BREAKING NEWS

தீர்க்கப்படாத அஷ்ரப் நகர் மக்களின் காணிப்பிரச்சினையும் வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளும், வோட்டுப்போடும் மக்களும்

அம்பாரை மாவட்டத்தின் ஒலுவில் கராமத்தை அண்டித்துள்ள அஷ்ரப் நகர் மக்களுக்கும் இராணுவத்தினருக்கு மிடையிலான முறுகல் நிலை இன்ன மும்; தீர்ந்தபாடில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.


1929ம் ஆண்டு தொடக்கம் இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் காணிகளில் சிலவற்றை  இராணுவம் கைப்பற் றியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. 1929ம் ஆண்டு முதல் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் தொழுவதற்கான அந்நாளில் பள்ளி வாயல்களை இந்தப்பகுதியில் கட்டியிருந்தால் இன்று அப்பகுதி யாருக்கு சொந்தம் என்ற கேள்வியே
எழுந்திருக்காது.  நாம் அறிந்தவறை 2000ம் ஆண்டுக்கு முன் ஒரு பள்ளி வாயலும் இப்பகுதியில் இருக்கவில்லை. ஆக இந்நிலைக்கு முஸ்லிம்களும் ஜவாப்தாரிகளாக உள்ளார்கள்.

அத்துடன் 1999ம் ஆண்டின் ஆரம்பத்தில் அங்கு இராணுவ முகாம் ஒன்றை அமைக்க திட்டம் தீட்டப்பட்டதாக சரிநிகர் பத்திரிகை 10.02.1999ல் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த காலப்பகுதி ஸ்ரீலங்கா மு.கா தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்த காலம். அக்காலத்திலேயே இதற்கான திட்டம் தீட்டப்பட்டது என்றால் அவரை வைத்துக்கொண்டே இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இது அவருக்கு தெரி;pதிருக்க முடியாது என்று கூறி நம்மை திருப்திப் படுத்திக்கொண்டாலும் இது தெரியாத நிலையிலா அமைச்சரவையில் இருந்தார் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    அதன் பின் ரஊப் ஹக்கீம் தலைமையில் ஒரு வருடம் அரசாங்கத்துடன் மு. கா இருந்தது. பின்னர் இரண்டு வருடங்கள் அதன் பின் இரண்டு வருடங்கள் தற்போது இரண்டு வருடங்களாக இப்படியெல்லாம் இருந்தும் மு. காவினால் இந்தப்பிரச்சினையை தீர்க்க முடிய வில்லை. இத்தனைக்கும் அஷ்ரப் நகர மக்களில் 98 வீதமானோர் மு. காவுக்கு வாக்களித்தவர்களே. அக்கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் 3 எம்பீக்கள் இருக்கின்றனர். அம்மக்களின் கூப்பிடு தூரத்தில் இருவர் இருக்கின்றனர். கிழக்கு மாகாண சபையில் மூவர் இருக்கின்றனர். இருந்தும் இவர்களால் இந்த சிறிய கிராமத்தின் பிரச்சினைளை தீர்த்து வைக்க முடியவில்லை என்றால் இவர்களுக்கும் வெட்கமில்லை, இவர்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கும் வெட்கமில்லை.
    -விடாப்பிடியான்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar