BREAKING NEWS

அக்கரைப்பற்று சுனாமி வீடுகள் சம்பந்தமாக உலமா கட்சித்தலைவருக்கு ஜனாதிபதி செயலகம் பதில்.

அக்கரைப்பற்றில் சஊதி அரேபிய அரசால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதே ஐ. நா சபையில் இலங்கைக்கு ஆதரவளித்தமைக்காக சஊதி அரேபியாவுக்கு செய்யும் நமது நாட்டின் நன்றிக்கடன் என்பதை சுட்டிக்காட்டி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதி செயலகம் பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதியின் உப செயலாளர் திரு. மஹிந்த குனரத்ன அவர்களால் ஏப்ரல் மாதம் 30ந்திகதியிடப்பட்டு உலமா கட்சி தலைவருக்கு வந்துள்ள பதில் கடிதத்தில் தேசிய வீடமைப்பு அதிகார அபிவிருத்தி அதிகார சபை தலைவருக்கு இது விடயம் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இது விடயம் நீதி மன்ற தீர்ப்பில் உள்ளதால் இது சம்பந்தமாக தீர்மானம் எடுத்து வீடுகளை விநியோகிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதோடு பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைத்தால் இது விடயத்தை வென்றெடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar