ஹஜ் கமிட்டி பீசா செலவு பெரும் ஊழல்
Posted by aljazeeralanka.com on June 12, 2026 in | Comments : 0
#RTI மூலம் அம்பலமானது "அரச
ஹஜ் தூதுக்குழுவின்" பல மில்லியன்
செலவீன விபரங்கள்!
📍📍📍📍📍📍📍📍📍📍
ஹஜ் யாத்திரிகர்களின் ஹாஜிகளின் சேவைக்காக மக்கா சென்ற இலங்கை அரச ஹஜ் தூதுக்குழுவினர், ஹஜ் நிதியத்திலிருந்து (Hajj Fund) செலவிட்டுள்ள பெருந்தொகை பணம் தொடர்பான விபரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலிருந்து நான் பெற்றுக்கொண்டேன்.
15 பேர் கொண்ட இந்தத் தூதுக்குழுவிற்காக மாத்திரம், ஹஜ் யாத்திரிகர்களின் பணத்தைக் கொண்ட ஹஜ் நிதியத்திலிருந்து பல மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெறப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின் விபரம்:
விமான டிக்கெட் செலவு (இலங்கை ரூபாய்): மொத்தம் 4,557,325.00 ரூபா
பேசா விசா செலவு: 15 பேருக்கும் தலா 9,323.02 SR வீதம் மொத்தம் 139,845.30 SR (சவூதி ரியால்)
மக்கா, மதீனா, அஸீஸியா (தங்குமிடம், உணவு): 13 பேருக்கு தலா 1,000 USD வீதம் மொத்தம் 13,000 USD (அமெரிக்க டாலர்)
தூதுக்குழுவில் பயணித்தவர்கள் யார்?
பிரதி அமைச்சர், ஹஜ் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், திணைக்கள பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், 5 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உத்தியோகத்தர், மருத்துவ உதவியாளர், பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளர் மற்றும் ஒரு தன்னார்வ உதவியாளர் என 15 பேர் இந்த நிதியில் பயணித்துள்ளனர்.
-எம்.எஸ்.எம். சுஹைல்-
நன்றி: விடிவெள்ளி
#RTI #SriLanka #Hajj2026 #MuslimReligiousAffairs #HajjFund #Accountability #Transparency
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment