BREAKING NEWS

அதாவுள்ளாவிடம் தோற்றுப்போன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


குறுநில மன்னரான அதாவுள்ளாவிடம் தோற்றுப்போன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் அமைச்சுப்பதவியில் ஒட்டியிருப்பது வெட்கங்கெட்ட செயலகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். 
அம்பாரை மாவட்டத்துக்கான தமது கட்சி வேட்பாளர் பட்டியலை ஒப்படைத்த பின்னரான ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் சமூகம் தனது சமயத்துக்கும் இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூக நலனை முன்வைத்து அரசுடன் முரண்பட்டு மு. கா தனித்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அதனை நாம் வரவேற்கலாம். ஆனால் வேட்பாளர் பட்டியலுக்காக மு. கா முரண்பட்டு தனித்து போட்டியிடுகிறது என்றால் இக்கட்சி சமூகத்துக்கான கட்சியா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். அதுவும் ஒரு பிரதேசத்தில் மட்டும் செல்வாக்குள்ள அதாவுள்ளாவின் முன்பாக முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குப்பலம் கொண்ட தேசிய கட்சி என கூறிக்கொள்ளும் மு. காவின் தலைமை தோற்றுப்போயுள்ளது என்பது பரிதாபமானது. இந்த அரசாங்கத்தில் அதாவுள்ளா, ரிசாத் பதியுதீனை விட ஹக்கீமுக்கே மதிப்பு அதிகம் என பெருமையாக கூறி தம்மையும் மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருந்த மு. காவினருக்கு இதன் மூலம் பாரிய தலை குணிவு ஏற்பட்டுள்ளது. ;
இத்தகைய அவமானப்படுத்தலுக்கு பிறகும் ஹக்கீம் ஏதோ ஒன்றில் ஒட்டிய ஈ போன்று அமைச்சரவையில் ஒட்டியிருப்பது சமூகத்துக்கும் பாரிய தலைகுணிவாகும். இதனையும் சமாளிக்கும் வகையில் ஹக்கீம் அரசிலிருந்து விலகினால் சில மு. கா எம்பீக்கள் அரசில் ஒட்டிக்கொள்வார்கள் என பயப்படுவதாக இவர்கள் சொல்வதன் மூலம் இவர்களின் கட்சிக்கு அடித்தளமாக மக்கள் இல்லை என்பதையும் சில தனிநபர்களும் அமைச்சுப்பதவிகளும்தான் கட்சியை தாங்கிக்கொண்டிருக்கின்றன என்று ஈவர்கள் ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகும். அவ்வாறெனில் அதாவுள்ளா, ரிசாட், பாயிஸ் போன்றோர் மு. காவிலிருந்து பிரிந்து அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்ட போது இவர்கள் எவ்வளவு துரோகமிழைத்தாலும் மக்கள் எம்மோடு இருக்கிறார்கள் என இவர்கள் பேசிய வார்த்தையில் இவர்களுக்கே இன்று நம்பிக்கை இல்லை என்பதுதான் தெளிவாகின்றது.
எம்மைப்பொறுத்தவiர் தம்புள்ள தொடக்கம் தெஹிவலை வரையான பேரினவாத அத்துமீறல்களை முஸ்லிம் சமூகம் எதிர்க்கிறது என்ற செய்தியை இந்தத்தேர்தல் மூலம் நாம் ஜனநாயக முறைப்படி சொல்ல வேண்டுமாயின் வெற்றிலைக்கு அல்லது அரசாங்கத்தில் ஒட்டியிருக்கும் மு. காவின் மரத்துக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு போதும் முடியாது. மாறாக நமது வாக்குகளை எதிர் கட்சியான ஐ தே கவுக்கு அளிப்பதன் மூலமே முஸ்லிம்களின் வாக்குகள் ஏன் திசை திரும்பின என்ற பலத்த கேள்வியை தோற்றுவித்து இனியும் பள்ளிவாயல்கள் மீது கை வைக்கும் நிலையை கட்டுப்படுத்த முடியும். ஐ தே கவுக்கு வாக்களிக்க முடியாது என எவராவது பிடிவாதம் பிடித்தால் அவர் எமது முஸ்லிம் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்ற செய்தியை சமூகத்துக்கு சொல்லி வைக்கிறோம். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar