BREAKING NEWS

பங்களாதேஷ் அரசாங்கம் தமது நாட்டில் பௌத்த ஆலயங்களை தாக்கியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது - உலமா கட்சி


இலங்கையில் பௌத்த தீவிரவாதிகளால் பள்ளிகள் தாக்கப்பட்ட போதும், மியான்மாரில் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும் மௌனமாக இருந்த பங்களாதேஷ் அரசாங்கம் தமது நாட்டில் பௌத்த ஆலயங்களை தாக்கியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என உலமா கட்சி தெரிவித்துள்ளது. 


இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, பேஸ் புக்கில் பங்களாதேசைச்சேர்ந்த பௌத்தர் ஒருவர் நபிகளாரை அவமானப்படுத்தும் வகையில் படம் பிரசுரித்தமையினால் ஆத்திரமுற்ற முஸ்லிம்கள் பௌத்த ஆலயங்களை தாக்கினர். சம்பந்தப்பட்டவரை விட்டு விட்டு சமயஸ்தலங்களை தாக்கியதை இஸ்லாம் தெரிந்த எவரும் அனுமதிக்க முடியாது. ஆனாலும் இது விடயத்தில் பங்களாதேஷ் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து முன்னூறுக்கு மேற்பட்டோரை கைது செய்தது. 

அதே வேளை இலங்கையில் பல பள்ளிவாயல்கள் தாக்கப்பட்ட போது அதில் ஈடுபட்ட எவரும் கைது செய்யப்படாத நிலையில் பங்களாதேஷ் அரசாங்கத்தின் செயற்பாடுகள்  நல்லதோர் எடுத்துக்காட்டாகும். அதே போல் இலங்கையில் பள்ளிவாயல்கள் தாக்கப்படும் போது பங்களாதேiஷில் எவருமே ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யாத நிலையில், ஏன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ, இலங்கை முஸலிம்களின் அதிக வாக்குகளைப்பெறும் கட்சி என சொல்லிக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோ ஒரு ஆர்ப்பாட்டத்தையோ ஒரு ஊடக மாநாட்டையோ ஏற்பாடு செய்யாத நிலையில் பங்களாதேஷ் பௌத்த ஆலய தாக்குதலுக்கெதிராக இலங்கையை சேர்ந்த பௌத்த பிக்குகள் இங்கு ஆர்ப்பாட்டம் செய்தமை அவர்களது சகோதர உணர்வையும் தமது சமயத்தின் மீதான பற்றுறுதியையும் காட்டுகின்றது. இதனை அமைதியான முறையில் வெளிப்படுத்திய பிக்குகள் பாராட்டுக்குரியவர்கள்.

பொதுவாக சகல சமயங்களுக்குமிடையிலும் புரிந்துணர்வு இருக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். ஒருவர் தனது சமயத்தை பின்பற்றுவதற்கு ப+ரண உரிமை உள்ளது போல் அடுத்தவர் தனது சமயத்தை பின்பற்ற உரிமை உள்ளது என்பதை ஏற்று அடுத்த சமயத்துக்கு இடைய+று விளைவிப்பதை தவிர்த்துக்கொள்வதன் மூலம் தமது புரிந்துணர்வை வெளிப்படுத்த முடியும். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar