BREAKING NEWS

ஜெனீவாவுக்கு சென்ற உலமாக்கள் சமூகத்தை காட்டிக்கொடுத்தனரா? காப்பாற்றினரா?

அண்மையில் நடந்த ஜெனீவா மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து உலமா சபை தலைவரும், மற்றுமொரு பிரபல்ய ஷேக் ஒருவரும் பயணமாகியிருந்தனர் என்பது தெரிந்ததே. இவர்களின் இந்தப்பயணம் பற்றி சமூகத்தில் பல தரப்பட்ட கருத்துக்கள் பேசப் படுகின்றன.
இது கால வரை அரசியல் என்றால் ஆளை விடுங்கள் என செயற்பட்ட இவர்கள் ஜெனீவாவுக்கு போகும் அளவு சிந்தனை மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று கேட்கப்படுகிறது.  தேசப்பற்று காரணமாகவே ஜெனீவா சென்றதாக உலமா சபை தலைவர் இதற்கு பதில் கொடுத்துள்ளார். ஆனால் இத்தகைய தேசப்பற்று என்பது நாட்டை பயங்கரவாதத் திலிருந்து மீட்டெடுக்கும் போராட ;டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிரமாக செயற்பட்ட போது எங்கே ஒளிந்திருந்தது என்ற கேள்வியையும் பலர் எழுப்பு கின்றனர். 1ம் பக்க தொடர்
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து ஜனாதிபதி மீட்டும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு  உலமா சபை தனது தலைமையகத்தில் வரவேற்பு கொடுத்தது. இப்போது மட்டும் இவர்களுக்கு தேசப்பற்று வரக்காரணம் என்ன என்றும் கேட்கப்படுகிறது.

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுக்கவும், உலமாக்களின் பிரச்சினையை தீர்க்கவுமே மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படுவதாக உலமா கட்சி அறிவித்திருந்தது. அப்படியிருந்தும் உலமா சபை உலமா கட்சியின் முயற்சிகளுக்கு சிறு உதவிதானும் செய்யவில்லை. அந்த நேரத்தில் நாட்டுப்பற்றும், சமூகப்பற்றும் எங்கு போய்விட்டன என்றும் கேட் கப்படுகிறது.

    ஜெனீவா மாநாடு என்பது சமயம் சம்பந்தப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க அரசியல் சமபந்தப்பட்டதாகும். அப்படியிருந்தும் அத்தகைய அரசியல் போராட்டத்தில் இந்த உலமாக்கள் கலந்து கொண்டதன் மூலம் உலமாக்கள் அரசியல் செய்யத்தான் வேண்டும் என்பதை இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய அறிவு இவர்களுக்கு வருவதற்கும் அரசாங்க சார்பாக தம்மைக்காட்டி தேசப்பற்றை பறைசாற்றுவதற்கும்  காரணம் உலமா கட்சியின் தோற்றமே என்றால் மிகையாகாது.

    இனி நாம் உள்நாட்டு அரசியல் மேடைகளிலும் இந்த உலமாக்களை எதிர் பார்ப்போம். மேல் நாடுகளுக்கு மட்டும்தான் அரசியல் பேச போவோம் என இவர்கள் கூறாமல் இருந்தால் சரிதான்.

-அபு ஹனான்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar