BREAKING NEWS

சா. தர பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் மாணவர்கள் தோல்வியடைந்ததற்கு காரணம் மௌலவி ஆசிரியர் பற்றாக்குறையே.

MubarakAMajeedசா. தர பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் மாணவர்கள் தோல்வியடைந்ததற்கு காரணம் மௌலவி ஆசிரியர் பற்றாக்குறையே.
-உலமா கட்சி தெரிவிப்பு

இஸ்லாம் பாடத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த  சா. துரப்பரீட்சையில் சித்தியடையாமைக்கு காரணம் மௌலவி ஆசரிய நியமனத்தின் வீழ்ச்சியே என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

1992 முதல் 2010ம் ஆண்டு வரை ஒருவருக்கேனும் மௌலவி ஆசரிய நியமனம்; வழங்கப்படவில்லை. இதற்காக எந்தவொரு முஸ்லிம் கட்சியும் முயற்சி செய்யவுமில்லை. அதே போன்று இந்நியமனங்களுக்காக போராட பெற்றோரோ மௌலவிமாரோ முன்வரவில்லை. இதன் பின்னணியில் 2005ம்ஆண்டு உருவான உலமா கட்சி இதனை முதன் முதலில் அரசியல் மயப்படுத்தியது. புpன்னர் 2008ம் ஆண்டு வர்த்தமாணி மூலம் இந்நியமனத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2010ம் ஆண்டு சுமார் 150 பேருக்கு மட்டும் நியமனம்  வழங்கப்பட்டது.
2700பேர் இதற்கான போட்டிப்பரீட்சையில் கலந்து கொண்டும் 20 வீதமானோரே சித்தியடைந்தனர். இதற்குக்காரணம் மௌலவிமாருக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற முறையிலான வினாத்தாள்களாகும்.  இதில் சினிமாப்படம் பற்றியும் ஒரு கேள்வி இருந்தது. இத்தகைய தவறுக்கு பரீட்சை திணைக்களமே பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். இந்த அநியாயத்தைப்பற்றி நாம் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத்திணைக்களத்திடமும் முறையிட்டோம். இது பற்றி நீதி மன்றுக்கு சென்று வழக்காட எமது முஸ்லிம் சட்டத்தரணிகள் ஒருவராவது முன்வரவுமில்லை.
இருந்த போதும் ஏற்கனவே போட்டிப்பரீட்சை எழுதிய மௌலவிமாரின் பரீட்சை முடிவுகளுக்கப்பால் தகுதி அடிப்படையில் மீண்டும் இந்நியமனம் வழங்கப்பட வேண்டும் என நாம் ஜனாதிபதியிடமும் கோரியிருந்தோம். எமது இந்த கோரிக்கைக்கு அரசியல் தலைமைகளோ, உலமா சபையினரோ துணையாக செயற்பட முன்வராததாலும், போட்டிப்பரீட்சை எழுதிய மௌலவிமாரும் இதற்காக போராட முன்வராததாலும் மீண்டும் இந்நியமனம் வழங்கப்படவில்லை.
இத்தகைய காரணிகளால் பாடசாலைகளில் இஸ்லாம் பாடம் போதிக்க மௌலவிமார் பற்றாக்குறை நிலவுகிறது. பல பாடசாலைகளில் மௌலவி அல்லாத ஆசிரியர்களாலும் சில பாடசாலைகளில் முஸ்லிம் அல்லாத ஆசிhயிர்களாலும் கூட இஸ்லாம் பாடம் கற்பிக்கப்படுகிறது. அவற்றின்  எதிரொலிதான் இரண்டாயிரத்துக்கும்  அதிகமானோர்  இஸ்லாம் பாடத்தில் தோற்றுப்போனதாகும்.
ஆகவே அரசாங்கம் மீண்டும் மௌலவி ஆசரியர் நியமனம் வழங்கும் வகையில் தகதிகாண் அடிப்படையில்  அதனை வழங்க வேண்டும். அல்லது மீண்டுமொரு போட்டிப்பரீட்சையை நடாத்தி இந்நியமனத்தை வழங்க வேண்டும். அப்போட்டி பரீட்சைக்கான வினாத்தாள் தயாரிப்பின் போது உலமா கட்சியின் ஆலோசனைகளைப்பெற  வேண்டும். இவை அத்தனைக்குமான முயற்சிகளில் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் எமக்கு ஒத்துழைப்பை வழங்க முன் வர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar