BREAKING NEWS

அரசாங்கம் முஸ்லிம் காங்கரசை புறக்கனிக்கிறதா?

அரசாங்கத்தின் மூலம் பல சுகங்களை அனுபவிக்கும் ஸ்ரீ. முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு  அபிவிருத்தியில் பங்கு தர அரசாங்கம் மறுப்பதாக பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவுத் கூறுவதன் மூலம் அரசின் மீது அநியாய பழியை போட்டுள்ளார் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரீ. மு. கா அரசடன் இணைந்ததானது இந்த அரசாங்கத்தை உளமாற ஏற்றுக்கொண்டதனால் அல்ல என்பதை முழு உலகும் அறியும். இதன் மூலம் தமது கட்சியை பிளவிலிருந்து காப்பாற்றிக்கொண்டுள்ளதோடு தலைவரும் தவிசாளரும் தவிர வேறு எவரும் அமைச்சர்களாகி உயர்ந்து விடக்கூடாது என்பதில் மு. கா பெற்ற வெற்றி பற்றி பிரதி அமைச்சர் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்?


முஸ்லிம் கட்சிகளில் முஸ்லிம்களின் ஆணையை பெற்ற பெரிய கட்சி ஸ்ரீ. மு. கா என கூறிக்கொண்டாலும் முஸ்லிம் கட்சிகளுள் இந்த அரசாங்கத்தை மிக மோசமாக எதிர்த்த கட்சியும் ஸ்ரீ. மு.காதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மு. கா பெரிய கட்சி என்ற மாயை மாறிவருவதை இவர்களால் ஜீரணிப்பது கஷ்டம் என்பதை நாம் அறிவோம். இன்று மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மாவட்டங்களில் முஸ்லிம்களின் முதன்மை கட்சியாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசே உள்ளது என்பதை புள்ளி விபரம் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

முஸ்லிம் கட்சிகளின் அமைச்சர்களுள் ஸ்ரீ. முகா வின் தலைவர் மற்றும் தவிசாளர் ஆகியோர் எந்த அமைச்சருக்கும் குறையாத அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். இவர்களை உள்நாட்டில் காண்பதே அரிது என மக்கள் பேசுவது எமது காதில் விழுகிறது. தலைவரின் அமைச்சுக்குரிய வாகனங்களில் மு. கா அங்கத்தவர்கள் சந்தோசமாக உலா வருவதை கிழக்கிலும் கொழும்பிலும் காணக்கிடைக்கிறத. அதே போல் மு. காவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக மாறி வருவது பிரதி அமைச்சருக்கு தெரியவில்லையா?

மேலும்  கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவராக இருப்பவர் ஸ்ரீ. மு.காவின் பாராளுமன்ற உறுப்பினராவார். இவருக்கு பல கோடிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக அவரே ஊடகங்களில் பகிரங்கமாக தெரிவித்து வருகிறார். அதே போல் வேலை வாய்ப்புக்களையும் அரசாங்கம் மு. கா எம்பிமார் சிலருக்கு வழங்கியுள்ளதை எம்மால் நிரூபிக்க முடியும். இவ்வாறு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் ஸ்ரீ. மு. காவினருக்கு வழங்கியிருந்தும் நன்றி கெட்ட தனமாக பசீர் சேகு தாவுத் அரசாங்கத்தின் மீது பழி சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருப்பவர்கள் தமது அமைச்சுக்குரிய அரசாங்கத்தின் நேரடி ஒதுக்கீடுகளை விட ஏனைய அமைச்சர்களை அணுகி காரியம் சாதிப்பதையே அதிகம் காண்கிறோம். ஆனால் இவர்கள் கையாலாகாதவர்களாக இருப்பதற்காக அரசாங்கத்தை குற்றம் சொல்ல முடியாது.

அதே போல் அரசுக்கு ப+ரண ஆதரவு என சொல்லிக்கொள்ளும் ஸ்ரீ. மு. கா, அரசுக்nகிரான நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைக்கும் இரட்டை வேடம் போடுவதையும் முழு உலகும் அறியும். இது பற்றி அரசாங்கம் நன்கு தெரிந்திருந்தும் அரசு நிறையவே .வர்களுக்கு கைமாறு செய்து வருகிறது. உண்மையில் அரசுக்கு ஆதரவான ஏனைய முஸ்லிம் கட்சிகளை விட ஸ்ரீ.மு. காவுக்கே அரசாங்கம் பல வளங்களை அளித்துள்ளது என்பதே உண்மையானதாகும் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.      

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar