BREAKING NEWS

ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த கவலையும் இல்லை


2002 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஆஸ்லே வில்ஸ் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துடன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் வடிவத்தை  விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில் ''ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த கவலையும் இல்லை எனவும் அவர் தனது பதவியை தக்கவைத்துக்கொள்வது தொடர்பிலேயே எந்நேரமும் குறியாய் செயற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலில் முன்னால் தென்கிழக்கு பல்கலைக் கழக உதவி வேந்தருடைய  விமர்சனங்கள் உள்வாங்கப் பட்டிருந்தது.
  
புலிகளின் எழுச்சி குறித்து முஸ்லிம்கள் வெளிப்படையாகவே பணியாற்றி வருகின்றனர். அண்மையில் தென்கிழக்கு பல்கலையில் ஒரு கூட்டம் நடை பெற்றது. அதில் புலிகள் மெதுவாக கிழக்கு முழுவதையும் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஒரு அணியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முஸ்லிம்களின் நிலைமை மற்றும் துயரங்கள் தொடர்பில் அரசு கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்  தென்கிழக்கு பல்கலையின் உப வேந்தர் எம்.எல்.ஏ.காதர் உறுதியாக இருந்தார். முஸ்லிம்களை புறக்கணித்து புலிகளுக்கு எந்தவொரு விலையினையும்  செலுத்தி சமாதானத்தை மேற்கொள்ள அரசு தயாராக இருந்தது. ஹக்கீம் தொடர்பில் உப வேந்தர் காதர் கடும் விமர்சனங்களை கொண்டிருந்ததாக குறித்த தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar