BREAKING NEWS

ரஞசன் ராமநாயக்கவின் கருத்துக்கு அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளின் மௌனம்

இஸ்லாமிய சட்டங்கள் மிலேச்சத்தனமானவை என்ற ஐ தே க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞசன் ராமநாயக்கவின் கருத்தை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக கண்டித்த ஐ தே க எம். பி கபீர் ஹாசிம் மற்றும் ஐ தே க மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரை உலமா கட்சி பாராட்டுவதுடன் இது பற்றி அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளின் மௌனம் கண்டிக்கத்தக்கதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரஞ்சன் ராமயநாயக்கவின் கூற்று இஸ்லாத்தை பின்பற்றும் முழு முஸ்லிம்களையும் மட்டுமல்லாமல் இஸ்லாமிய சட்டங்களை கற்பித்த இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவமானப்படுத்தியுள்ளது. நபிகளார் பற்றி அவதூறாக திலைப்படம் எடுத்த போது கொந்தளித்த அமைப்புக்களும், ஜமாஅத்துக்களும் ரஞ்சன் ராமநாயக்கவின் இத்தகைய அவமானப்படுத்தலுக்கெதிராக மௌனம் சாதிக்கின்றன. இதன் மூலம் வெளிநாட்டவரை துணிச்சலுடன் எதிர்க்கும் முஸ்லிம் சமூகம் உள்நாட்டினர் என்றால் பெட்டிப்பாம்பாகி விடும் என்ற கருத்தியலே பதிவாகிறது.



அதே வேளை ரஞ்சனின் இக்கருத்துக்கெதிராக என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாதவர்களாக முஸ்லிம் கட்சித்தலைவர்கள் நாடாளுமன்றத்தில் முழித்துக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய மேதைகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய முஸ்லிம்களை என்னவென்று சொல்வது என்று புரியவில்லை.


ஆனாலும் தமது கட்சி உறுப்பினர் என்றும் பாராது கபீர் ஹாஷிம், முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் கண்டித்துள்ளமை அவர்களது சமயப்பற்றைக்காட்டுகிறது. அதே போல் அமைச்சர் வாசுதேவ அவர்களின் முஸ்லிம், தமிழ் பாடசாலைகளை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை கண்டிக்க ஆளுங்கட்சித்தரப்பில் எந்த ஒரு முஸ்லிமுக்கும் துணிவு வரவில்லை என்பதன் மூலம் முஸ்லிம் அரசியல்வாதிகளின்  பதவிகளுக்கான சரணடைதல் வெளிக்காட்டப்பட்டுள்ளது

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar