அதாவுல்லா கட்சி மாநகரசபையில் போதைவஸ்த்து பிடிபட்டது
Posted by aljazeeralanka.com on September 20, 2025 in | Comments : 0
அக்கரைபற்று மாநகர சபைக்குள்அதிரடிப்படை : போதைவஸ்த்து பிடிபட்டது
இலங்கையில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் சுற்றி வளைத்து போதைவஸ்த்து கைப்பற்றப்பட்டது இதுவே முதன்முறையாகும்
பாடசாலை மாணவர் ஒருத்தரின் தந்தை தனது மகனின் நடத்தையில் மாறுதலைக்கண்டு கவனமாக ஆராய்ந்து பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒருத்தரிடம் தன கவலையை தெரிவித்துள்ளார் அதிகாரியோ எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் பின் தனது நண்பனிடம் தனது மகனை சீரழிக்கும் கும்பலை பிடிக்கவேண்டும் எனக்கு உதவிசெய் ,என் உயிரான மகனை எந்த நாய் சீரழித்தான் என்று தெரியவேண்டும் என அழுது கேட்டுக்கொண்டுள்ளார்
நண்பன் அதிரடிப்படையில் உள்ள தனது நன்பனின் உதவியை நாட அவர்மூலம் இரகசியமாக ஒரு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பையும் தேடுதலையும் ஆரம்பித்துள்ளனர் சுமார் 3 மாத பின்தொடரலின் பின் கைது செய்யும் நடவடிக்கைகள் நடந்துவருகின்றது
அதன்மூலம் கடந்த கிழமை ஒருத்தரை கைது செய்ததோடு நேற்று (9 /17 ) அக்கரைப்பற்று மாநகர சபையில் கடமை புரியும் ரகீஸ் என்ற ஒருத்தரையும் அதிரடிப்படையினர் கைத்து செய்தனர்
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்துக்குள் இருந்து பெருமளவிலான போதைப்பொருளினை அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்
விசாரணைகளின்போது எந்த அரசியல்வாதிக்கு தினமும் போதைபொருள் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Copied from : Lanka Sky News
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment