BREAKING NEWS

நாட்டில் தரித்திரியம் தொடர்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிடமாட்டாராம் ஜனாதிபதி.

வீதி அபிவிருத்தி மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதுபோல, நாடு முழுவதும் குடிநீருக்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்படும் வரட்சி நிலை மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குகின்ற வகையில் குடிநீருக்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதெனவும் அவர் கூறினார்.
பத்திரிகைகளின் ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களின் முக்கியஸ்தர் களுடனான சந்திப்பு நேற்று அலரிமாளி கையில் இடம்பெற்றது.
இங்கு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக அலைகிறார்கள்.
பொலன்னறுவை, கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் உட்பட ஒன்பது மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுகிறது. இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ள்ளதென அரசாங்க அதிபர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் “நாம் வீதி அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். அதுபோல, குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் முன்னுரிமை வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம்” என்றார்.
வரட்சியினால் ஒன்பது மாவட்டங்களிலும் சுமார் 11 இலட்சம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இவர்களுக்கு உடனடியாக குடிநீர் விநியோகிப்பதற்கென பவுஷர்களும் வழங்கப்பட்டிருக்கின்றன என்று கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தேவையானளவு நீர் பவுஷர்களை கொள்வனவு செய்யவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஒன்பது மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்குத் தேவையானளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையேற்பட்டால் அரசாங்கம் போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யும்” என்றும் கூறினார்.
“வரட்சி எங்களால் வந்ததல்ல. இயற்கையால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்பு இது. நாட்டில் ஒருபக்கம் வரட்சி, இன்னொரு பக்கம் மழை, வெள்ளம். என்றாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நாம் கைவிடமாட்டோம். போதிய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அரசாங்க அதிபர்கள், களத்தில் நின்று பணிபுரிகிறார்கள்’ என்றும் ஜனாதிபதி கூறினார்.
வரட்சியால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஊடகங்களும் தங்களால் ஆன பணியைச் செய்ய முன்வரவேண்டுமெனவும் ஜனாதிபதி இங்கு கேட்டுக்கொண்டார்.
“ஆறுகள், குளங்களில் நீர் வீணாகிறது. நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் கூடுதலான பலனைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நீர்ப்பாசனத் திட்டம் முழுமையாக முறைமைப்படுத்தப்படும். இதற்கான வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்” என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar