BREAKING NEWS

கல்முனையின் அபிவிருத்திக்கென கிழக்கு மாகாண ஆளுனரை கொண்டு வர முடியாத கல்முனை மேயர்,



கல்முனையின் அபிவிருத்திக்கென கிழக்கு மாகாண ஆளுனரை கொண்டு வர முடியாத கல்முனை மேயர், ஒர்; இசைக்கச்சேரிக்கு அவரைக்கொண்டு வந்ததன் மூலம் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டிய பரிதாப நிலையில் கல்முனை மேயர் இருக்கின்றார் என அ. இ. மக்கள் காங்கிரஸ் பிரச்சார செயலாளர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 



அண்மையில் கல்முனையின் அபிவிருத்திக்கென கிழக்கு மாகாண ஆளுனர் கல்முனைக்கு வரவிருந்த போது ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரசின் உள்வீட்டு சண்டை காரணமாக அவர் வரவில்லை. இதற்கு மு. காவை சேர்ந்தோரின் சதியே காரணம் என கல்முனை மேயர் சிராஸ் தெரிவித்திருந்தார். எப்படியும் ஆளுனரை அழைத்து வந்து கல்முனையின் அபிவிருத்தியை ஆரம்பிப்பேன் என்ற மேயர் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கல்;முனையில் நடைபெற்ற இசைக்கச்சேரிக்கு அழைத்து வந்துள்ளதை பார்த்து சரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.

    உண்மையில் கல்முனை மாநகர சபை ஸ்ரீ. மு.காவின் ஆட்சியின் கீழும் அதன் மேயர் அக்கட்சியின் உறுப்பினராகவும் இருக்கும் வரை கல்முனை மாநகர சபையை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதை கடந்த மாநகர சபை தேர்தலின் போது நாம் பகிரங்கமாக கூறிய விடயங்கள்தான் இன்று யதார்த்தங்களாகிக்கொண்டிருக்கின்றன. சமூகப்பற்று என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் தலைமையும், உயர் உறுப்பினர்களும் உள்ள கட்சியினால் மக்களுக்கான சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க முடியாது.
    கல்முனை மாநகர சபையின் பொறுப்பை அ.இ. மக்கள் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐ. ம். சு. முன்னணியிடம் மக்கள் வழங்கியிருந்தால் ஒரே நாளில் கிழக்கு மாகாண ஆளுனர் என்ன ஜனாதிபதியையே நேரடியாக கல்முனைக்கு கொண்டு வந்து அபிவிருத்திகளை ஆரம்பிக்கும் திறமையும், சாணக்கியமும், செயற்திறணும் அ. இ. ம. காவின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு உண்டு என்பதை இந்த நாட்டின் சின்னக்குழந்தையும் சொல்லும்.
    அத்தகைய வாய்ப்பை கல்முனை மக்கள் தவற விட்டு விட்டு இப்போது பரிதவித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் போது கவலை தருகிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar