காரைதீவு - மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பன நிகழ்வு
Posted by aljazeeralanka.com on September 21, 2025 in | Comments : 0
காரைதீவு - மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பன நிகழ்வு இன்று 20.09.2025 நடைபெற்றது!!!
-------------------------------------------------
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையேர பிரதேச ஒருங்கினைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் வேண்டுகோளுக்கமைய மாவடிப்பள்ளி பெரிய பாலம் சுமார் 247மில்லியன் நிதி உதவி உடன் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களும் கெளரவ அதிதியாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்தபியதிஸ்ஸ அவர்களும் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் முத்து ரத்துவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்னாயக்க அவர்களும் கலந்து கொண்டனர்
மேலும் மாவட்ட செயலாளர் சின்தக்க அபயவிக்ரம, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மாகாண பணிப்பாளர் பொறியியளாலர் அலியார், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை பொறியிளாலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்,தேசிய மக்கள் சபையின் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய இப் பாலமானது புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது.அத்துடன் இப்பாலமானது சுமார் 90 வருடம் பழமை வாய்ந்த பாலம் என்பது குறிப்பிடதக்கது.
-ஊடக பிரிவு-
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment