BREAKING NEWS

யார் மன்னிப்பு கேட்பது? ரணிலா உலமா சபையா?


அண்மையில் பேருவலையில் நடைபெற்ற நிகழ் வொன்றில் உரையாற்றிய ஐ தே க தலைவர் ரணில் விக்ரமசிங்க, முஹம்மது நபிக்கு தாயிப் மக்கள் கல்லால் எறிந்தது போன்று தனக்கும் கல் எறிகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.   

இதனை கண்டித்துள்ள அ. இ. உலமா சபையின் பொதுச்செய லாளர், இந்தப்பேச்சின் மூலம் ரணில் தன்னை நபி (ஸல்) அவர்களுக்கு ஒப்பிட்டுள்ளதாகவும் இதற்காக அவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார்.




உண்மையில் ரணில் விக்கரமசிங்கவின் மேற்படி உரை இஸ்லாத்தின் பார்வையில் தவறான ஒன்றல்ல என்பதையும் இங்கு அவர் நபியவர்களுடன் தன்னை ஒப்பிடாது நடை பெற்ற செயலையே ஒப்பிட்டுள்ளார் என்பதையும் உலமா கொள்ளாமை கவலைக்குரியதாகும்.  உதாரணமாக ஒருவர் தொழுதுவிட்டு இவ்வாறுதான் நபியவர்கள் தொழுதார்கள் என்று கூறினால் இங்கு அவர் நபியவர்களை தனக்கு ஒப்பிடவில்லை, மாறாக தனது தொழுகையைத்தான் நபியவர்களின் தொழுகையுடன் ஒப்பிட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்      .

 இவ்வாறு பல சஹாபாக்கள்கூறியுள்ளதை இஸ்லாமிய வரலாற் றில் காண முடியும். அதே போல் மக்கத்து முஸ்லிம்கள் காபிர்களினால் வெளியேற்றப்பட்டது போன்றே வட மாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள் என ஒருவர் கூறினால் இங்கு அவர் வட மாகாண முஸ்லிம்களை மக்கத்து முஸ்லிம் சஹாபிகளுடன் ஒப்பிட்டு விட்டார் என கூற முடியுமா? உண்மை இவ்வாறு இருக்க காகம் அண்ண நடை நடக்க ஆசைப்பட்டது போல் அவசரப்பட்டு பிழையாக தீர்ப்பு வழங்கியதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவை அநியாயமாக அவமானப்படுத்தியதற்காக அ. இ. உலமா சபை பொதுச்செயலாளர் ரணிலிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே இஸ்லாமிய தர்மமாகும். மேற்படி தாயிப் சம்பவம் குர்ஆனில் இடம்பெற்றுள்ளதாக ரணில் கூறியது பிழை என்பது உண்மையே. பொதுவாக முஸ்லிமல்லாதவர்களுக்கு குர்ஆன் வேறு ஹதீத் வேறு என்பது தெரியாது. இது சுட்டிக்காட்டப்பட வேண்டிய தவறுதானே தவிர தூக்கிப்பிடிக்க வேண்டிய தவறல்ல.

ஆனாலும் நபிகளாருக்கு கல் எறிந்த தாயிப் சம்பவத்தை உதாரணமாக காட்டியதன் மூலம் ரணில் தன்னை நபியவர்களுக்கு ஒப்பிடவில்லை என்பதே உண்மையாகும். இவ்வாறு குற்றம் செய்யாத அவரை உலமா சபை ஊடகங்கள் வாயிலாக அறியாயமாக குற்றம் சாட்டியமை பாரிய தவறாகும். ஒரு தனி மனிதனை பொய்யாக குற்றம் சாட்டியமைக்காக உலமா சபையின் பொதுச்செயலாளரின் பதில் என்ன என்பதை அல்ஜஸீறா எதிர் பார்க்கிறது.

 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar