BREAKING NEWS

த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவு. வ‌ய‌தான‌ க‌ட்சிக‌ளுக்கு பாட‌ம்.

த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவு. வ‌ய‌தான‌ க‌ட்சிக‌ளுக்கு பாட‌ம். ஜ‌ன‌நாய‌க‌த்தை பொறுத்த‌ வ‌ரை எந்த‌ க‌ட்சி ஆட்சிக்கு வ‌ந்தாலும் 20 வ‌ருட‌ம் தாண்டினால் அந்த‌க்க‌ட்சியின் ம‌வுசு குறைந்து விடும். கார‌ண‌ம் த‌லை முறை மாற்ற‌ம். இல‌ங்கையை ஆண்ட‌ க‌ட்சிக‌ள் ஐதேக‌, சு. க‌. அவை இன்று ஓட்டை விழுந்த‌ ப‌ட‌குக‌ள். அது போல் த‌மிழ‌ர் விடுத‌லை கூட்ட‌ணி, ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் போன்ற‌வையும் ப‌ல்லிழ‌ந்த‌ பாம்புக‌ள். தி.மு.க‌ என்ப‌து நாம் பிற‌ந்த‌ கால‌ம் முத‌ல் ஆட்சியில் இருந்த‌ க‌ட்சியாகும். த‌மிழ் நாட்டை மிகுந்த‌ க‌ட்டுப்பாட்டுட‌ன் வைத்திருந்த‌ க‌ட்சியாகும். முஸ்லிம்க‌ளை பொறுத்த‌ வ‌ரை பாரிய‌ துரோக‌ங்க‌ளை செய்த‌து. ஆனாலும் சில‌ ச‌லுகைக‌ளை கொடுத்த‌து. த‌மிழ் நாட்டு முஸ்லிம்க‌ளைப் பொறுத்த‌ வ‌ரை யார் ஆட்சிக்கு வ‌ந்தாலும் ப‌ர‌வாயில்லை, ம‌த‌வாத‌ க‌ட்சி வ‌ர‌க்கூடாது என்ப‌துதான். இத‌ன் தாத்ப‌ரிய‌ம் இளைஞ‌ர்களுக்கு புரிய‌ தாம‌த‌மாகும். இத்த‌கைய‌ வீழ்ச்சிக்கு கார‌ண‌ம் த‌லைமுறை மாற்ற‌த்தின் போது த‌லைவ‌ர்க‌ள் மாறாம‌ல் இருப்ப‌து பிர‌தான‌ கார‌ண‌ம். மூத்த‌ த‌லைவ‌ர்க‌ள் 20 வ‌ருட‌த்தின் பின் க‌ட்சியின் ஆலோச‌க‌ர்க‌ளாக‌ மாறி அடுத்த‌ த‌லைமுறையை த‌லைவ‌ர் ஆக்க‌ வேண்டும். இல்லாவிடில் மிக‌ கேவ‌ல‌மான‌ தோல்விக‌ளை ச‌ந்திப்ப‌ர் என்ப‌தை த‌மிழ் நாடு ச‌ட்ட‌ச‌பை தேர்த‌ல் சொல்கிற‌து. முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைவ‌ர் இல‌ங்கை உல‌மா க‌ட்சி.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar