BREAKING NEWS

எமது கண்டனத்தைத்தொடர்ந்து இவர் தனது கருத்துக்கான கவலை தொவித்திருந்த போதும் தனது கருத்தை நியாயப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

நாட்டில் விபச்சாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளதாவது,

இத்தகைய கருத்தை ஒரு முஸ்லிம் பெண் கூறியிருப்பது மிகவும் கவலை தருவதுடன் அவர் தனது சமூகம், தனது நாடு, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் சொல்லியுள்ளதாகவே தெரிகிறது. விபச்சாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட தரித்திரியமே மிகவும் அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளைக்காணலாம்.
   
இவ்வாறான கருத்துக்களை சொல்பவர் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருக்க முடியும். சுமூகத்தையும், நாட்டையும் சீரழித்து அதனை பார்த்து ரசிக்கும் மனங்கொண்டவர்களே இவ்வாறான கருத்துக்களை கூறுவர். இக்கருத்தக்கான எமது கண்டனத்தைத்தொடர்ந்து இவர் தனது கருத்துக்கான கவலை தொவித்திருந்த போதும் தனது கருத்தை நியாயப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு விபச்சாரத்தில் ஈடுபட அனுமதி கொடுப்பது என்பது அப்பெண்களுக்கு மட்டுமல்ல வாலிபர்களுக்கும் பாதுகாப்பை தராது.
  
தனது தாய் நாட்டின் பொருளாதார வளத்துக்காக விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

இக்கருத்தை கூறிய பெண் ஒரு முஸ்லிம் வாரப்பத்திரிகையில் கடமையாற்றுவதுடன் முஸ்லிம் கட்சித்தலைவர் ஒருவரின் அமைச்சில் பணிபுரிவதாகவும் அறிகிறோம். தஸ்லிமா நஸ்ரின் போன்றோரின் வரிசையில் இவரும் ஆகிவிட துடிப்பதாகவே  தெரிகிறது.

ஆகவே மேற்படி பெண் ஊடகவியலாளரின் கருத்தை உலமா கட்சி; வன்மையாக கண்டிப்பதோடு இவருக்கு எதிராக உலமா சபை நடவடிக்கை எடுத்து மேற்படி கருத்தை அவர் வாபஸ் வாங்க அல்லது அதற்காக பகிரங்க மன்னிப்புக்கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar