BREAKING NEWS

பாராளுமன்றத்தில் அஸ்வர் பாராளுமன்றில் பேசியதற்கு அதே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பாராளுமன்றத்தில் வைத்து இதற்கு பதில் அளிக்க தயங்குவது ஏன்?


இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்த பள்ளிவாயலுக்கும் ஆபத்தில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். ஏம். அஸ்வரின் கூறும் அதே வேளை இந்த ஆட்சியில் பெண்களுக்கு தமது வீட்;டில் கூட தொழ முடியவில்லை என அரசாங்க அமைச்சர் ரஊப் ஹக்கீம் கூறுகிறார். இதில் எது உண்மை என்பதை ஹக்கீமினால் பாராளுமன்றத்தில் தெளிவு படுத்த முடியுமா என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஏ. எச். ஏம். அஸ்வர் அவர்கள் இந்த ஆட்சியில் முஸ்லிம்களின் எந்தவொரு பள்ளி வாயலும் தாக்கப்படவில்லை என உரையாற்றினார். இதே வேளை கிழக்கில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மு. கா தலைவரோ இந்த அரசாங்கத்தில் மத சுதந்திரம் இல்லை என்றும் நோன்பு காலத்தில் பெண்கள் தமது வீடுகளில் கூட தொழ முடியவில்லை என்றும் கூறுகிறர். ஆஸ்வர் அரசாங்க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். ஹக்கீம் அந்த அரசாங்கத்தின் பங்காளி கட்சியின் தலைவர். இப்படி அரசாங்கத்தில் உள்ள இருவரும் முரண்பட்ட வகையில் பேசும் போது பாராளுமன்றத்தில் அஸ்வர் பாராளுமன்றில் பேசியதற்கு அதே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பாராளுமன்றத்தில் வைத்து இதற்கு பதில் அளிக்க தயங்குவது ஏன்?

கிழக்கில் தமிழ் மொழி தவிர வேறு மொழி தெரியாத பொதுமக்கள் மத்தியில் வீறாப்புடன் பேசும் ரஊப் ஹக்கீம் தாம் ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியை சந்திக்கும் போதும், பாராளுமன்றத்திலும் இவை பற்றி பேசாமல் இருக்கின்றார். இவர்களை மக்கள் பாராமன்றம் அனுப்பியது அங்குள்ள கதிரைகளை சூடாக்கவா அல்லது சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவா என்பது கூட தெரியாத நிலையில் மு. கா பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவ்வாறு இரட்டை வேடம் போட்டு தமது சுயநலத்திற்கா மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் இவர்களால் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத்தர முடியாது என்பதை கடந்த பத்து வருடங்களாக நாம் மட்டுமே சொல்லி வருகின்றோம். எமது கூற்று தொடர்ந்தும் உண்மையாகிக்கொண்டே இருக்கிறது என்பதை மக்கள் அறிவர். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar