BREAKING NEWS

அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்​தில்


அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்​தில், அழுத்தமான பல வார்த்​தைகள் உள்ளன. அவற்றில் சில


'சட்டத்துக்கு நேர் எதிராகப் பல்வேறு படுகொலைகள் இலங்கையில் நடந்துள்ளன.

இவை குறித்தும் 'காணாமல் போதல்கள்குறித்தும் எவ்வித பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும்.

வடக்கு மாகாணம் முழுவதும் இருக்கும் இலங்கை இராணுவத்தை விலக்க வேண்டும்.

காணி தொடர்பான பிரச்னை​களைத் தீர்க்க வேண்டும்.

சிவில் சமூகக் கட்டமைப்புகளை வலிமைப்படுத்த வேண்டும்.

மாகாணங்களுக்கு அதிகாரங்​களைப் பரவலாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும். இதன் மூலமாக இனப்பிரச்னைக்கு சரியான தீர்வு காண வேண்டும்.

அனைவரது கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்,

சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவை சார்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நடந்த நிகழ்வுகள் குறித்து இலங்கை அமைத்த ஆய்வுக்குழுவின் அறிக்கை, சர்வதேச சட்ட விதிமீறல்கள் தொடர்பாக முழுமையாக எதையும் தெளிவுபடுத்தவில்லை.

சர்வதேச சட்ட விதிமுறைகள் அதிகப்படியாக இலங்கையில் மீறப்பட்டது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை சபைக்கு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று, இலங்கைக்கு எதிரான தன் தீர்மானத்தில் அமெரிக்கா தெரிவித்துள்ளது

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar