BREAKING NEWS

முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத்


கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் முதலமைச்சர் கோஷம் எழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்கான முதலமைச்சரை இழந்துள்ளனர். முதலமைச்சர் பதவி பற்றி பேசிய
அ. இ. முஸ்லிம் காங்கிரசுக்கும் கிடைக்கவில்லை. முஸ்லிம் முதலமைச்சர் பற்றி பேசாத அதாவுள்ளாவின் கட்சிக்கும் கிடைக்கவில்லை.

ஆனால் முஸ்லிம் முதலமைச்சர் பற்றி வாயே திறக்காத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முஸ்லிம் முதலமைச்சர் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஹக்கீம், அதாவுள்ளா, ரிசாத் ஆகியோரின் உதவியுடன் ஆட்சியைக்கைப்பற்றி தனது கட்சி பிரமுகரை அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே யொரு உறுப்பினரை முதலமைச்சராக்கியதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சரியான காய் நகர்த்தல் செய்துள்ளார்.

இன்னும் இரண்டரை வருடத்துக்குப்பின்தான் முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் கிடைக்கும். அப்படியாயின் அது வரை முஸ்லிம் காங்கிரஸ் கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டிய கேவலம் தொடரும். கொஞ்சம் முறுகினாலும் மாகாண சபை இரண்டு வருடங்களில் கலைக்கப்படலாம். ஆக மொத்தத்தில் இலங்கை முஸ்லிம்களை அரசின் கொத்தடிமைகளாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றி விட்டது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar