BREAKING NEWS

இது நாடகமென்ற எதிர்பார்ப்பிற்கு ஆதாரம்தான் இந்த முடிவு.

யுத்த நிறுத்தம் ஏன்? இது நாடகமென்ற எதிர்பார்ப்பிற்கு ஆதாரம்தான் இந்த முடிவு. இந்திய பிரதமர் மற்றும் அவருக்கெதிரான ஊழல் ஆதாரங்கள், கொலைக்கள நிரூபனங்களை அடுக்கிக் கொண்டே போகமுடியும். 2001 காலப்பகுதியில், அமேரிக்க உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு நுழையத் தடைவிதிக்கப்பட்டவர். குஜராத் கொலைக்களம் தொடர்பில் இந்த தடை அவருக்கேற்பட்டிருந்து பின்னர் அவர் மத்திய அரசின் உயர்மட்டமானதும் இராஜதந்திர சிக்கல் நிமித்தம் விலக்கப்பட்டிருந்தது. இவர் மட்டுமன்றி அமித்சா உள்ளிட்ட அனைவரும் அதே ரகம்தான். ஆனால் ஏன் இவர் மூன்றாவது முறையாகவும் அங்கே பிரதமராக தேர்வாகிறார் என்றால் தமிழ்நாடு கேரளா கன்னடம் மேற்கு வங்கம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சங்பரிவார் மற்றும் RSS அணியினரால் நூற்றாண்டுகளாக தூவப்பட்டு விரிந்து நிற்கிற மதவாதமாகும். இஸ்லாம், கிறித்தவ மதவெறுப்பு செயற்பாடுகள் அங்கு உச்சம். இதனால் உருவான விரிசல்களில் மோடி தப்பிப் பிழைத்து கடந்த தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையை இழந்தாலும் கூட்டாக கதிரையை தனதாக்கினார். "இவரது பொருளாதார கொள்கைகளால் இந்தியா எழுந்ததாக கூறும் கதைகள் போலியானவை" என்று பொருளியல் தெரிந்தவர்களுக்கு இலகுவாக புரியும். இந்திய பொருளாதார அடைவுகள், IMF இலே பயிற்சி பெற்ற பொருளியல் விற்பன்னர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் பிரதமராக்கி, இந்தியாவில் அன்று ஏற்படுத்திய பொருளாதார கட்டமைப்பு மாற்றங்களின் அறுவடையாகும். மறுபுறம், பாக்கிஸ்தானின் ஜனாதிபதி ஆசிப் அலி, பிரதமர் செஹ்பாஸ் உள்ளிட்ட ஊழல் கூட்டமைப்பு பற்றி கூறப்போனால், பாக்கிஸ்தான் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோழிய பாரம்பரிய திருடர்கள்தான் இன்றைய அரசாங்கம். பாக்கிஸ்தானில் தங்களது ஆட்சியை தக்கவைக்க இவர்களது பரம்பரைகள்தான் பிரதேசவாத பிரிவினைகளை தீவிரவாதத்தை வளர்த்து விட்டவர்கள். பலோசிஸ்தான் மத்திய அரசுக்கு எதிராக தனியாக செயற்படுதல் மற்றும் கைபர்-பதுக்வா மாநிலத்தில் உட்புற ஆயதக்குழுக்களின் மோதல்கள் உள்ளிட்ட தேசத்தீங்கு செயல்களின் பின்னனி இவர்கள்தான். இதனை எதிர்த்து ஆட்சியை கைப்பற்றி ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய இம்ரான்கானை சிறையிலடைத்து தம்மை பாதுகாக்க இந்தக் கூட்டுக்களவானிகள் ஒன்றிணைந்து நாட்டை சீரழிக்கின்றனர். இந்த இரண்டு நாட்டு ஆட்சித் தலைமைக் குழுக்களுக்கும் எதிர்வரும் தேர்தல்கள் பெருத்த தோல்வியை ஏற்படுத்தப்போகிறது என ஆய்வுகளும் புலனாய்வு அறிக்கைகளும் கூறியுள்ளன. இந்நிலையிலே சுகபோகம் பறிபோவதைத் தாண்டி, ஊழல் தலைப்பில் உள்ளே போகவேண்டிய நிலைவரலாமென தமது ஆட்சிகளை தக்கவைக்க இரண்டு நாட்டு களவானிகளினதும் நாடகமே இந்த புல்வாமா முதல் ரபாலே வரையான செட்-அப் கேம். ஆனால் இருதரப்பும் பேசிக்கொள்ளாத செட்டிங். இந்த கட்டுரைக்கு ஆதாரங்களை நீங்கள் இந்திய பாக்கிஸ்தானிய முன்னாள் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் நேர்த்தியான அரசியல் அவதானிகளின் கருத்துக்களை வாசிப்பதுடன் இரு நாடுகளினதும் அரசியல் வரலாறு மற்றும் தற்கால போக்குகளை அறிந்தவராயின் புரிந்து கொள்ளமுடியும். பஹல்காம் நாடகத்தை ஆரம்பித்தாயிற்று. தாக்குதல்தாரிகள் இனங்காணப்படவில்லை. வந்தவழியில் கொடூரர்கள் சோதனையிடப்படவுமில்லை. இலங்கை எயார்லைனில் ஏறும்போதும் ஏதுமில்லை. லங்கா எயார் போட்டிலும் என்னாச்சு என்று தகவலில்லை. தேர்தல் காலத்தில் ஆரம்பித்தாயிற்று, ஒரு கூடாரத்தையாவது போடாது முடித்தால் மோடியின் கதை முடிந்தது. ரபாலேவை தூக்கியதால் செஹ்பாஸின் ஹீரோயிசம் பாக்கிஸ்தானில் ஓங்கியுள்ளது. நாடகம் இருநாட்டின் ஆளும் தரப்பிற்கும் வெற்றி; மக்களும் சமாதானமும் தோல்வி; கடந்த ஆண்டுகளில் வாடிவதங்கியிருந்த இருநாட்டின் உறவும் இந்த நாசகாரர்களின் நன்மைக்காக பிடுங்கி எரியப்பட்டுள்ளன. இது அவ்வளவு விரைவாக சீராகாது. கிரிக்கட் உட்பட. இவர்களின் ஆட்சி நிலைப்பிற்கு பலிகொடுக்கப்பட்ட இரத்தங்கள் இருநாட்டு படையினர் பொதுமக்களுடையதாகும். இந்த நாதாரிகளின் பிரச்சினையில் நரம்பு புடைத்த இருதரப்பு வெறியர்கள், இலங்கை விசிறிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். மீண்டும் இன்னும் ஐந்தாவது வருடத்தில் மற்றுமொரு கேம் ப்ளானுடன் சந்திக்கும்வரை அன்புடன் விடை. எஸ்.எம்.அல் அமீன் (SLAS)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar