BREAKING NEWS

சக்தியின் மின்னல் நிகழ்ச்சி ஊடக தர்மத்தை மீறுகிறது

   சக்தி ரி.வியில் ரங்கா என்பவர் மி;ன்னல் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அவ்வேளை அவர் ஓர் ஊடகவியலாளராக இருந்ததால் அந்நிகழ்ச்சியை அவர் நடத்தி வந்தார். புpன்னர் அவர் ஐ தே கவில் இணைந்து நுவரேலியா பாராளுமன்ற உறுப்பினரா னார்.   
சில காலம் மின்னல் நிகழ்ச் ச்pக்கு மூடு விழா நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் இருப்பதை வைத்து அரசுக்க ஆதரவு கொடுத்தும் எதுவுமே முடியாது போன ரங்கா இப்போது மீண்டும் மின்னல் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்துள்ளார்.

    விசயம் என்னவென்றால் மின்னல் நிகழ்ச்சி என்பது பெரும்பாலும் அரசியலை மையப்படுத்திய நிகழ்ச்சியாகும். இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசியல்வாதிகள் குற்றவாளிக்கூண்டில் நிற்பது போல் நிகழ்ச்சித்தயாரிப்பாளரால் கேள்வி கள் கேட்கப்பட்டு பதில ளிப்பர். ஒரு சுதந்திரமான ஊடகவியாலர் அரசியல்வரிகளிடம் கேள்வி கேட்கலாம், குறுக்குக்கேள்விகள் கேட்கலாம். அதில் நியாயமுண்டு. ஆனால் தொலைக்காட்சி கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படவேண்டிய ரங்கா தனது பக்கத்தை காப்பாற்றிக்கொண்டு மற்றவர்களை விமர்சிக்கப்பட வைப்பது ஊடக தர்மமாகுமா என்பதுதான் கேள்வி. விமர்சிக்கப்பட வைப்பது ஊடக தர்மமாகுமா என்பதுதான் கேள்வி. ரங்கா ஒரு ஊடகவியலாளராக இருக்கலாம். ஆனால் இப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினர். நாளை அமைச்ச ராகவும் ஆகலாம். இந்நிலையில் ஊடகவியலாளர் ஒருவரால் அவர்தான் மின்னல் போன்ற நிகழ்ச்சிகளில் அரசியல் குறுக்கு கேள்விகள் கேட்கப்பட வேண்டியவர். அவரே மின்னல் நிகழ்ச்சியை நடத்தி அரசியல் வாதிகளிடம் கேள்வி கேட்பது என்ன நியாயம். வேண்டுமாயின் அவர் பேட்டி என்றில்லாது வெறுமனே தனது கருத்துக்களை பேசும் நிகழ்ச்சி ஒன்றை செய்யலாம்.நமது நாட்டில் எந்தவொரு சிங்கள நிகழ்ச்சிகளில்கூட இவ்வாறான அசிங்கமான நிகழ்ச்சியை எவரும் நடத்துவதில்லை. அனைத்து அரசியல் பேட்டி நிகழ்ச்சிகளையும் ஊடகவியலாளர்களே நடத்து கின்றனர். பாராளுமன்ற உறுப ;பினர்கள் அல்ல.
    ஆக மொத்தத்தில் ரங்கா பிரதிநிதித்துவம் செய்யும் நுவரேலியா மக்கள் பல துன்பங் களுக்கு முகம் கொடுத்து யாராவது ரங்காவிடம் கேள்விகள் கேட்க மாட்டினமா என்று தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் கொழும்பில் உட்காhர்ந்து கொண்டு மற்ற அரசியல்வாதிகளை பேட்டி எடுத்துக்கொண்டிருப்பதாக மலையக மக்கள் தெரிவிக்கிறார்கள். அரசியல் களம் தெரிந்த ஒரு ஊடகவியலாள ரும் சக்திக்கு கிடைக்கவில்லையா?

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar