BREAKING NEWS

மத்திய கிழக்கில் வாழும் பௌத்தர்கள் தமது மதத்தை கடைப்பிடிக்க தடை இருக்கையில் இலங்கை முஸ்லிம்கள் தமது மதத்தை பின்பற்ற தடை இல்லையே

மத்திய கிழக்கில் வாழும் பௌத்தர்கள் தமது மதத்தை கடைப்பிடிக்க தடை இருக்கையில் இலங்கை முஸ்லிம்கள் தமது மதத்தை பின்பற்ற தடை இல்லையே என ஐ தே க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருப்பதன் மூலம் அவருக்கு மத்திய கிழக்கு பற்றிய அறிவு அறவே இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


மத்திய கிழக்கில் பிரஜா உரிமை பெற்ற பௌத்த மக்கள் எவரும் இல்லாத நிலையில் இலங்கையை தாய்நாடாகக்கொண்ட முஸ்லிம்களை அவர்களோடு ஒப்பிட்டு பேசியமை கண்டிக்கத்தக்கதாகும். மத்திய கிழக்கை தாய்நாடாகக்கொண்ட இஸ்லாம் அல்லாத மாற்று மத்தினர் தமது மதத்தை பின்பற்றுவதற்கு ப+ரண உரிமை உண்டு என்பதை எகிப்து, லெப்னான், ஈராக் போன்ற நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள், ய+தர்களை பார்த்து அறியலாம்.  அவர்கள் தமது மத, கலாச்சாரத்தை ப+ரணமாக பின்பற்றுகிறார்கள் என்பதை அந்நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும். ஐ நா சபையின் பொதுச்செயலாளராகக்கூட எகிப்தை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் கடமையாற்றினார் என்பது கூட ரஞ்சனுக்கு தெரியாததன் மூலம் இவர் அறிவை தேடுவதை விட அதிகமாக சினிமா வாய்ப்பையே தேடியுள்ளார் என்பது தெரிகிறது.

மத்திய கிழக்கை தாய் நாடாகக்கொண்ட எவரும் பௌத்தர்களாக இல்லை என்பதற்காக அந்நாடுகளை குற்றம் சொல்ல முடியாது. அதே வேளை தொழிலுக்காக அங்கு சென்ற பௌத்தர்களை இலங்கையை தாய் நாடாக கொண்ட முஸ்லிம்களுடன் ஒப்பிடவும் முடியாது. ஓவ்வொரு நாட்டிலும் வெளிநாட்டவருக்கென தனிச்சட்டங்கள் உள்ளன. அறபு நாட்டிலிருந்து வரும் ஒரு முஸ்லிம் வீதி ஓரத்தில் ஒரு இடத்தை பிடித்து அங்கே பள்ளி ஒன்றை கட்டி தொழப்போகின்றேன் என்றால் இலங்கை அரசாங்கம் அவரை விடுமா? சுpறையிலடைக்கப்பட்ட பின் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.

ஆகவே, அறபு நாடுகளில் அவற்றை தாய் நாடாகக்கொண்ட பௌத்தர் எவரும் இல்லாத நிலையில் அங்கு தொழிலுக்காக செல்வோர் எதிர் நோக்கும் பிரச்சினைகளை இலங்கையை ப+ர்வீகமாகக்கொண்ட முஸ்லிம்களுடன் ஒப்பிட்டு பேசுவதை ரஞ்சன் ராமநாயக்க போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும் என உலமா கட்சி கோருவதோடு இவரைப்போன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தவறாக பேசும் போது அவற்றுக்கு சரியான பதில் தர முடியாமல்  முழிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar