BREAKING NEWS

முஸ்லிம் மாணவர்கள் பௌத்த கிறிஸ்தவ பாடங்களுக்கு தோற்றுவதற்கான முழு பொறுப்பையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே ஏற்;க வேண்டும். உலமா கட்சி


இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் பௌத்த கிறிஸ்தவ பாடங்களுக்கு தோற்றுவதற்கான முழு பொறுப்பையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே ஏற்;க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

பன்னெடுங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்த மௌலவி ஆசிரிய நியமனம் 1992ம்ஆண்டு சொற்ப சிலருக்கு வழங்கப்பட்ட பின் அரசால் வழங்கப்படவே இல்லை. இத்தனைக்கும் 1994, 196ல் இதற்கான போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு மௌலவிமாரின் கட்டண பணத்தை அரசாங்கம் சுருட்டிக்கொண்டது மட்டும்தான் நடந்தது.
இந்நியமனத்துக்காக ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளராக இருந்த மௌலவி எம். ஜே. எம். ர்pயாழ் அவர்கள் மிக கடுமையாக, அர்ப்பணிப்புடன் முயற்சி செய்தார். ஆனாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவரது ஆர்வத்தைப்பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை. கடைசியில் இந்தப்பழம் புளிக்கும் என அவரும் ஒதுங்கி நின்ற போதுதான் 2005ம் ஆண்டு அகில இலங்கை உலமா கட்சி உருவாகி மௌலவி ஆசிரிய நியமனத்தை அரசியல் மயப்படுத்துவதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்ற நோக்கில் களமிறங்கி 2005 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒரு நிபந்தனையாக இதனை முன்வைத்து வரலாறு படைத்தது. பின்னர் 2006ம் ஆண்டு மௌலவி ஆசிரிய நியமனத்தை வழங்கும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தும் அதனை வழங்கத்தயங்கிய கல்வி அமைச்சுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை 2007ம் ஆண்டு உலமா கட்சி கல்முனையில் நடாத்தியது. நூற்றுக்கணக்கான மௌலவிமார் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டமே இலங்கை வரலாற்றில் மௌலவிமார்; கலந்து கொண்ட முதலாவது ஆர்ப்பாட்டமாகும். 
தொடர்ந்து மௌலவி ஆசரிய நியமனம் வழங்கப்படுவதன் அவசியம் குறித்து நாம் தெளிவு படுத்தியதன் பயனாக எம்முடன் ஏனைய சில முஸ்லிம் அமைப்புக்களும் அலவி மௌலானா, அல்ஹாஜ் அஸ்வர் போன்றோரும் எமக்கு உதவினர்.  இவ்வாறான பாரிய போராட்டத்தின் பின் 2010ம் ஆண்டு சுமார் 150 மௌலவிமாருக்கு மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் இத்தகைய எமது போராட்டத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு சிறு துளி உதவியையாவது எமக்கு செய்யவில்லை. ஆகக்குறைந்து எம்மை அழைத்து உற்சாகப்படுத்தக்கூட தயங்கினார்கள், அல்லது பயந்தார்கள். தம்மால் முடியாததை இந்தச்சிறு கூட்டம் செய்யுமா என நகைப்புடன் எம்மை நோக்கினார்கள். இது விடயத்தில் உலமா சபை எமக்கு அன்று ஒத்துழைத்திருந்தால் ஆயிரக்கனக்கான மௌலவி ஆசிரியர் நியமனங்களை பெற்றிருக்க முடியும்.

முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய மிகப்பெரிய பிரச்சினைக்கான எமது அரசியல் போராட்டத்தின் போது எந்தவித ஒத்துழைப்பையும் வழங்காத உலமா சபை இப்போது முஸ்லிம் மாணவர்கள் அந்நிய மதங்களை கற்பதாக ஒப்பாரி வைப்பது இறைவனுக்கு செய்யும் துரோகமாகும். ஆகவே முஸ்லிம் மாணவர்களின் இந்த நிலைக்கு எம்முடன் ஒத்துழைக்க முன்வராத அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar