BREAKING NEWS

இலங்கையில் இனப்பிரச்சினைகான தீர்வு எட்டபடுமா?

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் போது முஸ்லிம்களுக்கான தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவான முடிவொன்றை அடைவதில் சமூகம் பாராமுகமாக இருக்க முடியாது. இந்த வகையில் முஸ்லிம்களுக்கான தீர்வை வரைவதில் முஸ்லிம் கட்சிகள் ஒருமித்து செயற்பட வேண்டும் என சமூகத்தில் உள்ள பலரும் தெரிவித்து வருகின்றனர்

ஆனாலும் முஸ்லிம் கட்சிகளைப்பொறுத்தவரை பலதரப்பட்ட கொள்கைகளையும், நோக்கங்களையும் கொண்டவையாக இருப்பதால் அவற்றினிடையே தீர்வு விடயத்தில் ஒருமித்த கருத்தை அடைவது தற்போதைக்கு முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆனாலும் அக்கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கான தீர்வு விடயத்தில் அக்கறையுடன் உள்ளன என்பது திருப்திதரக்கூடிய ஒன்றாகும். இந்நிலையில் தீர்வு விடயத்தில் முஸ்லிம் கட்சிகளின் நிபை;பாடுகளை ஒரே பார்வையில் நாம் தெரிந்து கொள்வதன் மூலம் எத்தகைய நிபை;பாடு சரியானதாக அமையும் என்பதை சமூகம் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை ஊடகங்கள் மூலமாக அக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் வெளியிட்ட கருத்துக்களிலிருந்து இங்கு தொகுக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஸ்ரீ. மு. காவின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் தலைவர் அமைச்சுப்பொறுப்பை ஏற்ற காலம் முதல் எதையும் பகிரங்கமாக தெரிவிப்பதை காணவில்லை. ஆனாலும் கட்சியின் செயலாளர் ஹசன் அலி அவர்களின் கருத்தக்களே வெளிவருகின்றன. ஆந்த வகையில் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனியலகு, காணி, பொலிஸ் அதிகாரம் என்பன 13வது திருத்தச்சட்டத்திற்கமைய வழங்கப்பட வேண்டும் என்பது ஸ்ரீ. மு. காவின் நிலைப்பாடாக உள்ளது.  இவற்றுக்கு காரணம் அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேசத்தில் சிங்கள அதிகாரிகளினால் முஸ்லிம்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுவதாக அக்கட்சி குற்றம் சாட்டுகிறது. குpழக்கு மாகாணத்தக்கு பொலிஸ், காணி அதிகாரம் வருவதன் 5லம் இத்தகைய காணிப்பிரச்சினையை தீர்க்கலாம் என்பது அக்கட்சியின் நிலைப்பாடு.

ஆனாலும் முஸ்லிம்களுக்கான தனி அலகு என்பது வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட வேண்டுமா அல்லது இணைப்பதற்கு முன்பாகவே வழங்கப்பட வேண்டுமா? இதனை வழங்குவது அரச தரப்பா அல்லது தமிழ் தரப்பா போன்ற கேள்விகளுக்கு அக்கட்சியிடம் தெளிவான பதில்களை காண முடியவில்லை.

தேசிய காங்கிரஸ்

ஆமைச்சர் அதாவுள்ளாவின் தலைமையிலான இக்கட்சியின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் தலைவர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். அதாவது வடக்கும் கிழக்கும் பிரிந்திருப்பதே இப்பிரச்சினைக்கான தீர்வு என்பதும் பொலிஸ், காணி அதிகாரம் மாகாண சபைக்கு தேவையில்லை என்பதும் அக்கட்சியின் நிலைப்பாடாகும்.         பொதுவாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழர் தரப்பாலேயே மிகக்கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால் வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கபபட்டதன் பின்பு கிழக்கு மமாகாண முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையானோர் நிம்மதியாக வாழ்வதை இக்கட்சி சுட்டிக்காட்டுகிறது.

ஆகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்

வடககும் கிழக்கும் நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டும் என்பதும் பொலிஸ், காணி அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இக்கட்சியின் நிலைப்பாடாகும். இவற்றை கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் செயலாளர் நாயகம் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். இக்கட்சியின் இந்நிலைப்பாட்டுக்கு காரணம் கிழக்கு வடக்குடன் இணைக்கப்பட்டதன் பின்னரே முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன என்பாதாகும். ஆத்துடன் தொழல்வாய்ப்பை பொறுத்த வரை முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் பாதிக்கப்பட்டனர். 35 வீத்த்துக்கு மேலிரந்த கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இணைப்பின் மூலம் 17 வீதமாக ஆக்கப்பட்டனர்.

அ;துடன் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை என்பது 75வீதமானவை தமிழர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக இக்கட்சி குற்றம் சாட்டுகிறது. முட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அம்பாறையின் சில பகுதிகளிலும் முஸ்லிம்கள் இவ்வாறன பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதால் காணி அதிகாரம் என்பது முழுமையாக மாகாண சபைக்கு வழங்கப்படாமல் அதற்கென ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதில் மாகாண, மத்திய ஆட்சி பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இக்கட்சியின் நிலைப்பாடாகும். இவ்வாறே பொலிஸ் அதிகாரமும் ஆணைக்குழு மூலமே வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

இதே வேளை இனப்பிரச்சினக்கான தீர்வு விடயத்தில் 2009ம் ஆண்டு உலமா கட்சியினால் ஜனாதிபதியிடம் கைளிக்கப்பட்ட தீர்வுப்பொதியில் வடக்கும்கிழக்குமநிரந்தரமாக பிரிந்திருப்பதுடன் கிழக்கு முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு, வட மாகாண முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பொலிஸ், காணி அதிகாரம் முழுமையாக வழங்கப்படாமல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலே நாம் கண்ட இனப்பிரச்சினைக்கான முஸ்லிம்களின் கட்சிகளின் நிலைப்பாடுகளின் படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வடக்கு கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.  அதே போல் பிரிந்த வடக்கு கிழக்கிலும் முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதால் அம்மாகாணங்களில் முஸ்லிம்ளுக்கான தனியான நிர்வாக அலகொன்றும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நாம் உணரக்கூடியதாக உள்ளது. இவ்வாறு தனியான நிர்வாக அலகு வழங்குவதில் நிர்வாக சிக்கல் ஏற்படுவதற்கு வாய்;பில்லை. காரணம் கல்முனை தேர்தல் தொகுதி முஸ்லிம் செயலகம் என்றும் தமிழ் செயலகம் என்றும் பிபிக்கப்பட்டு வௌ;வேறான நிர்வாகங்களும் அவற்றுக்கு தனித்தனியான பிரதேச செயலாளர்களும் உள்ளதை காணலாம். மேலும் இச்செயலகஙகள நிலத்தொடர்பற்ற நிர்வாகத்தையும் கொண்டுள்ளன. கல்முனை முஸ்லிம் செயகத்துள் வரும் நற்பிட்டிமுனை கிராமத்தை சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு என்ற கிராமங்கள் குறுக்கிடுகின்றன. அதே போல் இஸ்லாமாபாத் சுற்றி வர தமிழ் பிரதேசத்தை எல்லையாகக்கொண்டுள்ளது. மருதமுனையும் அவ்வாறே உள்ளது.

இந்த வகையில் கிழக்கின் தமிழ் பிரதேசங்களுக்கு தனியான சபையும் முஸ்லிம் பிரதேசங்களுக்கு தனியான சபையும் தேவை என்றால் சிங்கள பிரதேசங்களுக்கு தனியான சபையும் வழங்கப்படுவதில் தவறே இல்லை. இனங்களுக்கிடையில் இன்னமும் சந்தேகங்களும் மனக்கசப்பும் இருக்கின்ற சூழ்நிலையில் இதுவே சிறந்த தீர்வாக இருக்கும்.

முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர், அகில இலங்கை உலமா கட்சி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar