BREAKING NEWS

அநுராதபுரம் பள்ளிவாயல் மதுரசாவை தாக்கி அதன் கூரைகள், காற்றாடிகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென உலமா கட்சி

அநுராதபுரம் மல்வத்துஓய பெரிய பள்ளி வாயலுடன் இணைந்திருந்த குர்ஆன் மதுரசா  தீயிடப்பட்டமையை அகில இலங்கை உலமா கட்சி வண்மையாக கண்டிப்பதுடன் இதனை புரிந்தவர்கள் சட்’டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  கேட்டுக்கொண்டுள்ளது.

      இது பற்றி உலமாக் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவிக்கையில’ கூறியுதாவது,
        மேற்படி சம்பவமானது முஸ்லிம்களின் பள்ளிவாயல்களுக்கெதிரான தாக்குதல்களின் தொடர் சதியா அல்லது முஸ்லிம்கள் மத்தியிலான உள்வீட்டு மோதலா என்பதை விசாரித்தறியும் சக்தி அரசாங்கத்திடமே உள்ளது. நாட்டுள் நடக்கும் பல குற்றச் செயல்களை மிக விரைவாக கண்டுபிடிக்கும் திறமை மிக்க பொலிசாரைக் கொண்டிருக்கும் அரசாங்கம் பள்ளி வாயல்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்வோரை மட்டும் இன்னமும் கண்டுபிடிக்காமல் இருப்பது கவலை தருகிறது.
       இந்த வருடத்தில் மட்டும் பல பள்ளி வாயல்கள் தாக்கப்பட்டுள்ளன. தம்புள்ளை, தெஹிவல, ரஜகிரிய என இவை தொடர்ந்த போதிலும் இவற்றின் பின்னால் நின்றவர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது அரசுக்கு களங்கம் தருவதாகும்.
         பொதுவாக முஸ்லிம் அரசியல் வாதிகள் மொத்தமாக அரசுக்கு ஆதரவு  வழங்கும் நிலையில், முஸ்லிம்களின் அதிக வாக்குகள் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு  முட்டுக்கொடுக்கும் நிலையில், ஜம்இய்யதுல் உலமா சபை, ஐ.நா வரை சென்று அரசுக்கு ஆதரவு தரும் நிலையில் முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை தாக்குதலில் ஈடுபடுவோர் கைது செய்யப்படாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை.

    ஆகவே அநுராதபுரம் பள்ளிவாயல் மதுரசாவை தாக்கி அதன் கூரைகள், காற்றாடிகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென உலமா கட்சி அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.        

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar