BREAKING NEWS

புரவலர் புத்தகப் பூங்கா-


புரவலர் புத்தகப் பூங்கா-


புரவலர் புத்தகப் பூங்காவின் ஆளுகை சபையின் முதற் சந்திப்பு, கடந்த 11-02-2012 சனிக்கிழமை மாலை 5.20 மணியளவில் , பூங்காவின் ஸ்தாபகத் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில், தலைவரின் இல்லமான கொழும்பு-07 ஆனந்தகுமாரசாமி மாவத்தை, 46 ஆம் இலக்க முகவரியில் நடைபெற்றது.




இலக்கியத்துறையின் பல்துறைசார் புத்திஜீவிகளை உள்ளடக்கிய பூங்காவின் ஆளுகைக்குழு உறுப்பினர்கள், ஆரோக்கியமான கருத்தாடலின் பின், கீழ்வரும் விடயங்களில் இணக்கம் காணப்பட்டது. அவை வருமாறு:-

இதுவரை நூல் எதுவும் வெளியிடாத -அதற்கான வாய்ப்பு வசதி களற்ற எழத்தாளர்களை ஊக்குவிக்கும் திட்டமான இலவச நூல்வெளியீட்டுப் பணியை உற்சாகமாக செய்வது.
வெளியீட்டுக்குத் தெரிவு செய்யும் நூலை துறைசார் புத்திஜீவி ஒருவர் முதலில் பார்த்து குறிப்புரை தருவதுடன், இன்னொருவரும் மீள் பரிசீலனை செய்தே தேர்வை உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நூலின் ஆக்கியோனிடம் இது தனது முதலாவது நூல் என்பதை உறுதிசெய்து, உறுதிமொழி கடிதம் பெறவேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட நூலில் என்னுரையை நூலாசிரியர் எழதுவது மட்டுமே. நூலின் அணிந்துரை- பதிப்புரை, முகப்பட்டை ஓவியம் உட்பட ஏனைய அம்சங்களை பூங்காவே- தன்னிடமுள்ள துறைசார் புத்திஜீவிகள் வாயிலாக செய்தல் வேண்டும். இம்முடிவில் காணப்பட்ட இணக்கத்தையொட்டி, எதிர்வரும் மார்ச் - 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவிருக்கும் பூங்காவின் 28 ஆவது நூல் வெளியீட்டு விழாவில் கீழ்வருவோர் விழாநடத்துனர்களாகப் பணியாற்றுவர் என முடிவு செய்யப்பட்டது. இம்முறை சுழற்சி அடிப்படையில் ஏனையோருக்கும் சந்தர்ப்பம் தரும் விதத்தில் நடைமுறைப்படுத்தப்படும். விழாத் தலைவர்: செங்கதிர்
வரவேற்புரை: பூங்காவின் செயலாளர்- சத்திய எழத்தாளர் எஸ்.ஐ.நாகூர்கனி நயவுரை: கவிஞர் கனிவுமதி  நன்றியுரை: மௌலவி முபாரக் அப்துல் மஜீத், தலைவர், உலமா கவுன்ஸில் ஏற்புரை: நூலாசிரியர் விழா ஏற்பாடு: சமூக ஜோதி ரபீக் (பதாகை கட்டுதல், அழைப்பிதழ் அச்சிடல், நூல்களை எடுத்துவரல், உபசாரம் போன்ற பணிகளை விழா ஏற்பாடு உள்ளடக்கியதாகும்.

விழாவின் ஆவணப்பதிவுக்கான படப்பிடிப்பு, ஊடகப் பிரச்சாரம் என்பனவற்றை பத்திரிகையாளர் கே.பொன்னுத்துரை கவனிப்பார். இவை தவிர- சாஹித்திய மண்டலப் பரிசுக்கென அனுப்பபடும் புத்தகங்களின் வகைகளுக்கேற்ப அவற்றின் பக்க அளவையும் ஆக்கங்களின் தொகையையும் கொழந்து ஆசிரியர் அந்தனிஜீவா விசாரித்து சொல்வதோடு, நூலின் பதிவுக்கான விளக்கத்தையும் விசாரித்துத் தரும் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

நாளடைவில் பூங்காவுக்கென இணையதள முகவரி பெறுவதென்றும் அதற்கான பொறுப்பை உலமா கவுன்ஸில் பிரதிநிதியான மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஏற்றுள்ளார்.

இதுவரை நூல் வெளியீட்டுக்கென வந்த நூல்களை பரீசீலிக்கவென கவிஞர் கனிவுமதி- அந்தனிஜீவா- மௌலவி முபாரக்- எ.எஸ்.எம்.நவாஸ் போன்றோருக்கு கையளிக்கப்பட்டதோட, அபிப்பிராயக் குறிப்புரையும் எழுதி சமர்ப்பிக்கும்படி வேண்டப்பட்டது.

பூங்காவுக்கான புதிய கடிதத் தலைப்பினை அச்சிடும் பொறுப்பினை விழா ஏற்பாட்டாளர் சமூக ஜோதி ரபீக் ஏற்றுள்ளார். சுவாரஸ்யமான கலந்துரையாடலைத் தொடர்ந்து மாலை 6.30 க்கு கூட்டம் நிறைவுபெற்றது. சிற்றுண்டி உபசாரமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கூட்டத்திற்கு வருகை தந்தோர் விபரம் வருமாறு........

1. புரவலர் ஹாஸிம் உமர்
2. கலாபுஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி
3. திரு.தி.ஞானசேகரன்
4. ஆர்.பாரதி
5. மௌலவி முபாரக் ஏ.மஜீத்
6. ஏ.எஸ்.எம். நவாஸ்
7. கவிஞர் கனிவுமதி
8. அல்ஹாஜ் எப்.எம். பைருஸ்
9. அல்ஹாஜ் என்.எம். அமீன்
10. திரு.அந்தனிஜீவா
11. திரு.கே. பொன்னுத்துரை
12. திரு த. கோபாலகிருஸ்ணன்
13. சமூக ஜோதி ரபீக்

(தவிர்க்க முடியாத காரணத்தால் மூவர் சமூகந் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

 இ து,
 உண்மையுள்ள,



    (செயலாளர்)

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar