BREAKING NEWS

ஹறாங்குட்டி கட்சி

   முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசை கலைத்து விட வேண்டும் என கூறியது கேட்டு அக்கட்சியின் பிச்சையில் வாழும் லத்தீப் என்பவர் தனது மறுப்பறிக்கை மூலம் நன்றிக்கடனை செலுத்தியுள்ளார் என முஸ்லிம் மக்கள் கட்சியின் உப தலைவர் மௌலவி அஸவர் பாக்கவி தெரிவித்துள்ளார்.
அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது

முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவரை கோமாளி என சொல்லி இவர்கள் தங்களது இயலாமைக்காக திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனாலும் எமது தலைவர் இவர்களைப்போன்று சமூகத்தை ஏமாற்றி வயிறு பிழைக்கும் ஒருவரல்ல. அவருடைய காத்திரமான கருத்துக்களுக்கு கருத்து ரீதியாக பதில் வழங்க முடியாதவர்கள் இவ்வாறு எதையாவது சொல்லி தம்மையும், மக்களையும் ஏமாற்றுவதை நாம் முஸ்லிம் அரசியலில் தினமும் காணுகின்றோம்.
ஒரு கெபினட் அமைச்சரைக் கொண்ட ஒரு கட்சி தமக்கு நவநீதன் பிள்ளையை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வெட்கமற்ற கருத்துக்கு சரத் பொன்சேகாவை உதாரணம் காட்டியுள்ளமைதான் மிகப்பெரிய கோமாளித்தனமாகும். சரத் பொன்சேகா அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர். அவர் பாராளுமன்ற உறுப்பினரும் அல்ல. அவர் ஒரு சாதாரண கட்சித்தலைவர். அவரது கட்சியின் அளவில்தான்  இவர்களது கட்சியும் உள்ளதா? இதைச்சொல்ல வெட்கமில்லையா? சரத் பொன்சேகா தனது சந்திப்புக்காக நேரம் கேட்டிருந்தால் கொழும்பு ஐ நா வில் உள்ள சில அரச புல்லுருவிகளால் அது தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் அரசின் வால் கட்சியல்லவா. ஏன் நேரத்தை பெற முடியாமல் போனது?
நாம் ஒரு அரசியல் கட்சியினர். பதிவு பெறாவிட்டாலும் அரசியல் கட்சியாக துணிச்சலுடன் செயற்படும் நாம் சிவில் அமைப்பு என்ற போர்வையில் கள்ளத்தனமாக நவநீதனை சந்திப்பதில் அர்த்தமில்லை. அதனால்தான் அரசியல் கட்சி என்ற வகையிலேயே நாம் சந்திப்போம் என உறுதியாக இருந்தோம்.  இவரது கட்சியினர் தமது அமைச்சுப்பதவியை பயன்படுத்தி திருகோணமலை கூட்டத்துக்கு சென்றிருந்தால் என்னதான் சிவில் அமைப்புகளின் கூட்டம் என்றாலும் அமைச்சர்கள் சென்றிருந்தால் சந்த்pக்க மறுத்திருப்பாரா? மறுத்திருந்தால் ஆக குறைந்தது இதோ மறுத்து விட்டார் என அந்த நிகழ்வு நடக்கும் இடத்துக்கு முன்பிருந்து ஊடகங்களுக்கு சொல்லியிருக்கலாம் அல்லவா? எமது கட்சியிடம் வாகன வசதியில்லை. நாங்கள் ஏழைக்கட்சிதான். அதற்காக பெருமைப்படுகிறோம். பண வசதியில் ஏழைகளாக இருப்பினும் அறிவில் இறைவன் செல்வத்தை தந்துள்ளான். ஆனால் இவர்களின் கட்சித்தலைவர் உட்பட சுமார் பத்து பேரிடம் அரசாங்கம் கொடுத்த வாகனங்கள் உள்ளன. பெட்றோலும் இலவசம்தான். அவற்றை பயன்படுத்தி திருமலை சென்றிருக்கலாம் அல்லவா. தயவு செய்து உங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்ற முனைய வேண்டாம் என்றுதான் நாம் சொல்கிறோம். நாம் ஐ நா மூலம் நவிப்பிள்ளையிடம் மகஜர் கையளித்தோம். அது நவிப்பிள்ளையின் கையில் கிடைத்தது எனபதையும் ஐ நா மூலம் உறுதி செய்தோம். இறைவன் நாடினால்  அதற்குரிய பதிலும் எமக்கு கிடைக்கும்.
எமது கட்சி பதியப்படவில்லை என்பது உண்மைதான் அதற்காக நாம் இவர்களைப்போல் காசு கொடுத்து கட்சி வாங்கவில்லை. அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் கூட ஒரு தமிழ் கட்சியை விலை கொடுத்து வாங்கி பெயர் மாற்றம் பெற்றுள்ள ஹறாங்குட்டி கட்சிதான். இந்த கட்சியின் தந்தை ஒரு தமிழர். இவர்களெல்லாம் ஹறாங்குட்டி கட்சியின் உறுப்பினர்கள். இந்த வகையில் எமது தலைவரின் சொந்த முயற்சியில் உருவான எமது கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு பெறவில்லை என்பதற்காக அரசியல் செய்வதிலிருந்து நாம் ஒதுங்கவில்லை.
நவநீதம்பிள்ளை த தே கூட்டமைப்பை மட்டும் சந்தித்ததாக லத்தீப் சொல்கிறார். இங்குதான் நாம் கேட்கிறோம், ஐ நா சென்று இலங்கையில் மனித உரிமை மீறப்படவில்லை என இவர்களின் கட்சியினருக்கு சொல்ல முடியும் என்றால் ஏன் நவிப்பிள்ளையை சந்திக்க முடியவில்லை? இது கையாலாகாத்தனம் என்பதுடன் அரசுக்கு தம்மை நல்ல பிள்ளையாக காட்டுவதோடு சந்த்pக்க நேரம் கிடைக்கவில்லை என கூறி சமூகத்தையும் ஏமாற்றுவதாகும்.
 எமது கட்சி கொழும்பு ஐ நா காரியாலயம் மூலம் நேரம் கேட்டது. ஆனால் எமது கட்சி மக்கள் பிரதிநிதியற்ற கட்சி என்பதால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது உண்மையானது என கூறுவதற்கு நாம் வெட்கப்படத்தேவையில்லை. ஆனால் பல மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க திணைக்களத்தில் பணிப்பாளராக இருக்கும் செயலாளர் நாயகம் மற்றும் ஒன்றரை அமைச்சர்கள் உள்ள இவர்களின் கட்சியினால் முடியாது போனது என்பதுதான் வெட்கக்கேடானதாகும். ஒரு ஐந்து வயதுப்பிள்ளை க பொ த பரீட்சை எழுத முடியவில்லை என்பது வெட்கப்படும் செய்தியல்ல. தான் மெத்தப்படித்தவன் என கூறிக்கொள்ளும் ஒரு ஜாம்பவானால் எழுத முடியவில்லை என்பதுதான் கேவலம்.
நாம் மக்களிடம் பள்ளிவாயல் சம்பந்தமாக பகிரங்கமாக தரவுகள் கோரியதன் பின்னார்தான் ஏனைய கட்சிகளுக்கே நவி பிள்ளையிடம் அறிக்கை கொடுக்க வேண்டும் என்ற அறிவே வந்தது. அதற்கு முன் இவர்கள் எவரும் இது பற்றி செய்திகள் வெளியிடவே இல்லை. அதே போல் நாம் எமது மகஜருடன் தாக்கப்பட்ட பள்ளிவாயல்கள் பற்றி தேசிய பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் பிரதிகளையும் இணைத்து கொடுத்துள்ளோம். அதனை எமது மகஜரிலும் எழுதியுள்ளோம். எதையும் அறைகுறையாக பார்க்கும் லத்தீபுக்கு இது தென்படவில்லை. பாகிரங்கமாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள எமது கட்சியின் அறிக்கையில் “ இத்துடன் இது சம்பந்தமாக தேசிய பத்திரிகைகளில் வந்த செய்திகள் அவை பற்றிய எமது அறிக்கைகளின் பிரதிகளை இணைத்துள்ளோம்” என்ற வார்த்தை உள்ளது. ஒரு அறிக்கையை வாசித்து விளங்க முடியாத அறைகுறைகள் எமது தலைமை பற்றி எழுத தகுதியற்றவர்கள்.
முபாறக் மௌலவி சோ போன்று வெறும் பத்திரிகை ஆசிரியர் அல்ல. சோ என்பவர் ஒரு சினிமா நடிகராக இருந்தாலும் அவர் சட்டத்தரணி, அத்துடன் அரசியலில் அவர் இவர்களைப்போன்று பதவிக்கு நக்கும் ஒருவரல்ல. துணிச்சலான அரசியல் விமர்சகர். ஆனாலும் அவர் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க முடியாத கோழையாகி விட்டார். எமது தலைவர் முபாறக் மௌலவி, சோவை விட பல படிகள் தாண்டி ஒரு பத்திரிகை ஆசியராக மட்டுமல்லாது அரசியல் கட்சியை உருவாக்கி  வழிநடாத்துபவர்.
ஒரு கட்சியை அதன் கடிதத்தலைப்பில் வைத்துத்தான் வழி நடத்த முடியும். இவரின் கட்சியினரிடம் கடிதத்தலைப்பு கூட இல்லை. அதுவும் செயலாளரின் கல்லாப்பெட்டிக்குள்தான் உள்ளதோ தெரியவில்லை. அக்கட்சியின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் கட்சியின் பெயர் கூட சரியாக தெரியாது. சில இடங்களில் தமது கட்சியை அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் என்கிறார்கள். சில நேரங்களில் அ. இ. மக்கள் காஙகிரஸ் என்;கிறார்;கள். எந்தப்பெயரில் இவர்களின் கடிதத்தலைப்பு உள்ளது என்பது இவருக்காவது தெரியுமா?
ஆக விமர்சனங்கள் எழுதும் போது கருத்தை கருத்தால் வெல்ல முனைவதுதான் புத்திசாலிகள் செயல். அதனை விடுத்து நக்கல், முதுகு சொறிதல் என்பதெல்லாம் பாமரத்தனமாகும். ஆத்தகைய பாமரரான லத்தீப் அவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை கொடுத்து இனியும் பிச்சையில் வாழாது சொந்த உழைப்பில் வாழ இறைவன் உதவி செய்ய வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar