BREAKING NEWS

சாய்ந்தமருது வெலிவேரியன் குடியேற்ற கிராமத்திற்கு செல்லும் வீதியை ஐம்பது அடி அகலத்தில் விஸ்தரிக்கும்படி உலமா கட்சி வேண்டுகோள்

சாய்ந்தமருது வெலிவேரியன் குடியேற்ற கிராமத்திற்கு செல்லும் வீதியை ஐம்பது அடி அகலத்தில் சம்மாந்துறை வீரமுனை வரை விஸ்தரிக்கும்படி உலமா கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத்  மௌலவி அவர்களால் அம்பாரை மாவட்ட முஸ்லிம்; பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகான சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர மேயர், பிரதி மேயர் ஆகியோர்களை விழித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.                     
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது
                சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதனமாகவே மேற்கு வட்டை பகுதி அமைந்தது. இப்பகுதிக்கு செல்வதற்கென முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்ஸ{ர் அவல்களின் காலத்தில் சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வீதியும் திறக்கப்பட்டது. பயங்கர வாதம் நிலவிய காலப்பகுதியில் விவசாயிகள் இந்த வழியினூடாகவே பயணங்களை மேற்கொண்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்டு மக்கயுளும் மேற்கு வட்டையின் சில பகுதிகளை நிரப்பி வீடுகளை அமைக்க இந்த வீதி உதவியது.
                அதன் பின்னரும் வீடு இல்லாத மக்கள் இப்பகுதியை நிரப்கி குடியேற முயற்சித்த போது அரச அதிகாரிகள் தடை விதித்தனர். இத்தடையை நீக்கி மிக இலகுவாக நிரப்ப வழி செய்யும் மந்திரம் தன்னிடமுண்டு என கல்முனை மாநகர தேர்தலின் போது பெரிதாக முழங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி செயலாளரும் அன்றைய வேற்பாளருமான நிஸாம் காரியப்பர் கல்முனை பிரதி மேயர் பதவி பெற்றதும் அந்த மந்திரத்தை காட்டாமல் மௌனமாகி விட்டர்.  இத்தகைய தேர்தல் பொய்களால்  மக்கள் ஏமாந்தது மட்டும்தான் மிஞ்சியது.
                 சாய்ந்தமருதுஇ கல்முனைக்குடி மக்களின் இனப்பெருக்கத்திற்கேற்ப வாழ்விடம் போதாத நிலையில் மேற்கு வட்டையின் சில பகுதிகள் நிரப்பப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த வகையில் முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களினால் போடப்பட்ட வெலிவேரியன் கிராமத்துக்குச்செல்லும் வீதியை நேராக வீரமுனை வீதி வரை ஐம்பது அடி அகலத்தில் விஸ்தரிப்பதன்  மூலம் மக்களின் குடியேற்றத்துக்கும்இ விவசாயிகளின் இலகுவான போக்குவரத்துக்கும்இ சுனாமி ஏற்பட்டால் கூட ஓடித்தப்புவதற்கும் இலகுவாக அமையும்.
                 ஆகவே இதுபற்றி அம்பாரை மாவட்ட சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மாகான சபை உறுப்பினர்கள்இ கல்முனை மாநகர மேயர்இ பிரதி மேயர் ஆகியோர்களின் கவனத்திற்கு இதனை உலமா கட்சி முன்வைக்கின்றது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
                                                

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar