மூசா நபியவர்கள் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உண்மையான முஸ்லிம். நபிமார்களில் பாரிய பல சவால்களுக்கும் சோதனைகளுக்கும் முகம் கொடுத்தவர். இவரது வரலாறு பற்றி குர்ஆன் மிக அழகாக பல இடங்களில் சொல்கிறது.
ஆனாலும் கடந்த நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட 10 கொமான்ட்மென்ட்ஸ் - 10 கட்டளைகள் என்ற மூசா நபி பற்றிய ஆங்கில திரைப்படத்தில் பல முரண்பாடுகள் காணப்படுpன்றன. சில விடயங்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது. அவை:
மூசா நபியவர்கள் ஏழைகளை காப்பதற்காக ஒருவனை தாக்கியதால் அவன் இறந்து விடுகிறான். ஆனால் இந்த திரைப்படத்தில் ஒரு பிர்அவ்ன் மாளிகையில் அகப்பட்டுக்கொண்ட ஒரு ஏழைப்பெண்ணை காப்பதற்கான சண்டையில் ஒருவனை கொல்வதாக வருகிறது.
மூசா நபி அவனை கொன்றதன் காரணமாகவே எகிப்தை விட்டு போனதாக குர்ஆன் கூறுகிறது. ஆனால் பிர்அவ்ன் மூசாதான் தனக்கு மற்றவர்கள் எச்சரித்த ஆபத்தானவர் என தெரிய வந்ததால் அவரை அழைத்து எகிப்தை விட்டு போகும்படி பயமுறுத்தி அனுப்புவதாக திரைப்படம் பிழையாக சொல்கிறது.
அதே போல் மூசா நபியவர்கள் மத்யனுக்கு வந்த போது அங்குள்ள பலசாலிகள் தண்ணீர் எடுப்பதால் பலமற்ற பெண்களால் தண்ணீர் எடுக்க முடியாமல் போனதாலேயே மூசா அப்பெண்களுக்கு உதவுகிறார். ஆனால் திரைப்படத்தின் படி சிலர் அந்தப்பெண்களை தாக்குவதால் மூசா அவர்களுடன் சண்டையிட்டு விரட்டுவதாக உள்ளது.
அதே போல் கடைசி யுத்தத்தின் போது பிர்அவ்னும் நீரில் மூழ்கடிக்கப்பட்டதாகவே குர்ஆன் கூறுகிறது. ஆனால் திரைப்படத்தின் படி பிர்அவ்னைத்தவிர மற்றவர்கள் நீரில் மூழ்குவதாகவும் அவன் தப்பி தனது மனைவியிடம் வருவதாகவும் காட்டப்படுகிறது.
அத்துடன் மூசா, தான் கடவுள் அல்ல, தான் கடவுளின் தூதர் என்றே கூறுவதை அடிக்கடி திரைப்படத்தில் கட்டப்படுகிறது. இருந்தும் கடைசியில் பிர்அவ்ன் தனது மனைவியிடம் மூசாதான் கடவுள் என கூறுவது போல் உள்ளது. இது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகிறது.
இத்திரைப்படத்தில் சில நல்ல விடயங்களையும் காட்டப்படுகிறது. மூசா இறைவனை சந்தித்து விட்டு திரும்பும் போது அவரது நண்பர் மூசா முன் குணிந்து பணிகிறார். அப்போது மூசா எனக்கு முன் சிரம் பணிய வேண்டாம் என கூறுவது போல் வந்துள்ளது.
அதே போல் இறைவனால் வழங்கப்பட்ட பத்து கட்டளைகளில் என்னைத்தவிர யாரையும் வணங்காதே, சிலையை வணங்காதே, களவு எடுக்காதே போன்ற விடயங்களை இறைவன் கூறுவதாக வந்துள்ளது.
ஆக மூசா நபியவர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஸ்லிமான இறை அடியார். அதன்படி முஸ்லிம்களின் வரலாறு என்பது மூவாயிரம் ஆண்டுகளை தாண்டுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பௌத்தர்களை விட முஸ்லிம்கள் முதன்மை வரலாறு கொண்டவர்கள்.
-முபாறக் அப்துல் மஜீத்