BREAKING NEWS

இஸ்லாம் என்றால் சுமார் ஆயிரத்தி நானூறு வருடங்களுக்குட்பட்டது ?




இஸ்லாம் என்றால் சுமார் ஆயிரத்தி நானூறு வருடங்களுக்குட்பட்டது என்றே பொது பல சேனா நினைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அவர்களை குற்றம் சொல்லி பலனில்லை.
இவ்வாறு அவர்கள் எண்ணுவதற்கு பிரதான காரணம் இஸ்லாத்தின் வரலாறு தெரியாத முஸ்லிம் எம்பீ;க்களாகும். இவர்கள் பாராளுமன்றத்தில் பேசும் போது முஸ்லிம்கள் இந்த நாட்டில் எண்ணூறு வருடங்களாக வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார்கள். அதே போல் புத்திஜீவிகள் என சொல்லிக்கொள்ளும் புத்தி இல்லாத நமது புத்திஜீவிகளும் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றை கூறும் போது ஆங்கிலேய ஆய்வாளர்களின் கருத்துக்களை முன் வைத்து முஸ்லிம்கள் சுமார் ஆயிரம் வருடங்களாக இந்நாட்டில் வாழ்வதாக எழுதியதனால்த்தான் இன்று பொது பல சேனா இவ்வாறு கருத்துக்கூறுகிறது.

இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் வரலாற்றை குர்ஆனும், ஹதீதுகளும் மிகத்தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கும் போது நமது புத்திஜீவிகளுக்கு ஆங்கிலேயரின் கருத்துக்கள்தான் பெரிதாக தெரிகின்றன.

முதல் மனிதன் ஆதத்துடன் இஸ்லாத்தின் வரலாறு ஆரம்பமாவதாகவும், இலங்கையின் முதலாவது ப+ர்வீகம் முஸ்லிம்களே என்றும் உலமா கட்சித்தலைவர் மட்டுமே தைரியமாக கடந்த ஆறு வருடங்களாக கூறி வருகிறார். இக்கருத்தைக்கூட குர்ஆன் ஹதீத் கொண்டு ஆராயாமல் எம்மை நக்கலாக பார்ப்போரே உள்ளனரே தவிர அக்கருத்தை பகிரங்கமாக ஆதரிப்பதற்கான அறிவோ, தைரியமோ எந்தவொரு முஸ்லிம் புத்திஜீயிடமும் இது வரை இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகமாகும்.
இஸ்லாமிய நாகரிகம் பாடத்திட்டத்தில் கூட இஸ்லாத்தை ஆயிரத்தி நானூறு வருடங்களுக்குள் சுருக்கி வைத்துள்ளார்கள் இந்த புத்திஜீவிகள். இஸ்லாமிய நாகரிக பாடத்திட்டத்தில் இஸ்லாமிய வரலாறு எனும் போது முதல் மனிதன் ஆதத்தின் வருகையுடன் இஸ்லாம் ஆரம்பிப்பது பற்றி தெளிவாக குறிப்பிட வேண்டும். இது பற்றிய எமது விளக்கங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

ஆக, சிங்களவர் 2500ஆண்டுகளுக்கு முன் இங்கு வருவதற்கு முன்பதாக ஆதம் வாரிசுகளான ஆதி வாசி முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழந்து வந்துள்ளார்கள். அதே போல் நூஹ் நபி காலத்து பிரளயத்துக்குப்பின் உலகில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்ந்தார்கள். அந்த வகையிலும் இலங்கையின் முதல் ப+ர்வீகம் முஸ்லிம்களாகும். இந்த உண்மையை ஏற்க, கூற ஏன் நமது புத்திஜீவிகள் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை.
-முபாறக் அப்துல் மஜீத்


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar