஒரு  மனைவி அறிவாள். இஸ்லாத்தை முழுமையாக நேசிக்கும் தனது கணவன் இது விடயத்திலும் அள்ளாஹ்வுக்கு பயப்படுவான் என்று ஒரு மனைவி தெரிந்திருந்தால் அம்மனைவி விட்டு;க்கொடுப்பது மட்டுமல்ல அதற்காக அவனை ஊக்குவிப்பதும் மார்க்கமாகும். இத்தகைய இறை திருப்தியை பெறும் பக்குவம் இல்லாத பெண்களே காதி நீதிமன்றம் ஏறுகிறார்கள்.
பலதார மணம் என்பது “ஆண்கள் வழிகெட்டு செல்வதை அனுமதிக்கும் கருத்து நிலை” என இவர் சொல்வதன் மூலம் நபியவர்களை கேவலப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பலதார மணம் புரிந்த இறைதூதர் மற்றும் சஹாபாக்களை வழிகெட்ட கருத்துக்கொண்டவர்களாக காட்டியுள்ளார்.
நமது நாட்டின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் குர்ஆன் ஹதீதுக்கு முரணான பல சட்டங்கள் உள்ளதை நாம் பத்திரிகைகள் வாயிலாக பகிரங்கமாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அவற்றில் ஒன்றுதான் ஒருவன் இன்னொரு மணம் முடிப்பதாயின் முதல்  மனைவியின் அனுமதி அல்லது ஊரில் பகிரங்கப்படுத்த  வேண்டும் போன்ற சட்டங்களாகும். குர்ஆன் ஹதீதுக்கு முற்றிலும் முரணான இத்தகைய சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்து. இதன் மூலம் ஆண்கள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடலாம் என இவர்களைப் போன்றவர்கள் சொல்வதை ஏற்க முடியாது. துஷ்பிரயோகம் செய்ய நினைப்பவனை எத்தகைய சட்டங்களாலும் கட்டுப்படுத்த முடியாது. நபியவர்கள் இவ்வாறான சட்டத்தை சொல்லவில்லை என்றுதான் கூறுகிறோம். ஓர் ஆண் ஏற்கனவே திருமணம் முடித்தவனா இல்லையா என்பதை நிரூபிப்பது அவன் பொறுப்பிலுள்ள விடயமல்ல. இது பெண் தரப்பாரின் கடமையாகும். ஒரு சாறி வாங்க பத்து கடைகளில் ஏறி இறங்கும் பெண்கள் இது விடயத்தில் கவனக்குறைவாக இருந்தால் அதற்கு அவர்களேதான் பொறுப்பாகும். அத்துடன் இத்தகைய சட்டங்கள் இடுவதன் காரணமாக முதல் மனைவியை பயமுறுத்தி அனுமதி வாங்குவதையும், சில வேளை அவள்  மீது களங்கம் கற்பிப்பதையும் கொலை கூட செய்வதையும், அவளை விட்டு விட்டு ஓடி இன்னொரு மணம் புரிவதையும் பெண்கள் உரிமைக்காக பேசுபவர் போன்று தன்னைக்காட்டும் இவருக்குத் தெரியாதா? கடுமையான சட்டங்கள் காரணமாக பெண்ணை மணம் முடிக்காமல் அனைத்தும் முடிந்த பின் குழந்தையை கிணற்றில், ஆற்றில் வீசிவிட்டுப்போவதை அன்றாடம் நாம் காணவில்லையா? இந்தக்குழந்தைகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு?
இவரது கருத்து ஒருதலைப்பட்சமானது என நான் கூறியதை இவரே ஏற்றுக்கொண்டுள்ளார். நன்றி. அதாவுது வானொலி அறிவித்தல் மூலம் 42  பேரில் 40; பெண்கள் தகவல் தந்ததாக இவர் சொன்னதன் மூலம் தமக்கு வந்த சில தகவல்களை மட்டும் வைத்தே எழுதியுள்ளார். இவராக சமூக களத்திற்குச் சென்று நீதியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவு. காதி நீதிமன்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாருங்கள் என்றால் பெண்கள்தான் வருவர். ஆண்கள் இது விடயத்தில் முன்வர வெட்கப்படுவர். அதிலும் 40 பெண்களே  இவருக்கு தகவல் தந்துள்ளார்கள் என்றால் இந்த நாட்டில்; 15 லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்களில் சுமார் ஒரு  லட்சம்பேர் மட்டும்தான் மனைவிகள் என்று வைத்துக்கொள்வோம். ஆக 40 பேரே  மேன்முறையீடு வேண்டி நிற்கிறார்கள் என்றால் இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமே இல்லை என்பதுதான் உண்மையானதாகும். மிகச்சிறிய விடயத்தை இவர்கள் தூக்கிப்பிடித்திருப்பதன் மர்மம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே பலதார மணம் என்பது இஸ்லாம் ஆண்களுக்கு வழங்கியுள்ள  அனுமதி மட்டுமல்ல நியாமாக நடந்து கொள்ள முடியும் என்ற தற்றுணிவு கொண்டோரை அது ஊக்குவிக்கிறது. அது மட்டுமல்ல, சமகாலத்தில் எந்தப்பக்கம் பார்த்தாலும் பால் உணர்வே தூண்டப்படும் காலமாதலால் இதற்கு  வடிகாலாகவும், சீதனப்பிரச்சினை, விதவை. மற்றும் ஏழைப்பெண்களுக்குமான இஸ்லாத்தின் தெளிவான தீர்ப்பாகவும் உள்ளது.  இத்தகைய பலதார மணத்தை சிலர் துஷ்பிரயோகம் செய்வதற்காக இஸ்லாம் சொல்லாத சட்டங்கள் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது.
பலதார மணம் கொண்டவன் எவ்வாறு இஸ்லாத்தின் படி நியாமாக நடக்க வேண்டும்? அவனின் இரண்டாவது மனைவி எவ்வாறு புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும்? முதல் மனைவி எவ்வாறு எந்த விடயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும்?0 என்பது பற்றி இஸ்லாத்தின் நிழல் நின்று எழுதுவதை விடுத்து பலதார மணம் பற்றி கொச்சைப்படுத்தியும், இஸ்லாத்தின் இறுதித்தூதர், எம் உயிரிலும் மேலான நபிகளாரின் வாழ்வையும் சஹாபா தோழர்களின் வாழ்வையும் அசிங்கமாக காட்ட முற்பட வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
(பத்திரிகைத்துறை பட்டதாரி)
தலைவர், அகில இலங்கை உலமா கட்சி, 0777570639

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar