ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மௌலவி சதீக் மௌலவி முப்தி நன்றி
Posted by aljazeeralanka.com on May 03, 2024 in | Comments : 0
தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மௌலவி சதீக் மௌலவி முப்தி நன்றி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மௌலவி சதீக் மௌலவி முப்தி மேலும் குறிப்பிடுகையில் பல தசாப்த காலமாக லயன்களின் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் 700 ரூபாய் சம்பளத்தை பெற்று மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் தமது குடும்ப வழிநடத்தி வந்தார்கள். அதேபோன்று ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அங்கு வந்து சம்பளத்தை கூடுதலாகித் தருகின்றோம் என்று போலி வாக்குறுதிகளை கொடுத்து அம்மக்களின் வாக்கு பலன்களை பெற்று அரசியல் அதிகாரம் அடைந்து அவர்கள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்ஹ அவர்கள் மலையகத்துக்கு சென்ற வேளை நேரடியாக தோட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் அன்றாட பிரச்சினைகளை கேட்டறிந்து சம்பள பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவதாக கூறி உடனடியாக கொழும்புக்கு வந்து கம்பெனிகளுடன் கதைத்து அதற்குரிய தகுந்த தீர்வை பெற்றுக் கொடுத்த ஒரே ஒரு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் மாத்திரம் தான்.
எதிர்வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் மலைய மக்கள் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களை ஆதரித்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்
Subscribe to:
Post Comments
(
Atom
)


Post a Comment